அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 16 அக்டோபர், 2010

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்


அபூரபீஹா
    "அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய் விட்டால், தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து பிறகு ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுடையே அதைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சோந்தவன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரீ 2486
யமன் நாட்டைப் பூர்வீமாகக் கொண்ட குலத்தினர் தான் அஷ்அரீன் என்ற குலத்தினர். இவர்கள் மதீனாவிற்கு வந்து அங்கு குடியேறினர். ஆரம்ப காலத்தில் யமன் நாட்டிலிருந்து வந்து இஸ்லாத்தைத் தழுவியவர்களில் முக்கியமானவர் அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள். இவர்கள் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தைத் தழுவியவர்களில் ஒருவர்.
யமன் நாட்டில் வாழ்ந்த இக்குலத்தினரிடம் பல சிறப்பு அம்சங்கள் நிறைந்திருந்தன. திருக்குர்ஆனை அழகிய குரலில் ஓதுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே! இதை நபிகளாரின் பொன்மொழிகள் மிகத் தெளிவாக விளக்குகின்றன.
"என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும் போது, அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் பார்த்திருக்கா விட்டால் இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையைக் கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். மேலும் அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார். அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால் அவர்களைப் பார்த்து, "என் தோழர்கள் தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தவிடுகின்றனர்' என்று (துணிவோடு) கூறுவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: புகாரீ 4232
திருக்குர்ஆனை அழகாக ஓதுவதில் அஷ்அரீன் குலத்தில் முதலிடம் பெற்றவர்களாக அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் திகழ்ந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களே இவர்களின் ஓதுதலைப் பார்த்து வியந்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) "அபூமூஸாவே! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப் பட்டிருந்த இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரீ 5048
இது போன்று, இக்கூட்டத்தாரிடம் தம் குலத்தவர்களுடன் இணங்கி வாழ்வது, அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பது போன்ற அழகிய பண்புகளும் நிறைந்திருந்தன என்பதற்கு நாம் முன்னர் கூறிய நபிமொழிகள் தெளிவான சான்றாகும்.
ஒரு சமூகத்தார் தம் சமூகத்தாருடன் எப்படி உறவு வைத்துக் கொள்ள வேண்டும்? தம் சுற்றத்தாருடன் எப்படி உறவு வைத்துக் கொள்ள வேண்டும்? எவ்வாறு உதவி செய்ய வேண்டும் என்பதற்கு இவர்கள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
அவர்களிடம் உணவு தட்டுப்பாடு வரும் போது வசதி படைத்தவர்கள் சும்மா இருப்பதில்லை. அனைவரும் ஒன்று கூடி தங்களிடம் இருந்த உணவுகள் அனைத்தையும் ஓரிடத்தில் ஒன்று திரட்டி அவர்கள் சமூகத்தினர் அனைவர்களும் வந்து ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடின்றி சம அளவில் உணவுகளைப் பங்கிட்டு எடுத்துச் செல்வார்கள்.
இந்த நல்ல பண்பைக் கண்டு தான் நபி (ஸல்) அவர்கள், "அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள்; நான் அவர்களைச் சார்ந்தவன்' என்று புகழந்துரைத்தார்கள்.
"தன் அண்டை வீட்டாரை விட்டு விட்டு, தான் (மட்டும்) வயிறு நிரம்ப ஒருவன் சாப்பிட மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: அஹ்மத் 367
பக்கத்து வீட்டான் பசியோடு இருக்க தான் மட்டும் வயிறு புடைக்க உண்பவன் முஃமின் அல்லன் என்ற நபிமொழிக்கு செயல் வடிவம் கொடுத்தவர்கள் இந்தக் குலத்தவர்கள்.
"யார் ஒருவன் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றும் காரியத்தில் இருப்பானோ அவன் காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவான்' என்ற நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை மதித்தவர்கள் இந்தக் கூட்டத்தினர்.
இஸ்லாத்தை ஒருவர் ஏற்ற பிறகு மற்ற முஸ்லிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்குப் பல அரிய போதனைகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அவற்றைக் காண்போம்.
முஃமினுக்கு உதாரணம்
ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும் இரக்கம் காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு  சுகவீனமடைந்தால் அதனுடைய அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டு இருக்கின்றன. அத்துடன் (உடல் முழுவதும்) காய்ச்சலும் கண்டு விடுகின்றது.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரீ 6011
உடல் உறுப்புகளில் ஓர் உறுப்பு, மற்ற உறுப்புகளுக்கு எவ்வாறு உதவி புரிகின்றதோ அதைப் போன்று ஆள் வெவ்வேறாக இருந்தாலும் ஈமானில் ஒன்றிணைந்தவர்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு உதவிகள் புரிய வேண்டும்.
முஸ்லிமின் செயல்பாடு
"ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு இவன் அநீதி இழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டும் அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 2442
ஒரு முஸ்லிமின் தேவையை நிறைவேற்றுவதில் நாம் ஈடுபட்டால் நம் தேவையை நிறைவு செய்வதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான். இதை விட சிறந்த பாக்கியம் நமக்கு என்ன வேண்டும்?
மேலும் மற்றவர்களின் கஷ்டத்தை நாம் போக்கினால் மறுமை நாளில் ஏற்படும் சிரமம் ஒன்றை அல்லாஹ் போக்குகிறான். இந்தப் பாக்கியமும் மற்றவர்களின் துயர் துடைப்பதிலேயே கிடைக்கிறது.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்
அல்லாஹ் தஆலா மறுமை நாளில் (சில மனிதர்களைப் பார்த்து), "ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்தேன். ஆனால் நீ நோய் விசாரிக்க வரவில்லை'' என்பான். அதற்கு அம்மனிதன், "என் இறைவா! எப்படி நான் உன்னை நோய் விசாரிக்க முடியும்? நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே!'' என்பான். இதற்கு அல்லாஹ், "இந்த என்னுடைய அடியான் நோயுற்றிருந்தான்; அவனை நீ நோய் விசாரிக்கச் செல்லவில்லை என்பதை நீ அறிய மாட்டாயா? நீ அவனை நோய் விசாரித்திருந்தால்  அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்'' என்று பதிலளிப்பான்.
மேலும், "ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்க வில்லை'' என்பான். அதற்கு அவன், "என் இறைவா! நான் எப்படி உனக்கு உணவளிக்க முடியும்? நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே!'' என்பான். அதற்கு அல்லாஹ், "இந்த என் அடியான் உன்னிடம் உணவை வேண்டினான்; ஆனால் நீ அவனுக்கு உணவளிக்கவில்லை என்பதை நீ அறியமாட்டாயா? அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அந்த இடத்தில் என்னைக் கண்டிருப்பாய்'' என்பான்.
"ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் வேண்டினேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் புகட்டவில்லை'' என்று இறைவன் கூறுவான். அதற்கு அவன், "என் இறைவனே! உனக்கு எப்படி நான் தண்ணீர் புகட்ட முடியும்? நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே!'' என்பான். அதற்கு அல்லாஹ், "இந்த என் அடியான் உன்னிடம் தண்ணீர் கேட்டான். அவனுக்கு நீ தண்ணீர் புகட்டியிருந்தால் அந்த இடத்தில் என்னைக் கண்டிருப்பாய்'' என்று அல்லாஹ் பதிலளிப்பான். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4661
உதவும் போது இறைவன் உதவி நமக்கு உண்டு
"ஆதமின் மகனே! (நீ மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு நான் செலவிடுவேன்'' என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 5352
இன்று நம் தெருவில் இருப்பவர்கள் எத்தனை பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். அதைப் பார்த்தும் பார்க்காதது போல் நடந்து கொள்கிறோமே தவிர அவர்களுக்கு உதவ நாம் முன்வருவதில்லை.

மழை, வெள்ளத்தால் எத்தனை பேர் நமது ஊரில் வீடுகளை இழந்துள்ளனர்; சொத்துக்களை இழந்துள்ளனர்; உறவுகளை இழந்துள்ளனர்; ஊனமுற்றுள்ளனர்; இவர்களுக்கு எல்லாம் நமது உதவிகளைச் செய்ய முன்வருதில்லை.
உதவிகள் குறைவாக இருந்தாலும் நிறைவாக இருந்தாலும் அதை வழங்க முன்வர வேண்டும். அஷ்அரீன் குலத்தவர்கள் கூடுதல் குறைவாக இருந்த அனைவரும் ஒன்றிணைந்து எப்படி அனைவருக்கும் வழங்க முன்வந்தார்களோ அதைப் போன்று நமது ஊரில் இருப்பவர்களுக்கு, நமது தெருவில் இருப்பவர்களுக்கு உதவி, நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளைப் பின்பற்றிய கடமையை நிறைவேற்றியவர்களாக ஆக வேண்டும்.

நாடாளுமன்றமா? சிலைகள் மன்றமா?

சமீபத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலை திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த இந்த அமைச்சரின் சிலை திறப்பு நிகழ்ச்சி விவகாரமாக ஆக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முரசொலி மாறனின் சிலையை நாடாளுமன்றத்தில் திறக்க எதிர்ப்பு தெரிவித்தார். "இவரின் சிலையை நாடாளுமன்றத்தில் வைக்கும் அளவிற்கு இவரின் சாதனைகள்  பெரிதாக ஒன்றும் இல்லை'' என்று சிலையை அமைக்கும் கமிட்டி தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எம்.ஜி.ஆரின் சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் திறப்பதற்கு முதலமைச்சர் மு.கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார் எனவும் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் தான் சிலைகள் நிறைந்து காணப்படுகிறது. எதில் சாதிக்க வேண்டுமோ அதில் கோட்டை விட்டு விட்டு, எந்த நன்மையும் தராத காரியங்களில் இன்றைய அரசியல் வாதிகள் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு இந்தச் சிலை விவகாரம் தெளிவான சான்று.
மக்களை ஏமாற்றுவதற்காக, மறைந்த தலைவர்களின் சிலைகளை ஆங்காங்கே திறந்து வைப்பது, மணிமண்டபம் கட்டுவது என்று கண் துடைப்புக் காரியங்களில் இன்றைய அரசியல்வாதிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திலும் சிலைகளை நிரப்பும் வேலைகளை செய்யத் துவங்கியுள்ளனர்.
ஏற்கனவோ காந்தி, நேரு, அம்பேத்கார், பிர்சா முண்டா, மராட்டிய சிவாஜி, ரஞ்சித் சிங் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் நாடாளு மன்றத்தின் வெளிப்புறமும், வல்லபாய் படேல், ஜெயப்பிரகாஷ் நாராயணன், இந்திரா காந்தி, நேதாஜி உள்ளிட்டவர்களின் சிலைகள் உள்புறமும், கோவிந்த வல்லப பந்த், பாபு ஜெகஜீவன் ராம், ஒய்.பி.சவான், காமராஜர், பண்டித ரவிசங்கர், சுவாமி விவேகானந்தர், கோபால கிருஷ்ண கோகலே ஆகியோரது சிலைகள் நாடாளுமன்ற அரங்கத்திலும் வைக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் அரவிந்தர், தேவி அஹில்யா, பாய் ஹோல்கர் மற்றும் முரசொலிமாறன் உள்ளிட்டவர்களின் சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.
இதே நிலை நீடித்தால் நாடாளுமன்றம் முழுவதும் சிலைகளின் கூடாரங்களாக மாறிவிடும். இறந்து போகும் எல்லா அரசியல்வாதிகளின் சிலையையும் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.
இவ்வாறு சிலைகள் வைத்து என்ன சாதிக்கப் போகிறார்கள்? இந்த சிலைகளினால் மக்களின் கஷ்டங்கள் நீங்கப் போகின்றதா? இந்தியாவின் கடன்கள் இல்லாமல் ஆகப் போகிறதா? வறுமை தான் நீங்கப் போகிறதா?
ஒரு தலைவர் நாட்டுக்கு நல்லது செய்துச் சென்றிருந்தால் அவரின் நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தான் அவருக்குச் செய்யும் உண்மையான மரியாதையாகும்.
அவர்கள் காட்டிய நல்ல நடைமுறைகளை, ஆலோசனைகளை ஒன்றையும் பின்பற்றாமல் அவரின் சிலை திறந்து வைப்பதால் என்ன பலன் ஏற்படப் போகிறது?
சிலைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் இந்தியாவில் ஏராளம். மதக் கலவரங்கள் ஏற்படுவதற்கு இந்தச் சிலை கலாச்சாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. மதக்கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் தீயவர்களுக்கு இந்தச் சிலைகள் நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.
சிலைகளுக்குச் செருப்பு மாலைகள் போடுவது, சிலைகளை சேதப்படுத்துவது என்று ஏதாவது ஒன்றைச் செய்ய, இதில் எதிலும் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதை கண்கூட நாம் பார்த்து வருகிறோம்.
சமீபத்தில் மும்பையில் பால் தாக்கரேயின் தாயின் உருவச்சிலையில் சேற்றை யாரோ தடவ, அல்லது பேருந்து போகும் போது, தேங்கி நின்ற தண்ணீர் தெறித்ததால் சிலை சேறு பட, அதுவே பெரும் கலவரத்திற்குக் காரணமாக அமைந்தது.
இது போன்ற ஏராளமான பிரச்சனைகள் ஏற்படும் போது இந்தச் சிலைகள் வைப்பது தேவையா? என்பதை மத்திய, மாநில அரசுகள் சிந்திக்கக் வேண்டும்.
மத்தியிலும் மாநிலத்திலும் எத்தனையோ அவசியப் பிரச்சனைகள் இருக்கும் போது இதுபோன்ற தேவையற்ற காரியங்களில் ஈடுபடாமல் நல்ல காரியங்களில் ஈடுபட முயற்சிக்கட்டும்.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

சட்டம் படித்த அறிஞர்களா? முதல் நிலை மடையர்களா?

இந்திய  நீதிபதிகளின் கேடு கெட்ட தீர்ப்பு.
RASMIN  M.I.Sc

உலக நாடுகளில் ஜனநாயகம் பேணும் மிக முக்கியமான நாடு என பேரடுத்த இந்தியாவின் தற்போதைய நிலை அந்நாட்டையே வெட்கித் தலை குணிய வைத்துள்ளது.
கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இழுபரியாக இருந்த பாபரி மஸ்ஜித் தொடர்பான வழக்கின் தீர்ப்பு கடந்த 30ம் தேதி வெளியிடப் பட்டது.
இந்தியாவின் அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இருந்த சுமார் 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் நீதிமன்றம் மூன்றாகப் பிரித்து தீர்பளித்துள்ளது.
தீர்ப்பின் சுருக்கம்
இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் அயோத்தியில் பாபர்மசூதி இருந்த நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதி முஸ்லீம்களுக்கும்இ இரண்டாவது பகுதி நிர்மோகி அகாரா என்கிற இந்து சாதுக்களின் அமைப்புக்கும்இ மூன்றாவது பகுதி மற்ற இந்து அமைப்புகளுக்கும் அளிக்கும்படி அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தீர்ப்பளித்திருக்கிறது.
அதே நேரத்தில்இ ஹிந்து கடவுளான ராமர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டுவரும் இடம்இ ஹிந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவில்இ 60 ஆண்டுகளாக நீடித்துவந்த சர்ச்சைக்குரிய அயோத்திப்பிரச்சினை வழக்கின் தீர்ப்பைஇ அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ பெஞ்ச் வியாழனன்று பிற்பகல் வழங்கியது.
அந்தத் தீர்ப்பில்இ சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்துஇ ஒரு பகுதியை ஹிந்து மகாசபைக்கும்இ இன்னொரு பகுதியைஇ ஹி்ந்து சாதுக்களின் கூட்டமைப்பான நிர்மோகி அகாராவுக்கும்இ இன்னொரு பகுதியை முஸ்லிம்களின் சுனி வக்ஃப் வாரியத்துக்கும் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நீதிதிகள் அகர்வால் மற்றும் எஸ்.வி. கான் ஆகியோர்இ சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று பெரும்பான்மை தீர்ப்பு வழங்கிய நிலையில்இ நீதிபதி தரம்வீர் ஷர்மா மட்டும்இ அந்தப் பகுதி முழுவதும் ஹிந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
குறிப்பாகஇ கடந்த 1992-ம் ஆண்டு ஹி்ந்து கடு்ம்போக்குவாதிகளால் இடிக்கப்பட்ட மசூதியின் மையப்பகுதி இருந்த சர்ச்சைக் குரிய இடம்இ ஹிந்து மகாசபைக்கு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் மூன்று நீதிபதிகளும் ஒருமித்த கருத்தைக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில்தான் முதலில் 1949 ஆண்டும் பிறகு 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் ராமர் சிலைகள் வைக்கப்பட்டன.
அதேபோல்இ சீதா தேவியின் சமையலறை மற்றும் ராமரின் உடைமைகள் இருந்ததாகக் கூறப்படும் பகுதிகளை நிர்மோகி அகாராவுக்கு வழங்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.
முஸ்லிம்களைப் பொருத்தவரை அவர்களுக்கும் மூன்றில் ஒரு பகுதி வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எந்த ஒரு தரப்புக்கும் மூன்றில் ஒரு பகுதி சரியாகக் கிடைக்காவிட்டால் மத்திய அரசு கையகப்படுத்தி வைத்துள்ள அருகில் உள்ள பகுதியிலிருந்து தேவையான இடத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்புத் தொடர்பாக பிரபல இஸ்லாமிய அறிஞர் சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையை அப்படியே தருகிறோம்.
 நீதி செத்தது
பாபர் மசூதி வழக்கில் இப்போது வழங்கப்பட்டது போன்ற சட்டத்துக்கும் தர்மத்துக்கும் எதிரான தீர்ப்பு  உலக வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அலஹாபாத் நீதிமன்றம் நீதியை அப்பட்டமாகக் குழி தோண்டிப் புதைத்து சமாதி கட்டி விட்டது.
முஸ்லிம்கள் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பார்கள் என்றால் அதன் பொருள் அத்தீர்ப்பு சட்டப்படி வழங்கப்பட்ட வேண்டும் என்பது தான். 
இந்தத் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை.
ராமர் அங்கு தான் பிறந்தார் என்று நீதி மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதைக் கண்டு உலகமே காரித் துப்புகிறது. கோடனு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் இந்த இடத்தில் தான் பிறந்தார் என்று ஒருவன் கூறினால் அவன் மன நோயாளியாகத் தான் இருப்பானே தவிர அறிவு நிரம்பிய நீதிபதியாக இருக்க மாட்டான்.

ராமர் அங்கே பிறந்தார் என்பதைச் சட்டப்படி இவர்கள் நிரூபிக்க முடியுமா? அப்படியே அவர் அங்கே பிறந்திருந்தால் அதனால் அந்த இடத்திற்கு அவர் உரிமையாளராகி விடுவாரா? இப்படித் தான் இனி மேல் சிவில் வழக்குகளுக்கு இந்த நாட்டில் தீர்ப்பு அளிக்கப்படுமா?

அண்ணன் தம்பிகளுக்கு இடையில் சண்டை வந்தால் இது இவனுக்கு அது அவனுக்கு என்று தீர்ப்பு அளிப்பதில் அர்த்தம் இருக்கிறது. பங்காளிகளாக இல்லாத இருவர் ஒரு சொத்து குறித்து வழக்கு கொண்டு வந்தால் ஆக்ரமித்தவனுக்கு இரண்டு ஆகரமிக்கப்பட்டவனுக்கு ஒன்று எனத் தீர்ப்பு அளிபதில் என்ன சட்ட அம்சம் இருக்கிறது? தாதாக்களின் கட்டப் பஞ்சாயத்து இதை விட சிறப்பானதாக இருக்கும்.
எட்டப்பன் போன்றவர்களுக்கு வரலாற்றில் ஒரு இடம் உண்டு. அது போல் சட்டத்தை மீறி அப்பட்டமாக அநீதி இழைத்த நீதிபதிகள் என்ற பெயர் இந்த நீதிபதிகளுக்கு வரலாற்றில் கிடைப்பது உறுதி.

பள்ளிவாசல் முஸ்லிம்களிடம் இருந்ததையும் அது அப்பட்டமாக இடிக்கப்பட்டதையும் உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. அந்த உலகம் இந்தியாவின் மீதும் இந்த தீர்ப்பை வழங்கியவர்கள் மீதும் காரித்துப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.
நாங்கள் நீதிம்னறத் தீர்ப்புக்கு கட்டுப்பட மாட்டோம் என்று கூறி வந்த சங்பரிவாரம் இத்தீர்ப்புக்கு முன்னர் அமைதி காக்க வேண்டும் என்று கூறியதும்இ எங்களுக்குச் சாதகமாகத் தான் தீர்ப்பு வரும் என்று கூறியதும் இது பேசி வைக்கப்பட்ட தீர்ப்பு என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் விருப்பம் சட்ட விரோதமாக இருந்தாலும் அது சட்டத்தின் படி அங்கீகரிக்கப்படும். முஸ்லிம்களின் சட்டப்படியான உரிமைகளாக இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் அதை விரும்பாவிட்டால் அது சட்ட விரோதமானதாகக் கருதப்படும் என்ற செய்தி சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் முஸ்லிம்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது.
இனிமேல் முஸ்லிம்கள் இது போன்ற பிரச்சனைகள் வந்தால் நீதி மன்றம் சென்று முறையிடலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நீதி மன்றம் சென்று பல ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி கடைசியில் நம் தலையில் நாம் மண்ணை அள்ளிப்போட வேண்டுமா என்ற முடிவுக்கு முஸ்லிம்கள் நிச்சயம் வந்திருப்பார்கள்.
இத்தீர்ப்பு மூலம் முஸ்லிம்களின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து விட்டது.
இனி மேல் நாம் ஏன் விசுவாசமாக செயல் படும் என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படுமானால் அதற்கு அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள். இந்த நீதிபதிகளே பொறுப்பாவார்கள்.

நீதிமன்றங்களில் முஸ்லிம்கள் எப்போதே நம்பிக்கை இழந்து விட்டனர் என்பதையும் இது போல் காவித் தீர்ப்பு தான் வரும் என்பதையும் சென்ற மாதம் உணர்வு தலையங்கத்தில் நான் சுட்டிக் காட்டினேன்.
அது தான் இப்போது நடந்துள்ளது.
அந்தத் தலையங்கம் இது தான்
பாபர் மசூதி வழக்கு நீதி கிடைக்குமா?
பாபர் மசூதி நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு விசாரணை முழுமை பெற்று விட்டது. அனேகமாக இந்த மாதம் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரம் கருதுகிறது.
தீர்ப்பு அளிக்கப்பட்ட உடன் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்காக அமைச்சரைவையில் ஆலோசனை நடக்கிறது. அனைத்து மாநிலங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. உளவுத்துறை மூலம் இந்துக்களின் மனநிலை முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று தகவல்கள் திரட்டப்படுகின்றன.
இந்தியாவில் உள்ள சிவில் சட்டப்படி தீர்ப்பளிப்பதாக இருந்தால் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க ஒரு மாத காலமே போதுமானதாகும். ஆதாரங்கள் அவ்வளவு தெளிவாக உள்ளன. ஆனால் நீதிமன்றங்கள் இந்த வழக்கில் சரியான நீதி வழங்கும் என்ற நம்பிக்கையை முஸ்லிம்கள் என்றோ இழந்து இழந்து விட்டனர்.
ஏராளமான நீதிபதிகள் சட்டத்தின் படி தீர்ப்பளிக்காமல் தாங்கள் சார்ந்துள்ள மத உணர்வுக்கும் இன உணர்வுக்கும் ஏற்றவாறு தான் தீர்ப்பு அளிப்பதை நாம் காண்கிறோம்.
இதற்கு ஒன்றல்ல இரண்டல்ல; ஆயிரக்கணக்கில் உதாரணங்கள் உள்ளன.
பாபர் மஸ்ஜிதில் நள்ளிரவில் சிலை வைக்கப்பட்டது. அதைக் காரணம் காட்டி பள்ளிவாசலுக்கு பூட்டு போட்டது நமது நாட்டு நீதியரசர்கள் உத்தரவின் படி தான்.
பூட்டப்பட்ட பள்ளிவாசலில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு பூஜை நடத்துவதற்காக அதைத் திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பு அளித்தவர்களும் நமது நாட்டின் நீதியரசர்கள் தான்.
நீதி மன்ற உத்தரவை மீறி பள்ளிவாசலை இடித்த அத்வானியின் மீது தொடரப்பட்ட நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் கோர்ட் கலையும் வரை சிறைத் தண்டனை வழங்கி நீதியைக் கட்டிக் காத்ததும் நமது நீதிமான்கள் தான்.
பாபர் மசூதி வழக்கில் மட்டும் அல்ல. எண்ணற்ற வழக்குகளில் தங்களின் ஒரு தலைப்பட்சமான போக்கை நமது நாட்டு நீதிபதிகள் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளனர்.
இந்துத்துவா என்பது அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க முடியாது என்று பாஜக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்துத்துவா என்பது மதத்தைக் குறிக்கும் சொல் அல்ல; அனைத்து மதத்துக்கும் பொதுவான சொல் தான் என்று தீர்ப்பளித்த காவிபதிகள் நமது நாட்டு நீதிபதிகளாக உள்ளனர்.
ஒரு முஸ்லிம் குடும்பத்தின் விவாக ரத்து வழக்கு வந்த போது அந்த வழக்குக்குச் சம்மந்தமில்லாமலும்இ சட்ட விரோதமாகவும் பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டவர்களும் நீதிமான்களாக உள்ளனர்.
ஒரு குற்றவாளி கொடுத்த வாக்கு மூலத்தைக் காரணம் காட்டி ஊணமுற்ற அப்துல் நாசர் மதானியைக் கைது செய்யச் சொல்வதும்இ நாட்டில் ஏராளமான பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்திய இன்னும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற பால் தாக்கரே ராஜ்தாக்கரேஇ முத்தாலிக் போன்றவர்களை நோக்கிச் சுண்டு விரலைக் கூட நீட்ட வக்கற்றவர்களாக இருப்பது நமது நீதிபதிகள் தான்.
12 ஆண்டுகள் 14 ஆண்டுகள் வெறும் விசாரணைக் கைதிகளாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களின் வழக்கில் தொடர்ந்து ஜாமீன் மறுத்து உலக அரங்கில் மதவறி பிடித்த நாடாக அடையாளம் காட்டியதும் நமது நீதிபதிகள் தான்.
உலகில் எந்த நாட்டிலும் குற்றம் நிரூபிக்காமல் இவ்வளவு காலம் யாரும் சிறை வைக்கப்பட்டதில்லை. சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த முஸ்லிம்களைத் தவிர வேறு எந்த இயக்கத்தினருக்கும் நீதிமன்றங்கள் இத்தனை ஆண்டுகள் ஜாமீன் வழங்க மறுத்ததில்லை.
அன்ஸாரி ஆஃதாப் அஹ்மது என்பவர் இந்திய விமானப்படை ஊழியராவார். அவர் இஸ்லாம் கூறும் மதச் சட்டப்படி தாடி வைக்க அனுமதி மறுக்கப்பட்டார். இராணுவத்தில் மத அடையாளம் கூடாது என்பது இதற்குச் சொல்லப்பட்ட காரணம். இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை அணுகினார். சீக்கியர்கள் மட்டும் மத அடையாளத்துடன் இராணுவத்தில் இருக்கலாம் என்றால் முஸ்லிம்களுக்கு மறுப்பது என்ன நீதி? என்று அவர் நீதி மன்றத்தில் வாதிட்டார். சீக்கியர்களுக்கு உள்ள அந்த உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்க நீதி மன்றம் மறுத்து மதச் சார்பின்மையைப் பேணிக்காத்தது.
மத்தியப் பிரதேசத்தில் ஸலீம் என்ற மாணவர் தாடியுடன் பள்ளிக் கூடம் சென்ற போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிலுவை அணிந்து கொண்டும் நெற்றியில் பொட்டு திரு நீறு இட்டுக் கொண்டும் வரலாம் என்றால் தாடி வைத்துக் கொண்டு வருவதைத் தடுப்பது என்ன நீதி என்று கருதி அவர் நீதி மன்றத்தை அணுகினார். இஸ்லாம் மார்க்கத்தை பேணுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. இதைத் தடுக்க அரசுக்கு உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார். அவரது மத உரிமைக்கு எதிராகவே உச்ச நீதி மன்றம் உத்தரவு போட்டது.
அது மட்டுமின்றி தாடி வைப்பது பர்தா அணிவது போன்ற தாலிபானிசத்தை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று மத துவேசத்துடன் உச்ச நீதி மன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தீர்ப்பின் போது குறிப்பிட்டார். இவர் கூறியதற்கு எந்தச் சட்ட ஆதாரமும் இல்லை.
இஸ்லாத்துக்கு எதிராக இவர்கள் உள்ளத்தில் எத்தகைய விஷம் ஊற்றப்பட்டுள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாக உள்ளது. உலக நாடுகளில் இவரது நச்சுக்கருத்துக்கு எதிரான பிரச்சாரம் இல்லாதிருந்தால் இதற்காக இவர் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டார்.
சென்னையில் ஒட்டகம் குர்பானி கொடுக்க ஒரு நீதிபதி தடை விதித்தார். தடையை மீறி ஒட்டகம் குர்பானி கொடுக்கப்படும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்ததால் மறுநாள் தீர்ப்பு மாற்றிக் கூறப்பட்டதை நாம் மறந்து விட முடியாது.
கற்பழிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த முதியவர் ஒருவரை முன்னதாகவே நீதி மன்றம் விடுதலை செய்தது. அதோடு நிறுத்திக் கொள்வதை விட்டு விட்டு இனி மேல் ஒழுங்காக சாமி கும்பிட வேண்டும். பூஜை செய்ய வேண்டும் என்று தனது மத நம்பிக்கையை இதில் நீதிபதி நுழைக்கிறார். பூஜை செய்பவர்கள் தான் அதிகம் குற்றம் புரிகிறார்கள் என்பது கூட இவருக்குத் தெரியவில்லை என்பது கூடுதல் விபரம்
சென்னையில் முக்கிய பிரமுகர் வீட்டு விவாக ரத்து வழக்கு தீர்ப்பளிக்கும் போது காஞ்சி சங்கராச்சாரியார் அறிவுரைகளைக் கேட்டு தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளிக்கிறார். சட்டத்தை விட இவர்களின் மத வெறியே இவர்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் இவர் இவ்வாறு கூறிய சில மாதங்களில் சங்கராச்சாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டது தனி விஷயம்.
ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு அற்பமான அளவுக்குத் தனி இட ஒதுக்கீடு அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது சட்ட விரோதம் என்று ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடும் என்றும் மத அடிப்படையில் கூடாது என்றும் கூறுவதற்கு எந்தச் சட்ட நியாயமும் இல்லை. சாதி என்பதே மதத்தின் ஒரு அங்கம் தான். ஆனாலும் முஸ்லிம்கள் என்பதால் நீதிபதிகளுக்கு மூளையும் வரண்டு விடுகிறது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவருக்குக் கூட ஜாமீன் வழங்காத நீதிமன்றங்கள் அதற்கு முன் 19 முஸ்லிம்களைக் கொன்றுஇ குண்டு வெடிப்புக்குத் தூண்டிய அனைவருக்கும் உடனே ஜாமீன் வழங்கி நீதியை நிலை நாட்டின.
நாட்டில் நடக்கும் காதல் கள்ளக் காதல் ஆகியவற்றுக்கு ஆதரவாகவே நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வருகின்றன. ஆனால் கேரளாவில் முஸ்லிம் இளைஞனைக் காதலித்த இந்துப் பெண் முஸ்லிமானாள். இதை விசாரித்த கேரள நீதி மன்றம் லவ் ஜிஹாத் என்ற பெயரில் ஒரு கும்பல் செயல்படுகிறது என்றும் கட்டாய மத மாற்றத்தைத் தடை செய்ய வேண்டும் எனவும் மத வெறித் தீர்ப்பை அளித்தது.
வட்டியில்லா கடனை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய வங்கியை கேரள அரசு துவக்க இருந்த போது அதில் தலையிட்டு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
தடை செய்யப்பட்ட சங்பரிவாரத்தின் ஆர் எஸ் எஸ் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட  தடையை நீக்கிய நீதி மன்றங்கள் சிமி என்ற இயக்கத்திற்கு மட்டும் பாரபட்சமான நீதியை வழங்கியது.
குஷ்புவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதிகள் பகவான் கிருஷ்னரும் ராதையும் திருமணம் செய்யாமல் வாழ்ந்துள்ளதால் குஷ்பு கூறியது தவறில்லை என்று கூறினார்கள். சட்டத்தை மட்டும் சொல்லி தீர்ப்பளிக்காமல் புராணத்தை மேற்கோள் காட்டுவது தான் மதச் சார்பின்மையா?
இப்படி பட்டியல் நீள்கிறது. இது போல் தான் பாபர் மசூதி வழக்கையும் நீதி மன்றம் கையாளுமோ என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு உள்ளது.
ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதை விசாரிக்க ஆவணமும் அனுபவ பாத்தியதையும் தான் தேவை. ஆனால் அகழ்வாராய்ச்சி செய்து அந்த இடத்தில் ஏதாவது ஒரு காலத்தில் கோவில் இருந்ததா என்று விசாரிக்க நீதி மன்றம் உத்தரவிட்ட போதே தனது நேர்மையை சந்தேகத்துக்கு உள்ளாக்கி விட்டது.
ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்பது சட்ட விரோதமானது. எந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தாலும் ஏதாவது கிடைக்கத் தான் செய்யும். கடுகளவு அறிவு உள்ளவன் கூட செய்யத் தயங்குவதை நீதி மன்றம் செய்தது. இப்படி எல்லா சிவில் வழக்குகளிலும் குழி தோண்டிப்பார்க்கும் படி தீர்ப்பளிப்பது நீதிபதிகள் தீர்ப்பளீப்பது இல்லை.
எனவே பாபர் மசூதி வழக்கில் நீதி மன்றம் சட்டத்தின் படி தீர்ப்பளிக்குமா? தனது உணர்வுக்கு ஏற்பத் தீர்ப்பளிக்குமா என்பது தீர்ப்பு வந்தால் தான் தெரியும்.
நீதிபதிகளிடம் காவிச் சிந்தனையும் மதவெறியும் உள்ளதாகக் கூறுவது அனைத்து நீதிபதிகளைப் பற்றிய பொதுவான கருத்து அல்ல. நியாயத் தராசை சரியாகப் பிடிக்கும் நீதிபதிகள் பலர் உள்ளனர். அது போல் நாம் சுட்டிக்காட்டியது போல் மதத்துவேஷம் உள்ளவர்களும் கனிசமாக உள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
முஸ்லிம்களுக்கு உரிய நியாயம் நீதி மன்றத்தில் கிடைத்தாலும் அதைச் செயல் படுத்தும் திராணி மத்திய அரசுக்கு நிச்சயம் இருக்காது. ஏதாவது சாக்கு போக்கு சொல்லி இழுத்தடிக்கவும் மேல் முறையீடு என்ற பெயரில் இன்னும் காலம் கடத்தவும் மத்திய அரசு திட்டமிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆட்சி செய்பவர்களும் சரி இல்லை. நிதிபதிகளிலும் காவிகள் மலிந்து விட்டனர். இந்த நிலையில் இம்மாதம் அளிக்கப்படும் தீர்ப்பின் காரணமாக ஒரு பிரயோஜனமும் முஸ்லிம்களுக்கு ஏற்படாது என்ற சந்தேகத்தை அரசும் நீதித் துறையும் நீக்குமா?

முயற்சித் திருவினையாக்கும்


எம். முஹம்மது ஸலீம், மங்களம்
இன்பங்களும் துன்பங்களும் இரண்டறக்கலந்த கலவை தான் இவ்வுலக வாழ்க்கை. இவ்வாழ்க்கையில் பருவமாற்றங்களைப் போல இடையிடையே எட்டிப்பார்க்கின்ற எதிர்ப்புகள், பிரச்சனைகள் மற்றும் பின்னடைவுகளை எதிர்கொள்ள இயலாமல் மக்களில் பலர், தங்களுடைய இலட்சிய இலக்கை விட்டும் பாதியிலேயே  புறமுதுகிட்டு ஓடிவிடுகின்றார்கள். அரிதாக சிலர் பல்வேறான மாற்றுமுயற்சிகள், கடும் உழைப்புகள் மூலம் துயரங்கள் தூக்கிப்போடுகின்ற முட்டுக்கட்டைகளை உடைத்தெறிந்துவிட்டு, தங்களது இலட்சிய  எல்லையை திட்டமிட்டப்படி எட்டிப்பிடிப்பதைப் பார்க்கின்றோம். இத்தகையவர்கள் அனைத்து துறைகளிலும் இருக்கின்றார்கள். உதாரணமாக அறிவியல் அறிஞர்கள், ஆய்வுகளில் ஈடுபடுகின்றபோது தங்களைத் தோல்விகள் தாக்கினாலும் தளர்ந்துவிடாமல் முயற்சித்ததால் தான், இன்று நாம் நவீனகருவிகளால் அலங்கரிகப்பட்ட  நவீன வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.  இதனாலேயே முயற்சித் திருவினையாக்கும்; மெய்வருதத்தக் கூலி தரும் போன்ற பழமொழிகள் சமுதாயவழக்கில் இன்றளவும் இருந்து கொண்டிருக்கின்றன. சுருக்கச் சொன்னால், இவ்வுலக வாழ்க்கையிலே ஆசைப்படுகின்றவற்றை அடைவதற்கேற்ப நம்மிடத்தில் ஆர்வமும், முயற்சியும் அவசியமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய சுயதேவைகளையும், நமக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளையும் கூட நம்மால் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளமுடியும். இதை பின்வரும் வசனங்களில் நமக்கு அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
உங்கள் முயற்சி பலதரப்பட்டதாக உள்ளது.  (அல்குர்ஆன் 92 : 4)
மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் "ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப் படவில்லையா? அவனது உழைப்பு (மறுமையில்) காட்டப்படும்.  (அல்குர்ஆன் 53 : 36 - 39)
மறுமைவெற்றிக்காக முயற்சிப்போம் :
அற்பமான அகிலத்தின் வாழ்க்கையில் ஏதாவதொன்றை அடைவதற்கே நமக்கு அளப்பறிய ஆர்வமும் முயற்சியும் அவசியமாகத் தேவைப்படும் போது, மறுமையில் நாம் நினைத்தபடியெல்லாம் வாழ்வதற்கு வழிவகுக்கின்ற சுகமான சொகுசான சொர்க்க வாழ்வினை, எந்தவொரு கஷ்டத்தையும் இடையூறையும் சந்திக்காமல், அமல்செய்வதிலே எந்தவொரு ஈடுபாடும் அர்ப்பணிப்பும் இல்லாமல் எளிதாகப் பெறமுடியுமா? என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எந்தவொரு காரியத்தைச் செய்தாலும் கஷ்டப்படாமல் அதிலே வெற்றிக்கனியை  சுவைக்கமுடியாது  என்பதை அல்லாஹ் அருள்மறையில் சுட்டிக்காட்டியிருக்கின்றான். மேலும் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் அறிவித்திருக்கின்றார்கள்.
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன.  (அல்குர்ஆன் 2 : 214)   
திரையிடப்பட்டுள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)  நூல் : புஹாரி (6487)
  மறுமையில் மகத்தான அந்தஸ்துமிக்க  ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை அடைய வேண்டும்; திருப்திகரமான தித்திப்பான சுவர்க்க வாழ்க்கையின் பேரின்பத்தில் திளைக்கவேண்டும் என்று நாம் வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும் போதாது. மாறாக அதற்கேற்ற வகையில் நமது அமல்களை அழகியமுறையில் அமைத்துக்கொள்ள வேண்டும். மார்க்கக் கடைமைகளை  கடுகளவும் அலட்சியப்படுத்தாமல், அன்றாடம் அவற்றை நல்லமுறையில் நடைமுறைப்படுத்தவேண்டும்.  நன்மைகளைப் பெற்றுத்தரக் கூடிய காரியங்களை அதிகமதிகமாக அக்கறையோடு செய்யவேண்டும். இவ்வுலகில் நமது நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கின்றதோ அதனடிப்படையில் தான் நமது மறுமை வாழ்வின் முடிவு இருக்கும். இதை பின்வரும் வசனங்களில் இருந்து விளங்க முடிகின்றது.
(மறுமைநாள்) அந்நாளில் சில முகங்கள் மலர்ச்சி யுடையதாக இருக்கும். தமது உழைப்பிற்காக திருப்தி கொள்ளும். (அல்குர்ஆன் 88 : 8 9)
அவர்கள் மீது பச்சை நிற ஸுந்துஸ் எனும் பட்டும், இஸ்தப்ரக் எனும் பட்டும் இருக்கும். வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப் படுவார்கள். அவர்களின் இறைவன் தூய பானத்தை அவர்களுக்குப் பருகத் தருவான். இதுவே உங்களுக்குரிய கூலி. உங்கள் உழைப்புக்கு நன்றி செலுத்தப்படும்.  (அல்குர்ஆன் 76 : 22)
முயற்சியின் முக்கியத்துவம்
வாழ்க்கையிலே நமது சிறப்பான செயல்பாடுகளை சீர்குலைக்கின்ற வகையில் சிரமங்களும் சிக்கல்களும் வரும்போது, அவற்றைக் களைந்தெறியவும், மார்க்க கடமைகளை கண்ணும் கருத்துமாக நிறைவேற்றவும்நிச்சயமாக நம்மிடத்தில் முயற்சிக்கின்ற பண்பு இருக்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவதற்காக, ஒரு நல்லடியாருடைய வாழ்க்கையை அல்லாஹ் திருமறையில் சுட்டிக்காட்டியுள்ளான்.
மர்யம் (அலை) :
ஏகஇறைவனின் மாபெரும் கிருபையால் மர்யம்(அலை) அவர்கள் ஆண்துணையின்றி கர்ப்பமுற்றபோது, ''மர்யமே! உமது பெற்றோர்கள் மானக்கேடான காரியத்தை செய்தவர்களாக இருக்கவில்லை. இப்படி ஒழுக்கக்கேடான காரியத்தைச் செய்துவிட்டாயே!'' என்று அவர்களைப் பார்த்து அவர்களுடைய உற்றார் உறவினர்கள் தூற்றிப்பேசினார்கள். வார்த்தைகளால் வேதனைப்படுத்தினார்கள். இவ்வாறெல்லாம் மற்றவர்களால் பழித்துரைக்கப்பட்ட  போதும் கூட மர்யம் (அலை) அவர்கள் பொறுமையாக இருந்தார்கள். ஒரு கட்டத்தில் ஊரைவிட்டு  வெளியேறி பேரீச்சைமரத் தோட்டத்தின் வழியாக வந்து கொண்டிருக்கும் போது, மர்யம் (அலை) அவர்களுக்கு கடுமையான பிரசவ வலியும் பசியும் ஏற்படுகின்றது. அங்கேயே வேதனையால் துடிக்கின்றார்கள்.  அப்போது அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி மர்யம்(அலை) அவர்களுக்கு ஒரு  கட்டளையிடுகிறான். அச்சம்பவத்தை அல்லாஹ் அருள்மறையில் கூறுகின்றான்.
கவலைப்படாதீர்! உமது இறைவன்  உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான் என்று அவரது கீழ்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். பேரீச்சை மரத்தின் அடிபாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்! (என்றார்) . நீர் உண்டு பருகி மன நிறைவடைவீராக.   
(அல்குர்ஆன் 19 : 24 -  26)
இங்கு அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி  நாமெல்லாம் சற்று நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். அவனுடைய அனுமதியின்றி மண்ணிலிருந்து சிறுவித்தும் தானாக முட்டிமுளைத்து விடாது. மரக்கிளையிலிருந்து காய்ந்தஇலையும் கூட தானாக கீழே உதிர்ந்துவிடாது. இன்னும் சொல்லப் போனால் பனு இஸ்ராயில் சமுதாயத்தவர்களுக்கு மன்னு சல்வா என்ற உணவை அவன்தான் வானிலிருந்து இறக்கி வைத்தான். இத்தகைய ஆற்றல்மிக்கவன், தனக்கு கட்டுப்பட்டுவாழ்கின்ற நல்லடியார் மர்யம்(அலை) அவர்களுடைய பசித்தேவையை அவர்களே எதிர்பார்க்கவியலாத விதத்தில் போக்கியிருக்க முடியும். ஆகு என்று அவன் கூறினால் எதுவானாலும் அடுத்தநிமிடமே நடந்தேறிவிடும். எனினும் இவ்வுலகைப் பொறுத்தவரையில் எந்தவிதமான முயற்சியும் உழைப்பும் இல்லாமல், எந்தவொரு பிரதிபலனையும்  மனிதன் தானாக  ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்த்துகின்ற விதத்தில்பேரீச்சமரத்தின் கிளையைப் பிடித்து உலுக்குமாறு அல்லாஹ் மர்யம் (அலை) அவர்களுக்குக் கட்டளையிடுகின்றான்.
இதிலிருந்து இவ்வுலத்தில் சிறுதுரும்பு கூட வியர்வை சிந்தாமல் தானாக கிடைத்துவிடாது; சோம்பேறித்தனமாக வீட்டுமுற்றத்தில் முடங்கிக் கிடந்தால் தானாக வேலைவாய்ப்பும் வளமான வசதியும் வந்திறங்கி விடாது. வறுமை அணுஅளவும் அகன்றுவிடாது என்ற படிப்பினையை நாம் பெற்றுக் கொள்ள முடிகின்றது.
வணக்கவழிபாட்டில் அதிகமுயற்சி
நமக்கு வாழ்வியல் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டிருந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள், மார்க்கக் கடமைகளில் முனைப்புடன் செயல்பட்டார்கள்.  மறுமையில் புகழுக்குரிய இடத்தில் எழுப்புவதாகவும், அதற்காக இரவில் நின்றுவணங்குமாறும் அல்லாஹ் தனது தூதர் நபி(ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒவ்வொரு நாளும் இரவிலே பல நாழிகைகளைத் தியாகம் செய்து, வணக்கவழிபாட்டில் பேணுதலைக் கடைபிடித்தார்கள். இதை பின்வரும் நபிமொழியிலிருந்து அறிய முடிகின்றது.
நபி(ஸல்) அவர்கள் இரவில் நின்று வணங்குவார்கள். அவர்களின் இருபாதங்களிலும் வெடிப்பு ஏற்பட்டுவிடும். இறைத்தூதர் அவர்களே! இவ்வாறு ஏன் செய்கிறீர்கள்? அல்லாஹ் உங்கள் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டானே ? என்று கேட்டேன். நான் நன்றியுள்ள அடியான் ஆக வேண்டும் என நான் விரும்ப வேண்டாமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)   நூல் : புஹாரி (1380)
சில சமயம் நபி(ஸல்) அவர்கள்  கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும் போது நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்று கேட்பார்கள்.
அறிவிப்பவர் : முகீரா(ரலி)   நூல் : புஹாரி (1130)
தமது முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் நபி(ஸல்) அவர்களே அல்லாஹ்விடத்தில் நல்லடியாராக இருக்க வேண்டும்; அருளப்பட்ட  அருட்கொடைகளுக்காக அவனுக்கு நன்றிசெலுத்த வேண்டும் என்பதற்காக  அதிகமுயற்சியை வணக்க வழிபாட்டிற்காக செலுத்தியிருக்கிறார்கள். மேலும் மறுமையில் வெற்றிபெற்று சொôக்கம் செல்ல வேண்டும் என்று பேராவலோடு வினாதொடுத்தவர்களுக்கு இவ்வாறே அதிகமாக வணக்கவழிபாட்டில் ஈடுபடுமாறு   நபி (ஸல்) அவர்கள் அறிவுரையயையும் பகன்றிருக்கிறார்கள்.
மஅதான் பின் அபீதல்ஹா அல்யஅமரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான "ஸவ்பான்' (ரலிலி) அவர்களைச் சந்தித்து, "என்னால் செய்ய முடிந்த ஒரு நற்செயலை' அல்லது "அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான ஒரு நற்செயலை' எனக்குச் சொல்லுங்கள். அல்லாஹ் அதன் மூலம் என்னைச் சொர்க்கத்திற்குள் நுழைவிக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு ஸவ்பான் (ரலிலி) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு நான் மீண்டும் (அதே கேள்வியைக்) கேட்டேன். அப்போதும் அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். நான் மூன்றாவது முறையாக அவர்களிடம் கேட்டபோது "இதுபற்றி  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக சஜ்தா (சிரவணக்கம்) செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு சஜ்தாச் செய்தால் அதற்காக அவன் உனது ஒரு தகுதியை உயர்த்தி, உன் குற்றங்களில் ஒன்றை அவன் மன்னிக்காமல் இருப்பதில்லை' என்று கூறினார்கள்'' என்றார்கள்.
பின்னர் நான் அபுத்தர்தா (ரலிலி) அவர்களைச் சந்தித்தபோது இது குறித்துக் கேட்டேன். அவர்களும் ஸவ்பான் (ரலிலி) அவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள்.   நூல் : முஸ்லிம் (842)
இறுதி இறைவேதமான திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட  புனிதமிக்க ரமலான் மாதத்தின் கடைசிப் பத்துநாட்களில் நபி (ஸல்) அவர்கள், மற்றநாட்களைக் காட்டிலும் மிகத்தீவிரமாக  நல்லமல்களில்  ஈடுபடுவார்கள். தவிர, அக்காரியங்களின் பக்கம் தமது குடும்பத்தாரையும் தூண்டுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கüலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமளான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக் காட்டிக்) கற்றுத் தருவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் போது அவர்கள் மழைக் காற்றை விட அதிகமாக (மக்களுக்கு) நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ்வார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள், "குர்ஆன் முழுவதையும் ஜிப்ரீல் எனக்கு ஓதிக் காட்டி வந்தார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :  இப்னு அப்பாஸ் (ரலி)  நூல் : புஹாரி (3220)
(ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்;  (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்!
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலில)  நூல் : புஹாரி (2024)
ஆனால் அறிந்தும் அறியாமலும், நாள்முழுவதும் நொடிக்கு நொடி கணக்கற்ற பாவங்களைச் செய்துகொண்டிருக்கின்ற நாம், கடமையான தொழுகைகளையாவது தவறாமல் பொறுப்புணர்வோடு நிறைவேற்றுகிறோமா? என்பதை ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும். மறுமையில் வெற்றியடைய வேண்டும் என விரும்பினாலும், அங்கு கேட்கப்படவிருக்கின்ற  முதல்கேள்வியான தொழுகை விஷயத்தில் அதிகமான முஸ்லிம்கள் பொடுபோக்குத்தனமாகவே இருக்கின்றார்கள். தொழுகையை விட இவ்வுலகத்தின் பயன்களை அடைவதற்காகவே  அவர்கள்  அதிகமான முயற்சியையும் முக்கியத்துவத்தையும் செலுத்துகின்றார்கள் என்பதை நிதர்சனமாகக் காண்கிறோம். இதுவல்லாமல் மற்ற மற்ற அமல்கள் விஷத்திலும் நமது நிலைமை கவலைக்குரியதாகவே இருக்கின்றது.
மார்க்கத்தை அறிந்திட முயற்சித்தல்
நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளை அபூஹுரைரா(ரலி) அவர்கள் தான் அதிகமாக அறிவித்திருக்கின்றார்கள். மற்ற நபித்தோழர்களை விட இவர்களால் மட்டும் எப்படி அதிகமான ஹதீஸ்களை அறிவிக்க முடிந்தது? என்ற கேள்வி நமக்குள் எழுவதைப் போன்றே அன்றைய மக்களுக்கும் வந்தது. இந்த கேள்வியை கேள்விபட்டபோது இதற்கான பதிலை அபூஹுரைரா(ரலி) அவர்களே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றைக் காண்போம்.
அஃரஜ் என்பவர் கூறியதாவது :
அபூஹுரைரா(ரலி) அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கிறாரே என மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தில் இரு வசனங்கள் மட்டும் இல்லையென்றால், நான் ஒரு நபிமொழியைக் கூட அறிவித்திருக்க மாட்டேன் என்று அபூஹுரைரா(ரலி) கூறிவிட்டு  2:159, 160 என்ற இரு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். மேலும் தொடர்ந்து மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரப் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்சாரித் தோழர்களோ தங்கள் விவசாயச் செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.ஆனால் இந்த அபூஹுரைராவாகிய நான் முழுக்க முழுக்க வேறு வேலைகளில் ஈடுபடாமல் பட்டினியாக நபி (ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகைத் தராத இடங்களுக்கெல்லாம் நான் சென்றேன். அவர்கள் மனப்பாடம் செய்யாதவற்றையெல்லாம் மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன் என்று கூறினார்கள்.   ஆதார நூல் : புஹாரி (118)
அபூஹுரைரா(ரலி) அவர்கள், தமக்குரிய அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாதவகையில் மிகவும் வறுமையால் வாடிக்கொண்டிருந்த திண்ணைத் தோழர்களில் ஒருவராவார். ஆயினும் தனது ஏழ்மையைப் பொருட்படுத்தாமல் நபிமொழிகளை அறிந்து கொள்ளவதற்கு ஆர்வத்தோடு முயற்சியை மேற்கொண்டார்கள். அதன்பலனாக அவர்கள் மற்றவர்களை காட்டிலும் அதிகமான ஹதீஸ்களை அறிந்து மக்களுக்கு அறிவித்தார்கள். பிந்தைய காலங்களில் பல்வேறான இன்னல்களுக்கு மத்தியில் இமாம்கள் நபிமொழிகளை ஒன்றுதிரட்டினார்கள்.  இவ்வாறு அவர்களால் தொகுப்பட்ட மார்க்கம் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் தாங்கிய ஹதீஸ்கிரந்தங்கள், இன்று நம்முடைய தாய்மொழியிலேயே மொழிப்பெயர்க்கப் பட்டிருக்கும் நிலையில், அவற்றை தெரிந்து கொள்வதற்கு நாம் முயற்சிக்கின்றோமா?. மார்க்கத்தை ஆர்வத்தோடு அறிந்துக் கொள்ளாமல் மெத்தனமாக இருப்பதினால் தான், மார்க்கத்திற்கு மாற்றமான விரோதமான செயல்களெல்லாம் நமது சமுதாயத்தில் மலிந்துக்கிடக்கின்றன. மேலும் மார்கத்தின் பெயரால் ஆலிம்மார்கள் ஷேகுமார்கள் சொல்லுகின்ற கட்டுக்கதைகள் ஆதாரமற்ற செய்திகளையெல்லாம் நம்பி ஏமாந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் இந்த அறியாமையின் கோரவிளைவாகவே மாற்றுமதத்தவர்களுக்கு ஒப்பாக வழிகேட்டிலே வீழ்ந்துக்கிடக்கின்றார்கள்.
அறிந்ததை செயல்படுத்த முயற்சித்தல்
மறுமையில் எளிதாக வெற்றியைப் பெற்றுத் தருகின்ற, இன்னும் நமது பாவங்களை அழிக்கின்ற பல நற்காரியங்களை, அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி(ஸல்) அவர்களும் நமக்கு நற்செய்தியாகச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அவற்றைக் கடைப்பிடிப்பதில் அன்றைய மக்கள் எவ்வாறு ஆர்வம் காட்டினார்கள் என்பதை பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் அறியமுடிகின்றது.
தர்மம் பற்றிய இறைவசனம் இறங்கியதும் (தர்மம் செய்வதற்காகப் பொருள் தேடி) நாங்கள் கூலிலி வேலை செய்யலானோம். அப்போது ஒருவர் அதிகப் பொருளைத் தர்மம் செய்தார். மக்கள், "அவர், பிறர் பாராட்ட வேண்டுமென்று செய்கிறார்'' எனக் கூறினார்கள். பிறகு மற்றொருவர் ஒரு ஸாஉ தானியங்களைத் தர்மம் செய்தார். அப்போது மக்கள் “"இவரது ஸாஉ (குறைந்த அளவு தானியம்) அல்லாஹ்வுக்குத் தேவையில்லை'' எனக் கூறலானார்கள். அப்போது “"இ(ம் முனாஃபிக்கான)வர்கள் நம்பிக்கையாளர்களில் தாராளமாகத் தர்மம் செய்பவர்களையும், (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பைத் தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையும் உண்டு'' என்ற (9:79ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.
அறிவிப்பவர் : அபூ மஸ்ஊத் (ரலி)  நூல் : புஹாரி (1415)
நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் தர்மம் செய்ய வேண்டும் என கட்ளையிட்டால் எங்களில் ஒருவர் கடைத்தெருவுக்குச் சென்று கூலிலி வேலை செய்து, இரு கையளவு தானியம் சம்பாதித்து (அதைத் தர்மம் செய்து)விடுவார். ஆனால் இன்றோ எங்களில் சிலரிடம் ஓர் இலட்சம் (திர்ஹம்/தீனார்)வரை உள்ளன.
அறிவிப்பவர் : அபூ மஸ்வூத் (ரலி) நூல் : புஹாரி (1416)
பிரபஞ்சத்தின் இரட்சகனும், அவனுடைய இறுதித்தூதரும் தர்மம் செய்யுமாறு வலியுறுத்தியதுமே அன்றைய மக்கள், வியர்வை சிந்தி கூலிவேலைப்பார்த்து இறைவழியில் வாரிவழங்கக் கூடியவர்களாக திகழ்ந்தார்கள். இன்றோ வேலைக்கு பல ஆட்களை வைத்து வியாபாரம் செய்து வசதியாக வாழ்பவர்கள் கூட அதிகமான தானதர்மங்கள் செய்வதற்கு தயாராக இல்லாமல் தயங்கி கொண்டிருக்கிறார்கள்.
வீரமரணம் அடைதல் :
உஹது போரின் போது  நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர், இறைத்தூதர் அவர்களே நான் கொல்லப்பட்டால் எங்கே இருப்பேன்? என்று கேட்டார். சொர்க்கத்தில் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே தன் கையில் உண்ணுவதற்காக வைத்திருந்த பேரீத்தம் பழங்களை கீழே போட்டுவிட்டு, பின்பு போரில் கலந்து கொண்டார். இறுதியில் கொல்லப்பட்டுவிட்டார்.
அறிவிப்பவர் : ஜாபிர்(ரலி)  நூல் : முஸ்லிம் (3518)
அறப்போரில் பங்கேற்றுக் கொல்லப்பட்டால் கேள்விக்கணக்கின்றி எளிதாகச் சொர்க்கம் சென்றடைந்துவிடலாம் என்று இறைத்தூதர் கூறிய மறுகணமே, அதை நடைமுறைப்படுத்த முயற்சியை மேற்கொண்டு, இறுதிமுடிவாக வீரமரணத்தை அடைகின்றார். இதைப் போன்றே மார்க்க வழிமுறையைக் கற்றதும் அடுத்தநிமிடமே அதை செயல்முறைப்படுத்த நபித்தோழர்கள் ஆர்வத்தோடு முயன்றதை எடுத்துரைக்கும் விதத்தில்  பல ஹதீஸ்கள் காணப்படுகின்றன. ஆனால் மகத்துவமிக்கவனிடத்தில் வெகுமதியைப் பெறுவதற்காக நன்மையின்பால் முனைகின்ற விஷயத்தில் நமது நிலையோ எள்ளி நகையாடுகின்ற வகையில் தான் இருக்கின்றது.
முயற்சிப்பவர்களுக்கு மிகைத்தவனின் உதவி
 நாமெல்லாம் நிரந்தரமான மறுமைவாழ்வில் வெற்றியாளராக தேர்ச்சிபெறுவதற்காக விரைந்து செயலாற்றும் போது, எவ்வளவுதான் குறுக்கீடுகள் தடுமாற்றங்கள் வந்தாலும் நாம் தளர்ந்துவிடாமல் துணிவோடு முயற்சிக்கவேண்டும். அவ்வாறு செயல்பட்டால் அதற்கேற்ப நமது காரியங்களையெல்லாம் எளிதானதாக  மாற்றித் தருவதாக, அருள்மறையில் அல்லாஹ் நமக்கு வாக்குறுதி வழங்கியுள்ளான்.
நம்பிக்கைக் கொண்ட நிலையில் மறுமையை விரும்பி, அதற்காக முயற்சிப்போரின் முயற்சிக்கு நன்றி செலுத்தப்படும்.                         
(அல்குர்ஆன் 17 : 19)
நம் விஷயத்தில் முயற்சிப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.  (அல்குர்ஆன் 29 : 69)
ஐவேளைத்தொழுகை, ரமலான் நோன்பு, ஜகாத் போன்ற முக்கியமான மார்க்கக் கடமைகளை  பேணுதலாக கடைபிடிப்பதோடு, சுன்னத் தொழுகை தஹஜ்ஜத் தொழுகை மாதந்தோறும் 13,14,15 நாட்கள் நோன்பு மற்றும் வாரந்தோறும் திங்கள் வியாழன் நோன்பு போன்ற அதிகமான உபரியான அமல்களையும் நிறைவேற்றவேண்டும்; ஏகஇறைவனின்  திருப்பொருத்தத்தைப் பெறுவதற்காக அளவற்ற நற்காரியங்களைச் செய்யவேண்டும் என்று உறுதியோடு மார்க்கப் பாதையில் நாம் முயற்சித்தால், அதற்கேற்ப அல்லாஹ் நமது நிலையை  சீர்படுத்திக் கொடுப்பான். அப்பாதையில் தொடர்ந்து நடைபோடுவதற்குரிய புத்துணர்வை நமக்கு வழங்குவான். இதை பின்வரும் இறைச்செய்திகளிலிருந்து நாம் அறியமுடிகின்றது.
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள கூறினார்கள் :
என் அடியான் என்னிடம் ஒரு எட்டு நெருங்கினால் நான் அவனிடம் ஒரு முழம் நெருங்குகிறேன். என்னிடம் ஒரு முழம் நெருங்கினால் அவனிடம்  நான் (விரித்த) இரு கைகளின் நீள அளவிற்கு நெருங்குகிறேன். என்னிடம் அவன் நடந்துவந்தால்  நான் அவனிடம் விரைந்து ஓடி வருகிறேன்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புஹாரி (7536)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்கüல் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அüப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செய-லும் தயக்கம் காட்டுவ தில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)  நூல் : புஹாரி (6502)
இந்த போதனை தனிமனிதனுக்கு மட்டுமல்ல, ஒரு சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் துறைகள் போன்றவற்றில் பின்தங்கியிருக்கின்றதா? இந்த மோசமானநிலையில் இருந்து மீண்டுவந்து வளர்ச்சியையும் வளத்தையும்  பெறவேண்டுமெனில், அந்த  சமுதாயம் தமது தவறுகளைத்  திருத்திக்கொள்வதோடு தம்மிடத்திலுள்ள திறமைகளையும் அருட்கொடைகளையும் சீரியவகையில் பயன்படுத்த முயற்றிக்க வேண்டும். அப்போது தான் அல்லாஹ் அச்சமுதாயத்தின் நிலையை மேலோங்க செய்வான்.
தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்றமாட்டான். (அல்குர்ஆன் 13 :11)
இனியாவது முற்சிப்போம் :
மது, சூதாட்டம், போதைபழக்கம் போன்ற தீயக்காரியங்களில் ஈடுபடுபவர்கள் அதற்காக தங்களுடைய பொருளாதாரம் மற்றும் பொன்னான நேரத்தை செலவிட்டு அத்தீயக் காரியங்களில் ஆர்வமும் முயற்சியும் செலுத்தும் போது, நாளடைவில் அவைகளுக்கு அடிமைகளாக மாறிவிடுகிறார்கள். திருடுதல்மோசடி போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள், அந்த தவறான காரியங்களுக்காக கடினமான உக்திகளை கண்விழித்து கவனமாக கையாளுகிறார்கள். அசத்தியத்தில் இருப்பவர்கள் தங்களின் கொள்கைகளை வளர்க்கவும், சத்தியமார்க்கமான இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கவும் பல வழிகளில் முயற்சித்து சதிவேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறிருக்க நேர்வழி எது? வழிகேடு எது? மற்றும் நன்மை எது? தீமை எது? என்பதை அறிந்திருக்கின்ற நாம், வழிகேட்டை வெறுத்தவர்களாக நன்மை விளைவிக்கின்ற நேர்வழியின் பாதையில் பயணிக்கவேண்டுமெனில், அதற்காக பாடுபடவும் தயாராகஇருக்கவேண்டும். அதற்காக நம்மால் முடிந்தளவு உழைக்க உறசாகத்தோடு முன்வரவேண்டும். விதைக்கப்பட்ட சிறுவித்து  மழை, புயல், வெயில் என்று நிலைமாறும் பருவநிலை மாற்றத்தோடு போராடியபிறகே, மற்றவர்களுக்கு பலனளிக்கின்ற  விருட்சகமாக தலைநிமிர்ந்து நிற்கின்றது. இதனிடமிருந்தாவது நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆகவே தூய்மையான முறையில் மார்க்கத்தை அறிவதற்கும், அதன்படி சரியான முறையில் வாழ்வதற்கும், அதை மற்றவர்களுக்கு தெளிவானமுறையில் எடுத்துரைப்பதற்கும் விரும்புகின்ற நாம், அதற்காக முழுமையான முயற்சியை மேற்கொள்வோமாக!

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites