அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 19 ஏப்ரல், 2010

‘தலாக்’ ‘குலா’ வித்தியாசம் என்ன?

தலாக்கில் மூன்று தவணைகளுக்கு பின்னரும் இருவரும் சேரவில்லையானால் அப்பெண் மீண்டும் வேறொரு திருமணம் செய்து, பின்  அதை முறித்து கொண்ட பின்னர் தான் முதலில் தலாக் கூறப்படவரை மணந்து கொள்ள முடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
‘குலா’வின் சட்டம் என்ன? அதன் தவணை முறை எத்தனை?  இரெண்டும் ஒன்று தானா?
பதில் தரவும்.
அன்புடன்,
நாஷித் அஹமத்,
அபுதாபி
தலாக் என்பது ஆண்கள் தங்களுடைய மணைவிமார்களை விட்டு பிரிவது சொல்லப்படும் வார்த்தை. இந்த வார்த்தைக்கு விடுவித்தல் என்று பொருளாகும். ‘
குலா என்பது பெண்கள் தங்களுடைய கவனை விட்டு பிரிவது பயன்படுத்தக்கூடிய வார்த்தையாகும். இதற்கு தமிழில் கழற்றிவிடுதல் என்று பொருளாகும்.
ஒரு பெண் தன்னுடைய கணவனை விட்டு பிரிய நினைத்தால் ஜமாத் தலைவர் முன்னிலையில் சென்று இரண்டு சாட்சிகளுடன் நான் என்னுடைய கணவனை விட்டு பிரிந்து கொள்கிறேன் என்று சொல்ல வேண்டும்.
பிரியும் போது கணவன் மனைவிக்கு கொடுத்த மஹர் தொகையை திரும்ப பெண் அளித்திட வேண்டும்.
மனைவி குலா செய்யும் போது கணவனை விட்டு பிரிவதற்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
மனைவி நினைக்கும் போது மீண்டும் கணவனுடன் சேர்ந் கொள்ளலாம். இதற்கு மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை.
மீண்டும் சேர்ந்து கொள்வதற்கு எந்த திருணமும் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இதுதான் குலா தொடர்பாக சுருக்கமான செய்திகள்

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites