அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

ஞாயிறு, 30 மே, 2010

அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும்


 
இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன.  இவ்விரண்டைத் தவிர வேறு எதனையும் முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நாம் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறோம். 
ஆயினும் சமீபகாலமாக சிலர் விசித்திரமான வினோதமான கேள்விகளை எழுப்பி இரண்டு மூல ஆதாரங்கள் கிடையாது.  திருக்குர்ஆன் என்ற ஒரே ஒரு மூல ஆதாரமே போதுமானதாகும்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் தேவையில்லை என்று கூற ஆரம்பித்துள்ளனர்.
ஹதீஸ்களில் முரண்பாடுகள் உள்ளன
குர்ஆனுடன் ஹதீஸ்கள் முரண்படுகின்றன.
ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுவோர் பல கூறுகளாகப் பிரிந்து விட்டனர்.
குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை.
என்றெல்லாம் காரணங்கள் கூறி ஹதீஸ்களை நிராகரிக்கச் சொல்கின்றனர்.
ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறும் இந்தக் காரணங்களை குர்ஆன் விஷயத்திலும் கூற இயலும்.  இக்கட்டுரைத் தொடரின் இடையே நாம் விரிவாக அதை விளக்கவுள்ளோம். 
குர்ஆன் மட்டுமே இறைவனுடைய புறத்திலிருந்து வழங்கப் பட்ட வஹி - இறைச் செய்தி.  ஹதீஸ்கள் என்பது வஹி அல்ல.  உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டதை மட்டுமே பின் பற்றுங்கள் என்று குர்ஆன் கூறுகிறது.  எனவே இறைவனிடமிருந்து அருளப் பட்ட குர்ஆனை மட்டுமே மூல ஆதாரமாகக் கொள்ள வேண்டும்.  இது தான் இந்தக் கருத்துடையவர்களின் வாதத்தில் உள்ள சாராம்சம்.
இறைவனிடமிருந்து வஹியாக அருளப்பட்டதைத் தான் பின் பற்ற வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.  நிச்சயமாக இறைவன் புறத்திலிருந்து வஹியாக அருளப்பட்டதை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்றே நாமும் கூறி வருகிறோம். 
ஆனால் இறைவனிடமிருந்து வஹியாக அருளப்பட்டது குர்ஆன் மட்டும் தான்.  குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இறைவனிடமிருந்து வஹியாக அருளப் படவில்லை என்று திருக்குர்ஆனின் எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை.  குர்ஆன் இறைவன் புறத்திலிருந்து வந்தது என்று குர்ஆன் கூறுகிறதே தவிர, குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இறைச் செய்தி இல்லை என்று திருக்குர்ஆனில் கிடையாது. 
திருக்குர்ஆனை பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு குர்ஆன் ஆதாரமில்லாத வாதத்தையே இவர்கள் எழுப்புகின்றனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். 
இன்னும் தெளிவாக சொல்வதானால் குர்ஆன் எப்படி இறைவன் புறத்திலிருந்து அருளப் பட்டுள்ளதோ - குர்ஆன் எப்படி வஹியாக அருளப்பட்டுள்ளதோ அது போல் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹியும் உள்ளது என்று திருக்குர்ஆன் ஒரு இடத்தில் அல்ல - ஏராளமான இடங்களில் தெளிவாக பிரகடனம் செய்கிறது.
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى(2)وَمَا يَنْطِقُ عَنْ الْهَوَى(3)إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى(4) سورة النجم
உங்கள் தோழர் (முஹம்மது) வழி தவறவில்லை.  தவறாகப் பேசவும் இல்லை.  மேலும் அவர் (தனது) மனோ இச்சைப் படி பேசுவதில்லை.  அது வஹியாக அறிவிக்கப் படும் இறைச் செய்தி தவிர வேறு இல்லை.                        அல்குர்ஆன் (53 : 2, 3, 4)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது மனோ இச்சைப் படி பேசுவதில்லை.  அவர் பேசுவதெல்லாம் வஹி என்னும் இறைச் செய்தி தவிர வேறில்லை என்று இவ்வசனம் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது. 
குர்ஆன் மட்டும் போதும் என்று கூறக்கூடியவர்கள் இவ்வசனம் குர்ஆனையே குறிக்கிறது.  குர்ஆன் வஹி என்பது தான் இதற்கு விளக்கம் என்று கூறுகின்றனர்.  குர்ஆன் வஹியாக உள்ளது என்பதைக் கூறும் வகையில் இவ்வாசக அமைப்பு அமையவில்லை.  "இவர் மனோ இச்சைப் படி பேச மாட்டார்'' என்பது பொதுவாக அவர் பேசும் எல்லாப் பேச்சையும் தான் எடுத்துக் கொள்ளும்.  மனோ இச்சைப் படி பேசமாட்டார் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் பேசுவதெல்லாம் வஹி தவிர வேறில்லை என்றும் அல்லாஹ் கூறுகின்றான். 
குர்ஆன் மட்டும் போதும் என்று கூறுவோர் குர்ஆன் கூறுவதைத் தான் ஆதாரமாகக் காட்ட வேண்டுமே தவிர குர்ஆன் கூறாத ஒன்றை இதற்கு விளக்கம் என்று இவர்களாகக் கற்பனை செய்து வாதிப்பது இவர்கள் குர்ஆனைப் பின்பற்றும் போர்வையில் தங்கள் மனோ இச்சையைத் தான் பின்பற்றுகிறார்கள் என்பது தெளிவாகிறது. 
உள்ளத்தில் எந்த அபிப்பிராயத்தையும் வைத்துக் கொள்ளாமல் - முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ளாமல் - விளக்கம் என்ற பெயரில் நாமாக எதையும் சேர்க்காமல் இந்த வசனத்தைப் படித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிய அனைத்தும் அவர்களது மனோ இச்சையின் உந்துதலால் பேசப் பட்டவையல்ல.  மாறாக அது இறைவனால் அறிவிக்கப் பட்ட வஹி எனும் இறைச் செய்திதான் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. 
குர்ஆன் எப்படி வஹியாக அமைந்துள்ளதோ அது போலவே நபிகள் நாயகத்தின் பேச்சுக்களும் வஹியாக உள்ளன என்று திருக்குர்ஆனே கூறிய பிறகு யாரேனும் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் தேவையில்லை என வாதித்தால் - அந்தப் பேச்சுக்கள் வஹி இல்லை என வாதித்தால் அவர் மேலே நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனத்தை நிராகரித்தவர் ஆகி விடுகிறார்.
நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்று கூறுகின்ற அந்தக் கும்பல் மேற்கண்ட வசனத்திற்கு இவர்களாக சுய விளக்கம் அளிப்பது தான் விந்தையானது வேடிக்கையானது.  நபிகள் நாயகத்தின் விளக்கமே தேவையில்லை என்றால் இவர்களும் விளக்கம் என்ற பெயரில் எதையும் திணிக்காமல் உள்ளதை உள்ளபடி கூற வேண்டும்.  அப்படி கூறினால் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் முழுவதும் வஹிதான் இறைச் செய்திதான் என்பது சந்தேகமற நிரூபணமாகி விடும்.  குர்ஆன் தவிர வேறு வஹி இல்லை என்பது குர்ஆனுக்கே முரணான வாதம் என்பதும் நிரூபணமாகி விடும். 
குர்ஆன் அல்லாத வஹி உண்டு என்று அந்த ஒரு வசனம் மட்டும் தான் கூறுகிறதா? இல்லை.  ஏராளமான வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன. 
இறைவன் தனது அடியார்களுக்குக் கூற விரும்பும் செய்திகளை ஜிப்ரீல் எனும் வானவரை அனுப்பி அவர் வழியாக மட்டுமே கூறுவான் என்று சிலர் நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.
ஜிப்ரீல் மூலம் செய்திகளைக் கூறி அனுப்புவது போலவே வேறு இரண்டு வழிகளிலும் அல்லாஹ் தனது வழிகாட்டலை மக்களுக்குத் தெரிவிப்பான் என்று திருக்குர்ஆனே கூறுகிறது.
وَمَا كَانَ لِبَشَرٍ أَنْ يُكَلِّمَهُ اللَّهُ إِلَّا وَحْيًا أَوْ مِنْ وَرَاءِ حِجَابٍ أَوْ يُرْسِلَ رَسُولًا فَيُوحِيَ بِإِذْنِهِ مَا يَشَاءُ إِنَّهُ عَلِيٌّ حَكِيمٌ(51) سورة الشورى
வஹீயாகவோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பியோ தவிர வேறு வழிகளில் எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. தனது அனுமதியுடன் தான் நாடியதை அவன் அறிவிக்கின்றான். நிச்சயமாக அவன் உயர்ந்தவன். நுண்ணறிவாளன். (அல்குர்ஆன் 42 : 51)
மனிதரிடம் இறைவன் பேசுவதற்கு மூன்று வழிகளைக் கடைப்பிடிக்கிறான் என்பது இவ்வசனத்திலிருந்து தெரிகின்றது. ஒரு தூதரை அனுப்பி மனிதரிடம் பேசுவான் என்பதை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஜிப்ரீல் போன்ற வானவர்கள் வழியாக வேதங்களை வழங்குவதையும், வானவர்கள் மூலம் வேறு பல செய்திகளை சொல்லி அனுப்புவதையும் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
திரைக்கு அப்பால் இருந்து மனிதனிடம் இறைவன் பேசுவான் என்பதையும் ஓரளவுக்கு அறிந்து கொள்ள இயலும்.
மூஸா நபி அவர்கள் தமது குடும்பத்தாருடன் புறப்பட்ட போது தீப்பிளம்பைக் கண்டு அந்த இடத்திற்குச் சென்றார்கள். இதைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
إِذْ رَأَى نَارًا فَقَالَ لِأَهْلِهِ امْكُثُوا إِنِّي آنَسْتُ نَارًا لَعَلِّي آتِيكُمْ مِنْهَا بِقَبَسٍ أَوْ أَجِدُ عَلَى النَّارِ هُدًى(10)فَلَمَّا أَتَاهَا نُودِي يَامُوسَى(11)إِنِّي أَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَ إِنَّكَ بِالْوَادِي الْمُقَدَّسِ طُوًى(12)وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى(13)إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمْ الصَّلَاةَ لِذِكْرِي(14) سورة طه
அங்கே அவர் வந்த போது மூஸாவே என்று அழைக்கப்பட்டார். "நிச்சயமாக நானே உமது இறைவன். எனவே உமது செருப்புகளைக் கழற்றுவீராக. நிச்சயமாக நீர் பரிசுத்தமான இடத்தில் இருக்கிறீர்கள். மேலும் நான் உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே, (வஹீயாக) அறிவிக்கப் படுவதை செவிமடுப்பீராக. நிச்சயமாக நானே அல்லாஹ்! என்னைத் தவிர வணக்கத்துக்கு உரியவன் யாருமில்லை. எனவே என்னை வணங்குவீராக! என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக.(அல்குர்ஆன் 20 : 11 - 14).
இந்த அத்தியாயத்தின் 11வது வசனம் முதல் 48வது வசனம் வரை மூஸா நபி அவர்களுடன் அல்லாஹ் நடத்திய உரையாடல் இடம் பெற்றுள்ளது. பல கட்டளைகள் அப்போது பிறப்பிக்கப் பட்டன. அந்தக் கட்டளைகள் யாவும் வானவர் துணையில்லாமல் நேரடியாகவே பிறப்பிக்கப் பட்டன. ஆனாலும் மூஸா நபி அவர்கள் அல்லாஹ்வைக் காணாமல் காதால் மட்டுமே கட்டளையைக் கேட்டார்கள். எனவே தான் "திரைக்கு அப்பால் இருந்து'' என்று இறைவன் கூறுகிறான்.
இவ்விரு வகைகளும் வஹீ எனும் இறைச் செய்தியாக இருந்தாலும் இன்னொரு வழியிலும் அல்லாஹ் பேசுவதைக் குறிப்பிட தனிப்பெயர் எதையும் கூறாமல் வஹீயாக - வஹீ மூலம் - என்று அல்லாஹ் கூறுகிறான். மற்ற இரண்டும் வஹீயாக இருந்தாலும் மூன்றாவது வழியை மட்டுமே இவ்வசனத்தில் வஹீ என்கிறான்.
இவ்விரு வகைகள் தவிர வேறு வழியில் இறைவன் மனிதர்களிடம் பேசுவான் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? மனித உள்ளங்களில் மனிதர்கள் என்ற முறையில் தோன்றாத செய்திகளை இறைவன் தோன்றச் செய்வான். அவ்வாறு தோன்றச் செய்வதும் வஹீதான். இறைச் செய்திதான் என்பதைத் தவிர வேறு அர்த்தம் இதற்கு இருக்க முடியாது.
திருக்குர்ஆனில் கூறப்பட்ட பல கட்டளைகளை  இப்படித்தான் செயல் படுத்த வேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். அவ்வாறு காட்டி செயல் வடிவம் கொடுத்தது அவர்கள் இதயத்தில் அல்லாஹ் உதிக்கச் செய்ததன் அடிப்படையில் தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
திருக்குர்ஆனே ஒப்புக் கொள்ளக் கூடிய - வலியுறுத்தக் கூடிய மூன்று வகையான வஹீகளில் ஒன்றை யாரேனும் மறுத்தால் அவர்கள் திருக்குர்ஆனைத்தான் மறுக்கிறார்கள். திருக்குர்ஆன் தான் மூன்றாவது வஹீ இருப்பதாக சந்தேகத்துக்கு இடம் இல்லாத வகையில் கூறுகிறது.
இந்த இடத்தில் சிலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். இந்த வசனம் நபி (ஸல்) அவர்களுக்கு மூன்று வகையான வஹீ அருளப் பட்டதாகக் கூறவில்லை. அல்லது நபிமார்களுடன் மூன்று வகைகளில் இறைவன் பேசுவதாகவும் கூறவில்லை. பொதுவாக மனிதர்களிடம் பேசுவதாகத்தான் கூறப்பட்டுள்ளது.
மரியம் (அலை), மூஸா நபியின் தாயார் போன்றவர்களிடம் இறைவன் பேசியுள்ளான். எனவே நபிமார்கள் அல்லாதவர்களுடன் இறைவன் பேசுவதைத் தான் மூன்றாவது வஹீ குறிப்பிடுகின்றது என்று கருதலாம் அல்லவா? என்பதே அந்தச் சந்தேகம்.
மனிதர்களுடன் பேசுவதாக இந்த வசனம் கூறினாலும் மற்ற இரண்டு அம்சங்கள் எப்படி மனிதர்களில் உள்ள இறைத்தூதர்களிடம் பேசுவதைக் குறிப்பிடுகின்றதோ அப்படித் தான் மூன்றாவதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது வஹீ என்பதை முதல் இரண்டு வஹீயிலிருந்து வேறுபடுத்திக் காட்ட எந்த ஆதாரமும் இல்லை.
மேலும் இந்த வாதம் அர்த்தமற்றது தவறானது என்பதை இதற்கு அடுத்த வசனம் மிகத் தெளிவாகப் பிரகடனம் செய்து விடுகின்றது.
وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَنْ نَشَاءُ مِنْ عِبَادِنَا وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ(52) سورة الشورى
இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை வஹீ மூலமாக உமக்கு அறிவித்து இருக்கிறோம். (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி நம் அடியார்களில் நாம் விரும்புவோர்க்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம். நிச்சயமாக நீர் நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர். (அல்குர்ஆன் 42: 52)
"இவ்வாறு தான் உமக்கும் நாம் வஹீ அறிவித்தோம்'' என்று இவ்வசனம் குறிப்பிடுகின்றது.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மேற்கண்ட மூன்று வஹீயும் வந்துள்ளன என்பதை இவ்விரு வசனங்களும் மிகத் தெளிவாக அறிவிக்கின்றன.
அதாவது நபிகள் நாயகத்துடன்....
திரைக்கப்பாலிருந்தும் அல்லாஹ் பேசியிருக்கின்றான்.
ஜிப்ரீலை அனுப்பி குர்ஆன் மூலமும் பேசியுள்ளான்.
ஏனைய வானவர்களை அனுப்பி குர்ஆன் அல்லாத பல செய்திகளையும் சொல்லி அனுப்பியுள்ளான்.
இவை தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இதயத்திலும் இறைவன் தனது கட்டளைகளைப் பதியச் செய்துள்ளான்
என்பது திட்டவட்டமாக நிரூபணமாகின்றது.
திருக்குர்ஆன் மட்டும் போதும் என்று யாரேனும் கூறினால் இறைவன் திரைக்கப்பாலிருந்து பேசினானே அந்தப் பேச்சுக்கள் எங்கேஇதயத்தில் போட்ட வழிகாட்டுதல் எங்கேஅவையும் இறைவனின் கட்டளைகள் எனும்போது அவற்றைக் கடைப்பிடிக்காமல் இருக்க முடியுமா!  அவற்றை மறுப்பது மேற்கண்ட இரு வசனங்களையும் மறுத்ததாக ஆகாதா?
குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உள்ளன என்பதற்கு இன்னும் பல வசனங்கள் சான்றுகளாக உள்ளன.   

திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூலாதாரமாக அமைந்துள்ளதோ அது போலவே ஆதராரப்பூர்வமான ஹதீஸ்களும் இஸ்லாத்தின் மூலாதாரங்களாக அமைந்துள்ளன.  இந்த உண்மையை திருக்குர்ஆனிலிருந்தே நாம் அறிந்து கொள்ள இயலும்.
கடந்த இரண்டு தொடர்களில் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ இருக்கிறது என்பதையும், அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதையும் திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை ஆதாரமாகக் கொண்டு அறிந்து கொண்டோம்.
அல்லாஹ்வின் தூதர்களாக அனுப்பப்படும் நபிமார்களுக்கு அல்லாஹ் வேதத்தை மட்டும் கொடுத்து அனுப்புவதில்லை.  இன்னொன்றையும் சேர்த்துக் கொடுத்து அனுப்பி இருக்கிறான்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இவ்வாறே அல்லாஹ் கொடுத்து அனுப்பியுள்ளான்.
وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ وَمَا أَنزَلَ عَلَيْكُمْ مِنْ الْكِتَابِ وَالْحِكْمَةِ يَعِظُكُمْ بِهِ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ(231) سورة البقرة
அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையையும் உங்கள் மீது அவன் இறக்கிய கிதாபையும் ஹிக்மத்தையும் நீங்கள் நினைவு கூருங்கள்! இதன் மூலம் அல்லாஹ் உங்களுக்குப் போதனை செய்கிறான்.  அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! மேலும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அறிந்தவன் எனபதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்!                   (அல்குர்ஆன் 2 : 231)
وَأَنزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا(113) سورة النساء
மேலும் அல்லாஹ் உம்மீது கிதாபையும் ஹிக்மத்தையும் இறக்கியுள்ளான். மேலும் நீர் அறியாதவற்றை உமக்குக் கற்றுத் தந்தான்.  உமக்கு அல்லாஹ் செய்திருக்கும் அருள் மகத்தானதாக உள்ளது. (அல்குர்ஆன் 4 : 113)
இவ்விரு வசனங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கிதாபையும், ஹிக்மத்தையும் அருளியதாக அல்லாஹ் கூறுகிறான்.  அல்லாஹ்வின் வேதத்தில் தேவையற்ற வீணான ஒரு வார்த்தையும் இருக்காது.  இருக்க முடியாது.  இருக்கக் கூடாது.  அல்லாஹ் தனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளியது வேதம் மட்டுமே, அதாவது அல்குர்ஆன் மட்டுமே என்றிருந்தால் கிதாபை உம்மீது இறக்கினான் என்று கூறுவதே போதுமானதாகும்.  ஆனால் கிதாபையும் ஹிக்மத்தையும் உம்மீது இறக்கியுள்ளேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.  அல்லாஹ் இரண்டு வகையான செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளியதாகக் கூறும் போது கிதாபை மட்டும் தான் அல்லாஹ் அருளினான் என்று வாதிடுவது இவ்விரு வசனங்களையும் மறுப்பதாகத் தான் அமையும்.
குர்ஆன் மட்டும் போதும் என்ற கருத்துடையவர்கள் இதற்குப் பதிலளிக்கும் போது எள்ளி நகைக்கும் விதமாக உளற ஆரம்பித்து விடுகின்றனர்.
"ஹிக்மத் என்பதன் பொருள் ஞானம்.  பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் அல்லாஹ் ஞானத்தைக் கொடுக்கிறான்.  அதைத் தான் இங்கே குறிப்பிடுகிறான்'' என்பது இவர்களது விளக்கம்.
ஹிக்மத் என்ற வார்த்தையின் நேரடிப் பொருள் ஞானம், அறிவு என்பது தான். இதில் சந்தேகம் இல்லை.  ஹிக்மத் என்ற வார்த்தைக்கு நேரடிப் பொருள் கொண்டவர்கள் கிதாப் என்ற வார்த்தைக்கும் நேரடிப் பொருள் தான் கொள்ள வேண்டும்.  கிதாப் என்ற வார்த்தைக்கு எழுதப்பட்டது - தபால் என்பது பொருள். அகராதியில் வேதம் என்று பொருள் கிடையாது.
யாரோ எழுதிய துண்டுச் சீட்டைக் கூட கிதாப் எனலாம்.  ஒரே வசனத்தில் இடம் பெற்ற இரண்டு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்கு மட்டும் அகராதியில் உள்ள பொருளைக் கொடுத்து விட்டு மற்றொரு வார்த்தைக்கு வேறு பொருள் கொடுக்க எந்த நியாயமும் இல்லை.
கிதாப் என்ற வார்த்தையின் பொருள் எழுதப்பட்டது என்று இருந்தாலும் அல்லாஹ் இறக்கியருளியதாகக் கூறும் போது அதன் பொருள் வேதம் என்று ஆகி விடுகிறது.  அது போலவே ஹிக்மத் என்பதன் நேரடிப் பொருள் ஞானம் என்றாலும், இங்கே ஹிக்மத்தை இறக்கியருளியதாக அல்லாஹ் கூறுகிறான்.  அதாவது கிதாபை எவ்வாறு இறக்கியருளி இருக்கிறானோ அது போலவே ஹிக்மத்தையும் இறக்கியருளியிருக்கிறான்.
பொதுவாக மனிதர்களுக்கு ஞானம் வழங்கியது பற்றிக் குறிப்பிடும் போது ஞானத்தைக் கொடுத்ததாகவும், நபிகள் நாயத்துக்கு ஞானத்தை வழங்கியது பற்றிக் கூறும் போது ஞானத்தை இறக்கியருளியதாகவும் அல்லாஹ் கூறுகிறான்.  எனவே குர்ஆன் போன்ற மற்றொரு வஹீயை அல்லாஹ் இறக்கியுள்ளான் என்பதே இதன் பொருளாகும்.  இவ்வாறு பொருள் கொள்ளும் போது ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டிய இருவசனங்களுடன் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.
மிகத்தெளிவான இவ்விரு வசனங்களுக்கும் முன்னால் இவர்களின் புரட்டு வாதம் நொறுங்கிப்  போவதைக் கண்டவுடன் வேறு விதமாகவும் சமாளிப்பார்கள், சமாளிக்கிறார்கள். அதாவது கிதாப் தான் ஹிக்மத், ஹிக்மத் தான் கிதாப். இரண்டும் ஒன்று தான். கிதாபு என்றும் ஹிக்மத் என்றும் குர்ஆனையே இங்கே குறிப்பிடுகிறான் என்று பிதற்றுகிறார்கள்.
அல்லாஹ்வின் வசனங்களை எப்படியெல்லாம் கேலிக் கூத்தாக்குகிறார்கள் என்பதற்கு இந்த உளறல் சரியான ஆதாரமாகவுள்ளது.
அதுவும் இதுவும், அவனும் இவனும் என்று "உம்''மைப் பயன்படுத்தினால் இரண்டு தனித்தனி பொருட்களுக்கிடையே தான் பயன்படுத்த முடியும்.
அல்லாஹ்வையும் ரசூலையும் நம்புங்கள் என்று கூறினால் அல்லாஹ் தான் ரசூல், ரசூல் தான் அல்லாஹ் என்று வியாக்கியானம் அளிப்பது போன்ற பைத்தியக்காரத்தனமாக இவர்களது கூற்று அமைந்துள்ளது.
சோறும் குழம்பும் தந்தான் என்றால் இரண்டு பொருட்கள் தரப்பட்டதாகத்தான் பொருள்.
இன்னும் தங்களின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் மேலும் உளறுகிறார்கள்.
குர்ஆனில் ஹிக்மத் (ஞானம்) இல்லையா? ஹிக்மத்துடைய குர்ஆன் என்று யாசீன் அத்தியாயத்தின் துவக்கத்தில் கூறப்படவில்லையா என்று கேட்டு இரண்டையும் ஒன்றாக்க முயல்கின்றனர்.
இவர்களின் வாதம் உண்மையாக இருந்தால் யாசீன் அத்தியாயத்தில் கூறியது போல் ஏன் இங்கே கூறவில்லை.  ஹிக்மத்தான கிதாப் என்று கூறாமல் ஹிக்மத்தையும் கிதாபையும் என்று ஏன் கூற வேண்டும்? யாசீன் அத்தியாயத்தில் பயன் படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கு அவ்வார்த்தையின் அமைப்பை வைத்துப் பொருள் கொள்வது போல் இங்கே பயன் படுத்தப் பட்ட வார்த்தைக்கு பொருள் கொள்ளும் போது இங்கே பயன்படுத்தப்பட்ட வாசக அமைப்பை வைத்துத் தான் பொருள் கொள்ள வேண்டும்.  இங்கே கிதாப் என்ற ஒரு பொருளும் ஹிக்மத் என்ற இன்னொரு பொருளும் வழங்கியதாகத் தெளிவாகக் கூறப்படுகின்றது.
இவர்களது அறியாமையைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாகும்.
பொறுமை மிகுந்த சுலைமான் என்று ஒரு நாள் நான் கூறுவதாக வைத்துக் கொள்வோம்.  மறுநாள் மக்களிடம் "பொறுமையைப் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம்.
பொறுமை மிகுந்த சுலைமான் என்று நீங்கள் தானே கூறினீர்கள். எனவே சுலைமானை நான் பிடிக்கப் போகிறேன்.  சுலைமானிடமும் பொறுமை இருக்கத் தானே செய்கிறது என்று ஒருவன் வாதிட்டால் அவனை நாம் என்ன வென்போம்? அவனுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
சுலைமானிடம் பொறுமை இருப்பது தனி விஷயம்.  இந்த இடத்தில் பொறுமை எந்தக் கருத்தில் பயன் படுத்தப் பட்டது என்பது தனி விஷயம்.
எனவே அல்லாஹ் வேதத்தை எவ்வாறு தன் புறத்திலிருந்து அருளினானோ அவ்வாறே ஹிக்மத்தையும் தன் புறத்திலிருந்து வஹியாக அருளியிருக்கிறான்.  அதை நாம் ஹதீஸ்கள் என்கிறோம்.
குர்ஆன் மட்டும் போதும் என்போர் அல்லாஹ் இறக்கியருளிய ஹிக்மத் எது என்பதை குர்ஆனிலிருந்து கண்டு பிடித்துக் காட்டட்டும்!
ஹிக்மத் என்பதற்கு இவர்கள் கூறுகின்ற விளக்கம் கிடையாது என்பதற்கு திருக்குர்ஆனே சான்று கூறுகிறது.
وَاذْكُرْنَ مَا يُتْلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا(34) سورة الأحزاب
(நபியின் மனைவியரே!) உங்கள் வீடுகளில் ஓதிக் காட்டப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும் ஹிக்மத்தையும் நினைவு கூருங்கள். (அல்குர்ஆன் 33 : 34)
ஹிக்மத் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப் பட்ட ஞானம் தான் என்பது முற்றிலும் தவறானது என்பதை இவ்வசனம் விளக்குகிறது.
இவ்வசனத்தில் அல்லாஹ்வின் வசனங்கள் எவ்வாறு ஓதிக் காட்டப்படுகிறதோ அதுபோலவே ஹிக்மத்தும் ஓதிக் காட்டப்படுவதாக அல்லாஹ் கூறுகிறான்.  நபியின் மனைவியர் வீட்டில் ஓதிக் காட்டப்படுகிறது என்றால் ஓதிக் காட்டியவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான்.  நபி (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட அல்லாஹ்வின் வசனங்களையும் ஓதிக் காட்டியுள்ளார்கள்.  மேலும் ஹிக்மத்தையும் ஓதிக் காட்டியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
திலாவத் - "ஓதிக் காட்டுதல்' என்பது பிறரது வார்த்தையை ஒருவர் எடுத்துக் கூறுவதைக் குறிக்கும் சொல்லாகும்.  எனவே அல்லாஹ்வின் வசனங்கள் எப்படி நபியின் சொந்த வார்த்தை இல்லையோ அது போலவே ஹிக்மத்தும் அவரது சொந்தக் கருத்தல்ல.  இரண்டுமே அல்லாஹ்வுக்குச் சொந்தமாகவுள்ளதால் தான் இரண்டையும் நபி (ஸல்) ஓதிக் காட்டியுள்ளார்கள் என்று அல்லாஹ் இங்கே கூறுகிறான்.
குர்ஆன் அல்லாத வஹீ உள்ளது என்பதற்கு இன்னும் ஏராளமான ஆதாரங்கள் குர்ஆனிலேயே உள்ளன. அவற்றை மேலும் பார்ப்போம்.
அல்லாஹ் எந்த நபியை அனுப்பினாலும் அவருக்கு வேதப்புத்தகத்தை மட்டும் கொடுத்து இதை மட்டும் மக்களுக்குப் படித்துக் காட்டுங்கள் என்று கூறி அனுப்புவதில்லை.
மாறாக வேதத்தில் எழுகின்ற சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும், கூடுதல் விளக்கம் தேவைப்படும் இடங்களில் அதை அளிக்கவும் தேவையான ஞானத்தையும் சேர்த்தே கொடுத்து அனுப்பியுள்ளான்.
وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنْ الشَّاهِدِينَ(81) سورة آل عمران
உங்களுக்கு கிதாபையும் ஹிக்மத்தையும் நான் வழங்கியபின் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நிச்சயமாக நம்புவீர்களா? நிச்சயமாக அவருக்கு உதவுவீர்களா? என்று அல்லாஹ் நபிமார்களிடம் உறுதி மொழி எடுத்ததை நினைவு கூர்வீராக!       (அல்குர்ஆன் 3 : 81)
எல்லா நபிமார்களிடமும் அல்லாஹ் ஓர் உறுதிமொழி எடுத்ததை இங்கே நினைவு படுத்துகிறான்.  (நபிகள் நாயகத்துக்குப் பின் தூதர் யாரும் வரமுடியுமா? என்பதைக் கூறும் இவ்வசனத்துக்குத் தலைகீழாக விளக்கம் கூறி நபிகள் நாயகத்துக்குப் பின் தூதர் வர முடியும் என்று ஒரு மன நோயாளி உளறியிருப்பதைப் பின்னர் நாம் விளக்குவோம்)
அவ்வுறுதி மொழியைக் குறிப்பிடும் போது "நபிமார்களே! உங்களுக்கு வேதத்தையும் ஹிக்மத்தையும் நான் வழங்கிய பின்'' என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
நபிமார்களுக்கு வேதம் எவ்வாறு வழங்கப்பட்டதோ அவ்வாறே ஹிக்மத்தும் வழங்கப்பட்டது.  இரண்டுமே இறைவனால் தான் வழங்கப்பட்டது என்பதை இவ்வசனம் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.
وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلًّا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ(84)وَزَكَرِيَّا وَيَحْيَى وَعِيسَى وَإِلْيَاسَ كُلٌّ مِنْ الصَّالِحِينَ(85)وَإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ(86)وَمِنْ آبَائِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَإِخْوَانِهِمْ وَاجْتَبَيْنَاهُمْ وَهَدَيْنَاهُمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ(87) ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ(88)أُوْلَئِكَ الَّذِينَ آتَيْنَاهُمْ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ فَإِنْ يَكْفُرْ بِهَا هَؤُلَاءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَيْسُوا بِهَا بِكَافِرِينَ(89) سورة الأنعام
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர் வழியில் செலுத்தினோம்.  இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம். இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழி சார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
இன்னும் இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.
இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும், இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும், இவர்களுடைய சகோதரர்களிலிருந்தும் (பலரை) நாம் தேர்ந்தெடுத்து, அவர்களை நேர் வழியில் செலுத்தினோம்.
இதுவே அல்லாஹ்வின் நேர் வழியகும்.  தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன் மூலம் நேர்வழி காட்டுகிறான் (பின்னர்) அவர்கள் இணை வைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்து விடும்.
இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்.  ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம்.         (அல்குர்ஆன் 6 : 84 - 89)
இவ்வசனங்களில் 1. இப்றாஹீம் 2. இஸ்ஹாக் 3. யஃகூப் 4. நூஹ் 5. தாவூத் 6. சுலைமான் 7. அய்யூப் 8. யூசுப் 9. மூஸா 10. ஹாரூன் 11. ஸக்கரிய்யா 12. யஹ்யா 13. ஈஸா 14. இல்யாஸ் 15. இஸ்மாயீல் 16. அல்யஸவு 17. யூனுஸ் 18. லூத் ஆகிய நபிமார்களின் பெயர்களைக் குறிப்பிட்டு விட்டு 87 ஆம் வசனத்தில் இவர்களது முன்னோர்கள், இவர்களின் சந்ததிகள் இவர்களது சகோதரர்களில் தோன்றிய நபிமார்களைப் பொதுவாகவும் கூறுகிறான். 
அதாவது நபிமார்கள் எனப்படும் அனைவரையும் பொதுவாகவும் சிலரைக் குறிப்பாகவும் கூறிவிட்டு "இவர்களுக்கு கிதாபையும் வழங்கினோம்.  ஹுக்மையும் வழங்கினோம்.  நுவுவ்வத்தையும் வழங்கினோம்'' என்று அல்லாஹ் 89வது வசனத்தில் கூறுகிறான்.
கிதாபு என்பதன் பொருள் நமக்கு விளங்குகிறது.  நுபுவ்வத் என்பதன் (நபி எனும் தகுதி) பொருளும் விளங்குகிறது.  இவ்விரண்டை மட்டுமின்றி மூன்றாவதாக "ஹுக்மை' வழங்கியதாகக் கூறுகிறானே அது என்ன?
ஹுக்மு என்பதற்கு அதிகாரம் என்பது பொருள்.  இவர்களில் தாவூத், சுலைமான், யூசுப், மூஸா போன்ற சிலருக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டது என்றாலும் அனைத்து நபிமார்களும் ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. எனவே ஹுக்மு என்பதற்கு ஆட்சியதிகாரம் என்று பொருள் கொள்ள முடியாது.  மாறாக மார்க்க ரீதியிலான சட்ட திட்டங்கள் குறித்த அதிகாரமே இங்கே குறிப்பிடப்படுகிறது.
அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஹிக்மத் என்னும் ஞானத்தின் மூலம் ஹுக்மு எனும் சட்டமியற்றும் அதிகாரத்தையும் நபிமார்கள் பெற்றார்கள்.  அல்லாஹ்வே அதை நபிமார்களுக்கு வழங்கியிருந்தான் என்பதை இதிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
வேதம் தவிர வேறு எதுவும் நபிமார்களுக்கு வழங்கப் படவில்லை என்றிருந்தால் வேதத்தையும் நுவுவ்வத்தையும் ஹுக்மையும் என்று அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்.
இறுதியாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறும் செய்தி முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியதாகும்.  "இந்த நபிமார்கள் இம்மூன்றையும் மறுப்பார்களானால் மறுக்காத - காஃபிர்களாக இல்லாத - ஒரு கூட்டத்தாரிடம் இவற்றை ஒப்படைப்போம்'' என்பது தான் அந்தப் பகுதி.
வேதம் மட்டும் தான் நமக்கு அருளப்பட்டது.  ஹுக்மு என்ற அதிகாரமோ, ஹிக்மத் என்ற ஞானமோ தமக்குத் தேவையில்லை என்று அந்த நபிமார்கள் கருதுவார்களானால் இம்மூன்றையும் ஏற்கக் கூடிய மற்றவர்களுக்கு அதைக் கொடுத்து அனுப்புவேன் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
"இந்த நபிமார்கள் இம்மூன்றையும் மறுப்பார்களானால் மறுக்காத (காபிராக இல்லாத) வேறு கூட்டத்தாரிடம் இவற்றை ஒப்படைப்பேன்'' என்று அல்லாஹ் கூறுவது மூன்றுமே சமமானவை என்பதற்கும் மூன்றில் எதையும் நபிமார்களே மறுக்கக் கூடாது என்பதற்கும் மிகத் தெளிவான சான்றாக உள்ளது.
மூன்றையும் சேர்த்து வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள்.  மூன்றில் ஒன்றோ இரண்டோ தான் வேண்டும் எனக் கூறினால் வேறு யாருக்காவது மூன்றையும் தந்து விடுவேன் என்ற தோரணையில் இவ்வசனம் அமைந்துள்ளது.  குர்ஆன் மட்டும் போதும் என்போர் காபிர்கள் தான் என்று திட்டவட்டமாக குர்ஆனே அறிவிக்கிறது.
أَمْ يَحْسُدُونَ النَّاسَ عَلَى مَا آتَاهُمْ اللَّهُ مِنْ فَضْلِهِ فَقَدْ آتَيْنَا آلَ إِبْرَاهِيمَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَآتَيْنَاهُمْ مُلْكًا عَظِيمًا(54) سورة النساء
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்றாஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஹிக்மத்தையும் கொடுத்தோம்.  அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.  (அல்குர்ஆன் 4 : 54)
இவ்வசனத்தில் இப்றாஹீம் நபிக்கும் அவரது வழித் தோன்றல்களாக வந்த நபிமார்களுக்கும் கிதாபையும் ஹிக்மத்தையும் வழங்கியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
பொதுவாக எல்லா நபிமார்களுக்கும் குர்ஆனுடன் ஹிக்மத்தும் அருளப்பட்டதாகக் கூறும் இறைவன் இதே முறையில் தான் இதே மாதிரியாகத் தான் நபிகள் நாயகத்துக்கும் வஹீ அருளியிருப்பதாகக் கூறுகிறான்.
إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَى وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا(163) سورة النساء
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம்.  மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்.  இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். (அல்குர்ஆன்  4 : 163)
இந்த நபிமார்களுக்கு எவ்வாறு வஹீ அருளப்பட்டதோ அந்த வழி முறைக்கு மாற்றமாக புது முறையில் குர்ஆன் அருளப்படவில்லை.  மாறாக குர்ஆனுடன் ஹிக்மத்தும் சேர்த்தே அருளப்பட்டது என்பதை இவ்வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.
எனவே நபிமார்கள் புத்தகத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கும் தபால்காரர் போல் அனுப்பப் படவே இல்லை.  மாறாக அதற்கு விளக்கம் சொல்லி, செய்து காட்டும் அதிகாரம் படைத்தவர்களாகவே அனுப்பப்பட்டனர்.  அதே அதிகாரத்துடன் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுப்பப்பட்டனர்.
குர்ஆனைத் தவிர வேறு வஹீ இல்லை என்போர் உண்மையில் அவர்கள் மறுப்பது மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனங்களையும் கடந்த மூன்று தொடர்களாகச் சுட்டிக் காட்டிய குர்ஆன் வசனங்களையும் தான் மறுக்கிறார்கள்.  இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
குர்ஆன் மட்டுமின்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் மார்க்கத்தின் மூலஆதாரமே என்பதற்கான சான்றுகள் இவ்வளவு தானா!  இன்னும் உள்ளன.
எல்லா இறைத் தூதர்களுக்கும் இறைவனிடமிருந்து வேதத்தைப் பெற்று மக்களுக்குச் சேர்ப்பிக்கும் பணியுடன் அவ்வேதத்துக்கு விளக்கவுரை அளிக்கும் பணியும் சேர்த்தே ஒப்படைக்கப்பட்டன.
இறைத் தூதர்களின் விளக்கவுரை தேவைப்படாத எந்த வேதமும் இறைவனால் அருளப்படவில்லை என்பதைத் திருக்குர்ஆனே தெளிவாக அறிவிக்கின்றது.
இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது வழித் தோன்றல்களில் ஒரு இறைத்தூதரை அனுப்ப வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.  அந்தப் பிரார்த்தனை திருக்குர்ஆனிலும் இறைவனால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمْ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ(129) سورة البقرة
எங்கள் இறைவா! இவர்களுக்கு உன் வசனங்களை ஓதிக் காட்டி இவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து இவர்களைத் தூய்மை படுத்தக் கூடியவராக இவர்களுக்கு இவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்புவாயாக!  நிச்சயமாக நீ மிகைத்தவன்.  ஞானமிக்கவன் (அல்குர்ஆன் 2 : 129)
இப்ராஹீம் நபியவர்களின் இப்பிரார்த்தனை வேதம் அல்லாத இன்னொரு வஹீ இருப்பதை மேலும் உறுதி செய்கின்றது.
"உனது வசனங்களை அந்தத் தூதர் அவர்களுக்கு ஓதிக் காட்டுவார்''
"அவர்களுக்கு வேதத்தைக் கற்றுத் தருவார்''
என்று இப்ராஹீம் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.  வசனங்களை ஓதிக் காட்டியவுடன் மக்களுக்கு விளங்கி விடும் என்றிருந்தால் - வசனங்களை ஓதிக் காட்டுவது மட்டுமே இறைத்தூதர்களின் பணியாக இருந்திருந்தால் - இப்றாஹீம் (அலை) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்திருக்க மாட்டார்கள்.
உனது வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுவார் என்று மட்டும் கூறியிருப்பார்கள் அல்லது வேதத்தை அவர்களுக்கு கற்றுத் தருவார் என்று மட்டும் கூறியிருப்பார்கள்.  இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் கூறாமல் இரண்டையும் சேர்த்துக் கூறியதிலிருந்து வசனங்களை ஓதிக் காட்டுவது வேறு.  ஓதிக் காட்டிய பின் வேதத்தைக் கற்றுக் கொடுப்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையை எப்படி ஆதாரமாகக் கொள்ள முடியும்? அல்லாஹ் இவ்வாறு கூறவில்லையே என்று யாரும் நினைத்து விடக்கூடாது.  ஏனெனில் அல்லாஹ்வும் இப்படித் தான் கூறியுள்ளான்.
كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِنْكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمْ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ(151) سورة البقرة
உங்களுக்கு உங்களிலிருந்தே ஒரு தூதரை நாம் அனுப்பினோம்.  அவர் உங்களுக்கு நமது வசனங்களை ஓதிக் காட்டுவார்.  மேலும் உங்களைத் தூய்மை படுத்துவார்.  உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுத் தருவார்.  மேலும் நீங்கள் அறியாதிருந்தவற்றையும் உங்களுக்குக் கற்றுத் தருவார்.  (அல்குர்ஆன் 2 : 151)
இது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப் பட்டது குறித்து கூறுகின்ற வசனமாகும்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பையும் அதிகாரத்தையும் தெளிவாகப் பறைசாற்றும் வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழி பேசுகின்ற சமுதாய மக்களுக்கே தூதராக முதலில் அனுப்பப் பட்டார்கள்.  அவர்களுக்கு அருளப்பட்ட வேதமும் தெளிவான அரபு மொழியிலேயே அருளப் பட்டது.
அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களுக்கு அரபு மொழி வேதத்தை ஓதிக் காட்டியவுடன் அதன் பொருள் நிச்சயம் விளங்கி விடும். 
ஆனால் மேலே கண்ட வசனம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.
1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை ஓதிக் காட்டுவார்களாம்.
2. பின்னர் வேதத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பார்களாம்!
3. ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார்களாம்.
4. பின்னர் அம்மக்கள் அறியாமல் இருந்த பல விஷயங்களை கற்றுக் கொடுப்பார்களாம்.
5. அவர்களைப் பரிசுத்தம் செய்யும் பணியையும் செய்வார்களாம்.
இப்படி ஐந்து பொறுப்புக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக இவ்வசனம் கூறுகிறது.
அல்லாஹ்வுடைய வார்த்தையில் வீணான ஒரு சொல்லும் இருக்காது, இருக்கக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ இருப்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.
வசனங்களை ஓதிக் காட்டியவுடன் பெரும்பாலான வசனங்களின் பொருள் புரிந்து விடும் என்றாலும் நபிகள் நாயகம் விளக்கம் சொன்னபிறகு விளங்கக் கூடிய வசனங்களும் குர்ஆனில் உள்ளன.  அவ்வாறு இருப்பதால் தான் வசனங்களை ஓதிக் காட்டுவார்.  மேலும் வேதத்தைக் கற்றுத் தருவார் என்று இறைவன் கூறுகிறான்.
ஹஜ் செய்யுங்கள் என்பதன் பொருள் விளங்கலாம்.  ஹஜ் என்றால் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் விளக்கினால் தான் புரியும்.  உம்ராச் செய்யுங்கள் என்று குர்ஆன் கூறுவதன் பொருள் விளங்கலாம்.  அதை எவ்வாறு செய்வது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் விளக்க வேண்டும்.
இப்படி ஏராளமான வசனங்களுக்கு எவ்வாறு செயல் வடிவம் கொடுப்பது என்பதை விளக்கும் அதிகாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான் என்பதைத் தான் மேற்கண்ட வசனம் தெளிவாக்குகிறது.
لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُوا عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمْ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ(164) سورة آل عمران
அவனது வசனங்களை ஓதிக் காட்டி மேலும் அவர்களைத் தூய்மைப் படுத்தி மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அல்லாஹ் மூமின்களுக்கு பேரருள் புரிந்து விட்டான் (3 : 164)
வெறும் வேதத்தை மட்டும் அருளியதை அருட்கொடையாக அல்லாஹ் கூறவில்லை.  மாறாக தூதரை அனுப்பியது தான் அருட் கொடை என்கிறான்.  அதுவும் அந்தத் தூதர் வேதத்தை வாசித்துக் காட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதற்கு விளக்கம் கூறும் அதிகாரமும் பெற்றவராக இருப்பதையும் கூறி விட்டு இதைத் தனது அருட்கொடை என அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
இதே போன்று ஜும்ஆ அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாசித்துக் காட்டிய குர்ஆன் எங்கே என்றால் இதோ என்று கூறி விடுவோம்.  அந்த வேதத்துக்கு விளக்கம் அளித்தார்கள் என்று அல்லாஹ் கூறுகிறானே அந்த விளக்கம் எங்கே? அறியாதவற்றை எல்லாம் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறானே அவையெல்லாம் எங்கே?
இறைவன் அந்தப் பணிகளைச் செய்வதற்காகவே அனுப்பியுள்ளான் என்பதிலிருந்து அவர்களின் விளக்கம் இன்றியமையாத ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
அந்த இன்றி அமையாத விளக்கம் எங்கே? குர்ஆன் மட்டும் போதும் என்போர் அதை ஒருக்காலும் எடுத்துக் காட்ட முடியாது.
வேதத்தைக் கற்றுக் கொடுப்பதும் வசனங்களை ஓதிக் காட்டுவதும் ஹிக்மத்தைக் கற்றுக் கொடுப்பதும் எல்லாம் ஒன்றுதான் என்று உளறுவதைத் தவிர அவர்களிடம் இதற்கு பதில் கிடையாது.
அல்லாஹ் தேவையில்லாத வார்த்தைகளைப் பயன் படுத்தியிருக்கிறான் என்று அல்லாஹ்வின் தகுதியைக் குறைத்தாவது தங்கள் மனோ இச்சையை நிலை நாட்டப் பார்க்கிறார்கள்.
பயனற்ற தேவையற்ற ஒரே ஒரு சொல்லும் அல்லாஹ்வின் வேதத்தில் இருக்காது என்ற நம்பிக்கையுடன் வேதத்தை ஆராய்ந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை வெறுமனே வாசித்துக் காட்ட மட்டும் வரவில்லை.  வாசித்துக் காட்டும் போது ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் அதிகாரம் பெற்றவர்களாகவும் நடைமுறைப்படுத்திக் காட்டும் அதிகாரம் பெற்றவர்களாகவுமே வந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ - இறைச் செய்தி உள்ளது என்பதற்கான சான்றுகள் இத்துடன் முடியவில்லை.  இன்னும் பல வசனங்கள் உள்ளன.

Email addresses of Important Offices in Dharmapuri District



Name of the Officer/ Office
Email Address
 District Collector / District Election Officer
 District Revenue Officer 
 Project Officer ,DRDA
 Conservator of Forests 
 District Forest Officer 
 Personal Assistant to Collector (Small savings) 
 Personal Assistant to Collector (General) 
 Special Deputy Collector (PGRC)
 Assistant Director (Survey) 
 District Supply Officer [ DSO ]
 Seed Test Officer 
 Personal Assistant to Collector (Development) [ PA-PD ] 
Assistant Director , SVP
Assistant Director , Panchayat
 Deputy Director, Horticulture
 Deputy Director, Health Services [ DDHS ]
 District Backward Classes Welfare Officer [ DBCWO ]
 District Adi dravidar welfare Officer [ DADWO ]
 Project Director, National Child Labour Project [ NCLP ]
 Joint Director, Agriculture Department
 GM , District Industries Centre [ DIC ]
 Dharmapuri District Co-operative Milk Producers Union    Ltd. Krishnagiri
 National Sample Survey Organisation  [ NSSO ]
 National Informatics Centre  [ NIC ]

வீதியின் ஒழுக்கங்கள்

வீதியில் செல்லும் போது பார்வையைத் தாழ்த்தி செல்ல வேண்டும்.  அல்லாஹ் கூறுகிறான்:  (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அல்குர்ஆன் 24:30, 31
 

வீதியில் ஆணவத்துடன் நடப்பது கூடாது

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது ''ஸலாம்'' எனக் கூறுவார்கள். அல் குர்ஆன் 25:63

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்''  அல் குர்ஆன் 31:18, 19

 
வீதிக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

''நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் ''எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறுவழியில்லை. அவை தாம் நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ''அப்படி நீங்கள் அந்த சபைகளுக்கு வந்து தான் ஆகவேண்டுமென்றால் பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள் ''பாதையின் உரிமை என்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்கு சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமல் இருப்பதும். ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையி­ருந்து தடுப்பதும் அதன் உரிமைகள் ஆகும்'' என்று கூறினார்கள்.   அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ர­லி)   நூல்: புகாரி 2465

மற்றொரு அறிவிப்பில் ''அழகிய பேச்சைப் பேசுதலும்'' பாதைக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கூறப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: அபூ தல்ஹா (ர­லி)  நூல் முஸ்­லிம் 4365

 
பாதையில் கிடக்கின்ற தொல்லை தருகின்ற பொருட்களை அகற்றுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''தொல்லை தரும் பொருளை பாதையி­ருந்து அகற்றுவது தர்மமாகும்''   அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ர­லி)  நூல்: புகாரி 2631

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஈமான் என்பது எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டதாகும். அவற்றில் மிகச் சிறந்தது ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை) என்று கூறுவதாகும். அவற்றில் இறுதியானது பாதையில் கிடக்கின்ற இடையூறு தரக்கூடிய பொருட்களை அகற்றுவதாகும். வெட்கமும் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும்''  அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ர­லி)   நூல்: முஸ்­லிம் 58

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒரு மனிதர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளைக் கிடப்பதைக் கண்டு அதை அந்தப் பாதையை விட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதை விட்டும்) பிற்படுத்தி விட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான், பாவமன்னிப்பும் வழங்குகிறான்''  அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ர­லி) நூல்: புகாரி 652

 
மக்கள் நடமாடும் பாதைகளிலும் நிழலுக்காக ஒதுங்கும் இடங்களிலும் மலம் ஜலம் கழித்தல் கூடாது

''சாபமேற்படக் கூடிய இரண்டு விஷயங்களை அஞ்சிக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஸஹாபாக்கள் ''சாபமேற்படக்கூடிய இரண்டு விஷயங்கள் என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ''மக்கள் நடமாடும் பாதைகளிலும் நிழலுக்காக ஒதுங்கும் இடங்களிலும் மலம் ஜலம் கழிப்பதாகும்'' என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ர­லி)   நூல்: முஸ்­லிம் 448

அனுமதி கோருதல்

நம்முடைய வீட்டிற்குள் நுழையும் போதும் ஸலாம் கூறவேண்டும்.

வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். அல் குர்ஆன் 24:61

பிறருடைய வீடுகளுக்குள் நுழையும் முறை

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! ''திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன். அல் குர்ஆன் 24:27

அனஸ் (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''நபி (ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) ஸலாம் கூறினால் மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.''நூல்: புகாரி 6244
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பி விடட்டும்'' அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ர­லி)   நூல்: புகாரி 6245

நாம் செல்லும் வீட்டாருக்கு நம்மைப் பற்றி தெளிவாகக் கூறவேண்டும்.

ஜாபிர் (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''என் தந்தை ஒரு யூதருக்கு கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள் ''யார் அது?'' என்று கேட்டார்கள். அதற்கு நான் ''நான் தான்'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''நான், நான் என்றால்....?'' என அதை விரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள். நூல்: புகாரி 6250

பிறருடைய வீடுகளுக்குள் எட்டிப் பார்ப்பதோ ஒட்டுக் கேட்பதோ கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டிற்குள் எட்டிப் பார்த்த போது, அவர் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை'' அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ர­லி)  நூல்: புகாரி 6902

ஸஹ்ல் (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறையின் கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (இரும்பாலான) ஈர்வ­ச் சீப்பொன்று இருந்தது. அதனால் தமது தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்த போது ''என்னை நீ பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதினாலேயே ''அனுமதி கேட்க வேண்டும்'' என்பது சட்டமாக்கப்பட்டது'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 6901

அனுமதி பெறாமல் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்ட இடம்

யாரும் குடியிருக்காத வீட்டில் உங்களின் பொருள் இருந்தால் அங்கே நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான்.  அல் குர்ஆன் 24:29

குழந்தைகளும் அனுமதி பெற்று வீட்டிற்குள் நுழைய வேண்டிய மூன்று நேரங்கள்

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பக­ல் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.  அல் குர்ஆன் 24:58, 59

அனுமதி கோரும் முறை

பனூ ஆமிர் குலத்தைச் சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இருக்கும் போது ''நான் நுழையலாமா?'' என்று அனுமதி கோரினார். நபியவர்கள் தன்னுடைய பணியாளருக்கு ''நீ வெளியே அவரின் பக்கம் சென்று அவருக்கு அனுமதி பெறும் முறையைக் கற்றுக் கொடு! 'அஸ்ஸலாமு அலைக்கும். நான் நுழையலாமா?' என்று (அனுமதி பெறும்போது) கூறவேண்டும் என்று அவருக்குச் சொல்'' என்று கூறினார்கள். அம்மனிதர் இதனைச் செவியேற்றார். உடனே ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறி ''நான் நுழையலாமா?'' என்று (அனுமதி கோரினார்) நபியவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள்.
அறிவிப்பவர்: ரிப்ஈ  நூல்: அபூ தாவூத் 4508

பாழாக்கப்படும் ஃபஜ்ர் தொழுகை

தொழுகை என்பது இஸ்லாத்தின் தூண் என்று போற்றப்படும் ஒரு சிறப்புமிக்க வணக்கம் என்பதை அனைத்து இஸ்லாமியர்களும் அறிந்து வைத்திருக்கின்றார்கள். இதையும் தாண்டி தொழுகை, இறைவனுக்கு மிகவும் விருப்பமானதாகும். இறைவனிடத்தில் மிக நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

மறுமை நாளில் முதன் முதலாய் இறைவன் நம்மிடம் விசாரிப்பது இந்த தொழுகையைப் பற்றிதான். இதற்கான பதில் சரியாய் அமைந்து விடுமாயின் பின்னுள்ள அனைத்து கேள்விகளுக்கும் திருப்திகரமான பதிலை கொடுத்து வெற்றிக்கனியை எட்டிப்பறித்து விடுவோம். மாறாக, தொழுகையின் கேள்விக்கு சரியான பதில் நம்மிடத்தில் இல்லை என்றால் நாம் தோல்வியை தழுவுவது சர்வநிச்சயம். இவ்வாறு தொழுகையின் அவசியத்தை நபி(ஸல்) அவர்கள் நமக்கு பல்வேறு சந்தர்ப்பத்தில் விளக்கியுள்ளார்கள்.

என்னதான் தொழுகையைப்பற்றி பல சமயங்களில் கேள்விப்பட்டாலும் நாம் தொழுகையில் போதிய அக்கறை இல்லாதவர்களாக இருக்கின்றோம். இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான தொழுகை நம்மிடத்தில் பெரிதும் ஆட்டம் காணக்கூடியதாகவே இருக்கின்றது.


நபி(ஸல்) அவர்கள் தனது மரணத்தருவாயில் கூட இந்த தொழுகையை பற்றி நினைவூட்ட தவறவில்லை என்ற செய்தியை குறிப்பிட்டாலும் அதனால் என்ன? என்பது போல் தொழுகை விஷயத்தில் மிகவும் அலட்சியமாக நமது செயல்பாடு அமைந்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக நம்மில் ஏராளமானோர் ஃபஜ்ர் தொழுகையை சர்வ சாதரணமாய் தவறவிட்டு விடுகிறோம். அதை பெரிதாய் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. இன்னும் பலர் சுப்;ஹ் தொழுகையை விடுவதை அன்றாட வழக்கமாக ஆக்கி கொள்கின்றனர். ஏனைய தொழுகைகளை தவறாமல தொழுவார்கள். ஆனால் சுப்ஹ் தொழுகையை தவறியும் தொழ மாட்டார்கள்.


சுப்ஹ் தொழுகையும் மறுமை பரிசுகளும்

ஒன்றின் உண்மையான மதிப்பை உணர்ந்தால் தான் அதை சரியான முறையில் பேணும் பழக்கம் நம்மிடத்தில் தழையோடும். இது போலத்தான் சுப்ஹ் தொழுகையை சரிவர பேணாமல் இருப்பதோடு, அதைப்பற்றி சற்றும் கண்டு கொள்ளாமல் இருப்பது அதன் மதிப்பை நாம் சரிவர உணரவில்லை என்பதே காரணமாகும்.

'இஷாத்தொழுகையிலும், ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது வந்து விடுவார்கள்'.  (அபூஹூரைரா(ரலி) புகாரி 615


மலக்குமார்களின் நற்சான்று

'இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக உங்களிடையே வருகின்றனர். ஃபஜ்ர் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் ஒன்று கூடுகின்றார்கள். பிறகு, உங்களிடையே இரவு தங்கிவர்கள் மேலேறி செல்கின்றனர். அப்போது மக்களைப்பற்றி மிகவும் அறிந்தவனான அல்லாஹ் அவர்(வானவர்)களிடம் (பூமியில் உள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்? என்ற கேட்பதற்க்கு அவர்கள், அவர்களை உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டு வந்தோம்: அவர்கள் தொழுதுக் கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம் என்பார்கள்' (அபூஹூரைரா(ரலி) புகாரி 555

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் சுப்ஹ் தொழுகையை நாம் பங்கெடுத்தவர்களாக இருந்தால் அம்மலக்குமார்கள் நம்மை பற்றி இறைவனிடம் சொல்லும்போது உன்னுடைய அடியார்களை உன்னை தொழுத நிலையில் அவர்களிடம் சென்றோம். தொழுத நிலையிலேயே அவர்களை விட்டு பிரிந்து வந்தோம் என்பதாக நற்சான்று கொடுப்பார்களாம்.  இந்த புனிதமிக்க சபையில் நாம் பங்கெடுக்காதவர்களாக இருந்தால் இந்த  கண்ணியமிக்க மலக்குமார்களின் நற்சான்றை இழந்த கைசேதவான்களாக ஆகி விடுவோம். மேலும் நாம் சுப்ஹ் தொழுகைகளை நிறைவேற்றினால், நாம் கற்பனை செய்திடாத பல மகத்தான பரிசுகளை உள்ளடக்கியிருக்கும் சொர்க்கத்தையே பரிசாக தருகிறான். 

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'பகலின் இரு ஓரங்களிலுள்ள (ஃபஜ்ர் அஸர் ஆகிய) இரு நேரத் தொழுகைகளை யார் தொழுகின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்'.   அபூமூசா (ரலி) புகாரி 574

இப்படிப்பட்ட பாக்கியத்தை நாம் இனியும் இழக்கலாமா? சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற நம்முடைய தீராத ஆசையை இந்த சுப்ஹ் தொழுகையின் மூலம் நிறைவேற்ற முடியும் என்பதை அறிந்த பிறகும் இதை கோட்டை விடலாமா? சுப்ஹ் தொழுகையின் மூலம் இறைவன் தரும் பரிசை நாம் பெற்று விடக்கூடாது என்பதற்காகவே ஷைத்தான் இந்த தொழுகையில் பார்த்து நமக்கு வேட்டு வைக்கிறான்.  ஷைத்தானின் சதிவலையை அறுத்தெறிந்தால் மட்டுமே சொர்க்கத்தின் கதவை திறக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சொர்க்கத்திற்கான முன்பதிவு டிக்கெட்டை சுப்ஹ் தொழுகையின் மூலம் பெற்றிடுங்கள்.


இறைபொறுப்பில் சுப்ஹ் தொழுத அடியார்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:   'சுப்ஹ் தொழுகையைத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து அவன் உங்களிடம் விசாரனை செய்(யும் நிலையை நீங்கள் ஏற்படுத்)திட வேண்டாம். ஏனெனில் அவன் தன் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து ஒருவரிடம் விசாரிக்கத் தொடங்கினால் அதைக் கண்டுபிடித்தே தீருவான். பின்னர்(வரம்பு மீறி நடந்துக் கொண்ட) அவனை நரக நெருப்பில் முகங் குப்புற தள்ளிவிடுவான்'(முஸ்லிம் 1164)

நம்மை படைத்த இறைவனே நமக்கு பொறுப்பாளியாக மாறும் பெரும்பாக்கியம் இந்த சுப்ஹ் தொழுகையில் இருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கும்போது உண்மையில் மெய்சிலிர்த்து போகின்றோம். எனவே, நம்மை இறைவன் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள விரும்புவர்கள் சுப்ஹ் தொழுகையை பேணி தொழுபவர்களாக மாற வேண்டும். மேலும், 'உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலுக்கு வந்து தனியாக அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் சென்று நானும் அமர்ந்தேன். அப்போது அவர்கள், என் சகோதரரின் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், பாதி இரவு வரை நின்று வணங்கியவரைப் போன்றவராவார். சுப்ஹ் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், இரவு முழுவதும் நின்று வணங்கியவரை போன்றவர் ஆவார்' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். (முஸ்லிம் : 1162)

ஜமாஅத்துடன் சுப்ஹ் தொழுகையை நிறைவேற்றினால் முழு இரவும் நின்று வணங்கிய நன்மையை இறைவன் வாரி வழங்குகின்றான். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நாம் ஒரு காலத்திலும் செய்ய முடியாத நன்மையை இறைவன் இந்த சுப்ஹ் தொழுவதின் மூலமே தந்து விடுகின்றான் எனும்போது சுப்ஹ் தொழுகையின் மகத்துவம் இப்போது புரிகிறதல்லவா?

நன்மையை அதிகமதிகம் கொள்ளையடிக்க விரும்பினால் முழு இரவும் நின்று வணங்கிய நன்மையை பெற வேண்டும் என்று ஆசை கொண்டால் சுப்ஹ் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதாலே போதுமானது. இதையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சர்வசாதாரணமாய் இந்த தொழுகையை புறக்கணித்தால் இந்த தொழுகையை நிறைவேற்ற இனியும் முன்வரவில்லை என்றால் நம்மை விட துர்பாக்கியவான்கள் வேறு யாருமில்லை. 


ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் உற்சாக நன்மையும்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களில் ஒருவர் உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளை பொட்டு விடுகின்றான். ஒவ்வொரு முடிச்சின்போதும், இன்னும் உனக்கு நீண்ட இரவு இருக்கிறது. ஆகவே நீ உறங்கு! என்று கூறி விடுகிறான். நிங்கள் கண் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் உளு செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் தொழுது விட்டால் முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்து விடுகின்றன. நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். இல்லையெனில் மனக் குழப்பத்துடனும், சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவீர்கள்' (அபூஹூரைரா(ரலி) புகாரி 1142

இறைவனை நினைவு கூர்ந்து உளு செய்து சுப்ஹ் தொழுது விட்டால் சுறுசுறுப்பு கிடைப்பதோடு ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்பும் கிடைத்து விடுகின்றது. அதே நேரம் சுப்;ஹ் தொழாமல் உறங்கி விட்டால் சோம்பலுடனே எழுவதாக நபி (ஸல்) கூறுகின்றார்கள். இந்த சுப்ஹ் தொழுகை நமக்கு பல நன்மைகளை பெரிதும் பெற்றுத் தருவதோடு உற்சாகத்தையும் பெற்று தரும் என்று கேட்டாலே நம்மையும் அறியாமல் நம்மிடையே உற்சாகம் தொற்றிக் கொள்ளத்தான் செய்கிறதல்லவா?

நபித்தோழியர்களின் பங்கெடுப்பு

'நம்பிக்கையுள்ள பெண்கள் தங்களை கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் கலந்துக் கொள்வார்கள். தொழுகையை முடித்துக் கொண்டு தங்கள் இல்லங்களுக்கு திரும்பிச் செல்வார்கள். இருட்டின் காரணமாக அவர்களை யாரும் அறிந்துக் கொள்ள முடியாது. (ஆயிஷா(ரலி) புகாரி 578

உமர்(ரலீ) அவர்களின் மனைவியரில் (ஆத்திகா எனும்) ஒருவர் சுப்ஹ், இஷா ஆகியத் தொழுகையைப் பள்ளியில் தொழச் செல்வார். அவரிடம், (உங்கள் கணவர்) உமர்(ரலி) அவர்கள் இதை வெறுக்கிறார்கள்: ரோஷப்படுகிறார்கள் என்று தாங்கள் அறிந்திருந்தும் நீங்கள் ஏன் (பள்ளிக்கு) செல்கிறீர்கள்? என்று  கேட்கப்பட்டது. அதற்கு அவர், (என்னைப் பள்ளிக்குச் செல்ல விடாமல்) அவரை எது தடுக்கிறது? என்ற கேட்க, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை தடுக்காதீர்கள் என்ற கூறியதே உமர்(ரலி) அவர்களை தடுக்கிறது என்று பதில் வந்தது. (இப்னு உமர்(ரலி) புகாரி 900

சுப்ஹ் தொழுவதின் மூலம் அபரிமிதமான நன்மைகளை பெற்றுவிட முடியும் என்று அறிந்து, அதை அடைந்தே தீர வேண்டும் என்பதற்காக இந்த நபித்தோழியர்கள் பங்கெடுத்துள்ளார்கள். பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே தொழலாம் என்றாலும் மற்ற தொழுகைகளை தொழுகிறார்களா? என்பதே கேள்விக்குறி எனும் போது சுப்ஹ் தொழுகையை பற்றி விளக்கி கூற வேண்டிய அவசியமில்லை. வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் காரணம் காட்டுவதை விடுத்து, எவ்வாறு அந்த நபித்தோழியர்கள் இந்த சுப்ஹ் தொழுகையில் பங்கெடுக்க ஆர்வம் செலுத்தினார்களோ அதுபோல இன்றைய பெண்களும் சரி ஆண்களும் சரி பெரிதும் கவனம் செலுத்திட வேண்டும்


சுப்ஹ் தொழாதவருக்குரிய தண்டனை

சுப்ஹ் தொழுகையை நிறைவேற்றினால் நாம் இது வரையிலும் எண்ணிப்பார்த்திராத பெருவாரியான வெகுமதிகள் கிடைக்கும் என்பதை நபிகளாரின் பொன்மொழிகளிலிருந்து விளங்கி விட்டோம். இதையெல்லாம் அறிந்த பிறகும் சுப்ஹ் தொழுகையை கோட்டை விடும் பாக்கியவான்கள்? இருக்கத்தான் செய்வார்கள். இவர்களுக்கு சுப்ஹ் தொழுகையின் நன்மைகள் பெரிதாய் தெரியாது. மாறாக, அந்த சொற்ப நேரத்து தூக்கமே பெரும் சுகமாய் இருக்கும். இதற்கிடையில் அந்த தூக்கத்தின் சிற்றின்பத்தை அனுபவிக்க நமக்கும் அழைப்பு விடுப்பார்கள். இவ்வாறாக சுப்ஹ் தொழுகையை பாழாக்கியவர்களின் மறுமை நிலையை நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கின்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள் தாம் கனவில் கண்ட கல்லால் தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றி குறிப்பிடுகையில், அவர் குர்ஆனைக் கற்று அ(தன் செயல்படுவ)தை விட்டு விட்டவர். கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர் என்று கூறினார்கள். (சமூரா பின் ஜூன்துப் (ரலி) புகாரி 1143
லேசான தலைவலி ஏற்பட்டாலே நம்மால் தாங்க இயலவில்லை. பெரும் பாறையினால் நமது தலை நசுக்கப்படுவதை எப்படி தாங்க முடியும். இந்த கடுமையான தண்டனையிலிருந்து நம்மை காத்துக் கொள்ள சுப்ஹ் தொழுகையை பேணி கொள்வோம். இத்தனை வெகுமதிகளை உள்ளடக்கியுள்ள இந்த தொழுகைக்காக அற்ப தூக்கத்தை கலைப்போமாக!

பெண் குழந்தைகளால் சோதிக்கப்படுதல்

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டார். அவர் அதி­ருந்து சாப்பிட்டவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், ''இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகிறாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்தி­ருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1418, 5995

குழந்தைச் செல்வம் நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய பேறு. இந்த பாக்கியம் இல்லாதவர்கள் இன்று பல கோடிகளை கொட்டிக் கொடுத்தும் குழந்தை கிடைக்காமல் பரிதவிக்கும் நிலையை காண்கிறோம். அதே நேரத்தில் குழந்தையும் கிடைத்து, அவர்களை வளர்ப்பதற்குப் போதிய பொருளாதாரம் இல்லையென்றால் பெற்றோரின் கதியும் அவ்வளவு தான்.

பல குழந்தைகளைப் பெற்றெடுத்து பண வசதியின்மையால் மிகப்பெரும் சிரமத்திற்கு ஆளவோர் இந்தியாவில் பெருமளவில் இருக்கின்றனர். குழந்தைகளை சரி வர வளர்க்க முடியாமல் படிக்க வைக்க முடியாமல் திணறும் பெற்றோர்கள், கடன் சுமை அதிகரித்து, தற்கொலை என்ற மாபாதகமான செயல்களுக்குச் சென்று விடுகின்றனர். இதனால் நிரந்தர நரகத்திற்குச் செல்லும் அவல நிலை அவர்களுக்கு ஏற்படுகின்றது.


குறிப்பாகப் பெண் குழந்தைகளைப் பெற்று விட்டால் பெற்றார்களுக்குப் பெரும் சிரம் ஏற்பட்டு விடுகிறது. அவர்களை ஒழுக்க மிக்கவர்களாக வளர்த்து திருமணமும் செய்து வைப்பது இன்றைய கால சூழ்நிலையில் மிகப் பெரிய சிரமமாகப் பலர் கருதுகின்றனர்.

இன்னலாகக் கருதப்படும் இந்தப் பெண் குழந்தைகள், இவ்வுலகில் பாரமாக இருந்தாலும் அவர்களை நல்ல முறையில் வளர்த்து நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து அவர்களை வளர்ப்பதில் சிரமத்தை ஏற்றுக் கொண்டால் நாம் செய்யும் இந்தக் காரியத்துக்குக் கைமாறாக மறுமை நாளில் இந்தக் குழந்தைகள் நம்மை நரகத்திற்குப் போக விடாமல் தடுக்கும் திரையாக இருந்து சொர்க்கத்திற்கு அனுப்புபவர்களாக மாறுவார்கள். இக்கருத்தைத் தான் மேற்கூறிய நபிமொழி எடுத்துரைக்கிறது.

ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் அவர்கள் ஒன்பது பெண் குழந்தைகளை விட்டு விட்டு இறந்தார்கள். இவர்கள் அனைவரையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு ஜாபிர் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் கன்னிப் பெண்ணை திருமணம் செய்யாமல் விதவைப் பெண்ணை திருமணம் செய்தார்கள். விதவைப் பெண்ணுக்கு அனுபவம் இருக்கும். தம் சகோதரிகளை நல்ல முறையில் பராமரிப்பார், ஒழுக்கம் கற்பிப்பார் என்ற நம்பிக்கையில் கன்னிப் பெண்ணை விட்டுவிட்டு விதவைப் பெண்ணை தேர்வு செய்தார்கள். இதை நபிகளார் அவர்களும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள். (பார்க்க: புகாரி 4052, 5367, 2967)

அறியாமைக் காலத்தில் தான் பெண் குழந்தைகள் பிறப்பது கெட்ட சகுனமாகக் கருதப்பட்டது. மேலும் அவர்களை உயிருடன் புதைக்கும் கொடுமையும் நிழந்தது.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப் பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்தி­ருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 16:58,59)

இவ்வாறு பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தவர்கள் மறுமை நாளில் விசாரிக்கப்பட்டு, கடும் தண்டனை பெறுவார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது, (அல்குர்ஆன் 81:8,9)

பெண் பிள்ளைகளை பிறப்பதை விரும்பாதவர்களையும் அவர்களை உயிருடன் புதைத்தவர்களையும் கடுமையாகக் கண்டிக்கும் இஸ்லாம், சிரமங்களை ஏற்று, பெண் குழந்தைகளை ஒழுக்க மிக்கவர்களாக வளர்த்தால் நிச்சயம் அந்தப் பெற்றோருக்கு சுவனம் கிடைக்கும் என்று கூறுகிறது. எனவே பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் கவலையை மறந்து, நமது இந்தக் குழந்தைகள் மறுமை வெற்றியின் படிக்கற்கள் என்பதை நம்பி அவர்களை நல்ல முறையில் வாழ வைக்க முயற்சி செய்ய வேண்டும்.

திருக்குர்ஆன் வினாடி வினா பாகம் 5


1.            கேள்வி :அண்டை நாட்டு ராணியின் சிம்மாசனத்தை உங்கள் இடத்திலிருந்து எழுவதற்குள் கொண்டு வந்துவிடுகிறேன் என்று சொன்ன ஜின்னின் பெயர் என்ன?
பதில் : இப்ரீத் (அல்குர்ஆன் 27 : 39)
2.            கேள்வி : நம்மிடம் எவ்வளவு நபர்கள் இருந்தால் எதிரிகளிடம் போர் செய்யலாம்?
பதில் : எதிரிகளின் படையின் பாதியளவு (அல்குர்ஆன் 8 : 66)
3.            கேள்வி :திருக்குர்ஆன் ஓதுவதற்கு முன்னர் செய்யவேண்டியவை என்ன?
பதில் :ஷைத்தானிடமிருந்து பாதுகாவல் தேடவேண்டும்.(அல்குர்ஆன் 16:98)
4.            கேள்வி :அறியாமை காலத்தில் இஹ்ராம் அணிந்தவர்கள் தங்கள் வீட்டிற்கு எவ்வழியில் செல்வார்கள்?
பதில் : வீட்டில் கொல்லைப்புற வாசல் வழியாக (அல்குர்ஆன் 2: 189)
5.            கேள்வி : போர் தடை செய்யப்பட்ட மாதங்கள் எத்தனை?
பதில் : நான்கு(துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப்) (அல்குர்ஆன் 9 : 36)
6.            கேள்வி : ஈஸா நபியின் மற்றொரு பெயர் என்ன?
பதில் : மஸீஹ் (அல்குர்ஆன் 4 : 171,172)
7.            கேள்வி : முஹம்மத் என்ற பெயர் திருக்குர்ஆனில் எத்தனை இடங்களில் கூறப்பட்டுள்ளது ?
பதில் : நான்கு (3:144, 33:40, 47:2, 48:29)
8.கேள்வி : மீன் வயிற்றில் இருந்த நபி யார் ?
பதில் : யூனுஸ் (அலை)

9.கேள்வி : திருக்குர்ஆனில்மொத்தம் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன?
பதில் : 114
10.கேள்வி : திருக்குர்ஆனின் மொத்தம் எத்தனை வசனங்கள் உள்ளன?
பதில் : 6236 வசனங்கள்

அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள் part 1


இந்த பூமியில் மனிதன் ஏராளமான குற்றங்களை செய்கிறான், அவன் தன்னால் முடிந்த அளவு இப்பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வை பயந்து நல்லவனாக வாழ்வதற்காக அவனது பாவங்களுக்கு தண்டனைகளை தருவதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். நபி(ஸல்) அவர்களின் மூலமும் இதை நமக்கு தெரியப்படுத்தியுள்ளான்.
இந்த உலகத்தில் குறிப்பிட்ட சில குற்றங்களை செய்தவர்களை மறுமையில் அல்லாஹ் பார்க்கமாட்டான்.அவர்களும் அல்லாஹ்வை பார்க்கும் பாக்கியத்தை இழந்து விடுவார்கள்.இவ்வாறு பின்வரும் வசனம் கூறுகிறது.
அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப் படுவார்கள்
(அல்குர்ஆன் 83 : 15)
மறுமை நாளில் நல்லவர்கள் அனைவரும் அல்லாஹ்வை கண்கூடாக காண்பார்கள். பௌர்ணமி நிலவை நாம் எப்படி அனைவரும் கண்கூடாக பார்க்கிறோமோ அதுபோன்று அல்லாஹ்வை காண்போம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர் : ஜரீர் இப்னு அப்துல்லாஹ்
நூல் : (புகாரி : 7435)
அல்லாஹ்வை பார்ப்பது என்பது சாதாரணமான ஓன்றல்ல, மிகப்பெரிய பாக்கியம், சொர்க்கவாசிகள் சுவர்கத்தில் நுழையும் போது இன்னும் உங்களுக்கு நான் எதையாவது அதிகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? என்று அல்லாஹ் கேட்பான்.நீ எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சுவர்க்கத்தில் நுழையச்செய்யவில்லையா? எங்கள் முகங்களை நீ வெண்மையாக்கவில்லையா? என்று சுவர்க்கவாசிகள் கூறுவார்கள். பிறகு அல்லாஹ் திரையை அகற்றுவான். அல்லாஹ்வை அவர்கள் காண்பதை விட அவர்களுக்கு விருப்பமானதாக எதுவும் இருக்காது,
அறிவிப்பாளர் : ஸþஹைப்
நூல் : (முஸ்லிம் : 266)

அல்லாஹ் பேசமாட்டான் என்பதை நல்லவார்த்தைகளால் அன்போடு பேசமாட்டான் என்று விளங்கிக்கொள்ள வேண்டும்., ஏனெனில் அல்லாஹ் நரகவாசியைப் பார்த்து வேதனையை சுவை என்று கூறுவதாக திருறைக் குர்ஆன் கூறுகிறது.
சுவைத்துப்பார்! நீ மிகைத்தவன்; மரியாதைக்குரியவன். நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தது இதுவே (என்று அல்லாஹ் கூறுவான்.)
அல்குர்ஆன் ( 44 : 49 )
இன்னும் கேலிசெய்யும் விதமாக அல்லாஹ் நரகவாசியிடம் பேசுவதை குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. மறுமை நாளில் பாவிகளை அல்லாஹ் விசாரிப்பான் என்று பல நபிமொழிகளும் கூறுகின்றன. அல்லாஹ் தூய்மைப்படுத்தமாட்டான் என்றால் பாவத்திலிருந்து தூய்மைப்படுத்தி குற்றமற்றவர்களாக ஆக்கமாட்டான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
குர்ஆனிலும் நம்பத்தகுந்த நபிமொழியிலும் கிட்டத்தட்ட பத்து நபர்கள் இந்த தண்டனைக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். இன்னும் இரண்டு நபர்கள் இந்த தண்டனைக்கு உரியவர்கள் என்று பலகீனமான ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த 12 நபர்கள் யார் யார் என்பதை வரிசையாக இனி பார்ப்போம்.
(1) வேதத்தை மறைத்தவர்கள்
அற்பமான பணத்திற்காக அல்லாஹ்வின் வசனங்களை மக்களுக்கு மறைத்தவர்களை அல்லாஹ் பார்க்கமாட்டான். இன்னும் அவர்களிடம் பேசவும்மாட்டான். அவர்களைத் தூய்ûம்படுத்தவும்மாட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
அல்குர்ஆன் ( 2 : 174 )
 இன்று பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இந்த தவற்றை செய்துவருகிறார்கள். குர்ஆனுக்கும் ஹதீஸþக்கும் மாற்றமான எத்தனையோ விஷயங்கள் அவர்களிடம் காணப்படுகின்றது. அவற்றையெல்லாம் மக்களிடம் கூறினால் தன்னுடைய பொருளாதாரத்திற்கு பாதிப்பு வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள்.
 உதாரணமாக இன்று சமுதாயத்தில் மவ்லூது பாத்திஹா கதம் போன்ற பித்அத்துகள் அனைத்தும் வருமானத்திற்காகத் தான் ஆலிம் பெருந்தகைகளால் உருவாக்கப்பட்டது. இவற்றை செயல்படுத்தும் படி அல்லாஹ்வோ அவனது தூதர் (ஸல்) அவர்களோ கூறவில்லை என்பது ஆலிம்களுக்கு நன்றாகத் தெரியும். நாம் இவற்றுக்கு எதிரான வசனங்களையும் ஹதீஸ்களையும் கூறினாலும் அவர்கள் ஏற்பதற்கு முன்வருவதில்லை. பல வியாக்கானங்களைக் கூறி அவர்கள் செய்வதையே சரி காண்கிறார்கள்.
 இவ்வாறு பணத்திற்காக வசனங்களை நாம் மறைத்தால் அல்லாஹ் நம்முடன் பேசாமல் இருப்பதோடு நாம் இவ்வழியில் சம்பாதித்தவற்றை நெருப்பாக மாற்றி உண்ண வைப்பான். கடுமையான இந்தத் தண்டனையை நமது மார்க்க அறிஞர்க்ள் எண்ணிப்பார்ப்பதில்லை.
இந்த உலகில் வேண்டுமானால் அதிகமாக சம்பாதித்துக் கொண்டு மகிழ்சியாக வாழலாம். ஆனால் மறுமையில் இதற்கான பதிலை நாம் கூறாமல் அல்லாஹ்விடமிருந்து தப்பிக்க முடியாது. நபிமார்களாக இருந்தாலும் அவர்களையும் அல்லாஹ் விசாரிக்காமல் விட்டுவிடமாட்டான்.
உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்.
அல்குர்ஆன் (15 : 92)
யாருக்குத் தூதர்கள் அனுப்பப் பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம்.
அல்குர்ஆன் (7 : 6)
இதைத் தெளிவாக சஹாபாக்கள் விளங்கியிருந்தார்கள். அபூஹீரைரா (ரலி) அவர்கள் அதிகமாக ஹதீஸை அறிவிப்பதை சஹாபாக்கள் குறையாகக் கூறிக்கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் அபூஹீரைரா (ரலி) அவர்கள் ஓரு பொருட்டாக கருதாமல் தான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட செய்திகளை மக்களுக்கு கூறினார்கள். மார்க்கத்தை மறைக்கக் கூடாது என்று அவாகள் எண்ணியதே இதற்கு காரணம்.
மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழி யையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய) வர்களும் சபிக்கின்றனர்.
அல்குர்ஆன் (2 : 159)
இந்த வசனத்தை அபூஹீரைரா (ரலி) அவர்கள் சுட்டிகாட்டி இந்த வசனம் மட்டும் இல்லாவிட்டால் நான் ஓரு ஹதீஸைக் கூட கூறியிருக்கமாட்டேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 118)
நாம் சிறிய சிறிய விஷயங்களில் உறுதிமொழி வாங்கமாட்டோம். மிக முக்கியமான விஷயத்தில் தான் உறுதிமொழி வாங்குவோம். மார்க்கத்தை மறைப்பது மாபெரும் குற்றம் என்பதால் அக்குற்றத்தை செய்யக்கூடாது என்று நமக்கு முன் வேதம் வழங்கப்பட்டவர்களான யூத கிரிஸ்தவர்களிடத்தில் அல்லாஹ் உறுதிமொழி வாங்கினான். இந்த உறுதிமொழியை அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆதலால் தீமையை சம்பாதித்துக் கொண்டார்கள்.
வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர் அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது
அல்குர்ஆன் (3 : 187)
நாம் இந்த உலகத்திற்கு வந்ததின் நோக்கம் மறுமையில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகத் தான். நாம் தொழுவதும் நோன்பு வைப்பதும் அவ்வுலகில் பலனை அடைவதற்காகத் தான். ஆனால் நாம் மார்க்கத்தை மறைப்போமானால் மறுமையில் நமக்கு எந்த பலனும் கிடைக்காது. அல்லாஹ் வேதமுடையோர்களிடத்தில் செய்த இந்த உடன்படிக்கையை அவர்கள் நிறைவேற்றாத காரணத்தினால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று குர்ஆனில் கூறுகிறான்.
அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
அல்குர்ஆன் (3 : 77)


(2) பொய்சொல்லி வியாபாரம் செய்தவர்கள்
இன்று பொய் இல்லாமல் வியாபாரம் கிடையாது என்று கூறும் அளவுக்கு பொய் வியாபாரத்தில் கலந்துவிட்டது. உண்மையைக் கூறி நியாயமாக வியாபாரம் செய்பவன் பிழைக்கத் தெரியாதவன் என்றும் பொய்சொல்லி ஏமாற்றுபவன் அறிவாளி என்றும் நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம்.
 நியாயமாக பிழைப்பவனுக்கு குறைவாக வருமானம் வந்தாலும் அதில் அல்லாஹ் நிறைவான் பரகத்தை வழங்குகிறான். அநியாயமாகப் பிழைப்பவனுக்கு நிறைவாக வருமானம் வந்தாலும் அதில் அல்லாஹ் பரகத்தை அளித்துவிடுகின்றான். இதை பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
விற்பவரும் வாங்குபவரும் பிரியும் வரை (வியாபாரத்தை முறித்துக் கொள்ளும்) உரிமைபடைத்திருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மையைக் கூறி (பொருளின் குறையைத்) தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் செய்யப்படும். அவர்கள் பொய் கூறி (பொருளின் குறையை) மறைத்தால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் நீக்கப்படும்.
அறிவிப்பாளர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)
நூல் :  (புகாரி : 2110)
வியாபாரிகள் அனைவரும் பொய்சொல்வார்கள் என்பதை மக்கள் தெளிவாக அறிந்து வைத்துள்ளார்கள்.வியாபாரி அசல் விலை 50 ரூபாய் என்று கூறினால் வாங்குபவர் 30 ரூபாய்க்குத் தாருங்கள் என்று கேட்கிறார். மக்கள் யாரும் அவர்கள் கூறுவது உண்மை என்று நம்பத்தயாராக இல்லை. அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்களில் இவ்வாறு பொய் கூறி வியாபாரம் செய்தவனும் ஓருவனாவான்.
மூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும்மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். (ஓருவன் தன் பொருளை அதிக விளைக்கு) விற்பதற்காக வாடிக்கையாளர் கொடுக்கும் விளையை விட அதிக விளைகொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 2369)
(3) சுயநலத் தொண்டன்
ஓரு இயக்கத்திற்கோ அல்லது ஓரு குழுவிற்கோ நாம் ஓருவரை தலைவராக ஏற்றுக்கொள்வதாக இருந்தால் பொதுநலனை கருத்தில் கொண்டு ஏற்க வேண்டும். இயக்கத்திற்கு விசுவாசமாக நடக்கும் நாணயமானவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தனக்கு மட்டும் பலனளிக்கும் நபரை தேர்வு செய்யக் கூடாது. நியாயமானவர்களின் முடிவு அப்படி இருக்கும்.
ஆனால் இன்று பெரும்பாலான தொண்டர்கள் இதை கவனத்தில் வைப்பதில்லை. தன்னுடைய நலனுக்காக கொல்லைக்காரர்களையும் அயோக்கியர்களையும் தலைவராக ஏற்றுள்ளார்கள். தலைவன் அவர்களுக்கு வாரி வழங்கினால் அவனுக்கு விசுவாசமான தொண்டனாக இருக்கிறார்கள். தலைவன் அவர்குளுக்கு வழங்கவில்லையென்றால் அவனை பகைக்கிறார்கள்.
 இன்று நமது நாட்டில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. இந்தக் கட்சிகளில் இன்று ஓரு கட்சியில் தொண்டனாக இருப்பவர் நாளை வேறொரு கட்சியில் தொண்டனாக உள்ளார். நேற்றுவரை தன் தலைவனை போற்றி புகழ்ந்தவர்கள் இன்று திட்டிக்கொண்டிருக்கிறாôகள். தலைவர் நாணயமானவராக இருந்தாலும் தனக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் வெறுக்கிறார்கள். எதிரியாக மாறி அவனைப் பற்றி குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள். இது போன்ற சந்தர்ப்ப வாதிகளுக்கும் அல்லாஹ் இந்த தண்டனையை வழங்குவான்.
அவன் தன் தலைவனிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டவன். அவர் கொடுத்தால் திருப்தி அடைந்து கொடுக்காவிட்டால் கோபம் கொள்பவன்,
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 2358)
தலைவர் மார்க்கத்திற்கு மாற்றமான காரியத்தை செய்யும் படி கூறினால் அவருக்கு கட்டுப்பட கூடாது. ஏனெனில் (அல்லாஹ்வுக்கு) மாறுசெய்வதில் கட்டுப்படுதல் இல்லை. கட்டுப்படுதல் என்பது நல்ல விஷயத்தில் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர் : அலீ (ரலீ)
நூல் : (புகாரி : 7257)
தலைவர் அநீதமாக நடந்தாலும் அவருக்கு எதிராக நாம் களம் இறங்கக்கூடாது.
நமது தேவையை  அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறக்கூடாது. தலைவர் நம்மை விட அழகில் அந்தஸ்த்தில் தாழ்ந்தவராக இருந்தாலும் கட்டுப்பட வேண்டும்.
                விரைவில் உங்களை விட பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இன்னும் நீங்கள் வெறுக்கின்ற சில காரியங்களும் நடக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதரே அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள் என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்குரிய உரிமைகளை அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : (புகாரி : 3603)
                உலர்ந்த திராட்சைப் போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கருப்ப நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரது சொல்லை) கேளுங்கள். (அவருக்கு) கீழ்படியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக்
நூல் : (புகாரி : 7142)

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites