அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 5 பிப்ரவரி, 2011

செல்போனில் அதிகநேரம் பேசினால் மறதி, தூக்கமின்மை, அஜீரணம் ஏற்படும்



புதுடெல்லி : செல்போன் மற்றும் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மறதி, தூக்கமின்மை, அஜீரணம் உட்பட பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று மத்திய அரசின் ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது. செல்போன் மற்றும் உயர்கோபுரங்களால் மனித உடலுக்கு ஏற்படும் தீங்குகள் பற்றி ஆராய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அதில் 8 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். சுகாதார அமைச்சகம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு துறை உறுப்பினர் செயலர் ஆகியோர் உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சக பிரதிநிதிகள் இடம்பெற்ற அந்த குழு, தனது ஆய்வு அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது.
செல்போன் பயன்படுத்தும்போது வெளியாகும் கதிர்வீச்சு விஷயத்தில் மனித உடலில் ஊருடுவும் ரேடியோ அலைகளின் அளவுக்கு (ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேடி & எஸ்ஏஆர்) கட்டுப்பாடு உள்ளது. அதைப் பின்பற்றாமல் தயாரிக்கப்படும் மலிவான செல்போன்களை தடை செய்ய வேண்டும் என்று குழு பரிந்துரை செய்துள்ளது.
குடியிருப்பு பகுதிகள் அதிகம் கொண்ட இடங்கள், பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள், மருத்துவமனைகள் அருகே அதிக கதிர்வீச்சை வெளியிடக்கூடிய செல்போன் டவர்களை அமைக்கக் கூடாது. இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட எஸ்ஏஆர் அளவு ஒரு கிலோவக்கு 2 வாட் மட்டுமே. சராசரியாக 6 நிமிடங்கள் போனில் பேசினால் வெளியாகும் அளவு இது.
இதைவிட அதிக கதிர்வீச்சு கொண்ட செல்போன்களால் ரேடியோ அலைகள் அதிகளவில் வெளியாகும்.
எனவே, அனுமதிக்கப்பட்ட அளவை 2 வாட்டில் இருந்து அமெரிக்க தொலைத் தொடர்பு கமிஷன் வரையறுத்துள்ள 1.6 வாட்டாக குறைக்கவும் ஆய்வுக் குழு வலியுறுத்தியுள்ளது.
செல்போன் மற்றும் டவரில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக மனிதர்களுக்கு மறதி, கவனக்குறைவு, ஜீரண உறுப்புகளில் கோளாறு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் குழு எச்சரித்துள்ளது.
மூளை புற்றுநோய் தாக்கலாம்
மும்பை ..டி. மின்னணு பொறியியல் துறை பேராசிரியர் கிரிஷ் குமார் கூறுகையில், செல்போனில் அதிகநேரம் பேசும் இளம்வயதினருக்கு, மூளை புற்றுநோய் வரும் அபாயம் 400 சதவீதம் அதிகம். குழந்தைகளின் மெல்லிய மண்டை ஓட்டுக்குள் செல்போன்களின் மின்காந்த கதிரியக்கம் ஆழமாக ஊடுருவுகிறதுÓ என்றார்.
விஞ்ஞானி சொல்கிறார் ஆய்வுக் குழுவில் சுகாதாரத் துறை சார்பில் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ்.சர்மா கலந்து கொண்டார். அவர் கூறுகையில்,  பல நிபுணர்கள் தாக்கல் செய்த தகவலின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. டெலிபோன் டவர்களின் கதிரியக்க அளவு தொடர்பாக தேசியக் கொள்கை வகுக்கப்படும். ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களை விட, இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் அதிக பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதற்கு நம் நாட்டில் நிலவும் வெப்பமான சூழல், உடல் எடை குறைவு, கொழுப்பு சத்து குறைவு போன்றவை காரணமாக இருக்கின்றன. இதனால் கதிரியக்க அளவு விதிமுறைப்படி தயாரிக்கப்பட்ட செல்போன்களை மட்டுமே நமது நாட்டில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்ÕÕ என்றார்.
என்ன பாதிப்புகள்
செல்போனை நாம் பயன்படுத்தும்போது தலைப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கிறது. மூளைக்கு வரும் ரத்தம் இந்த வெப்பத்தை உடலின் மற்ற பகுதிகளிலும் பரவச் செய்கிறது. இதனால் உடலின் வெப்ப நிலை அதிகரிக்கிறது.
செல்போன் டவரிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சால் தலைவலி, தூக்கமின்மை, மயக்கம், கவனக்குறைவு, காதில் இரைச்சல், ஞாபகசக்தி குறைவு, அஜுரணம், இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்படுகிறது.

குழந்தைகள், வாலிப வயதினர், கர்ப்பிணிகள் செல்போனை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

செல்போனை தலைப்பகுதிக்கு அருகே கொண்டு செல்லாமல், ஹெட் போன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சிறந்தது

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

புகைப்பதால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் இழப்பு: அதிர்ச்சித் தகவல்!


புகைபிடிப்பதால் தனது வாழ்நாளில் 10 ஆண்டுகள் வரை புகைப் பழக்கம் கொண்டவர்கள் இழக்கக் கூடும் என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவல், அண்மையில் பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. புகைப் பழக்கத்தோடு பிற உடல்நலக்கேடான பழக்கங்களும் இருந்தால் 15 ஆண்டுகள் வரை வாழ்நாள் இழப்பு ஏற்படும் என்றும் அதில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக 35 வயதைத் தாண்டியவர்கள் புகைப் பிடிக்கும் பழக்கும் வழக்கத்தைத் தொடர்ந்தால் கேடு பன்மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.
புகைப்பழக்கம் இதயத்தின் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை விரைவாக்குகிறது என்றும், அதிக கொலஸ்ட்ரால் உள்ள உணவுகளை உட்கொள்வதாலும், சோம்பிய வாழ்க்கைப் பழக்கத்தாலும் மாரடைப்பு ஏற்படுவது விரைவுபடுத்தப்படுவதாகத் தெரிகிறது.
புகைப்பழக்கத்தை நிறுத்தியவர்கள் தமனி அடைப்புகள் நீங்கி வாழ்நாள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்தது.
இந்த ஆய்வு குறித்த கருத்து தெரிவித்த புகைபிடிப்பவர் ஒருவர் "புகைக்காமல் வாழ்பவர்கள் அனைவரும் நீண்ட நாள் வாழ்கிறார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை" எனத் தெரிவித்தார்.

புற்று நோய்க்கு மனிதனே காரணம்


புற்று நோய் ஏதோ இனம்புரியாத இயற்கை விளைவுகளால் ஏற்படுவதல்ல மாறாக மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட அதிநவீன வாழ்வுதான் காரணம் என்று மான்செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதனின் உற்பத்தி நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள உடல்ரீதியான மாற்றங்களே சமீப புற்று நோய்க் கட்டிகளுக்குக் காரணம் என்று இவர்கள் கூறுகின்றனர்.
இதனை உறுதி செய்ய அவர்கள் எகிப்திய மம்மிக்களை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான மம்மிக்களை ஆய்வு செய்ததில் ஒரேயொரு மம்மியில் மட்டும் புற்று நோய் இருந்தது உறுதியானது.
பண்டைய எகிப்திய பிரதிகளில் காணப்படும் புற்று நோய்ப் போன்ற நோய்க்கான குறிப்புகள் அனைத்தும் குஷ்ட ரோகத்தினால் ஏற்படும் உடல் ரீதியான அறிகுறிகளை புற்று நோய் என்பதாக அது கூறியுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் தலைவரான மைக்கேல் ஸிம்மர்மேன் மாம்மிக்களில் கட்டிகள் இருந்ததற்கான அடையாளம் இல்லை என்பதால் புற்று நோய் அந்தக் காலக்கட்டத்தில் இல்லை என்று கூறமுடியும் என்று கூறுகிறார்.
"இதனால் புற்ற்நோய் அல்லது புற்று நோய் உருவாக்கக் காரணிகள் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய வாழ்வு முறையே என்று நாம் கருத இடமுண்டு" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"சுற்றுசூழலில் இயற்கையாக உள்ள எந்த ஒரு கூறும் புற்று நோய்க்கு காரணமாக இருக்கவில்லை. இதனால் இது மனிதனால் ஏற்பட்டுள்ள சீரழிந்த, மாசாகிப்போன சூழ்நிலைகளால் உருவானதே" என்று நாம் கூற முடியும்." என்று சக ஆய்வாளரும் பேராசிரியருமான ரொசாலி டேவிட் கூறுகிறார்.
அதாவது எய்ட்ஸ், புற்று நோய் என்பதெல்லாம் ஆதிகாலம் தொட்டே இருந்து வருபவை என்ற பொய்யை மருத்துவ ஆய்வும் கார்ப்பரேட் ஆய்வும் கூறிவரும் இந்த நிலையில் புற்று நோய்க்கு ஒரு வரலாற்றுப் பார்வையை அளிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு காலத்தின் உடல்களை ஆய்வு செய்ததில் நவீன சமூகங்களுக்கு கிடைத்த செய்தி என்னவெனில் "புற்று நோய் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டதே" என்பதுதான் என்று இந்த ஆய்வாளர்கள் அடித்து‌க் கூறுகின்றனர்.

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites