அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 15 மே, 2010

பற்களை பாதுகாப்போம்! நோய்களைத் தவிர்ப்போம்!!



எத்தகைய சுத்தமானவருக்கும் வாயில் அதிகமான பாக்டீரியாக்கள் இருக்கும். வாய் சுத்தம் மிகவும் முக்கியமானது. வாய் சுத்தம் இல்லாவிட்டால் பலவித நோய்கள் உண்டாகும். சின்ன பிள்ளைகளுக்கு பற்சொத்தை போன்ற பிரச்சினைகள் வரும். நாற்பது வயதாகிவிட்டால் தொடர்பான நோய்கள் வரும். பாதிப்பு நீரிழிவினாலும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிப்பால் இதய நோய்களும் வரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
வாயினுள் அதிகமான பாக்டீரியாக்கள் வளருவதாக சொல்கிறார்களே அது ஏன்? என்ற கேள்வி உங்களுக்குள் இருக்கும். வாயிலிருந்து சுரக்கும் திரவங்களில் சர்க்கரை அளவு அதிகமிருக்கும். இது பாக்டீரியா போன்ற பிற கிருமிகளும் வளர்வதற்கு ஏற்றதாக இருப்பதால்தான் வாய்க்குள் கிருமிகள் அதிகம் உருவாகின்றன.
இவை ரத்தநாளங்கள் வழியாக சென்று ரத்தக் கொழுப்பை உறைய வைத்து ரத்தத்தை உறையச் செய்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிரச்சினையுள்ளவர்களின் ரத்தத்தில் பைப்ரினோஜென் (fibrinogen) என்ற பொருள்தான் ரத்தத்தை உறைய செய்துவிடுகிறது.
பற்களை (வாயை)பாதுகாப்பதன் மூலம் பல நோய்களைத் தவிர்க்கலாம். அதை எந்த வயதிலிருந்து தொடங்குவது என்பதுதான் பிரச்சினையா? பல் முளைக்க ஆரம்பிப்பதில் இருந்தே பற்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பிள்ளைகளுக்கு முளைப்பது பால் பற்கள். இவற்றின் எண்ணிக்கை -20. இவை விழுந்து முளைப்பதுதான் நிலைப்பற்கள். இவற்றின் எண்ணிக்கை-32. பால் பற்கள் மெல்லுவதற்கு முக்கியம்.
உரிய நேரத்தில் இவை விழுந்து விட்டால் அடுத்து வரும் பற்கள் இடைவெளியை நோக்கி வளர்ந்து இடுக்குப் பற்களை உருவாக்கும். இதனால் மன அளவிலும் பாதிப்பு ஏற்படும். பால் பற்கள் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தை எதையாவது சாப்பிட்டால் ஈரில் குத்தி வலிக்கும் என பயந்து சாப்பிட மறுக்கும். இதனால் ஊட்டச்சத்துக்குறைவு உண்டாகும்.
பால் பற்கள் திடமாக இருக்கவேண்டுமானால் பிள்ளைகளுக்கு கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை தரவேண்டும். இது தாடை எலும்பையும் உறுதியாக வைத்திருக்கும். பல் பாதிப்பு என்றாலே முதலில் வருவது பற்சிதைவுதான். இதற்கு முக்கியக் காரணம், பற்களின் மேற்பரப்பில் அமைந்துள்ள குழிகளிலும், பற்களின் இடையில் உள்ள சந்துகளிலும் பாக்டீரியாக்கள் தங்கி அமிலத்தை சுரப்பதுதான்.

வெள்ளி, 14 மே, 2010

சிகரெட், மதுவை விட ஆபத்தானது! சர்க்கரை பற்றிய சில கசப்பான உண்மைகள்


மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சர்க்கரையும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும் போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப் படுகின்றன.
சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.
சிகரெட், மது முதலியவற்றைவிட சர்க்கரை அதிக ஆபத்தானது எனலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சரும நோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல் நோய், சிறுநீரகக் கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சர்க்கரை உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பை யும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.
சர்க்கரை அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத் தனத்தையும் வன்செயலை யும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.
சர்க்கரையும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவை அதிகரித்து விடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசை நார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.
தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரை நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.
உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப் படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டே கிளேன்டின் E2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது. கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சர்க்கரை இன்னும் துரிதப்படுத்துகிறது.

வியாழன், 13 மே, 2010

ஒரு ஹதீஸ் ளயீஃபானது தான் என்பதில் இமாம்களுக்கிடையில் ஒற்றுமை இருக்கின்றதா?

ஒரு ஹதீஸ் ளயீஃபானது தான் என்பதில் இமாம்களுக்கிடையில் ஒற்றுமை இருக்கின்றதா? மேலும் ளயீஃபான ஹதீஸின் அடிப்படையில் ஒருவர் அமல் செய்தால் அவை இறைவனால் நிராகரிக்கப்படுமா?

ஒரு ஹதீஸ் பலவீனமானது என்பதை அதன் அறிவிப்பாளர் தொடர் மற்றும் அவர்களின் தரத்தை வைத்தே முடிவு செய்கிறோம். எனவே ஓர் அறிவிப்பாளர் பலவீனமானவர் என்பதில் இமாம்களுக்கிடையில் ஒற்றுமை உள்ளதா? என்று கேட்பதே சரியானதாகும்.
அறிவிப்பாளர்களைப் பொறுத்த வரை பொய்யர் என்று எல்லா அறிஞர்களும் ஒருமித்த கருத்தில் சிலரைப் பற்றி கூறியிருப்பார்கள். அல்லது பலீவனமானவர் என்று கூறியிருப்பார்கள்.
ஆனால் அதே சமயம் எல்லா அறிவிப்பாளர்களைப் பற்றியும் எல்லா அறிஞர்களிடமும் ஒருமித்த கருத்து இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அறிவிப்பாளரின் தரம் என்பது, அவரது வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து முடிவெடுக்கப்படுகின்றது. இவ்வாறு ஆராயும் போது ஒரு அறிவிப்பாளரைப் பற்றி ஒரு ஹதீஸ் கலை அறிஞருக்குத் தெரிந்த செய்தி மற்றவருக்குத் தெரியாமல் போகலாம். அல்லது அவரை விட இவருக்குக் கூடுதலாகத் தெரிந்திருக்கலாம். இது போன்ற காரணங்களால் ஒரு அறிவிப்பாளரைப் பற்றி இமாம்களிடத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு.
பல ஹதீஸ் கலை அறிஞர்கள் ஓர் அறிவிப்பாளரை நல்லவர் என்று கூறியிருப்பார்கள். ஒரே ஒருவர் மட்டும் அந்த அறிவிப்பாளரைப் பலவீனமானவர் என்று கூறி அதற்குத் தக்க சான்றையும் கூறுகின்றார் என்றால் இந்த ஒருவரின் விமர்சனத்தையே நாம் ஏற்க வேண்டும். ஏனெனில் ஒருவரை நல்லவர் என்று கூறுபவர்களுக்கு அவரது குறையைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். அவரைக் குறை கூறுபவர் தக்க சான்றின் அடிப்படையில் கூறும் போது அந்த விமர்சனத்தின் அடிப்படையில் அவரைப் பலவீனமானவர் என்றே முடிவு செய்ய வேண்டும். இது பெரும்பான்மை அடிப்படையிலோ, அல்லது ஒருமித்த கருத்தின் அடிப்படையிலோ முடிவு செய்யப்படும் விஷயமல்ல என்பதே இதற்குக் காரணம்.
பலவீனமான அறிவிப்பு என்று தெரிந்த பின்னரும் அதைப் பின்பற்றி அமல் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? என்று கேட்டுள்ளீர்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? இலலையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய செய்திகள் தான் பலவீனமான ஹதீஸ்களாகும்.
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.
(அல்குர்ஆன் 17:36)
உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதன் பால் சென்று விடு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹஸன் பின் அலீ (ரலி)
நூல்: திர்மிதீ 2442
நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டால் அதைப் பின்பற்றுவது தடை செய்யப் பட்டுள்ளது என்பதை மேற்கண்ட குர்ஆன் வசனமும்  ஆதாரப் பூர்வமான ஹதீசும் தெளிவாகக் கூறுகின்றன. எனவே பலவீனமான ஹதீஸ்களைப் பின்பற்றி அமல் செய்யக் கூடாது. அது குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமானதாகும்.

ஒரு ஹதீஸின் தரத்தை இனம் கண்டு தான் பின்பற்ற வேண்டுமா

ஒரு ஹதீஸின் தரத்தை இனம் கண்டு தான் பின்பற்ற வேண்டுமா? அவ்வாறு ஹதீஸின் தரத்தைப் பற்றி ஆராயும் போது, ஒரு அறிவிப்பாளரை அதிகமானவர்கள் நல்லவர் என்று கூறி, ஒருவர் மட்டும் அவரைப் பற்றி குறை கூறியிருந்தால் எப்படி முடிவு செய்ய வேண்டும்? மெஜாரிட்டி அடிப்படையில் தீர்மானிக்கலாமா?

நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை ஹதீஸ்கள் என்கிறோம். இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையை ஆய்வு செய்து அவற்றில் ஆதாரப்பூர்வமானவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக முழுமையான விளக்கத்திற்கு ஏகத்துவத்தில் இடம் பெறும் "ஹதீஸ் கலை' என்ற தொடரைப் பார்வையிடுக!
ஒரு அறிவிப்பாளரைப் பற்றி அதிகமான ஹதீஸ் கலை அறிஞர்கள் நல்லவர் என்று கூறியிருந்து, ஒரேயொரு ஹதீஸ் கலை அறிஞர் மட்டும் அந்த அறிவிப்பாளரை பலவீனமானவர் என்று கூறி, அதற்குச் சரியான காரணத்தையும் கூறுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். இங்கு மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது. அந்த அறிவிப்பாளரைப் பற்றிய மோசமான விமர்சனத்திற்கு முன்னுரிமை கொடுத்து அவர் பலவீனமானவர் என்ற முடிவுக்கே வர வேண்டும். ஏனெனில் நல்லவர் என்று விமர்சனம் செய்தவர்களுக்கு அவரது குறையைப் பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்.
ஒருவரது குறையைப் பற்றித் தெரியாத போது அவரை நல்லவர் என்றே விமர்சனம் செய்வார்கள். ஆனால் ஒருவரை மனன சக்தி குறைவானர் என்றோ, பொய்யர் என்றோ ஒரு ஹதீஸ் கலை அறிஞர் விமர்சனம் செய்கின்றார் என்றால் அவரது குறையை நன்கு தெரிந்து தான் விமர்சனம் செய்கின்றார். எனவே இந்த விமர்சனத்திற்கு முன்னுரிமை கொடுத்து அந்த அறிவிப்பாளரைப் பலவீனமானவர் என்றே முடிவு செய்ய வேண்டும்.

செவ்வாய், 11 மே, 2010

தலையங்கம்: பெற்​றோர் வயிற்​றில் பால்

தமிழ்​நாட்​டில் தனி​யார் பள்​ளி​க​ளில் பயி​லும் மாண​வர்​க​ளின் பெற்​றோர் அனை​வ​ருக்​கும் மகிழ்ச்​சி​யா​ன​தா​க​வும்,​​ ஒரு விடி​ய​லைக் காட்​டி​ய​தா​க​வும் அமைந்த செய்தி-​ இரு நாள்​க​ளுக்கு முன்பு,​​ தனி​யார் பள்​ளி​க​ளில் கட்​ட​ணத்தை நிர்​ண​யித்து அரசு வெளி​யிட்ட அறிக்​கை​தான்.​ ​அறிக்​கை​யோடு நின்​று​வி​டா​மல்,​​ தற்​போது தமிழ்​நாட்​டின் பெரும்​பா​லான கல்வி மாவட்​டங்​க​ளில் அந்​தந்த முதன்​மைக் கல்வி அலு​வ​லர் மூல​மாக ஒவ்​வொரு பள்​ளிக்​கும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள கட்​டண விவ​ரக் கடி​தம் வழங்​கப்​பட்டு வரு​கி​றது என்​பது மேலும் மகிழ்ச்​சி​யூட்​டு​வ​தாக இருக்​கி​றது.​கல்​விக் கட்​ட​ணத்தை நிர்​ண​யம் செய்ய,​​ நீதி​பதி கே.​ கோவிந்​த​ரா​ஜன் தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட கமிட்டி,​​ இந்​தக் கட்​ட​ணத்தை மிக​வும் சரி​யா​க​வும்,​​ நியா​ய​மா​க​வும் நிர்​ண​யித்​துள்​ளது என்​ப​தில் எந்​த​வி​த​மான மாற்​றுக் கருத்​துக்​கும் இட​மில்லை.​ ஏனெ​னில்,​​ ​ இந்​தக் கட்​ட​ணங்​கள் அனைத்​தும் அறி​வி​யல்​பூர்​வ​மாக,​​ ஒவ்​வொரு பள்​ளிக்​கு​மா​கத் தீர்​மா​னிக்​கப்​பட்​டவை என்​ப​து​தான் இதன் சிறப்பு.​ஒவ்​வொரு பள்​ளி​யும் கொண்​டி​ருக்​கும் இடத்​தின் பரப்​ப​ளவு,​​ கட்​ட​டங்​க​ளின் அளவு,​​ உள்​கட்​ட​மைப்பு வசதி,​​ தள​வாட வச​தி​கள்,​​ ஆய்​வுக்​கூ​டம்,​​ நூல​கம்,​​ பணி​யா​ளர்,​​ ஆசி​ரி​யர்​கள் எண்​ணிக்கை ஆகி​ய​வற்​றைக் குறித்து அந்​தந்​தப் பள்​ளி​யி​ட​மி​ருந்து தக​வல் பெற்று அளிக்​கு​மாறு,​​ தமி​ழ​கத்​தின் அனைத்து மாவட்​டங்​க​ளி​லும் உள்ள முதன்மை கல்வி அலு​வ​ல​ருக்கு ஒரு படி​வத்தை இக்​க​மிட்டி வழங்​கி​யது.​ இந்​தப் படி​வங்​களை 10,934 பள்​ளி​கள் பூர்த்தி செய்து தந்​தன.​ 701 பள்​ளி​கள் இப்​ப​டி​வங்​களை இது​வரை பூர்த்தி செய்து தரவே இல்லை.​இந்​தக் கமிட்டி செய்த மிக நல்​ல​தொரு செயல்,​​ இவர்​கள் தந்த விவ​ரங்​க​ளைக் கொண்டு,​​ அப்​பள்​ளிக்கு ஓராண்​டுக்கு எவ்​வ​ளவு செல​வா​கக்​கூ​டும் என்று கணக்​கிட்டு,​​ அதில் பள்ளி நடத்​தும் தாளா​ள​ருக்​கும் இழப்பு இல்​லாத வகை​யில் ஒரு விகி​தா​சார லாபத்​தைச் சேர்த்து,​​ அதை அந்​தப் பள்​ளி​யின் மாண​வர் எண்​ணிக்​கைக்கு ஏற்ப கல்​விக் கட்​ட​ணங்​களை வகுத்து அளித்​துள்​ள​னர்.​இந்த நடை​முறை செல​வி​னக் கணக்​கின் அடிப்​ப​டை​யில்,​​ அதி​க​பட்​ச​மாக மேனி​லைப் பள்​ளி​யில் ரூ.​ 11,000,​ உயர்​நி​லைப் பள்​ளி​க​ளுக்கு ரூ.​ 9 ஆயி​ரம்,​​ நடு​நி​லைப் பள்​ளி​க​ளுக்கு ரூ.​ 8 ஆயி​ரம்,​​ தொடக்​கப் பள்​ளி​க​ளுக்கு ரூ.​ 5 ஆயி​ரம்,​​ கிரா​மத் தொடக்​கப்​பள்​ளிக்கு ரூ.3,500 எனக் கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்டு அறி​விக்​கப்​பட்​டது.​ இத​னால் பெற்​றோர் அடைந்த மகிழ்ச்​சிக்கு அளவே இல்லை என்று சொல்​ல​லாம்.​ஆனால்,​​ நாம் எதிர்​பார்த்​த​தைப் போலவே தனி​யார் பள்​ளி​கள் அர​சின் இந்த ஆணையை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தடை​யாணை பெறும் முயற்​சி​யில் இறங்​கி​விட்​டன.​ இதற்​காக அனைத்து தனி​யார் பள்​ளி​க​ளி​ட​மும் சந்தா நிலுவை வசூல் படு வேக​மாக நடந்து வரு​கி​றது.​அர​சின் கட்​ட​ணத்தை எதிர்க்​கும் பள்ளி நிர்​வா​கி​கள் சொல்​லும் கார​ணம்,​​ இந்​தக் கட்​ட​ணம் எங்​க​ளுக்​குக் கட்​டுப்​ப​டி​யா​காது என்​ப​து​தான்.​ இந்​தப் பள்​ளி​கள் கொடுத்த வரவு,​​ செலவு கணக்​கு​க​ளின் அடிப்​ப​டை​யில்​தான் இந்​தக் கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.​ அப்​ப​டி​யெ​னில் அந்​தப் பள்​ளி​கள் தவ​றான அல்​லது பொய்​யான தக​வல்​க​ளைப் படி​வங்​க​ளில் பூர்த்தி செய்து தந்​த​னவா?​ ​ இவர்​கள் பல்​வேறு தலைப்​பு​க​ளின் கீழ் வாங்​கும்,​​ மறை​வு​வ​ரு​வாய் குறித்து இக்​க​மிட்​டி​யின் படி​வத்​தில் பூர்த்தி செய்து தர இய​ல​வில்லை என்​று​தானே பொருள்?​ ​அரசு வெறு​மனே கல்​விக்​கட்​ட​ணம் அறி​விக்​கும்;​ நாம் வழக்​கம்​போல அதை பல வகை​யில் அதி​க​ரித்​துக் கொள்​ள​லாம் என்ற எண்​ணத்​து​டன் தனி​யார் பள்​ளி​கள் இருந்​தன.​ ஆனால்,​​ அரசு தற்​போது அறி​வித்​துள்ள நிபந்​த​னை​க​ளின்​படி,​​ எந்​தெந்த தலைப்​பு​க​ளின் கீழ் கட்​ட​ணம் வாங்​கி​னா​லும்,​​ மொத்​தக் கட்​ட​ணம்,​​ மேனி​லைப் பள்​ளிக்கு ரூ.​ 11 ஆயி​ரத்​தைத் தாண்​டக்​கூ​டாது என்​ப​து​தான் இவர்​க​ளுக்​குப் பெரும் இடை​யூ​றாக இருக்​கி​றது.​இது​நாள்​வரை எல்​கேஜி-​க்கும்​கூட கணினி கட்​ட​ணம்,​​ நூல​கக் கட்​ட​ணம் வசூ​லித்த அக்​கி​ர​மங்​க​ளுக்கு முடிவு ஏற்​பட்​டுள்​ளது.​ இந்​தப் புதிய முறை,​​ தனி​யார் பள்​ளிக்கு மிகப் பெரும் கடி​வா​ள​மாக இருக்​கி​றது.​ ஆகவே இப்​போது இதை எதிர்க்​கி​றார்​கள்.​ நீதி​மன்​றத்​தில் தடை​யாணை பெற முயல்​கி​றார்​கள்.​விடு ​திக் கட்​ட​ணம்,​​ பள்​ளிப் பேருந்​துக் கட்​ட​ணம் ஆகி​ய​வற்​றில் அரசு தலை​யி​டாது என்று அறி​வித்த போதி​லும்,​​ இத​னால் கிடைக்​கும் வரு​வாய் சில பள்​ளி​க​ளுக்கு மட்​டுமே கிடைக்​கி​றது.​ எல்​லாத் தனி​யார் பள்​ளி​க​ளி​லும் பேருந்​து​கள் இருந்​தா​லும்,​​ விடு​தி​கள் கிடை​யாது.​ எனவே அதி​கம் சம்​பா​திக்க வழி இல்​லா​த​தால் இந்த எதிர்ப்பை முன்​வைத்​துள்​ள​னர்.,​​இந்​தக் கட்​ட​ணம் கட்​டுப்​ப​டி​யா​காது என்று இப்​பள்​ளி​கள் கரு​தி​னால்,​​ தங்​கள் பள்​ளி​களை அர​சுக்கு ஒப்​ப​ளித்​து​விட்டு,​​ ஒதுங்​கிக்​கொள்ள வேண்​டும்.​ அல்​லது இவ்​வாறு பணிய மறுத்து,​​ தமிழ்ச் சமு​தா​யத்​தில் கல்​விச் சூதாட்​டத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கத் தடை​யாக இருக்​கும் இந்​தக் கல்வி நிறு​வ​னங்​களை அரசே ஏற்க முன்​வர வேண்​டும்.​ஒவ்​வொரு பள்​ளிக்​கும் தனித்​த​னி​யாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள கல்​விக் கட்​ட​ணங்​கள் ​ குறித்து ஜ்ஜ்ஜ்.​ ல்ஹப்ப்ண்ந்​ஹப்ஸ்ண்.ண்ய்​ என்ற முக​வ​ரி​யில் வெளி​யி​டப்​ப​டும் என்று அரசு குறிப்​பிட்​டுள்​ளது என்​றா​லும்​கூட,​​ ஒவ்​வொரு தனி​யார் பள்​ளி​யும் தங்​க​ளுக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள கட்​டண விவ​ரத்தை பள்​ளிக்​கூட வாச​லில் மக்​கள் பார்​வை​யில்​ப​டும்​வ​கை​யில் வைக்க வேண்​டும் என்று பள்​ளிக் கல்​வித் துறை உத்​த​ர​விட வேண்​டும்.​ அதைக் கடு​மை​யாக நடை​மு​றைப்​ப​டுத்​த​வும் வேண்​டும்.​ நீண்​ட​கா​ல​மாக இருந்த நடுத்​தர மக்​க​ளின் மனக் குமு​ற​லுக்கு துணி​வு​டன் முற்​றுப்​புள்ளி வைத்​தி​ருக்​கும் தமி​ழக அரசை எவ்​வ​ளவு பாராட்​டி​னா​லும் தகும்.​ எந்​த​வித நிர்​பந்​தங்​க​ளுக்​கும் அடி​ப​ணி​யா​மல் இந்​தக் கல்வி கட்​டண முறையை அரசு நடை​மு​றைப்​ப​டுத்த வேண்​டும் என்​ப​தும்,​​ தனி​யார் பள்​ளி​கள் நீதி​மன்​றத்​தின் தடை உத்​த​ர​வைப் பெற்​று​வி​டா​வண்​ணம் அரசு முனைந்து செயல்​பட வேண்​டும் என்​ப​தும் நமது வேண்​டு​கோள்.​தவ​றுக்​குத் துணை​போ​கா​மல் மக்​கள் மன்​றம் இந்​தப் பிரச்​னை​யில் அர​சுக்கு ஆத​ர​வா​கத் துணை நிற்​பது அவ​சி​யம்.​ 

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites