உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துபவர்கள் மிகவும் குறைவு. சரிவிகித உணவு, உடற்பயிற்சி, உரிய மருத்துவ ஆலோசனை ஆகியவை உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மறுபுறம் இந்த பாதிப்புகள் குறித்த ஆய்வுகளும் நடந்த வண்ணம் உள்ளது. உடலில் அதிகரிக்கும் கொழுப்பால் மூளை பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கொழுப்பு சேர்வதால் நரம்புகளில் உள்ள நியூரான்ஸ் என்ற நரம்பு செல்கள் பாதிக்கப்படுகிறது. இது மூளை செயல்பாடுகளை பாதிக்குமாம். முதல் பாதிப்பாக உடல் எடை அதிகரிக்கும், படிப்படியாக மற்ற பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர். வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உடல் பருமன் குறித்து ஆய்வு நடத்தும் தனியார் ஆய்வு நிறுவனம் இணைந்து ஜோஷ்வா தலெர் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. மூளைச் செயல்பாடு மற்றும் நினைவாற்றல் குறித்து மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் கிடைத்த தகவல்கள் வருமாறு: உடலில் சேரும் மிக அதிக அளவிலான கொழுப்பு 3 நாட்களில் மூளையில் மெதுவாக பாதிப்பை ஏற்படுத்தும். கவனிக்கப்படாமல் விடும் போதும், தொடர்ந்து அதிக அளவிலான கொழுப்பு சேரும் போதும் இந்த பாதிப்பு விரைவாக தாக்கும். எலிகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டதில் இது உறுதியாகி உள்ளது. கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்ப்பதன் மூலமும் ஆரம்ப கட்டத்தில் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவதன் மூலமும் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். |
Pages
▼
Pages
▼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தயாரிப்பு : Rajmohamed misc
email ID : rajmohamed111@gmail.com