தமிழ் மொழிபெயர்ப்பு சேவையை நேற்று அறிமுகப்படுத்தி அசத்தியது கூகுள் – இனி எந்த மொழியையும் தமிழுக்கு மாற்றலாம்! தமிழை எந்த மொழிக்கும் மாற்றலாம்!!
தமிழ் மட்டும் தெரிந்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் தெரியாதவர்களின் நீண்ட நாள் கனவை இன்று கூகுள் நினைவாக்கியுள்ளது.
ஆம் ! இனி தமிழில் நாம் எழுதும் வாக்கியங்களை எந்த மொழிக்கும் மாற்றிக் கொள்ளலாம். அதே போன்று ஆங்கிலம் அரபி ஜெர்மனி போன் எந்த மொழியில் உள்ள வாக்கியங்களையும் யாருடைய துனையும் இன்றி தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.
மற்ற மொழிகளில் உள்ள இணையதளங்களையும் நம் தாய் மொழி தமிழில் யாருடைய துனையின்றியும் படித்துக் கொள்ளலாம்.
எனக்கு ஆங்கிலம் தெரியும் , அரபி தெரியும் என்று யாரும் இனிமேல் பில்டப் கொடுக்க முடியாது.
நமக்கு தமில் தெரிந்திருந்தால் போதும் அது சகல மொழிகளும் தெரிந்ததற்கு சமம்…
Google Translate என்று சொல்லப்படும் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை இன்று 5 இந்திய மொழிகளுக்கான (Bengali , Gujarati , Kannada , Tamil and Telugu) மொழிபெயர்ப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது.
ஆச்சிரியமாக உள்ளதா ? நீங்களே முயற்சி செய்து பாருங்கள்…
எனினும் கூகுள் இதை மற்ற மொழிபெயர்ப்புகளை போன்று துள்ளியமான மொழிபெயர்ப்பாக (supported language) இதை அறிமுகப்படுத்தவில்லை alpha languages என்று சொல்லப்படும் பரிசோதனை மொழிபெயர்ப்பாக இதை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது இந்த தமிழ் மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் முழுவதுமாக முடியவில்லை பரிசோதனையில் உள்ளது போகப் போகப் தமிழ் மொழிபெயர்ப்பின் தரம் மற்ற மொழிபெயர்ப்புகளை போன்று மிகத்துள்ளியமாக இருக்கும்.
- அபு நபீலா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தயாரிப்பு : Rajmohamed misc
email ID : rajmohamed111@gmail.com