அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 23 ஏப்ரல், 2011

மக்கள் கருத்து (ஏன் இஸ்லாம்?)


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
தங்கள் மீதும், தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், பிரிட்டனின் பிரபல தினசரியான "தி கார்டியன் (The Guardian)", இஸ்லாம் குறித்த ஒரு சுவாரசியமான கட்டுரையை வெளியிட்டிருந்தது.
"கறுப்பின மக்கள் ஏன் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் (Why are black people turning to Islam?)" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த பதிவை எழுதியவர் ரிச்சர்ட் ரெட்டி (Richard Reddie) அவர்கள். 
இஸ்லாத்தை தழுவிய பலரிடம் நேர்க்காணல் செய்து அந்த கட்டுரையை எழுதியிருந்தார் அவர். அவருடைய ஆய்வு அடங்கிய அந்த பதிவு இங்கே உங்கள் பார்வைக்கு...  
"கறுப்பின மக்கள் இஸ்லாத்தை தழுவுவ தென்பது புதிய நிகழ்வு அல்ல. காலங்காலமாகவே அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 
ஆனாலும், ஏன் அதிக கறுப்பின பிரிட்டன் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், இஸ்லாத்தை தழுவுகின்றார்கள்? என்று ஆழமாக சென்று ஆய்வு செய்தேன். நான் முஸ்லிமில்லை என்றாலும் எனக்கு இஸ்லாம் மீது எப்போதுமே ஆர்வம் இருந்ததுண்டு. 
என்னுடைய வாழ்வில், நான் ஹீரோக்களாக காணும் மால்கம் எக்ஸ், முஹம்மது அலி, பிரின்ஸ் பஸ்டர் என்று மூவருமே இஸ்லாத்தை தழுவியவர்கள். இவர்களை எந்த வகையில் இஸ்லாம் கவர்ந்தது?, அது அவர்களது வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கியது? என்பதை அறிய விருப்பம்.
என்னுடைய ஆய்வின் ஆரம்பத்திலேயே நான் புரிந்து கொண்ட ஒரு விஷயம், இஸ்லாத்தை தழுவிய இந்த மக்களில் பலர், தாங்கள்  "கறுப்பின முஸ்லிம்கள் (Black Muslims)" என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை. உலகளாவிய முஸ்லிம்களில் தாங்களும் ஒரு பகுதி, தங்கள் இனத்தை பார்த்து தங்களை அடையாளப்படுத்த வேண்டாம் என்றே கூறுகின்றனர்.
அது போல, இந்த மக்களில் சிறு பகுதி, தங்களை கறுப்பின முஸ்லிம்கள் என்று அழைத்தாலும் பரவாயில்லை என்று கருதுகின்றனர். இஸ்லாம், கறுப்பின மக்களின் இயற்கை மார்க்கமென்றும்; ஆன்மீக ரீதியாகவும்உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்க வந்த மார்க்கம் என்றும் கூறுகின்றனர்.
நான் நேர்க்காணல் செய்த மக்கள் அனைவருமே ஒப்புக்கொண்ட ஒரு கருத்தென்றால், அது, இஸ்லாம், தங்களுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக உருவாக்கியது என்பதும், ஆன்மீக ரீதியாக ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது என்பதும் தான். 
அதுமட்டுமல்லாமல், Materialism மற்றும் Moral relativism போன்றவற்றால் சீரழிந்த இந்த சமூகத்தை எதிர்த்து நிற்கக்கூடிய ஊக்கத்தையும் வலிமையையும் இஸ்லாம் தங்களுக்கு தந்துள்ளதாக கூறுகின்றனர்.

நான் நேர்க்காணல் செய்த பெண்களோ, இஸ்லாம், தங்களுக்கு மிகுந்த கண்ணியத்தை அளித்துள்ளதாகவும், பெண்களை அழகு பொருட்களாக காணும் சமூகத்திலிருந்து தங்களை விடுவித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
இந்த ஆய்வின் மூலம் நான் கண்டறிந்த மற்றொரு முக்கிய தகவல், இவர்களில் பலர், இஸ்லாத்தை தழுவதற்கு முன்பு கிறித்துவத்துடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள். சர்ச்சுக்கு செல்பவர்களாகவோ அல்லது சர்ச்சுடன் தொடர்புடையவர்களை உறவினர்களாகவோ கொண்டவர்கள்.  இது இஸ்லாத்தை ஏற்கும் வெள்ளையின மக்களுடன் ஒப்பிடும் போது சற்று வித்தியாசமானது. ஏனென்றால், இஸ்லாத்தை தழுவும் பல வெள்ளையர்கள் அதற்கு முன் எந்த ஒரு மார்க்கத்தின் மீதும் பற்று இல்லாதவர்களாகத் தான் இருப்பர்.      அதுபோல நான் அறிந்துக்கொண்ட ஒரு சுவாரசியமான விஷயம், இஸ்லாம் என்றால் என்னவென்று இவர்களை, குறிப்பாக ஆண்களை, பார்க்க வைத்ததில் மால்கம் எக்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றார். நான் பேசிய பலருடைய மனதிலும் மால்கம் எக்ஸ் என்ற அந்த சகோதரர் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்.
அமெரிக்காவைப் போன்று பிரிட்டனிலும், கறுப்பின முஸ்லிம்கள், குற்றவாளிகளை திருத்தி அவர்களை நல்வழிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இப்படி திருத்தப்பட்ட பலர், தங்களை நல்வழிப்படுத்திய கொள்கையை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்வதில் மும்முரமாக இருக்கின்றனர். இதில் அவர்கள் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை. 
இறுதியாக நான் சொல்ல விரும்புவது, வாழ்வின் முக்கிய கேள்விகளுக்கு கிறித்துவத்தில் பதிலில்லாத போது, அதனை முன்வைத்தவர்களுக்கு சரியான மாற்றாக இருப்பது இஸ்லாம்.
சிலர், தங்கள் ஹீரோக்ககளை பார்த்து இஸ்லாம் என்றால் என்னவென்று அறிந்து கொண்டு இஸ்லாத்தை தழுவுகின்றனர். மற்றவர்களோ, தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தங்களை தேடி முடிவில் இஸ்லாத்தை வந்தடைகின்றனர்.
எது எப்படியோ, இஸ்லாத்தை ஏற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை"
சுபானல்லாஹ்....
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

இஸ்லாம் கூறும் கொள்கை கோட்பாடு
அரபியர் விட அரபியல்லாத அன்னியர் சிறந்தவரில்லை.
مسند أحمد بن حنبل - (5 / 411)
 لا فضل لعربي على أعجمي ولا لعجمي على عربي



புதன், 20 ஏப்ரல், 2011

நபிகளாருக்கு கொடுத்த துன்பங்கள்


எம்.. முஹம்மத் சுலைமான்
கேள்வி : இணைவைப்பாளர்கள் நபிகளாரின் பிரச்சாரத்தைப் பற்றி என்ன கூறினார்கள்?
பதில் : நமது பெரியவர்களை முட்டாளாக்கிறார், நமது முன்னோர்களை ஏசுகிறார், நமது மார்க்கத்தை குறை கூறுகிறார், நமது கூட்டமைப்பை பிரிக்கிறார், நமது தெய்வங்களை ஏசுகிறார் என்று கூறினார்கள். (ஆதாரம் : அஹ்மத் 6739)
கேள்வி : நபிகளாரை எவ்வாறு துன்பத்தினார்கள்?
பதில் : கழுத்தில் துணியைப் போட்டு இறுக்கி கொலை செய்ய முயற்சித்தார்கள். (ஆதாரம் : புகாரீ 3678)
கேள்வி : இவ்வாறு செய்தது யார் ?
பதில் : உக்பா பின் முஐத் என்பவன் (ஆதாரம் : புகாரீ 3678)
கேள்வி : அப்போது நபிகளாரை காபாற்றியவர் யார்?
பதில் : அபூபக்ர் (ரலி) (ஆதாரம் புகாரீ 3678)
கேள்வி : அபூபக்ர் (ரலி) அவர்கள் நபிகளாரை காப்பற்றும் போது எந்த வசனத்தைச் சுட்டிக் காட்டினார்கள்?
பதில் : "என் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறும் ஒரு மனிதரை கொல்லப் போகிறீர்களா? (அல்குர்ஆன் 40:28) என்ற வசனத்தை சுட்டிக்காட்டி தடுத்தார்கள். (ஆதாரம் : புகாரீ 3678)
கேள்வி : நபி (ஸல்) அவர்களின் பிரச்சாரத்தை தடுக்க இணைவைப்பாளர்கள் செய்த முயற்சிகள் என்ன?
பதில் : முஹம்மதே உமக்கு பணம் வேண்டுமானால் கேள்! உம்மை குறைஷிகள் பணக்காரராக மாற்றுகிறோம். அல்லது, உமக்கு பெண்கள் மீது ஆசை இருந்தால் குறைஷிகளில் உமக்கு பிடித்த பெண்களை காட்டும்! நாம் இதைப் போன்ற பத்து பெண்களை திருமணம் முடித்துத் தருகிறோம். ஆனால் நீ உன் பிரச்சாரத்தை விட்டுவிடவேண்டும் என்றனர். (ஆதாரம் : முஸ்னத் அபூயஃலா அல்மூஸிலீ 1818), முஸ்னத் அப்து இப்னு ýமைதீ (1123)
கேள்வி : இவ்வாறு கூறியவன் யார்?
பதில் : உத்பா பின் ரபீஇ (ஆதாரம் : முஸ்னத் அபூயஃலா அல்மூஸிலீ 1818), முஸ்னத் அப்து இப்னு ýமைதீ (1123)
கேள்வி : அப்போது நபி (ஸல்) அவர்கள் என்ன பதிலளித்தார்கள்?
பதில் : 1. ஹா, மீம்
2. அளவற்ற அருளாளனான நிகரற்ற அன்புடையோனிடமிருந்து (இது) அருளப்பட்டது.
3. (இது) விளங்கிக் கொள்ளும் சமுதாயத்திற்காக வசனங்கள் தெளிவுபடுத் தப்பட்ட வேதம். அரபு மொழியில் அமைந்த குர்ஆன்.
4. நற்செய்தி கூறக் கூடியதாகவும், எச்சரிக்கை செய்யக் கூடியதாகவும் (இது இருக்கிறது) அவர்களில் பெரும்பாலோர் புறக்கணித்தனர். எனவே அவர்கள் செவியேற்க மாட்டார்கள்.
5. "நீர் எதை நோக்கி எங்களை அழைக்கிறீரோ அதை விட்டும் (தடுப்பதற் காக) எங்கள் உள்ளங்களில் மூடிகள் இருக் கின்றன. எங்கள் காதுகளில் அடைப்பும் உள்ளது. எங்களுக்கும், உமக்கும் இடையே ஒரு திரையும் இருக்கிறது. எனவே நீரும் செயல்படுவீராக! நாங்களும் செயல்படு கிறோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
6. "நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே'' என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது என்று (முஹம்மதே!) கூறுவீராக!
7. அவர்கள் ஸகாத் கொடுக்க மாட்டார்கள். மறுமையையும் மறுப்பவர்கள்.
8. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு முடிவில்லாத கூலி உண்டு.
9. பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகராகக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதி யாவான் என்று கூறுவீராக!
10. அதன் மேலே முளைகளை ஏற் படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். நான்கு நாட்களில் அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.
11. பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.
12. இரண்டு நாட்களில் ஏழு வானங் களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித் தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப் பட்டதாக (ஆக்கினோம்).307 இது அறிந்த வனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.
13. அவர்கள் புறக்கணித்தால் "ஆது மற்றும் ஸமூது சமுதாயத்திற்கு ஏற்பட்ட இடி முழக்கம் போன்ற இடி முழக்கத்தை உங்களுக்கு எச்சரிக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்குர்ஆன் 41:1-13) ஆகிய வசனங்களை பதிலாகக் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்னத் அபூயஃலா அல்மூஸிலீ 1818, முஸ்னத் அப்து இப்னு ýமைதீ (1123)
கேள்வி : அதற்கு உத்பா என்ன கூறினான்?
பதில் : நிறுத்தும் ! இதைத் தவிர வேறு பதில் இல்லையா? என்று கேட்டான். நபி (ஸல்) அவர்கள் இல்லை என்றவுடன் சென்றுவிட்டான். (ஆதாரம் : முஸ்னத் அபூயஃலா அல்மூஸிலீ 1818), முஸ்னத் அப்து இப்னு ýமைதீ (1123)
கேள்வி : ஆசை வார்த்தைக்கு மயங்காத நபிகளாரிடம் வேறு என்ன குறைஷிகள் கேட்டார்கள்?
பதில் : ஸஃபா மலையை தங்கமாக மாற்றிக் காட்டினால் நாங்கள் ஈமான் கொள்கிறோம் என்று கூறினர். (ஆதாரம் : அஹ்மத் 2058, ஹாகிம் 3225.)
கேள்வி : அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்ன பதில் அளித்தார்கள்?
பதில் : ஈமான் கொள்வீர்களா? என்று கேட்டார்கள்? ஆம் என்று அவர்கள் பதிலளித்தார்கள்? பின்னர் அல்லாஹ்விடம் பிராத்தித்தார்கள். (ஆதாரம் : அஹ்மத் 2058, ஹாகிம் 3225.)
கேள்வி : அதற்கு அல்லாஹ் என்ன பதிலளித்தான்?
பதில் : ஜிப்ரீல் (அலை) அவர்களை, அல்லாஹ் நபிகளாரிடம் அனுப்பி வைத்தான். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ் சொன்ன ஸலாத்தை எத்தி வைத்து, நீங்கள் விரும்பினால் ஸஃபா மலை தங்கமாக மாற்றுகிறேன். ஆனால் இதன் பின்னர் அவர்கள் மறுத்தால் உலகத்தில் யாருக்கும் செய்யாத வேதனை அவர்களுக்குச் செய்வேன், நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு மன்னிப்பின் வாசல்களும் அருள் வாசல்களும் திறப்பேன் என்று அல்லாஹ் சொன்னதாக கூறினார். (ஆதாரம் : அஹ்மத் 2058, ஹாகிம் 3225.)
கேள்வி : எதை நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்?
பதில் : மன்னிப்பையும் அவனின் அருள் வாசல்களையும் தேர்ந்தெடுத்தார்கள். (ஆதாரம் : அஹ்மத் 2058, ஹாகிம் 3225.)
கேள்வி : இது தொடர்பாக இறங்கிய வசனங்கள் எவை?
பதில் : அற்புதங்களை முன்னோர்கள் பொய்யெனக் கருதியதே அதை நாம் (இப்போது) அனுப்புவதற்குத் தடையாக வுள்ளது. ஸமூது சமுதாயத்தினருக்கு ஒட்டகத்தைக் கண்முன்னே கொடுத்தோம். அதற்கு அவர்கள் அநீதி இழைத்தனர். அச்சுறுத்தவே அற்புதங்களை அனுப்புகிறோம். (அல்குர்ஆன் 17 : 59) (ஆதாரம் : ஹாகிம் 3379)
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190) (ஆதாரம் : தப்ரானீ - கபீர், பாகம் : 12, பக்கம் : 12)
கேள்வி : அபூஜஹ்ல் நபி (ஸல்) அவர்களை என்ன செய்ய நினைத்தான்?
பதில் : லாத்,உஸ்ஸாவின் மீது சத்தியமாக முஹம்மத் இங்கு தொழுதால் அவரின் பிடரியை மிதிப்பேன் அல்லது அவரின் முகத்தை மண்ணில் புதைச் செய்வேன் என்று கூறினான். (ஆதாராம் : முஸ்லிம் (5005), அஹ்மத் (8475)
கேள்வி : அவ்வாறு அபூஹஜ்ல் செய்தானா?
பதில் : நபி (ஸல்) அவர்கள் தொழும் போது அவர்களின் பிடரியை மிதிக்கச் சென்றான், ஆனால் அவனால் அங்கு செல்ல முடியவில்லை, போவான் உடனே திரும்பி வந்துவிடுவான். (ஆதாராம் : முஸ்லிம் (5005), அஹ்மத் (8475)
கேள்வி : அவ்வாறு வந்ததற்கு காரணம் என்ன?
பதில் : அவனுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் ஒரு நெருப்புக் குண்டத்தையும் (வானவர்களின்) இறக்கைகளûயும் கண்டான் அது அவனை பயமுறுத்தியது எனவே அவன் திரும்பினான். (ஆதாராம் : முஸ்லிம் (5005), அஹ்மத் (8475)
கேள்வி : இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்?
பதில் : அவன் என்னை நெருங்கியிருந்தால் மலக்குமார்கள் அவன் உறுப்புகளை ஒவ்வொன்றாக  பிடித்திருப்பார்கள் என்று கூறினார்கள். (ஆதாராம் : முஸ்லிம் (5005), அஹ்மத் (8475)
கேள்வி : அப்போது இறங்கிய வசனங்கள் எவை?
பதில் : அவ்வாறில்லை! தன்னைத் தேவையற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான். உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு. தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர் வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்குக் கட்டுப்படா தீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக! (அல்குர்ஆன் 96 : 6-19)
(ஆதாராம் : முஸ்லிம் (5005), அஹ்மத் (8475)
வளரும் இன்ஷா அல்லாஹ்

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites