அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 24 டிசம்பர், 2010

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களும், முஸ்லீம்களின் நிலையும்.

வேதமுடையோரே! ஊங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே! ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. ஆல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன். 
(அல்குர்ஆன் 4:171)

கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை கடவுளாகவும், கடவுளின் மகனாகவும், பரிசுத்த ஆவியாகவும் வணங்கி வருகிறார்கள். கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை ஈஸா (அலை) பிறந்த தினமாகக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த கிறிஸ்மஸ் பண்டிகையின் வரலாறை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கூட தெரியாது இருக்கிறார்கள். 

கிறிஸ்மஸ் பண்டிகையின் வரலாறு

முதலில் கிறிஸ்மஸ் பண்டிகை எவ்வாறு கிறிஸ்தவர்களின் புனித நாளாகக் கருதப்பட்டு வந்தது என்ற வரலாற்றை நோக்குவோம். கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப் பிரகாரம் இயேசு பிறப்பதற்கு முன்னரே அன்றைய மக்கள் மத்தியில் டிசெம்பர் மாதத்தில் பரிசில்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளல் மர அலங்காரம் செய்தல், பட்டாசுக்களைக் கொளுத்துதல் ஆகியன குளிர் கால காலாச்சாரமாக நிலவி வந்தன. 

அத்துடன் 4000 வருடங்களிற்கு முன்னர் ‘மெசோபொடமியன்ஸ்’ எனும் பல கடவுள் கொள்கையிலுள்ளோர் ஒவ்வொரு குளிர் காலத்திலும் புது வருட பண்டிகையைத் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் கொண்டாடுவர். இந்தப் பண்டிகையை அவர்கள் தேர்வு செய்யக் காரணம் அவர்கள் நம்பிக்கைப் பிரகாரம் அவர்களின் கடவுள்களில் பிரதானமான கடவுள் இராட்சதனோடு சண்டையிட்டு வென்ற நாள் என்பதே. 

பண்டைய ரோமானியர்கள் அவர்களின் கடவுளை கண்ணியப்படுத்தும் விதமாக டிசெம்பர் மாத அரைப் பகுதியிலிருந்து ஜனவரி முதலாம் திகதி வரை ஒரு பண்டிகையை கொண்டாடி வந்தனர். ரோமானியர்கள் இதற்காக அவர்களின் வீடுகளையும், மரங்களையும் அலங்கரித்து மெழுகுவர்த்திகளையும் தொங்க விடுவார்கள்.; இந்த பண்டிகையின்போது உறவினர்களினது வீடுகளுக்கு சமூகமளித்து பரிசில்களைப் பரிமாறிக் கொண்டனர். 

சில ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலத்தின்போது சில குறிப்பிட்ட நாட்களிற்கு சூரியன் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும். இதனால் இவர்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடி நெருப்புக் கிடங்கை பற்ற வைத்து மரங்களில் அலங்காரங்கள் செய்து பாடல்களை பாடியவர்கள் டிசெம்பர் 22க்கு அருகிலுள்ள காலப்பகுதியை தேர்வு செய்து பண்டிகையாக கொண்டாடினர். 

இயேசு பிறந்த பின் இந்த பண்டிகை எல்லாவற்றுடனும் சேர்த்து டிசெம்பர் மாதத்தில் இயேசு பிறந்த தினத்தையும் ஒரே பண்டிகையாக அதாவது டிசெம்பர் 25வது தினத்தில் கொண்டாட முடிவு செய்தனர். ஆனால் உண்மையில் இயேசு பிறந்தது டிசெம்பர் 25 தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

பைபிளின் கருத்துப்படி இயேசு கிருத்து ஒரு கோடை காலத்தில் தான் பிறந்திருக்க முடியுமே தவிர கண்டிப்பாக டிசம்பர் இருபத்தி ஐந்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

 பார்க்க www.historyofchristmas.net

மாற்று மத கலாச்சாரத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களின் நிலை?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மாற்று) சமுகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மை சார்ந்தவர் இல்லை. அறிவிப்பவர் இப்னு உமர் (ரழி)
                                                       நூல் அபூதாவூத் (3512)

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

"உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கüன் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், "அல்லாஹ் வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடிய வர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர் களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேறெவரை?'' என்று பதிலலித் தார்கள் (புஹாரி 3456)


எந்த ஒரு முஸ்லிம் மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவர் அல்ல என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

இன்று சில முஸ்லிம் சகோதரர்கள் தங்கள் அயலவர்களினதோ அல்லது நண்பர்களினதோ கிறிஸ்மஸ் வைபவங்களில் கலந்து கொள்ளக்கூடியவர்களாக உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து வாழ்த்துக் கூறக்கூடியவர்களாகவும் அவர்கள் கொண்டாட்டத்திற்காக செய்யும் அத்தனை நடவடிக்கைகளிலும் பங்கு பற்றக்கூடியவர்களாகவும் உள்ளனர். அல்லாஹ்வை மட்டும் வணங்கக்கூடியவர்களாக இருந்து கொண்டு ஈஸா (அலை) அவர்களை கடவுளாகக் கருதி கொண்டாடப்படும் பண்டிகையில் கலந்து அந்த நடவடிக்கைகளுக்கு தாமும் தம் ஒத்துழைப்பை வழங்குகின்றனர். அதாவது அந்நிய மத சகோதரர்களை, நண்பர்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற வேண்டிய நாம் அவர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு ஒப்பாக நடந்து நமது இஸ்லாமிய கொள்கையை விட்டுக் கொடுக்கக்கூடியவர்களாக மாறுவது மிகவும் வேதனைக்குரியதாகும். மேலும், இப் பண்டிகையின்போது தயாரிக்கப்படும் ‘கிறிஸ்மஸ் கேக்குகளில் மது வகைகள் கலக்கப்படுகின்றன. இதை அறிந்து கொண்டே நம் முஸ்லிம் சகோதரர்கள் அவற்றை உண்ணக்கூடியவர்களாக உள்ளனர். 

நம்பிக்கைக் கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே, இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:90)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அபூ தல்ஹா (ரலி) அவர்கள் வீட்டில் மக்களுக்கு மது பரிமாறு பவனாக இருந்தேன். அந்த நாட்களில் பேரீச்சம் பழ மதுவை(பேரீச்ச மரக் கள்ளை)யே அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, "(மக்களே!) மது தடை செய்யப்பட்டு விட்டது'' என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அபூ தல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், "வெளியே சென்று இதை ஊற்றிவிடு'' என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது.  மக்களில் சிலர், "மது தங்கள் வயிறுகளில் இருக்கும் நிலையில் பல பேர் கொல்லப்பட்டிருக்கிறார்களே! (அவர்களின் நிலை என்ன?)'' என்று கேட்டார்கள்.  அப்போது தான், "இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்கள் மீது குற்றமில்லை'' (5:93) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது
(புஹாரி 2464)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி 5575)

மேலும், கிறிஸ்தவர்கள் பன்றி இறைச்சியை விரும்பி சாப்பிடக்கூடியவர்களாக உள்ளனர். அவர்கள் நமது வீட்டுக்கு உணவு ஏதேனும் அனுப்பினால் அவ்வுணவில் அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட ஹராமானவை இல்லாதிருந்தால் தாராளமாக சாப்பிடலாம். 

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 16:115)

மேலதிக விபரங்களுக்கு இங்கு க்லிக் செய்யவும்.

ஆகவே, மாற்று மத சகோதரர்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாடுவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. 

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.  (அல்குர்ஆன் 4:140)

உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் கையால் தடுக்கட்டும் அதற்கு சக்தி இல்லாதவர் வாயால் தடுக்கட்டும் அதற்கும் சக்தி இல்லாதவர் மனதினால் வெறுத்து ஒதுங்கட்டும் இது தான் ஈமானில் மிக பலவீனமாக நிலையாகும் (முஸ்லிம் 70)

எனவே, மாற்று மத கலாச்சாரங்களைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு அல்லாஹ் நமக்குக் காட்டித் தந்த அழகிய வழியில் வாழ்ந்து ஈருலகிலும் நற்பேறுகளைப் பெற்று சுவர்க்கத்துக்குரியவர்களாக மாற அல்லாஹ் அருள் புரிவானாக! 
thanks : http://www.rasminmisc.tk

வெள்ளமும் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்




சமீபத்தில் விடிய விடிய கொட்டிய பெரும் மழையாலும் புயல் காரணத்தாலும் தமிழகம் பெரும் இழப்புக்கு உள்ளாகியுள்ளது. உயிர் சேதம் உட்பட உடமை சேதம் என பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
பலகுளங்கள், ஏரிகள் நிரம்பி உடைப்பு ஏற்பட்டு பல கிரமங்கள் நீரில் முழ்கியுள்ளன. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பல பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டதுடன் பல உயிர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தளவுக்கு பேரழிப்புக்கு  ஏற்பட்டதற்கு காரணம் நாமே! நமது அரசே! மழை பொழிந்த அளவு ஏதோ அதிகம் என்று கூறுவது சரியல்ல! சரியான அளவுவில்தான் மழை பொழிந்துள்ளது.
ஏரிகள்,குளங்கள், கால்வாய்கள் தூர் வாரப்படாததால்தான் தண்ணீர் வெளியே சென்றது. ஒவ்வொரு வருடமும் குளங்களும் ஏரிகளும் கால்வாய்களும் தூர் வாரி ஆழப்படுத்திருக்கவேண்டும். ஆனால் அதை தமிழக அரசு ஒழுங்காக செய்யாததால் குளம்,ஏரிகளின் ஆழம் குறைந்து குறைந்தளவு நீரையே அவை உட்கொள்ள முடிந்தது. எனவே மீதியை வெளியே அனுப்பி ஊர்களை வெள்ளக்காடாக்கியுள்ளது. இது அரசின் தவறா? மழையின் தவறா?
தமிழகத்தில் சுமார் 37000 ஏரிகள்/குளங்கள் இருந்ததாகவும் தற்போது 17000 ஏரிகள் மட்டுமே உள்ளதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. இந்த தகவலின் அடிப்படையில் 20000 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய்விட்டது. இந்த இருபதாயிரம் ஏரிகள்/குளங்கள் இருந்திருந்தால் தண்ணீர் வெளியே வந்திருக்குமா?
இந்த இருபதாயிரம் ஏரிகள்/குளங்கள் காணாமல் எங்கே போயின? ஏரிகளும் குளங்களும் ஆகிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டுப்பட்டுள்ளன. இதற்கு அனுமதி அளித்தளித்தது அரசு அதிகாரிகள் இல்லையா? இந்த அனுமதிதான் இன்று தமிழகத்தை வெள்ளக்காடமாற்றியுள்ளது. குளங்களிலும் ஏரிகளிலும் வீடுகளை கட்டிவிட்டு, தண்ணீர் வீட்டுக்குள் வந்தவுடன் குறை சொல்வதும் எந்தவிதத்திலும் நியாயம் இல்லை.
ஆறுகள் ஓரங்கள் அனைத்திலும் ஆக்கிரமிப்புகள் நிறைந்ததாலும் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் சாலைகளில் தண்ணீர் பெருக்கடுத்து ஓடி சாலைகளை இல்லாமல் ஆக்கியுள்ளது. இவை அனைத்திற்கும் ஆக்கிரமிப்புகளை களையெடுக்காத அரசுதான் முக்கிய காரணம். இதனால் பலகோடி ரூபாய் இழப்புடன் மக்களும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மழையின் காரணத்தினால் பல பாலங்கள் அடித்துச் சொல்வதற்கு பிரதான காரணமாக இருந்தது மழை மட்டுமல்ல! தரமற்ற பாலங்கள்தான்! சில வருடங்களுக்கு முன்னர் கட்ட பாலங்கள் கூட உடைந்துள்ளது. பாலங்கள் கட்டுவதில் நடக்கும் ஊழல்கள். அரசியல் தலையீடுகள் மக்களின் உயிர்களை பதம் பார்த்துள்ளது.
மேலும் பல தரைபாலங்கள் தரமற்றதாக இருந்ததாலும் சுற்று கம்பிகள் இல்லாததாலும் பல பேருந்துகள் வெள்ளத்தில் இழத்துச் செல்லப்பட்டு பலர் காணாமல் போய் உள்ளன,
இது போன்று பெரும் வெள்ளம் வந்துள்ள இந்த சூழ்நிலையில்...
குளங்கள்/ ஏரிகள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்த வேண்டும்
ஏரிகள் / ஆறுகளின் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றபடவேண்டும்.
குளங்கள்/ஏரிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகள் அகற்றப்பட்டு மீண்டும் அவைகள் குளங்களாக / ஏரிகளாக மாற்றபட வேண்டும்.
குளங்கள்/ஏரிகளில் வீடுகள் கட்ட அனுமதியளித்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலங்கள் தரமானதாக கட்டப்படவேண்டும். தரைப்பாலங்கள் நீக்கப்பட்டு தண்ணீர் வரும்போதும் வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் பாலங்கள் கட்டபடவேண்டும்.
இந்த யோசனைகளை தற்போது கடைபிடித்தால் பெரும் பொருள், உயிர் சேதங்களை வருங்காலத்தில் தவிர்க்கலாம்.

ஐவேளைத் தொழுகை கடமையானது



கேள்வி ; விண்ணுலகப் பயணத்தில் ஏழாம் வானத்தில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் பார்த்தபின்னர் நபிகளார் எங்கு சென்றார்கள்?
பதில் : வான எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான ஸித்தரத்துல் முன்தஹா என்னும் இடத்திற்கு சென்றார்கள். (ஆதாரம் :புகாரீ 3887)
கேள்வி : அதன் பழங்களும் எவ்வாறு இருந்தன?
பதில் : (யமன் நாட்டில் உள்ள) ஹஜர் எனுமிடத்தில் (உற்பத்தியாகும் மண்) கூஜாக்களைப் போன்றிருந்தது. (ஆதாரம் :புகாரீ 3887)
கேள்வி : அதன் இலைகள் எவ்வாறு இருந்தன?
பதில் : யானைகளின் காதுகள் போன்றிருந்தது. (ஆதாரம் :புகாரீ 3887)
கேள்வி : அதன் வேர்பகுதியில் எத்தனை ஆறுகள் ஓடுகின்றன?
பதில் : மொத்தம் நான்கு ஆறுகள், (ஆதாரம் :புகாரீ 3887)
பதில் : அவைகளின் பெயர்கள் என்ன?
பதில் : ஸைஹான், ஜைஹான், புராத், நைல் (ஆதாரம் :முஸ்லிம் 5073, புகாரீ 3887)
கேள்வி : ஸித்ரத்துல் முன்தாஹாவில் வேறு எந்த காட்சியைப் பார்த்தார்கள்?
பதில் : ஜிப்ரீல் (அலை) அவர்களை அவர்களின் உண்மையான தோற்றத்தில் பார்த்தார்கள். (ஆதாரம் : அல்குர்ஆன் 53;13,14, முஸ்லிம் 287)
கேள்வி : அவர்களின் உண்மையான தோற்றம் எவ்வாறு இருந்தது?
பதில் : அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருக்கும். (ஆதாரம் : முஸ்லிம் 287)
கேள்வி : ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு எத்தனை இறக்கைள் இருந்தன?
பதில் : 600 இறக்கைகள். (ஆதாரம் : புகாரீ 4857, அஹ்மத் 4164)
கேள்வி : பின்னர் எந்த இடத்திற்கு சென்றார்கள்?
பதில் : பைத்துல் மஃமூர் எனும் இடத்திற்கு சென்றார்கள். (ஆதாரம் :புகாரீ 3887)
கேள்வி : பைத்துல் மஃமூரின் சிறப்பு என்ன?
பதில் : பைத்துல் மஃமூர் எனுமிடத்தில் ஒவ்வொரு நாளும் 70 ஆயிரம் வானவர்கள் தொழுவார்கள். ஒரு தடவை வந்தவர்கள் மறுதடவை வரமாட்டார்கள். (ஆதாரம் :புகாரீ 3207)
கேள்வி : பின்னர் நபிகளாருக்கு என்ன வழங்கப்பட்டது?
பதில் : பாலும் தேனும் மதுவும் வழங்கப்பட்டது. (ஆதாரம் :புகாரீ 3887)
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் எதை தேர்ந்தெடுத்தார்கள்?
பதில் : பாலைத் தேர்ந்தெடுத்தார்கள். (ஆதாரம் :புகாரீ 3887)
கேள்வி : அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்ன கூறினார்கள்?
பதில் : மதுவைத் தேர்வு செய்யாமல் பாலைத் தேர்வுசெய்ததால் இது தான் நீங்களும்  உங்கள் சமூதாயத்தாரும் இருக்கும் (இஸ்லாம் எனும்) இயற்கை நெறியாகும் என்று கூறினார்கள். (ஆதாரம் :புகாரீ 3887)
கேள்வி : பின்னர் நடந்தது என்ன?
பதில் ; ஒரு நாளைக்கு 50 நேரங்கள் தொழவேண்டுமென கட்டளையிடப்பட்டது.
கேள்வி : இந்த தொழுகைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் விசாரித்த நபி யார்?
பதில் : மூஸா (அலை) அவர்கள் (ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : 50 நேரத்தொழுகை கடமையாக்கப்பட்டதை தெரிந்த மூஸா (அலை) அவர்கள் என்ன கூறினார்கள்?
பதில் : உங்கள் சமூதாயத்தார் ஒரு நாளைக்கு ஐம்பது வேளைத் தொழுகையைத்  தாங்கமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுக்கு முன் மக்களிடம் அனுபவப்பட்டுள்ளேன், பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குப்பட்டுள்ளேன். ஆகவே உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் உங்கள் சமூதாயத்தினருக்காக  (தொழுகையின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள் என்று மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் :புகாரீ 3887)
கேள்வி ; இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்?
பதில் : நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று முறையிட்டு ஐம்பதிலிருந்து பத்தைக் குறைத்து வந்தார்கள். (ஆதாரம் :புகாரீ 3887)
கேள்வி : இதை அறிந்த மூஸா (அலை) அவர்கள் என்ன கூறினார்கள்?
பதில் : முன் போலவே இன்னும் குறைத்து வரும்படி கூறினார்கள். (ஆதாரம் :புகாரீ 3887)
கேள்வி : இறுதியாக எத்தனை நேரங்களாக குறைக்கப்பட்டது?
பதில் : ஐந்தாக குறைக்கப்பட்டது. (ஆதாரம் :புகாரீ 3887)
கேள்வி : இதை அறிந்த மூஸா (அலை) அவர்கள் என்ன கூறினார்கள்?
பதில : ஒவ்வொரு நாளும் ஐந்து நேரத் தொழுகைகளை உங்கள் சமூதாயத்தினர் தாங்க மாட்டார்கள். உங்களுக்கு முன்பே மக்களுடன் பழகி நான் நன்கு அனுபவப் பட்டுவிட்டுள்ளேன். நான் பனூஇஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குவப்பட்டுள்ளேன். எனவே உங்கள் சமுதாயத்தினருக்காக இன்னும் குறைத்து தரும்படி கேளுங்கள் என்று மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் :புகாரீ 3887)
கேள்வி : இதற்கு நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்?
பதில் : நான் (கடமையான தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைத்துத் தரும்படி பலமுறை இறைவனிடம்) எனக்கே வெட்கமேற்படும் வரையில் நான் கேட்டுவிட்டேன். ஆகவே நான் திருப்தியடைகிறேன். (இந்த எண்ணிக்கை) ஒப்புக்கொள்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் :புகாரீ 3887)
கேள்வி : பின்னர் என்ன கூறப்பட்டது?
பதில் : நான் என் (ஐந்து நேரத் தொழுகை எனும்) விதியை நடைமுறைப்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து நேரமாகக் குறைத்துக் கடமையை) எளிதாக்கி விட்டேன் என்று (அசரீரிக்) குரல் ஒலித்தது. (ஆதாரம் :புகாரீ 3887)
கேள்வி : நபி (ஸல்) அவர்களின் இந்த பயணத்தை குறைஷிகள் ஏற்றுக் கொண்டார்களா?
பதில் : ஏற்றுக் கொள்ளவில்லை. (ஆதாரம் : புகாரீ 3886)
கேள்வி : எவ்வாறு மறுத்தார்கள்?
பதில் : அபூஜஹ்ல் நபிகளாரிடம் வந்து இன்று ஏதேனும் செய்தி உண்டா? என்று கிண்டலாக கேட்டான். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் இன்றிரவு இங்கிருந்து பைத்துல் மக்திஸ் வரை சென்று வந்தேன் என்றார்கள். (ஆதாரம் : அஹ்மத் 2680)
கேள்வி : அதற்கு அபூஜஹ்ல் என்ன கூறினான்?
பதில் : இரவில் சென்று விட்டு இன்று காலை எங்களிடம் வந்துவிட்டீர் என்று (கிண்டலாக) கேட்டான். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று கூறினார்கள். (ஆதாரம் : அஹ்மத் 2680)
கேள்வி : பின்னர் அபூஜஹ்ல் என்ன கூறினான்?
பதில் : என்னிடம் சொன்னதை உன் கூட்டாத்தாரிடம் நீர் சொல்வாயா என்று கேட்டான். நபி (ஸல்) அவர்களும் சரி என்றார்கள். (ஆதாரம் : அஹ்மத் 2680)
கேள்வி : அபூஜஹ்ல் யாரை அழைத்தான்?
பதில் : பனூ கஅப் பின் லுவை கூட்டத்தாரை அழைத்தான்.பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் நீர் என்னிடம் கூறியதை இவர்களிடம் கூறும் என்றான்.(ஆதாரம் : அஹ்மத் 2680)
கேள்வி : நபிகளார் அந்த செய்தியை கூறியபோது அக்கூட்டத்தார் என்ன கூறினார்கள்?
பதில் : (வெகுதூரத்தில் உள்ள) பைத்துல் மக்திஸ் பள்ளிக்கு இரவில் சென்று விட்டு கலையில் எங்களிடம் வந்து வீட்டீரா? என்று கிண்டலாக கேட்டனர். (ஆதாரம் : அஹ்மத் 2680)
கேள்வி : அவர்களின் கிண்டல் எவ்வாறு அமைந்திருந்தது?
பதில் : சிலர் கைத்தட்டினர், சிலர் தலையில் தங்கள் கைகளை வைத்துக் கொண்டனர். (ஆதாரம் : அஹ்மத் 2680)
கேள்வி : வேறு என்ன கேள்விகளை அவர்கள் கேட்டார்கள்?
பதில் : அவர்களில் சிலர், அந்த ஆலயத்திற்கு சென்று வந்திருந்தால் அதன் அடையாளத்தைக் கூறும் என்றனர். (ஆதாரம் : அஹ்மத் 2680)
கேள்வி : இந்த கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு பதிலளித்தார்கள்?
பதில் : கஅபத்துல்லாவில் ஹிஜர் எனுமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் நிற்க அல்லாஹ் தஆலா பைத்துல் மக்திஸ் ஆலயத்தை எடுத்துக் காட்டினான். அதைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் அதன் அடையாளத்தை கூறினார்கள். (ஆதாரம் : புகாரீ4710, அஹ்மத் 2680)
கேள்வி : நபிகளாரின் பைத்துல் மக்திஸ் பற்றி வர்ணணைப்பற்றி அம்மக்கள் என்ன கூறினார்கள்?
பதில் : நபிகளாரின் இந்த வர்ணனை சரியானதே என்று கூறினார்கள். (ஆதாரம் : அஹ்மத் 2680)
கேள்வி : விண்ணுலுகப் பயணம் நடந்தது என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டனரா?
பதில் : ஈமான் கொண்டவர்களில் சிலர் இதை ஏற்றுக் கொள்ளாமல் காபிர்களாக மாறினர். (ஆதாரம் : ஹாகிம் 4488)
கேள்வி : பைத்துல் மக்திஸ் பயணம் பற்றி மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியபோது அவர்கள் என்ன கூறினார்கள்?
பதில் ; நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறினார்களா? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ஆம் என்றனர். அவர்கள் அவ்வாறு கூறியிருந்தால் அவர்கள் உண்மையே கூறியுள்ளார்கள் என்றார்கள். (ஆதாரம் : ஹாகிம் 4488)
கேள்வி : இதற்கு மக்கள் என்ன பதிலளித்தார்கள்?
பதில் : இரவில் பைத்துல் மக்திஸிக்கு சென்று விடிவதற்குள் இங்கு வந்ததை நீங்கள் நம்புகிறீர்களா? என்று கேட்டனர். (ஆதாரம் : ஹாகிம் 4488)
கேள்வி : இதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் என்ன பதிலளித்தார்கள்?
பதில் : இதைவிட தூரமான செய்தியைக் கூறியிருந்தாலும் அதையும் நான் உண்மைப்படுத்துவேன் என்று கூறினாôர்கள். (ஆதாரம் : ஹாகிம் 4488)
கேள்வி : இவ்வாறு அபூபக்ர் (ரலி) கூறியதால் கிடைத்த பட்டம் என்ன?
பதில் : ஸித்தீக் (உண்மையாளர்) என்ற அழைக்கப்பட்டார்கள். (ஆதாரம் : ஹாகிம் 4488)

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites