அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

ஞாயிறு, 20 மார்ச், 2011

இரண்டாம் உலகப் போர் பேரழிவை விட பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ள ஜப்பான்!

ஜப்பானை ஒட்டிய கடற்பகுதியில் கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுச் செயலிழந்த டாய்ச்சா அணு மின் நிலையத்தின் உலைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்து, அதிலிருந்து வெளியேறும் அணுக் கதிர் வீச்சு மனித உடலைப் பாதிக்கும் அபாயம் அளவை எட்டி வருகிறது என்கிற உறுதியான செய்தி, ஜப்பானை மட்டுமின்றி, உலகத்தையே அச்சத்தில் தள்ளியுள்ளது.
ஃபுகுஷிமா மாகாணத்தில் கடலோரத்தில் அமைந்துள்ள டாய்ச்சா அணு மின் நிலையத்தில் 4 அணு உலைகள் இயங்கி வந்தன. பூகம்பம் ஏற்பட்டவுடன் அவை செயலிழந்தன.
பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலைத் தாக்குதல் டாய்ச்சா அணு உலைகளை குளிரூட்டும் இயந்திரங்களை பாதிக்க, அவையும் செயலிழந்தன.அதன் விளைவாக அணு உலைகளின் வெப்ப நிலை அதிகரித்தது. கடந்த வாரம் 12ம் திகதி முதல் அவை ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன. கடைசியாகக் கிடைத்த செய்தி 4வது அணு உலையிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது என்பதே. இவை யாவும் உறுதியான செய்திகள் என்பதை மிக அதிக உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் துல்லியமாகக் காட்டியுள்ளன.
இந்த நிலையில்தான், அணு உலைகளில் இருந்து வெளியேறும் அணுக் கதிர் வீச்சு(ஞிaனீiation) மனித உடலை பாதிக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளது என்று ஜப்பான் அமைச்சரவைச் செயலரை சொல்ல வைத்துள்ளது. டாய்ச்சா அணு உலைகள் வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளதெனவும், அணுக் கதிர் வீச்சு அபாய அளவை எட்டும் ஆபத்து உள்ளதென்றும் அந்நாட்டு பிரதமர் நவோட்டா கேன் கூறியுள்ளார்.
அணு உலைகள் இருந்த இடத்தில் இருந்து இரண்டரை இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதைத் தவிர, வேறு எந்த தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக செய்திகள் இல்லை. அணுக் கதிர் வீச்சின் தாக்கம், டாய்ச்சா அணு உலைகளில் இருந்து 250 கி.மீ. தூரத்திலுள்ள தலைநகர் டோக்கியோவிலும் பரவியுள்ளது. அணு உலைகள் இருக்கும் பகுதியில் ஒரு மணி நேரத்தில் அணுக் கதிர் வீச்சின் தாக்குதல் 8 மடங்கு அதிகரித்துள்ளதென ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
ஜப்பான் அணு உலைகளில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து உலக அளவில் அணு மின் சக்தியை உற்பத்தி செய்யும் உலைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. உலகில் இயங்கிவரும் அணு மின் உலைகளில் மிகப் பாதுகாப்பான அணு உலைகளாக கருதப்படுபவை டாய்ச்சா அணு மின் நிலையத்தில் இயங்கி வந்தவையாகும். ஆனால் இயற்கையின் கடும் சீற்றத்திற்கு முன்னர் பாதுகாப்பான அணு உலைகள் என்று ஏதும் இல்லை என்பதையே ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பமும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலையின் தாக்குதலினாலும் நிலைகுலைந்த டாய்ச்சா அணு உலைகள் நமக்கு ஆழமாக போதிக்கின்றன.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் மின்சாரத் தேவையை ஈடுசெய்ய, சுற்றுச் சூழலை பாதிக்காத தூய்மையான எரிசக்தியை அணு மின் உலைகள் அளிக்கின்றன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அரசுகள் சமீப காலங்களில் அணு மின் நிலையங்களை நிறுவ பல ஒப்பந்தங்களைச் செய்து வருகின்றன.
மிகப் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்ட இலகு நீர் அணு மின் உலைகளே (ழிight தீatலீr ஞிலீaணீtors) டாய்ச்சா அணு மின் நிலையத்தில் இயங்கி வந்தன. ஜப்பான் கடும் நில நடுக்கம் ஏற்படும் பகுதியிலேயே அமைந்துள்ளதை நன்கு அறிந்த நிலையிலேயே இந்த அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. அப்போதே, கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டால் இதில் பாதிப்பு ஏற்படுமா என்று கேட்டதற்கு, இந்த அணு உலையை அசைக்கக்கூடிய அளவிற்கு பெரும் நில நடுக்கம் ஏற்படாது என்று ஜப்பான் கூறியது. ஆனால், இன்று என்ன நிலைமை? ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் அளவிற்கு கடும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணு உலைகள் பாதிப்பிற்குள்ளாகி, அவைகளில் ஏற்படும் வெடிப்பைத் தடுக்க ஏதும் செய்ய முடியாத நிலை. அணுக் கதிர் வீச்சு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 250 கி.மீ. தூரத்திலுள்ள டோக்கியோவில் கதிர்வீச்சு அளவு அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.
இந்த அளவிற்கு பெரும் நிலநடுக்கம் ஏற்படும். சாத்தியம் இந்தியத் துணைக் கண்டத்தில் இல்லை என்று இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவராக இருந்த விஞ்ஞானி அனில் ககோட்கர் கூறியுள்ளார். இயற்கையின் போக்கை எப்படி அவ்வளவு நிச்சயமாக சொல்ல முடியும்?
அணு சக்தி ஆபத்தான எரிசக்தி ஆகும்.
மானுட உயிர்களையும், இயற்கை ஆதாரங்களையும் அடியோடு அழிக்கக் கூடிய, தடுக்கவே முடியாத ஒரு ஆபத்தை தன்னகத்தே நிரந்தரமாகக் கொண்டுள்ளன அணு உலைகள். அதனால்தான் தங்கள் நாட்டின் மின் தேவையை 78% அளவிற்கு அணு மின் உலைகளின் மூலம் பெரும் நாடான ஃபிரான்ஸ், 17 அணு உலைகளை மட்டுமே இயக்கிவரும் ஜெர்மனி, அணு மின் சக்தியை அதிகரிக்கலாமா என்று ஆலோசித்த இத்தாலி ஆகிய நாடுகளில் கடந்த இரண்டு நாட்களாக அணு உலைகளை மூடு என்று கூறி பெரும் அளவிற்கு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மனித உயிர்களையும் இயற்கையையும் அழிக்கக் கூடிய எந்த உயர் தொழில் நுட்பமும் தங்களுக்குத் தேவையில்லை என்ற குரல் அங்கு ஓங்கி ஒலித்து வருகிறது.
அதுமட்டுமல்ல, மற்றொரு முக்கிய விடயமும் விவாதத்திற்கு வந்துள்ளது. அணு மின் உலைகளுக்குத் தேவையான தண்ணீர் அளவு மிக அதிகமாகும். உதாரணத்திற்கு பிரான்சில் இயங்கிவரும் அணு மின் உலைகள் ஓராண்டில் பயன்படுத்தும் நீரின் அளவு 19 பில்லியன் கன மீட்டர் என்றும், அது அந்நாட்டின் தண்ணீர் பயன்பாட்டில் பாதிக்குப் பாதி என்றும் இன்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலையில், அணு உலைகள் என்பவை எந்த ஒரு நாட்டிற்கும் ஒரு கூடுதல் சுமையாகும்.
உயிரைப் பறிக்கும் உலைகளாக இந்த அணு உலைகளைப் பார்ப்பதற்கான அடிப்படை உள்ளது. எனவே அணு மின் சக்தியே அவசியமான ஒரு மாற்றுச் சக்தி என்ற மனச் சாய்விலிருந்து விடுபட்டு, சூரிய ஒளி மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்துவது பாதுகாப்பானது.
ஜப்பானில் பூகம்பத்தால் அணு உலைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு ஒரு பாடமேயாகும். அதில் இருந்து பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்க அரசுகள் முன்வர வேண்டும்.
இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட நாசத்தை விட அதிகமான துயரத்தைச் சந்தித்துள்ளது ஜப்பான் பூகம்பம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களின் தாக்குதலிலிருந்து மீளும் முன்பே, அந்நாட்டின் அணு உலைகள் மூலம் அடுத்த பேராபத்து நேர்ந்துள்ளது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாயிச்சி அணுசக்தி நிலையத்தின் மூன்று அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன.
இந்த மூன்று அணு உலைகளிலிருந்தும் வெளியேறும் ஹைட்ரஜன் ஜப்பானின் ஒரு பகுதியை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. அணு உலையின் துகள்கள் காற்றில் வேகமாகப் பரவி வருகின்றன.
முதலில் அணு உலையிலிருந்து 20 கி.மீ தூரம் வரை குடியிருந்த மக்களை வெளியேறச் சொன்ன அரசு, இப்போது 40 கி.மீ வரையுள்ள பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி வருகிறது. இதுவரை 11 இலட்சம் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு புகலிடம் தேடிப் புறப்பட்டுள்ளனர்.
டாக்கியோ வரை அணுக்கதிர் வீச்சு உணரப்பட்டுள்ளதாகவும், உடல் நலத்தைப் பாதிக்கும் அளவுக்கு கதிர்வீச்சின் அளவு அபாய கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் அரசு தரப்பிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. அணுக்கதிர் வீச்சிலிருந்து தற்காலிகமாகக் காத்துக்கொள்ளும் வழிமுறைகளும் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வெடித்த நான்கு அணு உலைகளிலி ருந்தும் கதிர்வீச்சின் அளவு உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவு பரவியுள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. மேலும் கதிர்வீச்சில் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு முதலுதவி செய்யும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் ஜப்பான் அறிவித்துள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிப்பது மிக சவாலாக உள்ளதாகவும், அமெரிக்கா தனது இராணுவத்தை அனுப்பி உதவ வேண்டும் என்றும் ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது.
ஃபுகுஷிமா டாய்ச்சியிலிருந்து பரவும் அணுக்கதிர் வீச்சு, மியாமி வரை உணரப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கதிர்வீச்சின் முதல் தாக்கம் மியாமில் தரையிறங்கு முன் விமானத்தில் உணரப்பட்டதாகவும், இது இரண்டு புள்ளிகள் வரை இருந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஜப்பான் மன்னார் அகிஹிதோ தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இதில் அவர் கூறியதாவது,
இந்த துயர வேளையில் அவதியுறுபவர்களுக்கு நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நிலநடுக்கம், சுனாமி தாக்குதலுக்குப் பின் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். இந்த வேளையில் உதவிக்கு வந்துள்ள அனைத்து நாடுகளுக்கும் என் நன்றி.
துயரில் சிக்கிய ஒவ்வொருவரையும் எப்பாடுபட்டாவது காப்பாற்றப்பட வேண்டும். அணு நிலையத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி எனக்கு கவலையளிப்பதாக உள்ளது. காரணம், இந்த நிலைமையின் போக்கை நம்மால் ஊகிக்க முடியாது. இதைக் கட்டுக்குள் கொண்டு வருபவர்களின் முயற்சியினால் நிலைமை மோசமடையாமல் இருக்கும் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். மக்களின் துயரில் பங்கெடுக்கும் விதமாக அரண்மனையில் 2 மணி நேரம் மின்சாரத்தைப் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத் தொடர்ந்த சுனாமியில் ஏற்பட்ட அழிவுக்குப் பிறகு மீட்புப் பணியில் 80 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர்.
இவர்களுடன் காவல் துறையினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதுவரை 12 மாநிலங்களைச் சேர்ந்த 3, 676 பேர் இறந்தாக உறுதியான தகவல் உள்ளது.
மேலும் 6 மாநிலங்களில் 7, 843 பேர் பற்றிய எந்த விவரமும் இல்லை. இது தவிர, ஓட்சூச்சி எனும் ஊரில் இருந்த 8,000 பேரில் பாதியளவு மக்கள் என்ன ஆனார்கள் எனத் தெரிவில்லை என பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. வீடிழந்தோர் தங்குவதற்கு 2,600 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், சுமார் 5, 30, 000 பேர் உள்ளனர்.
ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடிப்பினால் ஏற்பட்ட தாக்கம் இதனால் ஏற்படும் அணு சக்தி அபாயம் குறித்து உலகளவில் ஏற்பட்டுள்ள பீதி என்பவற்றை தொடர்ந்து புதிய அணு உலைகளை அமைக்கும் செயற்பாடுகளை சீனா இடை நிறுத்தியுள்ளது.
ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த சுனாமியால் அந்நாட்டின் அணு உலைகள் வெடித்து, கதிர் வீச்சு பரவி வருகிறது.
ஜப்பானில் ஏற்பட்ட இந்த ஆபத்து உலகின் பல நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அணு உலைகள் வைத்திருக்கும் அனைத்து நாடுகளுமே, தங்களது அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து மீள் பரிசீலனை செய்து வருகின்றன.
இந்நிலையில், ஜப்பான் நில நடுக்கத்திற்கு முன்னதாக சீனாவில் புதிய அணு உலைகளை நிறுவ அரசு அனுமதி அளித்திருந்தது.
ஆனால் தற்போது அந்த அனுமதியை பிரதமர் வென் ஜியாபோ இரத்துச் செய்துள்ளார்.
உலக முழுவதும் மின்சாரம் தயாரிக்க 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் 430 க்கும் அதிகமான அணு உலைகள் உள்ளன. இதில் அதிக அளவில் மின்சாரம் தயாரிக்கும் நாடு அமெரிக்கா. அங்கு மொத்த மின்சாரத்தில் 19 சதவீதம் அணுசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பிரான்சில் மொத்த மின்சார தேவையில் 80 சதவீதம் அணுசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
உலகில் அணுசக்தி ஆக்க வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் நோக்கில் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (ஐஏஇஏ) என்ற சர்வதேச அமைப்பு கடந்த 1957ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் இதன் தலைமை அலுவலகம் உள்ளது. நியூயோர்க், ஜெனிவா, டொரன்டோ, டோக்கியோ ஆகிய நகரங்களில் இதன் அலுவலகங்கள் உள்ளன.
அணு சக்தியை ஆக்கப் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துவது, எந்த நாடாவது இதை மீறுகிறதா என்று கண்காணிப்பது, சந்தேகம் ஏற்பட்டால் அணு உலைகளுக்குச் சென்று சோதனை நடத்துவது ஆகியவை இதன் பிரதான பணிகள்.
புகுஷிமா டைச்சியில் ஏற்பட்ட பாதிப்பு எந்தநிலை என்பதை ஐஏஇஏ இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை. உக்ரைனின் செர்னோபில் அணு உலையில் 1986ம் ஆண்டு ஏற்பட்ட விபத்து உச்சபட்ச விபத்தாக கருதப்பட்டது.
மனித உடலில் பல வகையில் அணுக்கதிர் வீச்சு பரவ வாய்ப்புள்ளது. காய்ச்சல் முதல் புற்றுநோய் வரை வரும் ஆபத்து உண்டு. தோல் வியாதிகளும் வரும்.
லையில் 100 ரெம் வரை கதிர்வீச்சு ஏற்பட்டால், அதனால் தலைமுடி 2 வாரத்தில் கொட்டிவிடும். வாந்திபேதி ஏற்படும். அதனால் வேறு கோளாறுகளும் ஏற்படும்.
இரத்தத்தில் கலந்துவிட்டால், அதில் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது இரத்தம் கெட்டுவிடும்.
இரத்தக் கொதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
உடலில் மைய நரம்பு மண்டலம் மிக முக்கியமானது. அதில் கதிர்வீச்சு பாய்ந்தால், மூளையில் இருந்து சிறுநீரகம் வரை பாதிக்க வாய்ப்புண்டு. இதில் 2 ஆயிரம் ரெம் வரை வீச்சு ஏற்படுமாம்.
குடலையும் கதிர்வீச்சு பாதித்தால் இரத்தப்போக்கு அதிகரிக்கும். கடைசியில் மரணம் ஏற்படும் அபாயமுண்டு.
அணு உலையில், யுரேனியம் கம்பிகள் வரிசையாக இருக்கும். இவை மூலம் அணுக்கள் பிளக்கப்பட்டு, அணு மின்சாரமாக மாற்றப்படும்.
இது மிகுந்த வெப்பசக்தி கொண்டது என்பதால் எப்போதும், குளிர்நிலையில் வைத்திருக்க தண்ணீர் போன்ற திரவம் இருக்கும்.
இது குறைந்தால் யுரேனிய கம்பிகள் பாதரசம் போல உருகுவது மட்டுமல்ல. 3200 சென்டிகிரேட் கொடூர வெப்பத்தையும் பரப்பும். இதானல் தான் உலை வெடிப்பு ஏற்படுகிறது. அணுக்கதிர் வீச்சு, காற்று, தண்ணீர் மூலம் பரவி ஆபத்து தருகிறது.
கதிர்வீச்சை மில்லிரெம் என்று அளவையால் கணக்கிடப்படுகிறது. மனித உடலில் சாதாரணமாகவே இரசாயனம், வெப்பம் போன்றவற்றால் 300 மில்லிரெம் கதிர்வீச்சு உள்ளது.
ஆனால், அணுகதிர் வீச்சு உடலில் பரவினால் அதன் ஆபத்துக்கு அளவே இல்லை.
கடந்த 1969 ல் சுவிட்சர்லாந்தில் லுசென்ஸ் அணுஉலை, 1979ல் அமெரிக்காவில் த்ரீமைல் தீவு அணுஉலை, 1986ல் உக்ரைனில் செர்னோபில் உலை ஆகியவற்றில் இப்படி விபத்து ஏற்பட்டுள்ளது. பல லட்சம் பேர் இன்னமும் கூட ஊனமாகவும், வியாதிகளால் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இப்போது இந்த வரிசையில் ஜப்பான் அணு உலைகள்.
கதிர்வீச்சு ஆபத்து ஏற்பட்டால், அதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிடும். அதைத்தான் ஜப்பான் அரசு, மக்களுக்கு விடுத்துள்ளது. வீட்டுக்குள் முடங்க வேண்டும்; வெளியில் வரக்கூடாது; ஜன்னல், கதவுகள் காற்றுப் புகா வண்ணம் இறுக்கமாக மூட வேண்டும். துணிகளை கூட வெளியில் காயப் போடக்கூடாது என்றெல்லாம் அதிரடி கட்டளைகளை போட்டுள்ளது.
கதிர்வீச்சு பட்ட பயிர்கள் பொசுங்கும், மரங்கள் பட்டுப் போகும்; விலங்குகள் பிராணிகள் முதல் மனிதர்கள் வரை பாதிக்கப்படுவர்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites