அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 26 மே, 2010

திருக்குர்ஆன் வினாடி வினா பாகம் 1

1.   கேள்வி : நூஹ் நபி எத்தனை வருடங்கள் வாழ்ந்தார்கள் ?
பதில் : 950 வருடங்கள் (அல்குர்ஆன் 29:14)
2.   கேள்வி : ஒரே காலத்தில் வாழந்த நபிமார்கள் யார்? யார்?
பதில் : மூஸா அலை) - ஹாரூன் அலை), இப்ராஹீம் அலை) - லூத் (அலை), இஸ்மாயீல் (அலை), தாவூத் அலை) - சுலைமான் (அலை), யாகூப் (அலை), யூசுஃப் (அலை)  (அல்குர்ஆன் 10:5, 11:69,70, 21:78, 2:125)
3.   கேள்வி : நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலையின் பெயர் என்ன?
பதில் : ஜுýதீ மலை (அல்குர்ஆன் 11:44)
4.   கேள்வி :வயது முதிர்ந்த காலத்தில் குழந்தை பெற்ற நபிமார்கள் யார்?
பதில் : இப்ராஹீம் (அலை), ஸக்கரிய்யா (அலை) (அல்குர்ஆன் 11:72,19 : 8,9)
5.   கேள்வி :முஃமின்களுக்கு முன் உதாரணமாக கூறப்பட்ட இருவர் யார்?
பதில் : பிர்அவ்னின் மனைவி, மர்யம்(அலை) (அல்குர்ஆன் 66 : 11,12)
6.   கேள்வி : காபிர்களுக்கு முன் உதாரணமாக கூறப்பட்ட இருவர் யார்?
பதில் : நூஹ் (அலை) அவர்களின் மனைவி, லூத் (அலை) அவர்களின் மனைவி (அல்குர்ஆன் 66:10)
7.   கேள்வி : மர்யம் (அலை) அவர்களின் சகோதரர் பெயர் என்ன ?
பதில் : ஹாரூன் (அலை) (அல்குர்ஆன் 19:28)
8.   கேள்வி : தொட்டில் குழந்தையாக இருந்த போதே பேசிய நபி யார்?
பதில் : ஈஸா (அலை) (அல்குர்ஆன் 19:29,30)
9.   கேள்வி : மூன்று நாட்கள் மக்களிடம் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்தவர் யார்?
பதில் : மர்யம் (அலை) (அல்குர்ஆன் 19:26)
10.   கேள்வி : வயது முதிர்ந்த காலத்தில் குழந்தை பிறக்கும் என்பதற்கு அடையாளமாக ஸக்கரிய்யா நபிக்கு எதை அல்லாஹ் கூறினான்?
பதில் : நல்ல நிலையில் இருந்தும் மூன்று இரவுகள் மக்களிடம் அவர்களால் பேசமுடியாது (அல்குர்ஆன் 19:10)

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites