அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 19 ஏப்ரல், 2010

கல்யாண நாள் மற்றும் பிறந்தநாள் விருந்திற்காக செல்லுலமா?

கல்யாண நாள் மற்றும் பிறந்தநாள் விருந்திற்காக இஸ்லாம் என்ன சொல்கிறது?
அஸ்ஸலாமு அலைக்கும்,
முஸ்லிம் சகோதரின் கல்யாணநாள் விருந்திற்க்கும், பிறந்தநாள் விருந்திற்க்கும் செல்ல நம் மார்க்கத்தில் அனுமதியுண்டோ?
இதைப்போல், மாற்று மாதத்தாரின் மேற்கூறிப்பிட்ட விருந்திற்க்கும் மற்றும் அவர்களின் பண்டிகை சம்பந்தப்பட்ட விருந்திற்க்கும் செல்ல அனுமதியுண்டோ?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஹதீஸ் மூலம் எனக்கு பதில் அளிக்கும்மாறு கேட்டுக் கொள்கின்றேன்.
உங்கள் சகோதரன்
ரியாஸ் அஹமத்
முஸ்­ம் சகோதரர்கள் நடத்தும் எந்த நிகழ்ச்சியானாலும் அந்த நிகழ்ச்சிகள் மார்க்கத்திற்கு முரணாக அமைந்திருக்குமானால் அந்த நிகழ்ச்சிகளில் நாம் கலந்து கொள்ளக்கடாது. அங்கு நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக்கூடாது.
நபி ஸல் அவர்களை பாத்திமா ர­ அவர்கள் விருந்துன்ன அழைத்திருந்தார்கள். நபி ஸல் அவர்களும் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு விருந்தன்ன சென்றார்கள். அங்கே அவர்களின் வீட்டு முன்னால் உருவம் பொறிக்கப்ட்ட திரைச் சீலை போடப்பட்டிருந்ததால் நபி ஸல் அவர்கள் விருந்துன்னாமல் திரும்பி வந்துவிட்டார்கள்.
நூல்: நஸயீ.
இந்த செய்தி­ருந்து நாம் விருந்துன்னச் செல்லும் இடங்களில் மார்க்கத்திற்கு முரணான காரியம் நடப்பதால் நாம் கேள்விப்பட்டால் அல்லது பார்த்தால் அதை புரக்கணிக்க வேண்டும் என்பதை இதி­ருந்து விளங்கலாம்
தேங்க்ஸ் : www.kadayanalluraqsha.com

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites