அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 15 ஜனவரி, 2011

புற்று நோயை குணப்படுத்தும் ஒட்டக பால்- சிறுநீர்


அரபு நாட்டு பயோ டெக்னாலஜி நிறுவனம் புற்று நோய் மருத்துவம் பற்றி ஆய்வு நடத்தியது. பல்வேறு அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஒட்டகம் பால் மற்றும் சிறுநீரில் இருந்து ஒரு வகை மருந்தை தயாரித்தனர். எலிக்கு புற்று நோயை ஏற்படுத்தி இந்த மருந்தை அந்த எலிக்கு செலுத்தினார்கள். 6 மாதமாக மருந்து கொடுக்கப்பட்டது. இதில் எலிக்கு புற்று நோய் முற்றிலும் குணமாகிவிட்டது.
எலி உடலில் இருந்த புற்று நோய் செல்கள் அனைத்தும் அகன்று வீரியத்துடன் கூடிய புதிய செல்கள் உருவாகி உள்ளன. இப்போது இந்த எலி மற்ற ஆரோக்கியமான எலிகளை போல துள்ளி குதித்து ஓடுகிறது.
ஒட்டகம் பால்- சிறுநீரில் இருந்து தயாரான இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக உருவாக்குகிறது. இது பாதிக்கப்பட்ட புற்று நோய் செல்களை அளித்து விட்டு புதிய செல்களை உருவாக்குகிறது.
இந்த மருந்தால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படு வது இல்லை. எனவே மனிதர் களுக்கும் இந்த மருந்தை பயன்படுத்தி புற்று நோயை குணப்படுத்தி விடலாம் என விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள். அடுத்த கட்டமாக இப்போது மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.
இதிலும் வெற்றி ஏற்பட்டால் மருந்து பயன்பாட்டுக்கு வந்து விடும். உலகில் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பேர் புற்று நோய்க்கு பலியாகிறார்கள். அரபு நாடுகளில் இதய நோய் மற்றும் தொற்று நோய் அடுத்து புற்று நோயால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
மாலைமலர் 13 Jan 2011
இஸ்லாம் கூறும் அறிவியல்
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?
அல்குர்ஆன் 88:17

வெள்ளி, 14 ஜனவரி, 2011

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம்


எம்..சுலைமான்
கேள்வி : அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம் எப்போது நடந்தது?
பதில் : ஆயிஷா (ரலி) அவர்களின் ஆறாவது வயதில் நடந்தது. (ஆதாரம் : புகாரீ 3896)
கேள்வி : திருமணம் நடப்பதற்கு தூண்டுகேளாக இருந்தவர் யார்?
பதில் : கவ்லா பின்த் ஹகீம் (ரலி), (ஆதாரம் : அஹ்மத் 24587)
கேள்வி : கவ்லா பின்த் ஹகீம் (ரலி) அவர்கள் யார்?
பதில் : பிரசித்துப் பெற்ற உஸ்மான் பின் மள்வூன் (ரலி) அவர்களின் மனைவியாவார். (ஆதாரம் : அஹ்மத் 24587)
கேள்வி : ஆயிஷா (ரலி) அவர்கள் நபிகளாருக்கு மனைவி என்று எவ்வாறு காட்டப்பட்டது?
பதில் : கனவில் வானவர் ஒருவர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை பட்டுத்துணியால் போர்த்திக்கொண்டு வந்து இவர் தான் உம் மனைவி என்று கூறினார். (ஆதாரம் : புகாரீ 5125)
கேள்வி : இவ்வாறு எத்தனை தடவை காட்டப்பட்டது?
பதில் : மூன்று இரவுகள் காட்டப்பட்டது. (ஆதாரம் : முஸ்லிம் 4468)
கேள்வி : ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எவ்வளவு மஹர் தொகை கொடுக்கப்பட்டது?
பதில் : 500 திர்ஹம் மஹராக வழங்கப்பட்டது. (ஆதாரம் : முஸ்லிம் 2555???)
விண்ணுலக பயணம்
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் எப்போது விண்ணுலக பயணம் செய்தார்கள் சரியான குறிப்புகள் உள்ளனவா?
பதில் : இல்லை (ஆதாரம் : பத்ஹýல் பாரீ பாகம் : 7, பக்கம் : 203)
கேள்வி : விண்ணுலகப் பயணம் தொடர்பாக எத்தனை கருத்துக்கள் உள்ளன?
பதில் : ஏரளாமான கருத்துகள் நிலவுகின்றனர். அவற்றில் சில 1. சிலர் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக வருவதற்கு முன்னரே நடந்துள்ளது என்று கூறுகின்றனர். இதை பெரும்பாலான அறிஞர்கள் மறுத்துள்ளனர். 2. ஹிஜ்ரத் நடப்பதற்கு ஒருவருடத்திற்கு முன்னர் நடந்தது. இக்கருத்தை இப்னு ஸஅத் மற்றும் பலர் கூறியுள்ளனர். இமாம் நவவீ அவர்கள் இதை சரிகாணுகின்றனர்.3.        ஹிஜ்ரத்திற்கு எட்டு மாதத்திற்கு முன்னர் இது நடந்தது. இக்கருத்தை இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் கூறியுள்ளார்கள். 4. ஆறு மாத்திற்கு முன்னர் நடந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இக்கருத்தை அபூ ரபீவு பின் ஸாலிம் என்பார் கூறியுள்ளார். 5. நபிகளார் இறைத்தூதராகி 12 வருடத்தில் ரஜப் மாதத்தில் நடந்தது. 6. நபிகளார் இறைத்தூதராகி 11வது மாதத்தில் நடந்தது. 7.ஹிஜ்ரத் செய்தவதற்கு ஒருவருடத்திற்கு முன்னர் ரபீவுல் ஆகிரில் நடந்தது. 8. ஹிஜ்ரத் செய்தவதற்கு 14 மாதங்களுக்கு முன் ஆகி ரபீவுல் ஆகிரில் நடந்தது. 9. ஹிஜ்ரத் செய்தவதற்கு 15 மாதங்களுக்கு முன் நடந்தது. 10. ஹிஜ்ரத் செய்தவதற்கு 18 மாதங்களுக்கு முன் நடந்தது. 11. இது ஷவ்வாலில் நடந்தது என்றும் ரபீவுல் அவ்வலில் நடந்தது என்றும் ரமலானில் நடந்தது என்றும் கூறப்படுகிறது. 11. ரஜப் மாதத்தில் நடந்தது என்றும் கூறப்படுகிறது. 12. ஹிஜ்ரத் செய்வதற்கு மூன்று வருடத்திற்கு முன்னர் நடந்தது என்றும் கூறப்படுகிறது. 13. ஹிஜ்ரத் செய்வதற்கு ஐந்து வருடத்திற்கு முன்னர் நடந்தது என்றும் கூறப்படுகிறது. (ஆதாரம் : பத்ஹýல் பாரீ பாகம் : 7, பக்கம் : 203)
கேள்வி : நபிகளார் விண்ணுகல பயணம் செல்வதற்கு மக்காவிலிருந்து எங்கு சென்றார்கள்?
பதில் : மக்காவிலிருந்து ஜெருசலத்தில் உள்ள அல்மஸ்ஜிதுல் அக்ஸா என்ற பள்ளிவாசலுக்குச் சென்றார்கள். (ஆதாரம் : அல்குர்ஆன் 17 : 1)
கேள்வி : நபிகளார் எப்படி ஜெருசலத்திற்கு சென்றார்கள்?
பதில் : புராக் எனும் வாகனத்தில் சென்றார்கள். (ஆதாரம் : முஸ்லிம் 259)
கேள்வி : புராக் என்றால் என்ன?
பதில் : புராக் என்பது கோவேறு கழுதையை விட சிறியதும் கழுதையை விடப் பெரியதாக இருக்கும். (ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : புராக் வாகனத்தின் சிறப்பு என்ன?
பதில் : அந்த வாகனம், பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும் மின்னல் வேக வாகனமாகும். (ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : பைத்துல் மக்திஸ் பள்ளிச்சென்று நபிகளார் என்ன செய்தார்கள்?
பதில் : இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். (ஆதாரம் முஸ்லிம் 259)
கேள்வி : பின்னர் அவர்களுக்கு என்ன கொடுக்கப்பட்டது?
பதில் : பாலும் மதுவும் கொடுக்கப்பட்டது. (ஆதாரம் முஸ்லிம் 259)
கேள்வி : நபிகளார் எதை எடுத்தார்கள்?
பதில் : பாலை (ஆதாரம் : முஸ்லிம் 259)
கேள்வி : அப்போது நபிகளாரிடம் என்ன கூறப்பட்டது?
பதில் : இயற்கையை தேர்வு செய்து கொண்டீர். (ஆதாரம் : முஸ்லிம் 259)
கேள்வி : பின்னர் வானத்திற்கு அழைத்துச் சென்றவர் யார்?
பதில் : ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : முதல் வானத்தில் சென்று அதன் கதவை திறக்கும்படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறியபோது என்ன பதிலளிக்கப்பட்டது?
கேள்வி : யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜிப்ரீல் என்று பதிலளித்தார்கள். உங்களுடன் வந்துள்ளவர் யார்? என்று கேட்கப்பட்து? அதற்கு முஹம்மத் என்று பதிலளித்தார்கள். அவரை அழைத்துவர ஆள்அனுப்பட்டிருந்ததா? என்று கேட்டார். அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். (ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : நபிகளார்தான் வந்துள்ளார்கள் என்று தெரிந்த பின்னர் முதல் வானத்தின் வானவர் என்ன கூறினார்?
பதில் : அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று கூறினார்கள். (ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : முதல் வானத்தில் யாரை பார்த்தார்கள்?
பதில் : ஆதம் (அலை) அவர்களைப் பார்த்து ஸலாம் கூறினார்கள். ஆதம் (அலை) அவர்களும் அதற்கு பதில் ஸலாம் கூறினார்கள்.(ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : ஆதம் (அலை) அவர்கள் நபிகளாரைப் பார்த்து என்ன கூறினார்கள்?
பதில் : (என்) நல்ல மகனும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக! என்று கூறினார்கள்.(ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : இரண்டாவது வானத்தில் நபிகளார் யாரைப் பார்த்தார்கள்?
பதில் : நபி யஹ்யா (அலை) அவர்களையும் நபி ஈஸா (அலை) அவர்களையும் (ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : அவ்விரும் நபிகளாரைப் பார்த்து என்ன கூறினார்கள்?
பதில் : நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்! என்று கூறினார்கள். (ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : மூன்றாம் வானத்தில் யாரைப் பார்த்தார்கள்?
பதில் : நபி யூசுஃப் (அலை) அவர்களை
கேள்வி : நபி யூசுஃப் (அலை) அவர்கள் நபிகளாரைப் பார்த்து என்ன கூறினார்கள்?
பதில் : நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்! என்று கூறினார்கள். (ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : நான்காம் வானத்தில் யாரை நபிகளார் பார்த்தார்கள்?
பதில் : நபி இத்ரீஸ் (அலை) அவர்களை (ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : நபி இத்ரீஸ் (அலை) அவர்கள் நபிகளாரைப் பார்த்து என்ன சொன்னார்கள்?
பதில் : நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்! என்று கூறினார்கள். (ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : ஐந்தாம் வானத்தில் நபிகளார் யாரைப் பார்த்தார்கள்?
பதில் : நபி ஹாரூன் (அலை) அவர்களை. (ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : நபி ஹாரூன் (அலை) அவர்கள் நபிகளாரைப் பார்த்து என்ன சொன்னார்கள்?
பதில் : நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்! என்று கூறினார்கள். (ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : ஆறாம் வானத்தில் நபிகளார் யாரைப் பார்த்தார்கள்?
பதில் : மூஸா (அலை) அவர்களை. (ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : நபி மூஸா (அலை) அவர்கள் நபிகளாரைப் பார்த்து என்ன சொன்னார்கள்?
பதில் : நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்! என்று கூறினார்கள். (ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : மூஸா (அலை) அவர்களை நபிகளார் கடந்து சென்றபோது ஏன் மூஸா (அலை) அவர்கள் அழுதார்கள்?
பதில் : ''என் சமுதாயத்தில் சொர்க்கம் புகுபவர்களைவிட அதிமானவர்கள் எனக்கு பிறகு அனுப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திலிருந்து சொர்க்கம் புகுவார்கள் என்பதால்தான் அழுகிறேன்'' என்று மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : ஏழாம் வானத்தில் நபிகளார் யாரைப் பார்த்தார்கள்?
பதில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களை. (ஆதாரம் : புகாரீ 3887)
கேள்வி : நபிகளாரைப் பார்த்து இப்ராஹீம் (அலை) அவர்கள் என்ன கூறினார்கள்?
பதில் : நல்ல மகனும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்! என்று கூறினார்கள். (ஆதாரம் : புகாரீ 3887)

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites