அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 6 மே, 2011

உயிரியல்


1.       பூக்கும் தாவரத்தின் பெயர்
விடை : பெனரோ கேம்கள்
2.       மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படும் தாவரம்
விடை : கீழாநெல்லி
3.       தாவர வைரஸ்களில் காணப்படுவது
விடை : ஆர்.என்..
4.       வேரூன்றிய நீர்வாழ் தாவரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
விடை : அல்லி
5.       பூஞ்சைகளின் வெஜிடேடிங் நிலைக்கு
விடை : தாலஸ்
6.       பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு
விடை : மைக்காலஜி
7.       தாவரத்தின் ஆண்பாகம் என்பது
விடை : மகரந்த தாள் வட்டம்
8.       கூட்டுயிரி வாழ்க்கையில் பொதுப் பயன்களைப் பெற்று வாழும் பூஞ்சை
விடை : லைக்கன்கள்
9.       சிறுகுடலின் நடுப்பகுதியின் பெயர்
விடை : ஜெஜீனம்
10.     உமிழ்நீரில் காணப்படும் நொதி
விடை : டயலின்
11.     கணுக்காலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை
விடை : 7
12.     பட்டுப்புழுவில் வரும் புரோட்டோசோவன் நோய்
விடை : பெப்ரைன்
13.     ஓசோன் படலத்தை குறைக்கும் பொருள்
விடை : குளோரோ புளூரோ கார்பன்
14.     யூக்ளினாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு
விடை : கசையிழை
15.     மனிதனின் உடலில் உள்ள மொத்த எலும்புகள்
விடை : 206
16.     இரைப்பை முன் சிறுகுடலில் சேருமிடம்
விடை : பைலோரஸ்
17.     மீனில் அதிகமாக உள்ள ஊட்டச்சத்து
விடை : புரதம்
18.     பயிர்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் எதில் உள்ளன?
விடை : காம்போஸ்ட்
19.     எந்த நோயை தடுப்பூசியால் தடுக்க முடியாது?
விடை : சர்க்கரை வியாதி
20.     ஆயுர்வேதம் என்பது
விடை : வாழ்வு பற்றிய அறிவியல்
21.     வகைப்பாட்டு அறிவியலை உருவாக்கியவர்
விடை : கெரல் வினெயெஸ்
22.     ரத்த ஓட்டத்தையும் இதயத்தின் செயல் பாட்டினையும் கண்டுபிடித்தவர்
விடை : வில்லியம் ஹார்வி
23.     உடல் உஷ்ண நிலையை சீராக்குவது
விடை : தோல்

செவ்வாய், 3 மே, 2011

எளியோர் மீது தாக்குதல்


நபிகள் நாயகம் வரலாறு                                  தொடர் : 5
எளியோர் மீது தாக்குதல்
எம்.. முஹம்மத் சுலைமான்
கேள்வி : நபிகளாரைத் துன்பறுத்தியவர்கள் வேறு எவர்களை துன்புறுத்தினார்கள்?
பதில் : நபிகளாரின் ஓரிறைக் கொள்கை ஏற்றுக் கொண்டவர்களை (ஆதாரம் : இப்னுமாஜா 147)
கேள்வி : என்ன துன்பத்தைக் கொடுத்தனர்?
பதில் : இரும்புச் சட்டைகளை அவர்களுக்கு அணிவித்து வெயில் வாட்டி எடுத்தனர். (ஆதாரம் : இப்னு மாஜா 147)
கேள்வி : அவர்களில் முக்கியமானவர்கள் யார்? அவர்களுக்கு என்ன வேதனை செய்யப்பட்டது?
பதில் : யாஸிர் (ரலி), அம்மார் (ரலி), சுமைய்யா (ரலி) ஆகியோர் மிக கடுமையாக துன்புறுத்தப்பட்டார்கள். காலம் முழுதும் நாங்கள் இவ்வாறு தான் இருக்கவேண்டுமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கும் அளவிற்கு இணைவைப்பர்களின் கொடுமை தொடர்ந்தது. (ஆதாரம் : அஹ்மத் 412)
கேள்வி : யாஸிர் (ரலி) அவர்களின் குடும்பத்தினர்களை கொடுமைபடுத்தும் போது அக்குடும்பத்தினருக்கு நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு ஆறுதல் கூறினார்கள்?
பதில் : யாஸிரின் குடும்பத்தினரே பொறுமை மேற்கொள்ளுங்கள்! உங்களுக்கு சுவர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது என்று ஆறுதல் கூறினார்கள். (ஆதாரம் : ஹாகிம் 5646)
கேள்வி : சுமைய்யா (ரலி) அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள்?
பதில் : மார்மஸ்தானத்தில் அம்பெய்து கொல்லப்பட்டார்கள். இஸ்லாத்தில் முதல் உயிர் தியாகி இவர்கள்தான். (ஆதாரம் : தபகாத்துல் குப்ரா பாகம் : 8, பக்கம் : 264) (இந்த செய்தி முர்ஸல் என்ற பலவீனமான வகையைச்சார்ந்த ஹதீஸாகும்)
கேள்வி : அவர்களை கொன்றவன் யார்?
பதில் : அபூஜஹ்ல் (ஆதாரம் : தபகாத்துல் குப்ரா பாகம் : 8, பக்கம் : 264)
கேள்வி : இதைப்போன்று இணைவைப்பவர்களால் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் யார்?
பதில் : பிலால் (ரலி) (ஆதாரம் : இப்னு மாஜா 147)
கேள்வி : பிலால் (ரலி) அவர்கள் யாருடைய அடிமையாக இருந்தார்கள்?
பதில் : உமைய்யா பின் கலப் (ஆதாரம் : புகாரீ 2301)
கேள்வி : இணைவைப்பவர்களின் கொடுமைகளுக்கு பயந்து ஈமானை இரகசியமாக முஸ்லிம்கள் வைத்துக் கொண்ட போது பிலால் (ரலி) என்ன செய்தார்?
பதில் : பகிரங்கமாக தெரிவித்தார். அல்லாஹ்வின் விஷயத்தில் உயிரை பெரிதாக அவர்கள் மதிக்கவில்லை. (ஆதாரம் : இப்னு மாஜா 147)
கேள்வி : அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் என்ன?
பதில் : பிலால் (ரலி) அவர்களை சிறுவர்களிடம் பிடித்துக் கொடுத்து மக்கா வீதிகளில் இழுத்துவரச் செய்து கொடுமைபடுத்தினர். (ஆதாரம் : இப்னு மாஜா 147)
கேள்வி : அப்போது பிலால் (ரலி) அவர்கள் ஓரிறைக்கொள்கை விட்டுவிட்டார்களா?
பதில் : இல்லை! அவ்வளவு துன்பத்தின் போதும் (இறைவன்)ஒருவனே! (இறைவன்) ஒருவனே! என்றே கூறினார்கள். (ஆதாரம் : இப்னு மாஜா 147)
கேள்வி : பிலால் (ரலி) அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்தவர் யார்?
பதில் : அபூபக்ர் (ரலி) (ஆதாரம் : புகாரீ 3754)
கேள்வி : பிலால் (ரலி) அவர்களை கொடுமைபடுத்திய உமைய்யா பின் கலஃப் எப்போது கொல்லப்பட்டான் ?
பதில் : பத்ர் போர்க்களத்தில் (ஆதாரம் : புகாரீ 2301)
கேள்வி : அவனை கொன்றவர்கள் யார்?
பதில் : அன்ஸாரிகள் கொன்றார்கள். (ஆதாரம் : புகாரீ 2301)
கேள்வி : இணைவைப்பவர்களால் கப்பாப் பின் அர்த் (ரலி) அவர்கள் எவ்வாறு துன்புறுத்தப்பட்டார்கள்?
பதில் : அவர்களின் முதுகளில் நெருப்பால் சூடிட்டு காயத்தை ஏற்படுத்தினர். அந்த தழும்புகள் கடைசி காலம் வரை அவர்களின் முதுகில் இருந்தது. (ஆதாரம் : இப்னு மாஜா 150)
கேள்வி : இணைப்பவர்களினால் ஏற்பட்ட தழும்புகளை பிற்காலத்தில் யாருக்கு முன்னால் கப்பாப் (ரலி) காட்டினார்கள்?
பதில் : உமர் (ரலி) அவர்களின் அமைச்சரவையில், உமர் (ரலி) அவர்கள் முன்னிலையில் காட்டினார்கள். (ஆதாரம் : இப்னு மாஜா 150)
கேள்வி : ஓறிறைக் கொள்கை ஏற்றதினால் கப்பாப் (ரலி) அவர்களுக்கு பொருளாதாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் என்ன?
பதில் : கொல்லனாக இருந்த கப்பாப் (ரலி) அவர்களிடம் வேலைவாங்கிக் கொண்டு பணத்தை தர மறுத்தான். (ஆதாரம் : புகாரீ 2091)
கேள்வி : பணம் தர மறுத்தவன் யார்?
பதில் : ஆஸ் பின் வாயில் (ஆதாரம் : புகாரீ 2091)
கேள்வி : பணம் கேட்டதற்கு என்ன பதலளித்தான் ஆஸ் பின் வாயில் ?
பதில் : முஹம்மத் அவர்களை மறுக்காத வரை பணம் தரமாட்டேன் என்றான். (ஆதாரம் : புகாரீ 2091)
கேள்வி : அதற்கு கப்பாப் (ரலி) அவர்கள் என்ன பதிலளித்தார்கள்?
பதில் : அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து பிறகு உயிராக்கி எழுப்பும் வரை நான் முஹம்மதை மறுக்க மாட்டேன் என்றார்கள். (ஆதாரம் : புகாரீ 2091)
கேள்வி : அதற்கு அவன் என்ன சொன்னான்?
பதில் : அப்படியென்றால் நான் இறந்து மீண்டும் உயிராக்கி எழுப்படும் வரை என்னை விட்டுவிடு. அப்போது எனக்குச் சொல்வமும் குழந்தைகளும் கொடுக்கப்படும். அப்போது நான் உன் கடனைத் தீப்பேன் என்றான். (ஆதாரம் : புகாரீ 2091)
கேள்வி : இதற்கு பதிலாக இறங்கிய வசனங்கள் எவை?
பதில் : நமது வசனங்களை மறுத்தவனைக் கண்டீரா? "எனக்கு செல்வமும், சந்ததியும் வழங்கப்படும்'' என்று கூறுகிறான். மறைவானவற்றை இவன் கண்டு பிடித்து விட்டானா? அல்லது அளவற்ற அருளாளனிடம் ஏதேனும் உறுதி மொழியைப் பெற்றானா? அவ்வாறு ஏதுமில்லை. அவன் கூறுவதைப் பதிவு செய்வோம். அவனுக்கு வேதனையை ஒரேயடியாக நீட்டுவோம். அவன் எதைப்பற்றிப் பேசினானோ அதற்கு (அவனது செல்வங்களுக்கும் சந்ததிகளுக்கும்) நாமே வாரிசாகி விடுவோம். தன்னந்தனியாக நம்மிடம் அவன் வருவான். (அல்குர்ஆன் 19 : 77-80) (ஆதாரம் : புகாரீ 2091)
கேள்வி : அபூதர் (ரலி) அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் என்ன?
பதில் : இஸ்லாத்தை அறிவதற்காக நபி (ஸல்) அவர்களைத் தேடி அபூதர் (ரலி) அவர்கள் பயணமானார்கள். கஅபதுல்லாஹ்வில் தங்கியிருந்து நபிகளார் பற்றிய செய்தி கிடைக்குமா? என்று எதிர்பார்த்திருந்தார்கள். அந்த காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் மிக கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். எனவே நிதானமாக இரகசியமாக விசாரிக்க நாடினார்கள். ஆனால் எந்த செய்தியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் கஅபத்துல்லாஹ்வில் தங்கியிருந்த அபூதர் (ரலி) அவர்களை கவனித்த அலீ (ரலி) அவர்கள், அபூதர் (ரலி) அவர்களிடம் என்ன விஷயமாக வந்துள்ளீர்கள்? என்று விசாரிக்க இறுதியாக 'இங்கே தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டபடி ஒரு மனிதர் புறப்பட்டிருக்கிறார்' என்ற செய்தி எங்களுக்கு எட்டியது. நான் அவரை சந்திக்க விரும்புகிறேன் என்று கூறினார். இதைக் கேட்ட அலீ (ரலி) அவர்கள் நீங்கள் சரியான நபரிடம்தான் விவரத்தை கூறியுள்ளீர்கள். நான் அந்த நபரை சந்திக்கும் நேரம்தான் எனவே என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள் என்றார்கள்.
   நபி (ஸல்) அவர்களிடம் வந்து அபூதர் (ரலி) நேரடியாக விவரங்களை கேட்டு முழு மனதிருப்தியுடன் ஓறிறைக் கொள்கை ஏற்றுக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீ இஸ்லாத்தை ஏற்றதை மறைத்து வைத்துக் கொள்! நாங்கள் மேலோங்கிய பின்னர் எங்களிடம் நீ வாரும் என்றார்கள். ஆனால் அபூதர் (ரலி) அவர்கள் இக்கோரிக்கை ஏற்கவில்லை.'' உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக்கிடையே உரக்கச் சொல்வேன்'' என்று கூறினார்கள்.
   பின்னர் கபஅத்துல்லாஹ்விற்கு வந்தார்கள். அங்கு குறைஷி குலத்தலைவர்கள் இருந்தனர். அவர்களை நோக்கி '' குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு எவரும் இல்லை என்று நான் உறுதி கூறுகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என்றும் உறுதி கூறுகிறேன்'' என்று கூறினார்கள்.
   இதைக் கேட்டு கொதித்தொழுந்த குறைஷிக் குலத்தலைவர்கள் '' இந்த மாதம் மாறிய துரோகியை நன்றாக கவனியுங்கள் என்று கூறினார்கள். அவனைவர்களும் சேர்ந்து அவர்கள் உயிர் போகுமளவிற்கு அடித்தார்கள். (ஆதாரம் : புகாரீ 3522)
கேள்வி : அப்போது அபூதர் (ரலி) அவர்களின் உயிரைக் காப்பாற்றியவர் யார்?
பதில் : அப்பாஸ் (ரலி)  (ஆதாரம் : புகாரீ 3522)
கேள்வி : என்ன காரணம் சொல்லி தடுத்தார்கள்?
பதில்அபூதர் (ரலி) அவர்கள் மீது அப்பாஸ் (ரலி) கவிழ்ந்து கொண்டு அவர்களுக்கு அடிபடாமல் தடுத்தவர்களாக'' உங்களுக்கு கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்?நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகத்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?) என்று அப்பாஸ் (ரலி) அவர்கள் குறைஷிகளிடம் கேட்ட போது அபூதர் (ரலி) அவர்களை அடிப்பதை விட்டுவிட்டார்கள். (அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை) (ஆதாரம் : புகாரீ 3522)
கேள்வி : திரும்ப அபூதர் (ரலி) என்ன செய்தார்கள்?
பதில் : அடுத்த நாள் இதைப்போன்றே குறைஷிகளை நோக்கி தான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கப்படுத்த திரும்பவும் உயிர் போகும் அளவிற்கு அடிக்க நேற்றை நாள் போன்றே அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து காப்பாற்றினார்கள். (ஆதாரம் : புகாரீ 3522)
தொடரும் இன்ஷா அல்லாஹ்

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites