அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

மாற்று மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது ஏன்?

கேள்வி: மாற்று மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் என்று குர்ஆனில் உள்ளதே! ஆதலால் எங்களை நண்பர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ள மாட்டீர்களா? என்று மாற்று மத நண்பர் கேட்கிறார். நண்பருக்கு பதில் கூறும் விதம் பற்றி கூறுக.
ஏ.கே. அப்துல் சலாம், நாகர்கோவில்
விளக்கம்: திருக்குர்ஆனின் 3:28 வசனத்தில் நீங்கள் சுட்டிக் காட்டுகின்ற கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது.
திருக்குர்ஆனின் வசனங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் அருளப்பட்டவை. சில வசனங்களைச் சரியாக புரிந்து கொள்ள அது அருளப்பட்ட சந்தர்ப்பத்தையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
மக்காவில் உள்ள நிராகரிப்பவர்கள் நபிகள் நாயகத்தின் ஆளுகையில் இருந்த மதினா மீது பல முறை போர் தொடுத்து வந்தனர். பல விதமான இன்னல்களைக் கொடுத்து வந்தனர். இஸ்லாத்தை ஒழிப்பதைத் தங்கள் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வந்தனர்.
இத்தகையோரின் உறவினர்கள் பலர் முஸ்லிம்களாகி மதினாவில் இருந்தனர். இவர்கள் எதிரிகளை உறவினர்கள் என்ற காரணத்திற்காக நேசித்தனர். இஸ்லாத்தின் எதிரிகளாக இருப்போரை எப்படி நண்பர்களாக ஏற்படுத்தலாம் என்பதற்காகவே இவ்வசனம் அருளப்பட்டது. முஸ்லிமல்லாத அனைவரைப் பற்றியும் இது அவ்வாறு கூறவில்லை.

இது போன்ற கருத்தை 3:118 வசனத்தில் கூறும் போது அல்லாஹ் தக்க காரணத்துடன் கூறுகிறான். வெளிப்படையாக பகைமை பாராட்டியவர்கள், முஸ்லிம்களுக்கு அழிவு ஏற்பட வேண்டும் என விரும்பியவர்கள் ஆகியோரை நண்பர்களாக்க வேண்டாம் எனக் கூறுகிறது.
5:57, 58 வசனங்களில் இஸ்லாமிய மார்க்கத்தை பகிரங்கமாகக் கேலி செய்வோரை நண்பர்களாக்க வேண்டாம் எனக் கூறப்படுகிறது.
60:1 வசனத்தில் உங்களை சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களை எப்படி நண்பர்களாக்க முடியும் எனக் கூறுகிறது.
60:8,9 வசனங்களில் நம்மோடு யுத்தம் செய்வோரிடமும் நம்மை ஊரை விட்டு விரட்டியோரிடமும் நட்பு பாராட்ட வேண்டாம் எனவும், மற்றவர்களுடன் நட்பு பாராட்டி உதவிகளும் செய்யுமாறு குர்ஆன் கூறுகிறது.
பஜ்ரங் தளம், வி.ஹெச்.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கத்தவர்களுடன் நட்பு பாராட்டுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்துக்களில் ஒரு சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள். மற்ற சகோதரர்களுடன் நட்புப் பாராட்ட வேண்டும். உதவிகள் புரிய வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கட்டளையாகும். 3:28 வசனத்துடன் நாம் சுட்டிக் காட்டிய வசனங்களையும் சேர்த்து அந்த நண்பரை வாசிக்கச் சொல்லுங்கள்! உண்மையை விளங்கிக் கொள்வார்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites