அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 18 அக்டோபர், 2012

கூகுளின் சதி அம்பலம் , அமெரிக்க ஃபெடரல் ட்ரெட் ஆணைய அறிக்கை!

கடந்த ஆண்டு பல்வேறு நிறுவனங்கள் அமெரிக்க ஃபெடரல் ட்ரெட் ஆணையத்திடம் (FTC) கூகுள் மீது மோசடி புகார் அளித்தனர். புகார் என்ன வெனில் ,
கூகுள் தனக்கு போட்டியாக உள்ள நிறுவனங்களை search result ல் வேண்டுமென்றே பின்னுக்கு தள்ளி தனது தயாரிப்புகளை முதன்மைப்படுத்தி கான்பிக்கின்றது. இதனால் பெரும் வியாபார இழப்பு ஏற்படுகின்றது. கூகுள் தன்னிடம் உள்ள ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தி google ன் தயாரிப்புகளை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்தும் விதத்தில் search result ஐ உருவாக்குகின்றது.
மேற்கண்ட புகாரை பல்வேறு நிறுவனங்கள்  அளித்ததை தொடர்ந்து ஃபெடரல் ட்ரெட் ஆனையம் கடந்த 19 மாதங்களாக இது குறித்து ஆய்வு செய்தது.
தற்போது தனது ஆய்வறிக்கையின் 100 பக்க நகலை தயாரித்துள்ளது. அந்த நகல் ஆணையத்தில் உள்ள 5 அதிகாரிகளிடம் பரிமாரிக் கொள்ளப்பட்டுள்ளது.
5 அதிகாரிகளில் 4 நபர்கள் கூகுளின மீது கூறப்பட்டுள்ள மோசடி புகாரை உறுதி செய்துள்ளனர். மேலும் கூகுளின் மீது சட்டப்படி வழக்கு தொடர ஆனையம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆணையத்தின் தலைவர் Jon Leibowitz கடந்த மாதம் தெரித்தள்ளார்.
FTC சேர்மன்
மேலும் இதற்காக சிறப்பு வழக்கறிஞரை கடந்த ஏப்ரல் மாதம் ஆணையம் நியமித்துள்ளது குறிப்பிடதக்கது.
பொது மக்கள் ஒரு பொருளை தேடும் போது , தனது google shopping மற்றும் google place,goodl adword ல் உள்ள product களையே முதன்மை படுத்தி கான்பிக்கின்றது கூகுள்.
இதன் மூலம் அனைத்து நிறுவனங்களையும் தன்னிடம் விளம்பரம் செய்ய நிர்பந்திப்பதோடு மட்டுமல்லாமல் தனது போட்டியாளர்களை தனது ஆதிக்கத்தின் மூலம் வரள விடாமல் பின்னுக்கு தள்ளுகின்றது என கூகுளின் மீது ஆய்வறிக்கையில் குற்றச் சாட்டு கூறப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து , கூகுள் , ”ஆணையத்தின் எந்த கேள்விக்கும் நாங்கள் பதில் அளிக்க தயாராக” இருப்பதாக கடந்த வெள்ளி அன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் Texas, Ohio, New York, California, Oklahoma, Mississippi ஆகிய மாநிலங்கள் இதே புகாரின் பேரில் google ன் நடவடிக்கைகளை ஆய்வு செய்து கொண்டிருப்பது குறிப்பிடதக்கது.
இதே குற்றச்சாட்டு ஈரோப்பிலும் எழுந்து விசாரனை நடந்து வருவதும் குறிப்பிடதக்கது.
புகார் அளித்த நிறுவனங்களில் ஒன்றான மிகப்பெரும் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் NextTag கூறுகையில்,
கூகுள் ஷாப்பிங் சேவையை துவங்கியதிலிருந்து எங்கள் இணையதளத்தின் பார்வையார்கள் பாதியாக குறைந்து விட்டனர். ஆய்வு செய்து பார்த்ததில் google ல் இருந்து வரும் நேயர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து இருந்தது. இதனை சரி செய்யும விதமாக google இடம் விளம்பரம் (Google AdWord) செய்யும் தொகையை இரு மடங்காக்கினோம் பிறகு 60 சதவிகித பார்வையாளர்கள் google மூலம் வர ஆரம்பித்தனர். தனக்கு போட்டியானவர்களை search result ல் கூகுள் வென்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றது இதன் மூலம் தெரிகின்றது.
எனத் தெரிவித்துள்ளது.
Apple iphone மற்றம் ipad ல் உள்ள சஃபாரி browser ஐ பயன்படுத்துவர்களின் privacy தகவல்களை cookies கள் மூலம் திருடி Apple சஃபாரி browser ன் privacy விதிமுறைகளை google மீறியதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றத்திற்காக இதே அமெரிக்க ஃபெடரல் ட்ரெட் ஆனையயம் தான் கூகுளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 2.5 கோடி அமெரிக்க டாலர் அபராம் விதித்தது.
இன்டர்நெட் உலகில் மிக உயரிய தொழில் நுட்பத்துடன் எத்தனை நிறுவனங்கள் வந்தாலும் அவைகள் இன்டர்நெட்ல் முதன்மை இடத்திற்கு வராமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.
மக்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ள கூகுள் தன்னை தவிர மற்ற யாரும் இன்டர்நெட் உலகில் முதன்மை இடத்திற்கு வந்து விடக்கூடாது என்பற்காக தனது மிகப்பெரும் அதிக்கமான Search Engine ஐ கருவியாக பயன்படுத்துகின்றது.
தற்போது இதற்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிழப்பியுள்ளதை தொடர்ந்து விரைவில் இந்த நிலை மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. அல்ஹம்துலில்லாஹ்!
தாங்கள் பயன்படுத்தும் Google சேவைக்கு மாற்று சேவையை பயன்படுத்த விரும்புவர்கள் http://www.bing.com/ க்கு சென்று alternative to என தட்டச்சு செய்து இறுதியில் தாங்கள் பயன்படுத்த விரும்பும் சேவையை குறிப்பிட்டு தட்டிப்பாருஙகள். ஏராமாள புதுப் புதுப் மாற்று சேவை நிறுவனங்களின் பட்டியல் கிடைக்கும்.
உதாரணமாக gmail க்கு மாற்று சேவை தேவை எனில் alternative to gmail என தட்டச்சு செய்து தட்டி பாருங்கள்..
ஒவ்வொன்றிற்கும் எந்த ஒன்றையும் வரையறுக்காமல் அவரவர் தனக்கு விருப்பமான மாற்று சேவையை தேர்வு செய்து கொள்வது நல்லது. கூகுள் இன்றைக்கு சர்வாதிகாரித் தனமாக நடந்து கொள்வதற்கு காரணம் அனைவரும் அந்த ஒன்றில் போய் விழுவது தான், தன்னை விட்டால் ஆள் இல்லை என ஆடுகின்றான்.  எனவே அவரவர் தனக்கு விரும்பமானதை பயன்படுத்திக் கொண்டால் google போன்று இன்னோரு சர்வாதிகாரி உருவாகாமல் பார்த்துக் கொள்ளலாம்

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites