
25 பைசா, 50 பைசா நாணயங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவது இல்லை. இதனால் இந்த நாணயங்களின் தயாரிப்பை ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது. இந்த நிலையில் 25 பைசா, 50 பைசா நாணயங்கள் இனி செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் 29-ந்தேதி புதன்கிழமை முதல் இது அமல்படுத்தப்பட உள்ளது. வரும் புதன்கிழமை முதல் 25 பைசா, 50 பைசா நாணயங்களை யாரும் பயன்படுத்தவும் இயலாது.
யாரேனும் 25 பைசா, 50 பைசா நாணயங்களை சேமித்து வைத்திருந்தால் அவற்றை வங்கிகளில் கொடுத்து ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டுடமையாக்கப்பட்ட 19 வங்கிகளின் கிளைகளில் 25 பைசா, 50 பைசா நாணயங்களை கொடுத்து பணம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தயாரிப்பு : Rajmohamed misc
email ID : rajmohamed111@gmail.com