அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 17 நவம்பர், 2011

குண்டாகும் பள்ளி குழந்தைகள்!

இந்தியாவில் உணவு பழக்கம் மாறி வருவதாலும், ஓடியாடி விளையாடுவது குறைந்து வருவதாலும் 20 சதவீத குழந்தைகள் குண்டாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில் இவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்பட்டு வாழ்நாள் குறையும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் மாறி வரும் உணவு பழக்கம் மற்றும் அதுதொடர்பான பாதிப்புகள் குறித்து போர்ட்டிஸ் டயபடீஸ் மையம் மற்றும் போர்ட்டிஸ் மருத்துவமனையின் மெட்டபாலிக் நோய்கள் மற்றும் எண்டோகிரைனாலஜி துறை இணைந்து ஒரு ஆய்வு நடத்தியது.

இதில் கிடைத்த தகவல்கள் குறித்து டயபடீஸ் மையத்தின் தலைவர் அனூப் மிஸ்ரா கூறியதாவது:

உணவு பழக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகள்தான் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம். இது பெரியவர்களை மட்டுமின்றி தற்போது சிறுவர்களையும் அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் சராசரியாக 15 முதல் 21 சதவீத குழந்தைகள் குண்டாக உள்ளனர். ஃபாஸ்ட்புட், ஜங்க் புட் ஐட்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதாலும் உடலுக்கு பயிற்சி அளிக்காமல் அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பதாலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
9  18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 9 சதவீதத்தினர் தொந்தியும் தொப்பையுமாக இருக்கின்றனர். இளம் வயதில் தொப்பை விழுவது இன்சுலின் சுரப்பை நேரடியாக பாதித்து சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளில் 68% பேர் ஓடியாடி விளையாடுவதில்லை. வெளியே விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல், கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம் என்று அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கின்றனர்.
நமது பாரம்பரிய உணவுகள் குறைந்த கொழுப்பு உள்ளவை, உடலுக்கு ஆரோக்கியமானவை, நார்ச் சத்து அதிகம் உள்ளவை, ஊட்டச்சத்து நிறைந்தவை. இதில் இருந்து விலகிப் போகும் நகர்ப்புற குழந்தைகள் கொழுப்பு சத்து, இனிப்பு அதிகம் உள்ள உணவு பொருட்கள், ஃபாஸ்ட்புட், ஜங்க் புட் நிறைய சாப்பிடுகின்றனர். குண்டாக இருக்கும் குழந்தைகளில் 70 சதவீதம் பேர் வயதான பிறகும் குண்டாகவே இருப்பார்கள். இவர்களுக்கு டயபடீஸ், அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். இதன் காரணமாக, இன்னும் 20 ஆண்டுகளில் சராசரி ஆயுள்காலம் குறையும் அபாயமும் இருக்கிறது.

குர்ஆன் & ஹதீஸ் உள்ள கேள்வி பதில்கள் part 3

கேள்வி: மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் இதை கண்டிப்பாக விடவேண்டும், மற்ற நாட்களில் அதை நிறைவேற்ற வேண்டும். அது என்ன?
பதில் : நோன்பு (ஆதாரம் : முஸ்லிம் 560)
கேள்வி : இந்த இரண்டு நாட்களில் நோன்பு நோற்பது தடையாகும் அந்த நாட்கள் எவை?
பதில் : நோன்பு பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் (ஆதாரம் : புகாரீ (1992)
கேள்வி : திருமணம் செய்ய சக்தி இல்லாதவர் எதை செய்யவேண்டும்?
பதில் : நோன்பு நோற்க வேண்டும் (ஆதாரம் : புகாரீ 1905)
கேள்வி : ரமலானில் விடுபட்ட நோன்பை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் எந்த மாதத்தில் நிறைவேற்றினார்கள்?
பதில் : ஷஅபான் மாதம் (ஆதாரம் : புகாரீ 1950)
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுவதற்கு முன்னரே ஆஷூரா தினத்தை கண்ணியப்படுத்தி நோன்பு நோற்றவர்கள் யார்?
பதில் : யூதர்கள் (ஆதாரம் : புகாரீ 3942)
கேள்வி : ஆஷூரா தினத்தன்று யூதர்கள் எதற்காக நோன்பு நோற்றார்கள்?
பதில் : பிர்அவ்னிடத்திலிருந்து பனீஇஸ்ராயில்களை அல்லாஹ் அந்த தினத்தில் காப்பாற்றியதால் (ஆதாரம் : புகாரீ 3943)
கேள்வி : கணவன் ஊரில் இருக்கும் போது உபரியான நோன்பை மனைவி நோற்கலாமா?
பதில் : கணவன் அனுமதி இல்லாமல் நோற்கக்கூடாது (ஆதாரம் : புகாரீ 5195)
கேள்வி : யாருடை வாய் வாடை கஸ்தூரியின் வாடையை விட அல்லாஹ்விடம் சிறந்ததாக கருதப்படுகிறது?
பதில் : நோன்பாளியின் வாய் வாடை (ஆதாரம் : புகாரீ 5927)
கேள்வி : மாதத்தின் எந்த மூன்று நாட்கள் நோன்பு நோற்பது விருப்பத்திற்குரியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்?
பதில் : பிறை 13,14,15 (ஆதாரம் : நஸயீ 2377)
திங்கள் கிழமை நோன்பு நோற்பது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது என்ன பதிலளித்தார்கள்.
பதில் : அன்றுதான் நான் பிறந்தேன், அன்றுதான் எனக்கு வஹீ வந்தது என்றார்கள் (ஆதாரம் : முஸ்லிம் 2153)
கேள்வி : சுவர்க்கத்திற்குரிய எட்டு வாசல்களில் நோன்பாளிகள் மட்டும் சுவர்க்கத்திற்கு செல்லும் வாசலின் பெயர் என்ன?
பதில் : ரய்யான் (ஆதாரம் : புகாரீ 3257)
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் அதிகம் தர்மம் செய்யும் மாதம் எது?
பதில் : ரமலான் (ஆதாரம் : புகாரீ 1902)
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் மனனம் செய்த திருக்குர்ஆன் வசனங்களை எம்மாதத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சரிபார்ப்பார்கள்?
பதில் : ரமலான் (ஆதாரம் புகாரீ 1902)
கேள்வி : இஃதிகாஃப் ரமலானில் எப்போது இருக்கவேண்டும்?
பதில் : கடைசி பத்தில் (ஆதாரம் : புகாரீ 2026)
கேள்வி : னதிருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம் எது?
பதில் : ரமலான் (ஆதாரம் : அல்குர்ஆன் 2:185)
கேள்வி : ரமலான் உம்ரா செய்வது எந்த நன்மையை பெற்றுத் தரும்?
பதில் : ஹஜ் செய்த நன்மையை பெற்றுத்தரும் (ஆதாரம் : புகாரீ1782)
கேள்வி : ரமலான் நோன்பு கடமையாவதற்கு முன்னர் எந்த நோன்பை நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்?
பதில் : ஆஷ‏þரா நோன்பு (ஆதாரம் : புகாரீ 1892)
கேள்வி : மக்கா வெற்றி எந்த மாதத்தில் நடந்தது?
பதில் : ரமலான் மாதம் (ஆதாரம் : புகாரீ 4275)

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites