1. கேள்வி : அல்லாஹ்வே பெயரிட்ட நபிமார்களின் பெயர் என்ன?
பதில் : யஹ்யா (அலை), ஈஸா (அலை) (அல்குர்ஆன் 19:7, 3:45)
2. கேள்வி :மனிதன் இறந்தால் அவனை அடக்கம் செய்ய வேண்டுமென மனிதனுக்கு கற்றுக் கொடுத்தது எது?
பதில் : காகம் (அல்குர்ஆன் 5:31)
3. கேள்வி : உருக்கிய செம்பைப் போலும் கொதிக்க வைக்கப்பட்ட நீர் கொதிப்பதைப் போலும் வயிறுகளில் அது கொதிக்குமே அந்த மரத்தின் பெயர் என்ன?
பதில் : ஸக்கூம் (அல்குர்ஆன் 44 : 43-46)
4. கேள்வி : நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் குழந்தைகளின் பெயர் என்ன?
பதில் : இஸ்மாயீல் (அலை), இஸ்ஹாக் (அலை) (அல்குர்ஆன் 14 : 39)
5. கேள்வி : காளைக் கன்றை கடவுளாக சித்தரித்தவன் யார்?
பதில் : சாமிரீ (அல்குர்ஆன் 20 : 87,88)
6. கேள்வி : கடவுளாக சித்தரிக்கப்பட்ட காளைக் கன்றை நபி மூஸா (அலை) அவர்கள் என்ன செய்தார்கள் ?
பதில் : அதை நெருப்பில் எரித்து அதன் சாம்பலை கடலில் தூவினார்கள். (அல்குர்ஆன் 20 : 97)
7. கேள்வி : நபி மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாரிடம் எந்த அற்புதத்தை காட்டி அல்லாஹ் உடன்படிக்கை எடுத்தான் ?
பதில் : தூர் மலை தலைக்கு மேல் உயர்த்தி (அல்குர்ஆன் 2: 93, 7:171)
8. கேள்வி : ஜாலூத் என்பவன் யார்?
பதில் : நபி தாவூத் (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த கொடுங்கோல் மன்னன் (அல்குர்ஆன் 2 : 251)
9. கேள்வி : தாவூத் நபி எந்த மன்னரின் கீழ் வீரராக திகழ்ந்தார்கள்?
பதில் : தாலூத் (அல்குர்ஆன் 2 : 247 -251)
10. கேள்வி : ஐயாயிரம் வானவர்களைக் கொண்டு உதவி செய்வேன் என்று எந்த போர்க்களத்தில் அல்லாஹ் கூறினான்?
பதில் : பத்ர் (அல்குர்ஆன் 3 : 123-125)
1978 ஜனவரி 1 : அரபிக் கடலில் ஏர் இந்தியா விமானம் விழுந்தது. 231 போர் பலி.
1982 ஜீன் மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்திய விமானம் நொறுங்கியது. 111 பயணிகளில் 17 பேர் பலி
1988 அக்டோபர் 19 : அகமதாபாத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 124 பேர் பலி. 5 பேர் தப்பினர்.
1990 பிப்ரவரி 14 : பெங்களூரில் ஏர் இந்தியா விமானம் நொறுங்கியதில் 92 பயணிகளில் பலி. 54 பேர் தப்பினர்.
1991 ஆகஸ்ட் 16 : இம்பாலில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 69 பேர் பலி.
1993 ஏப்ரல் 26 : அவுரங்காபாத் விமான நிலையத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில்55 பயணிகள் பலி. 63 பேர் தப்பினர்.
1996 நவம்பர் 12 : அரியானாவில் நடுவானில் சவூதி அரேபிய ஏர்லைன்ஸ், கஜஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்கள் ஒன்றோடு மோதியதில் 349 பேர் பலி.
2000 பிப்ரவரி 17 : பாட்னா விமான நிலையத்தில் அலையன்ஸ் ஏர் விமானம் விபத்துக்குள்ளானதில் 60 பயணிகளும் பலி.
நன்றி : தினகரன் தமிழ் நாளிதழ்
1. கேள்வி : நூஹ் நபி எத்தனை வருடங்கள் வாழ்ந்தார்கள் ?
பதில் : 950 வருடங்கள் (அல்குர்ஆன் 29:14)
2. கேள்வி : ஒரே காலத்தில் வாழந்த நபிமார்கள் யார்? யார்?
பதில் : மூஸா அலை) - ஹாரூன் அலை), இப்ராஹீம் அலை) - லூத் (அலை), இஸ்மாயீல் (அலை), தாவூத் அலை) - சுலைமான் (அலை), யாகூப் (அலை), யூசுஃப் (அலை) (அல்குர்ஆன் 10:5, 11:69,70, 21:78, 2:125)
3. கேள்வி : நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலையின் பெயர் என்ன?
பதில் : ஜுýதீ மலை (அல்குர்ஆன் 11:44)
4. கேள்வி :வயது முதிர்ந்த காலத்தில் குழந்தை பெற்ற நபிமார்கள் யார்?
பதில் : இப்ராஹீம் (அலை), ஸக்கரிய்யா (அலை) (அல்குர்ஆன் 11:72,19 : 8,9)
5. கேள்வி :முஃமின்களுக்கு முன் உதாரணமாக கூறப்பட்ட இருவர் யார்?
பதில் : பிர்அவ்னின் மனைவி, மர்யம்(அலை) (அல்குர்ஆன் 66 : 11,12)
6. கேள்வி : காபிர்களுக்கு முன் உதாரணமாக கூறப்பட்ட இருவர் யார்?
பதில் : நூஹ் (அலை) அவர்களின் மனைவி, லூத் (அலை) அவர்களின் மனைவி (அல்குர்ஆன் 66:10)
7. கேள்வி : மர்யம் (அலை) அவர்களின் சகோதரர் பெயர் என்ன ?
பதில் : ஹாரூன் (அலை) (அல்குர்ஆன் 19:28)
8. கேள்வி : தொட்டில் குழந்தையாக இருந்த போதே பேசிய நபி யார்?
பதில் : ஈஸா (அலை) (அல்குர்ஆன் 19:29,30)
9. கேள்வி : மூன்று நாட்கள் மக்களிடம் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்தவர் யார்?
பதில் : மர்யம் (அலை) (அல்குர்ஆன் 19:26)
10. கேள்வி : வயது முதிர்ந்த காலத்தில் குழந்தை பிறக்கும் என்பதற்கு அடையாளமாக ஸக்கரிய்யா நபிக்கு எதை அல்லாஹ் கூறினான்?
பதில் : நல்ல நிலையில் இருந்தும் மூன்று இரவுகள் மக்களிடம் அவர்களால் பேசமுடியாது (அல்குர்ஆன் 19:10)
உருவம் இருக்கும் இடங்களில் தொழக்கூடாது என்பதற்கு பின்வரும் செய்தி நமக்கு சுட்டிக்காட்டுகிறது. ஆயிஷா (ர) அவர்கள் அறிவிப்பதாவது எங்களிடம் உருவம் பொறிக்கப்பட்ட ஆடைஇருந்தது. அதை நான் நபி ஸல் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதுஅவர்களுக்கு முன் வைத்தேன். நபி ஸல் அவர்கள் அதை தடை செய்தார்கள். நூல்:தாரமி2547 இது அல்லாமல் நாம் தொழுது கொண்டிருக்கும் போது நம்முடைய கவனத்தை திசை திருப்புகின்ற பொருளையோ. ஆடையையோவைக்ககூடாது. ஆயிஷா(ரலி)அவர்கள்கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி அடை ஒன்றைஅணிந்துகொண்டு தொழுதார்கள். (தொழுதுகொண்டிருக்கும்போது) அதன்வேலைப்பாடுகளைஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள். தொழுது முடித்ததும், ”எனது இந்த கறுப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த.) அபூஜஹ்மிடம்கொடுத்துவிட்டு, அபூஜஹ்மிடம் இருக்கும் (வேலைப்பாடுகளற்ற) ‘அன்பிஜான்’ (நகர எளிய) ஆடையை என்னிடம் (வாங்கிக்) கொண்டு வாருங்கள். இந்த ஆடை சற்றுமுன்னர் எனது தொழுகையிரிருந்து என் கவனத்தை ஈர்த்து விட்டது”என்றுசொன்னார்கள். ஆயிஷா (ர) அவர்களிடமிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில், ”நான் தொழுதுகொண்டிருக்கும் போதே அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டுஇருந்தேன். அது என்னைக்குழப்பிவிடுமோ என நான் அஞ்சினேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. நூல்:புகாரி373. எனவே உருவப்படங்கள் உள்ள இடங்களிலோ அல்லது நம்மை திருப்புகின்ற படங்கள் மற்றும் ஆடைகள் இவைகள் இருக்கும் இடத்தில்தொழக்கூடாது.
இஸ்லாம் என்ற வாழ்க்கைத் திட்டத்தின் மூலம் ஜாஹிலிய்யா சமூகத்தை நபி (ஸல்) அவர்கள் ஒரே சமுதாயமாக மாற்றியமைத்தார்கள். அதற்கு முன்னர் அவர்கள்குலத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் சிதரிக்கிடந்தனர். இவர்கள் போன்றுசண்டையிட்டுப் பிரிந்த சமுதாயம் உலகில் யாரும் இருக்கவில்லை. நரகின்விளிம்பில் இருந்தார்கள். இஸ்லாத்தின் ஒளிக்கீற்று அவர்களின் வாழ்வில் பட்டபின்னர் உலக வரலாற்றில் அந்த சமுதாயத்தில் காணப்பட்ட ஒற்றுமை போன்று ஒருபோதும் காணப்பட்டதில்லை.
நபி (ஸல்) அவர்களின் பின்னர் இந்த ஒற்றுமையைக் குலைப்பதை இலட்சியமாகக்கொண்டவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு முதலில் பலியானவர்கள்ஷீஆக்களும் காரிஜியாக்களுமாவர். இந்த இரு பிரிவினரும் இஸ்லாத்திற்கு கேடுவிளைவித்த அளவுக்கு வேறு எந்தப் பிரிவினரும் கேடு விளைவித்ததில்லை.
இப்பிரிவுகள் தோன்றுவதற்கு தனியொரு நபர் மீது கொண்ட விருப்பு வெறுப்புஎன்பனவே காரணங்களாக அமைந்தன. அலி (ரழி) அவர்களின் மீது வெறுப்பு எல்லைமீறிப் போனதால் காரிஜிய்யா என்ற பிரிவு தோன்றியது. அரசியல் காரணங்களுக்காகஅலி (ரழி) அவர்களை எதிர்க்க ஆரம்பித்த இந்தக் கும்பல் அல்லாஹ்வின் தூதர்பெயரால் பொய்களைப் பரப்பி அல்குர்ஆனுக்கு தவறான விளக்கம் கூறி கிளர்ச்சிசெய்தனர்.
இதேபோல் இவர்களுக்கு எதிராக அலி (ரழி) அவர்களை ஆதரிக்க முன்வந்த கூட்டமே‘ஷீஆ’ شيعةஎனப்படுகின்றனர். இவர்கள் தான் இஸ்லாமியவரலாற்றில் முதன் முதலாக ‘ஷீஅத்து அலி’ என்று அழைக்கப்பட்டனர்.‘ஷீஆ’ شيعةஎன்ற சொல் கட்சி குழு என்ற கருத்தைத் தருகிறது.
அலி (ரழி) அவர்களின் அரசியல் தலைமைக்கு ஆதரவாக வளர்ந்த இப்பிரிவினர்நாளடைவில் அவர்களை அவதார புருஷராகவும் தெய்வீக அம்சம் பொருந்தியவராகவும்நபி (ஸல்) அவர்களை விட உயர்வானவராகவும் கருதலானார்கள். இந்த வெறிமுற்றிப்போன போது அபூபக்கர் (ரழி) உமர் (ரழி) உஸ்மான் (ரழி) போன்ற உன்னதஸஹாபாக்களை இழிவுபடுத்த ஆரம்பித்தனர்.
இன்று இவர்கள் பல பிரிவுகளாக பல கொள்கைகளுடன் உலகின் பலபாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். ஈரானில் அவர்களின் ஆட்சியே உள்ளது.ஷீஆக்கள் இந்நாட்டில் நுழைவதற்கு சிலர் இன்று வழி அமைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இஸ்லாத்தை விட்டு முற்றிலுமாக வெளியேறிவிட்ட ‘ஷீஆக்கள்’ தான் உண்மை முஸ்லிம்கள் என்ற பிரசாரம் கூட சில இயக்கவாதிகளால்முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஏகத்துவக் கொள்கையைத் தூக்கி எறிந்துவிட்டு அரசியலுக்கும் அனைத்துதுறைக்கும் வழிகாட்டும் இயக்கங்கள் என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டு ‘ஷீஆப்’ புரட்சியாகிய ஈரானியப் புரட்சிக்கு இஸ்லாமிய சாயம்பூசிக்கொண்டிருக்கின்றன இந்த இயக்கங்கள். எனவே ஷீஆக்கள் என்றால் யார்? அவர்களின் கொள்கைகள் என்ன? என்பனவற்றை சுருக்கமாக இங்கு நோக்குவோம்.
அஷ்ஷீஆ : الشيعة
இப்பெயருக்குள் அனைத்து உட்பிரிவுகளும் அடங்கிவிடும். இதுவே மிகப்பிரபல்யமான பெயர்.
பிரதான பிரிவுகள்:
ஷீஆ இயக்கத்திற்குள் கிட்டத்தட்ட 70 திற்கும் மேற்பட்ட உட்பிரிவுகள்உண்டு என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அவற்றில் பிரதான நான்குபிரிவுகள் உள்ளன.
இவர்கள் அப்துல்லாஹ் பின் சபா எனும் யூதனைப் பின்பற்றுவோர். இவர்கள் அலி (ரழி) மரணிக்கவில்லை என்றும் அவர்கள் மேகத்தில் இருப்பதாகவும் இடி அவரின்ஓசை மின்னல் அவரின் பார்வை என்றும் இறுதிகாலத்தில் மீண்டும் வந்துநீதத்தால் பூமியை நிரப்புவார் என்றும் நம்புகின்றனர். இது ‘அர்ரஜ்இய்யா’ வாகும்.
(அல் மிலல் வன்னிஹல் பாகம் 1 பக்கம் 146)
உட்பிரிவுகள்
அல்குராபிய்யா (காகம்): الغرابية
அலி (ரழி) முஹம்மத் (ஸல்) ஆகிய இருவரும் உருவ அமைப்பில் ஒன்று என்றும்இஜிப்ரீல் (அலை) வஹியை மாற்றிவிட்டார் என்று ஜிப்ரீல் (அலை) அவர்களைதிட்டும் – சபிக்கும் கூட்டம்
(அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 250)
அன்னமிரிய்யா:
முஹம்மத் அலி பாதிமா ஹஸன் ஹுஸைன் ஆகிய ஐவரில் அல்லாஹ்குடிகொண்டிருப்பதாக நம்புகின்றனர். இக்குழுவின் தலைவன் தன்மீதும் அல்லாஹ்இறங்கியுள்ளதாகவும் கூறினான்.
(அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 252)
அஸ்ஸபயிய்யா என்ற பெயரில் அழைக்கப்படும் இக்குழு யூதன் அப்துல்லாஹ்இப்னு ஸபாவின் பித்தர்களே. இவன் தன்னை முஸ்லிமாகக் காட்டிக்கொள்ளநடித்தான்.
இவன் மூலமாகவே ஷீஆக் கொள்கை உருவானது என்பதை
1. தாரீகுத் தபரி
2. அல்பிதாயா வன்னிஹாயா
3. மீஸானுல் இஃதிதால்
4. லிஸானுல் மீஸான்
5. தாரீகு இப்னு கல்தூன் போன்ற நூல்களில் விரிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றமான ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ‘ஷீஆ’ இயக்கம்உருவாவதற்கு பாரசீகப் பகுதியில் காணப்பட்ட சிந்தனைகளே காரணம் என பலஐரோப்பிய வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பாரசீக மக்கள் மன்னர்ஆட்சி முறைக்கு பழக்கப்பட்டவர்கள். அதனால் அவர்களுக்கு வாரிசுரிமைரீதியிலான தலைமைத்துவமே பரிச்சியமாக இருந்தது. தகுதியான ஒரு தலைமையைத்தேர்வு செய்யும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே வாரிசுரிமைஅடிப்படையிலேயே இஸ்லாமிய அரசியலும் அவர்கள் நோக்கினர். ஆகவே தான் ‘ஷீஆ’ இயக்கம் பாரசீக சிந்தனைத் தாக்கத்தினால் வளர்ச்சியுற்றது என Pழணல போன்றஐரோப்பிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.