அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 23 ஜூலை, 2010

தீவிரவாதம்



சமீபகாலங்களாக உலகத்தில் தீவிரவாதம் அதிகரித்துக் கொண்டு செல்வதை நாம் கண்டு வருகிறோம். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் விமானம் இரயில் வண்டி பேருந்து போன்ற வாகனங்களில் அச்சத்துடன் பயனம் செய்து வருகிறார்கள். ஓன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளும் பெரியவர்களும் அப்பாவி மக்களும் இந்த கொடூரத்திற்கு பலியாகுகிறார்கள். இதற்காக காலவ் துறையினரும் இரவு பகலாக எச்சரிக்கையுடன் பாடுபடுகிறார்கள். வெடிகுண்டுகளையும் வெடிமருந்துகளையும் கடத்துவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது  .....

திங்கள், 19 ஜூலை, 2010

சுன்னத் வல் ஜமாஅத்தினரே உஷார்;



முஜாஹித் அலி. அப்துல் அஜீஸ்.
காயல்பட்டணம்.
அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்.
(குர;ஆன் 3:132)
மேற்கண்ட இரண்டிற்கும் கட்டுப்படும்போது ஒரு முஸ்லிம் தவ்ஹீத் என்ற ஓரிரைக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறான் இந்த இரண்டில் ஒன்றை நிராகரிக்கும் போது முஷ்ரிகாகவோ, முனாஃபிக்காகவோ மாறிவிடுகிறான்!
சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது அதாவது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும் ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார்(ஸல்) அவர்கள் வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும் பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான்.
புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.
உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?
"உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கüன் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள்.129 எந்த அளவிற் கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், "அல்லாஹ் வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடிய வர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர் களையுமா  நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேறெவரை?'' என்று பதிலüத் தார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல் : புகாரி3456
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையேச் சார்ந்தவர்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அவர்கள்,
நூல் : அபூதாவுத் 3512
என் இனிய முஸ்லிம்களே மேற்கண்ட நபிமொழிக்கு ஏற்றாற்போன்று நடந்துக்கொள்கிறீர்களே கீழ்கண்ட செயல்கள் நபிகள் நாயகம் காட்டித்தந்தவையா அல்லது அல்லாஹ் திருமறையில் காட்டித்தந்ததா? சிந்திக்க மாட்டீர்களா? இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் முஸ்லிம்களா ?
சுன்னத் வல் ஜமாஅத்தினரே இது சுன்னத்தா? ஷிர்;க்கா?
1.   அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்.
2.   அங்கே தேர் திருவிழா : இங்கே கந்தூரி,;சந்தனக்கூடு.
3.   அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்.
4.   அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்.
5.   அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை: இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி.
6.   அங்கே திதி திவசம் : இங்கே கத்தம,; ஃபாத்திஹா.
7.   அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு.
8.   அங்கே சிலை முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.
9.   அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்.
10.           அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்.
11.     அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை.
12.        அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்.
13.           அங்கே பிள்ளைக்காக பு+ஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை.
14.           அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்.
15.           அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்.
16.        அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.
17.           அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி.
18.           அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து.
19.           அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு.
20.           அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபர் மாதம் பீடை.
21.           அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில்,கையில்தாவீசு.
22.           அங்கே புமாலை பத்தி ஆராதனை: இங்கேயும் புமாலை பத்திகள்.
23.           அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,
24.           அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.
25.           அங்கே வீட்டு முகப்பில் ஓம் மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.
இவை மட்டுமா? இன்னும் எத்தனை எத்தனையோ? சடங்குகள்! இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவுதுபில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக! இப்போது சொல்லுங்கள்! நம்மிடம் இஸ்லாம் இருக்கிறதா? நாம் இஸ்லாத்தில் இருக்கிறோமா? நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா? போலிகளாக வாழ்கிறோமா
(நம்) தூதர; உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.
(அல்குர்ஆன்: 59:7)
அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
 (அல்குர்ஆன்: 2:170)
இந்த உலகத்திற்கு அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தூதர்களை அனுப்பியதாக அருள்மறையில் சாட்சி கூறுகிறான் எந்த நபியாவது மேற்கண்ட இழிசெயல்களை செய்து காட்டினார்களா? குர;ஆன் ஹதீஸ் மூலமாக ஆதாரம் இருந்தால் காட்டவும்!
சத்தியம் வந்து விட்டது, அசத்தியம் அழிந்து விட்டது. நிச்சயமாக அசத்தியம் அழியக் கூடியதே
 (அல்குர்ஆன்:17:81)
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?”(இருக்கின்றார்?)
(குர்ஆன்:41:33)

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites