அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 17 நவம்பர், 2011

குண்டாகும் பள்ளி குழந்தைகள்!

இந்தியாவில் உணவு பழக்கம் மாறி வருவதாலும், ஓடியாடி விளையாடுவது குறைந்து வருவதாலும் 20 சதவீத குழந்தைகள் குண்டாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில் இவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்பட்டு வாழ்நாள் குறையும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் மாறி வரும் உணவு பழக்கம் மற்றும் அதுதொடர்பான பாதிப்புகள் குறித்து போர்ட்டிஸ் டயபடீஸ் மையம் மற்றும் போர்ட்டிஸ் மருத்துவமனையின் மெட்டபாலிக் நோய்கள் மற்றும் எண்டோகிரைனாலஜி துறை இணைந்து ஒரு ஆய்வு நடத்தியது.

இதில் கிடைத்த தகவல்கள் குறித்து டயபடீஸ் மையத்தின் தலைவர் அனூப் மிஸ்ரா கூறியதாவது:

உணவு பழக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகள்தான் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம். இது பெரியவர்களை மட்டுமின்றி தற்போது சிறுவர்களையும் அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் சராசரியாக 15 முதல் 21 சதவீத குழந்தைகள் குண்டாக உள்ளனர். ஃபாஸ்ட்புட், ஜங்க் புட் ஐட்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதாலும் உடலுக்கு பயிற்சி அளிக்காமல் அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பதாலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
9  18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 9 சதவீதத்தினர் தொந்தியும் தொப்பையுமாக இருக்கின்றனர். இளம் வயதில் தொப்பை விழுவது இன்சுலின் சுரப்பை நேரடியாக பாதித்து சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளில் 68% பேர் ஓடியாடி விளையாடுவதில்லை. வெளியே விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல், கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம் என்று அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கின்றனர்.
நமது பாரம்பரிய உணவுகள் குறைந்த கொழுப்பு உள்ளவை, உடலுக்கு ஆரோக்கியமானவை, நார்ச் சத்து அதிகம் உள்ளவை, ஊட்டச்சத்து நிறைந்தவை. இதில் இருந்து விலகிப் போகும் நகர்ப்புற குழந்தைகள் கொழுப்பு சத்து, இனிப்பு அதிகம் உள்ள உணவு பொருட்கள், ஃபாஸ்ட்புட், ஜங்க் புட் நிறைய சாப்பிடுகின்றனர். குண்டாக இருக்கும் குழந்தைகளில் 70 சதவீதம் பேர் வயதான பிறகும் குண்டாகவே இருப்பார்கள். இவர்களுக்கு டயபடீஸ், அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். இதன் காரணமாக, இன்னும் 20 ஆண்டுகளில் சராசரி ஆயுள்காலம் குறையும் அபாயமும் இருக்கிறது.

குர்ஆன் & ஹதீஸ் உள்ள கேள்வி பதில்கள் part 3

கேள்வி: மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் இதை கண்டிப்பாக விடவேண்டும், மற்ற நாட்களில் அதை நிறைவேற்ற வேண்டும். அது என்ன?
பதில் : நோன்பு (ஆதாரம் : முஸ்லிம் 560)
கேள்வி : இந்த இரண்டு நாட்களில் நோன்பு நோற்பது தடையாகும் அந்த நாட்கள் எவை?
பதில் : நோன்பு பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் (ஆதாரம் : புகாரீ (1992)
கேள்வி : திருமணம் செய்ய சக்தி இல்லாதவர் எதை செய்யவேண்டும்?
பதில் : நோன்பு நோற்க வேண்டும் (ஆதாரம் : புகாரீ 1905)
கேள்வி : ரமலானில் விடுபட்ட நோன்பை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் எந்த மாதத்தில் நிறைவேற்றினார்கள்?
பதில் : ஷஅபான் மாதம் (ஆதாரம் : புகாரீ 1950)
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுவதற்கு முன்னரே ஆஷூரா தினத்தை கண்ணியப்படுத்தி நோன்பு நோற்றவர்கள் யார்?
பதில் : யூதர்கள் (ஆதாரம் : புகாரீ 3942)
கேள்வி : ஆஷூரா தினத்தன்று யூதர்கள் எதற்காக நோன்பு நோற்றார்கள்?
பதில் : பிர்அவ்னிடத்திலிருந்து பனீஇஸ்ராயில்களை அல்லாஹ் அந்த தினத்தில் காப்பாற்றியதால் (ஆதாரம் : புகாரீ 3943)
கேள்வி : கணவன் ஊரில் இருக்கும் போது உபரியான நோன்பை மனைவி நோற்கலாமா?
பதில் : கணவன் அனுமதி இல்லாமல் நோற்கக்கூடாது (ஆதாரம் : புகாரீ 5195)
கேள்வி : யாருடை வாய் வாடை கஸ்தூரியின் வாடையை விட அல்லாஹ்விடம் சிறந்ததாக கருதப்படுகிறது?
பதில் : நோன்பாளியின் வாய் வாடை (ஆதாரம் : புகாரீ 5927)
கேள்வி : மாதத்தின் எந்த மூன்று நாட்கள் நோன்பு நோற்பது விருப்பத்திற்குரியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்?
பதில் : பிறை 13,14,15 (ஆதாரம் : நஸயீ 2377)
திங்கள் கிழமை நோன்பு நோற்பது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது என்ன பதிலளித்தார்கள்.
பதில் : அன்றுதான் நான் பிறந்தேன், அன்றுதான் எனக்கு வஹீ வந்தது என்றார்கள் (ஆதாரம் : முஸ்லிம் 2153)
கேள்வி : சுவர்க்கத்திற்குரிய எட்டு வாசல்களில் நோன்பாளிகள் மட்டும் சுவர்க்கத்திற்கு செல்லும் வாசலின் பெயர் என்ன?
பதில் : ரய்யான் (ஆதாரம் : புகாரீ 3257)
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் அதிகம் தர்மம் செய்யும் மாதம் எது?
பதில் : ரமலான் (ஆதாரம் : புகாரீ 1902)
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் மனனம் செய்த திருக்குர்ஆன் வசனங்களை எம்மாதத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சரிபார்ப்பார்கள்?
பதில் : ரமலான் (ஆதாரம் புகாரீ 1902)
கேள்வி : இஃதிகாஃப் ரமலானில் எப்போது இருக்கவேண்டும்?
பதில் : கடைசி பத்தில் (ஆதாரம் : புகாரீ 2026)
கேள்வி : னதிருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம் எது?
பதில் : ரமலான் (ஆதாரம் : அல்குர்ஆன் 2:185)
கேள்வி : ரமலான் உம்ரா செய்வது எந்த நன்மையை பெற்றுத் தரும்?
பதில் : ஹஜ் செய்த நன்மையை பெற்றுத்தரும் (ஆதாரம் : புகாரீ1782)
கேள்வி : ரமலான் நோன்பு கடமையாவதற்கு முன்னர் எந்த நோன்பை நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்?
பதில் : ஆஷ‏þரா நோன்பு (ஆதாரம் : புகாரீ 1892)
கேள்வி : மக்கா வெற்றி எந்த மாதத்தில் நடந்தது?
பதில் : ரமலான் மாதம் (ஆதாரம் : புகாரீ 4275)

சனி, 12 நவம்பர், 2011

குர்ஆன் & ஹதீஸ் உள்ள கேள்வி பதில்கள் part 2

கேள்வி : நூஹ் நபி எத்தனை வருடங்கள் வாழ்ந்தார்கள் ?
பதில் : 950 வருடங்கள் (அல்குர்ஆன் 29:14)
கேள்வி : வித்ர் குனூத்தை நபிகளார் யாருக்கு கற்றுக் கொடுத்தார்கள்?
பதில் : ஹஸன் (ரலி)  நூல் : நஸயீ (1726)
கேள்வி : ஒரே காலத்தில் வாழந்த நபிமார்கள் யார்? யார்?
பதில் : மூஸா அலை) - ஹாரூன் அலை), இப்ராஹீம் (அலை) - லூத் (அலை), இஸ்மாயீல் (அலை), தாவூத் (அலை) - சுலைமான் (அலை), யாகூப் (அலை), யூசுஃப் (அலை)  (அல்குர்ஆன் 10:5, 11:69,70, 21:78, 2:125)
கேள்வி : எதைக் கூறினால் என் பரிந்துரை கிடைக்கும் என்று நபிகளார் கூறினார்கள்?
பதில் : பாங்கு துஆ  நூல் : புகாரீ (614)
கேள்வி : நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலையின் பெயர் என்ன?
பதில் : ஜுýதீ மலை (அல்குர்ஆன் 11:44)
கேள்வி : நயவஞ்கர்களுக்கு மிகவும் கடுமையாக தோன்றும் இரண்டு தொழுகைகள் எது?
பதில் : பஜ்ர்- இஷா  நூல் : புகாரீ (657)
கேள்வி :வயது முதிர்ந்த காலத்தில் குழந்தை பெற்ற நபிமார்கள் யார்?
பதில் : இப்ராஹீம் (அலை), ஸக்கரிய்யா (அலை) (அல்குர்ஆன் 11:72,19 : 8,9)
கேள்வி : வெள்ளிக்கிழமை குளிப்பது யார் மீது கடமை?
பதில் : பருவ வயதை அடைந்தவர்கள்  நூல் : புகாரீ (858)
கேள்வி :முஃமின்களுக்கு முன் உதாரணமாக கூறப்பட்ட இருவர் யார்?
பதில் : பிர்அவ்னின் மனைவி, மர்யம்(அலை) (அல்குர்ஆன் 66 : 11,12)
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில் எந்த மூன்று அத்தியாயங்களை ஒரே ரக்அத்தில் ஓதினார்கள்?
பதில் : பகரா, நிஸா,ஆலுஇம்ரான்  நூல் : முஸ்லிம் (1421)
கேள்வி : காபிர்களுக்கு முன் உதாரணமாக கூறப்பட்ட இருவர் யார்?
பதில் : நூஹ் (அலை) அவர்களின் மனைவி, லூத் (அலை) அவர்களின் மனைவி (அல்குர்ஆன் 66:10)
கேள்வி : கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் செல்லும் 70 ஆயிரம் நபர்களில் உள்ளவராக யாரை நபிகளார் குறிப்பிட்டார்கள்.
பதில் : உக்காஸா (ரலி),  நூல் : புகாரீ (5705)
கேள்வி : மர்யம் (அலை) அவர்களின் சகோதரர் பெயர் என்ன ?
பதில் : ஹாரூன் (அலை) (அல்குர்ஆன் 19:28)
கேள்வி :அல்லாஹ்விடம் மனிதர்களின் அமல்கள் எடுத்துக்காட்டப்படும் நாட்கள் எது?
பதில் : திங்கள்,வியாழன் நூல் : முஸ்லிம் (4653)
கேள்வி : தொட்டில் குழந்தையாக இருந்த போதே பேசிய நபி யார்?
பதில் : ஈஸா (அலை) (அல்குர்ஆன் 19:29,30)
கேள்வி : பெருநாள் தொழுகையின் கூடுதல் தக்பீர்கள் எத்தனை?
பதில் : 7,5  நூல் : திர்மிதீ (492)
கேள்வி : மூன்று நாட்கள் மக்களிடம் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்தவர் யார்?
பதில் : மர்யம் (அலை) (அல்குர்ஆன் 19:26)
கேள்வி : மாதத்தில் எந்த மூன்று நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்?
பதில் : பிறை 13,14,15  நூல் : நஸயீ (2377)
கேள்வி : வயது முதிர்ந்த காலத்தில் குழந்தை பிறக்கும் என்பதற்கு அடையாளமாக ஸக்கரிய்யா நபிக்கு எதை அல்லாஹ் கூறினான்?
பதில் : நல்ல நிலையில் இருந்தும் மூன்று இரவுகள் மக்களிடம் அவர்களால் பேசமுடியாது (அல்குர்ஆன் 19:10)
கேள்வி : நபிகளார் இறந்த வருடத்தில் எத்தனை நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்?
பதில் : 20 நாட்கள்  நூல் : புகாரீ (2044)
கேள்வி : அல்லாஹ்வே பெயரிட்ட நபிமார்களின் பெயர் என்ன?
பதில் : யஹ்யா (அலை), ஈஸா (அலை) (அல்குர்ஆன் 19:7, 3:45)
கேள்வி : பிர்தவ்ஸ் என்ற சுவர்க்கத்திற்குரியவர் என்று சொல்லப்பட்ட நபித்தோழர் யார்?
பதில் : ஹாரிஸா (ரலி)  நூல் : புகாரீ (2809)
கேள்வி :மனிதன் இறந்தால் அவனை அடக்கம் செய்ய வேண்டுமென மனிதனுக்கு கற்றுக் கொடுத்தது எது?
பதில் : காகம் (அல்குர்ஆன் 5:31)
கேள்வி : ஷஹீதுடைய எந்த பாவம் மன்னிக்கப்படாது?
பதில் : கடன்  நூல் : முஸ்லிம் (3832)

திங்கள், 31 அக்டோபர், 2011

குர்ஆன் & ஹதீஸ் உள்ள கேள்வி பதில்கள் part 1

கேள்வி : நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் குழந்தைகளின் பெயர் என்ன?
பதில் : இஸ்மாயீல் (அலை), இஸ்ஹாக் (அலை) (அல்குர்ஆன் 14 : 39)
கேள்வி : ஹ‏ýýதையைபிய்யா உடன்படிக்கை நடந்து கொண்டிருக்கும் போது கையில் விலங்குடன் வந்த நபித்தோழர் யார்?
பதில் : அபூஜன்தல் (ரலி)  நூல் : புகாரீ (2734)
கேள்வி : உருக்கிய செம்பைப் போலும் கொதிக்க வைக்கப்பட்ட நீர் கொதிப்பதைப் போலும் வயிறுகளில் அது கொதிக்குமே அந்த மரத்தின் பெயர் என்ன?
பதில் :  ஸக்கூம் (அல்குர்ஆன் 44 : 43-46)
கேள்வி : எந்த வழியை தேடினால் சுவர்க்கத்தின் வழி இலகுவாகும்?
பதில் : கல்வி  நூல் : முஸ்லிம் (4867)
கேள்வி : காளைக் கன்றை கடவுளாக சித்தரித்தவன் யார்?
பதில் : சாமிரீ (அல்குர்ஆன் 20 : 87,88)
கேள்வி : அல்லாஹ்வின் வாள்களில் ஒரு வாள் என்று சொல்லப்பட்ட நபித்தோழர் யார்?
பதில் : காலித் பின் வலீத் (ரலி)  நூல் : புகாரீ (4262,1246)
கேள்வி : கடவுளாக சித்தரிக்கப்பட்ட காளைக் கன்றை நபி மூஸா (அலை) அவர்கள் என்ன செய்தார்கள் ?
பதில் : அதை நெருப்பில் எரித்து அதன் சாம்பலை கடலில் தூவினார்கள்.     (அல்குர்ஆன் 20 : 97)
கேள்வி : இந்த சமுதாயத்தில் நம்பிக்கைக்குரியவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட நபித் தோழர் யார்?
பதில் : அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி),  நூல் :புகாரீ (4382)
கேள்வி : நபி மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாரிடம் எந்த அற்புதத்தை காட்டி அல்லாஹ் உடன்படிக்கை எடுத்தான் ?
பதில் : தூர் மலை தலைக்கு மேல் உயர்த்தி (அல்குர்ஆன் 2: 93, 7:171)
கேள்வி : ஷஹீதுடைய எந்த பாவம் மன்னிக்கப்படாது?
பதில் : கடன்  நூல் : முஸ்லிம் (3832)
கேள்வி : ஜாலூத் என்பவன் யார்?
பதில் : நபி தாவூத் (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த கொடுங்கோல் மன்னன் (அல்குர்ஆன் 2 : 251)
கேள்வி : நபிகளார் காலத்தில் யார் இறந்த போது சூரிய கிரகணம் நிகழ்ந்தது?
பதில் : நபிகளாரின் மகன் இப்ராஹீம் (ரலி), நூல் : புகாரீ (1043)
கேள்வி : தாவூத் நபி எந்த மன்னரின் கீழ் வீரராக திகழ்ந்தார்கள்?
பதில் : தாலூத் (அல்குர்ஆன் 2 : 247 -251)
கேள்வி : இவர் ஒருபக்கம் நடந்தால் ஷைத்தான் இன்னொரு பக்கம் ஓடிவிடுவான் புகழ்ந்து கூறப்பட்ட நபித்தோழர் யார்?
பதில் : உமர் (ரலி), நூல் : புகாரீ (3294)
கேள்வி : ஐயாயிரம் வானவர்களைக் கொண்டு உதவி செய்வேன் என்று எந்த போர்க்களத்தில் அல்லாஹ் கூறினான்?
பதில் : பத்ர் (அல்குர்ஆன் 3 : 123-125)
கேள்வி : ஹ‏ýýதைபிய்யா உடன்படிக்கை ஏற்க மறுத்த முக்கிய நபித்தோழர் யார்?
பதில் :உமர் (ரலி), நூல் : புகாரீ (2734)
கேள்வி : குர்ஆனில் பெயர் கூறப்பட்ட நபித் தோழர் யார் ?
பதில் : ஸைத் (ரலி) (அல்குர்ஆன் 33 : 37)
கேள்வி : நபிகளாரின் மனைவியர்களில் அதிகம் தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தவர் யார்?
பதில் : ஸைனப் (ரலி), நூல் : முஸ்லிம் (4490)
கேள்வி : நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தை பெயர் என்ன?
பதில் : ஆஸர் (அல்குர்ஆன் 6 : 74)
கேள்வி : படைத்தவனுக்கு அடுத்து நாம் பணிவிடை செய்யவேண்டிய நபர் யார்?
பதில் : தாய், நூல் : புகாரீ (5971)
கேள்வி :நபி நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் இருந்த சிலைகளின் பெயர் என்ன?
பதில் : வத்து, ஸுவாவு, யகூஸ், யவூக், நஸ்ர் (அல்குர்ஆன் 71 : 23)
கேள்வி : ஒரு முஸ்லிமை அதிகபட்சமாக எத்தனை நாட்கள் வெறுத்திருக்கலாம்?
பதில் : மூன்று நாட்கள், நூல் : புகாரீ (6065)
கேள்வி : நபி யூனுஸ் அவர்கள் அனுப்பப்பட்ட மக்களின் தொகை எவ்வளவு?
பதில் : ஒரு இலட்சம் அல்லது அதற்கு மேல் (அல்குர்ஆன் 37 : 147)

புதன், 19 அக்டோபர், 2011

பொருளாதாரம்

1.    எல்.ஐ.சி. பொதுத் துறை நிறுவனமா?
விடை : ஆம்
2.    சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிதி உதவியை தரும் மிகப் பெரிய நிறுவனம் எது?
விடை : சிட்பி
3.    எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது?
விடை : இயற்கை வாயு
4.    1750ம் ஆண்டில் எந்த நாட்டில் தொழிற்புரட்சி உருவானது?
விடை : இங்கிலாந்து
5.    கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு எது?
விடை : ரஷ்யா
6.    ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது?
விடை : ஜப்பான்
7.    ஒரே நேரத்தில் பணக்காரருக்கும் ஏழைகளுக்குமாக செயல்படும் 2 நாடுகள் இங்கிலாந்தில் உள்ளன என கூறியவர் யார்?
விடை : டிஸ்ரேலி
8.    இங்கிலாந்தில் தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகளை வடிவமைத்த முதலாவது தொழில் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
விடை : 1802
9.    தாஸ் கேபிடல் என்னும் புத்தகத்தத எழுதியவர் யார்?
விடை : கார்ல் மார்க்ஸ்
10.    பாஸ்டன் தேனீர் விருந்து என்பது எதோடு தொடர்புடையது?
விடை : தேயிலை மீதான வரி
11.    பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
விடை : ஆடம் ஸ்மித்
12.    வளர்ச்சி குறைந்த நாடுகளின் தன்மை என்ன?
விடை : வறுமைக் கோட்டுக்குக் கீழே அதிகமானோர் இருப்பது
13.    வளர்ச்சியின் 5 நிலைகள் என்னும் கோட்பாட்டைத் தந்தது யார்?
விடை : ராஸ்டோவ்
14.    நாட்டின் பிரிவினையால் பாதிக்கப்பட்ட 2 தொழில்கள்
விடை : ஜூட் மற்றும் பருத்தி
15.    இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
விடை : உ.பி.
16.    இந்திய திட்டக் குழுவிற்கு தலைவர் யார்?
விடை : பிரதமர்

சனி, 15 அக்டோபர், 2011

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? கொஞ்சம் இத படிங்க!


Coffee cup
Hot Coffee
சூடாக காப்பி, டீ குடிப்பவரா? சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!
“மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”
இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர்.
சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிகிறது.
தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டில் தான் காபி குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எடுத்துக்கொண்டால், எவருமே டீ குடிப்பதை தான் விரும்புகின்றனர்.
காலையிலும் டீ குடித்தால் தான் பத்திரிகை யையே படிக்க தோன்றும் சிலருக்கு; இன்னும் சிலருக்கு படுக்கையிலேயே டீ வந்தாக வேண்டும். “பெட் டீ’ குடித்தபின் தான் திருப்பள்ளியெழுச்சி நடக்கும். அந்த அளவுக்கு டீ மோகம் உள்ளது.
“காலையில் எழுந்தாலும் சரி, மற்ற நேரங்களிலும், சூடா ஒரு டீ குடித்தால் போதும்… உடல் இன்ஜினுக்கு பெட்ரோல் போட்ட மாதிரி; அப்புறம் தான் வேலையே ஓடும்’ என்று பலர் குறிப்பிடுவதை கேட்டிருப்பீர்கள்.
ஆபீசில் வேலை செய்வோரும், தொழிற் சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும் மணிக்கொரு தரம் டீ குடித்தால் தான் சோர்வு நீங்கியது போல உணர்வர்; தம்மாத்தூண்டு டம்ளரில் கொடுத்தாலும், அதை குடித்தால் தான் சுறுசுறுப்பே வரும்.
அதிக சூடாக டீ குடிப்பதால் ஏற்படும் உடல் கோளாறு பற்றி கடந்த சில ஆண்டாக மேற்கொண்டு வந்த ஆய்வில் இந்திய நிபுணர்கள் ஆபத்தான சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வு முடிவுகளில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்:
* வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது; குறிப்பிட்ட அளவில் தான் சூட்டை அது தாங்கும். அதிகமானால், அதன் சுவர் அரிக்கத் துவங்கி விடும்.
* அதிகமான சூட்டுடன் டீ குடித்தால் , உணவுக்குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன; அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, திசுக்கள் பலவீனம் அடைகின்றன.
* இதனால், சுவர்ப்பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளது. மற்றவர்களை விட, சில பழக்க வழக்கங்களை கடைபிடிப்பவர்களுக்கு கேன்சர் ஆபத்து அதிகம்.
* பான் பராக், புகையிலை போன்றவற்றை சுவைப்பவர்களுக்கு 1.1 மடங்கு கேன்சர் வாய்ப்பு அதிகம்.
* பீடி குடிப்போருக்கு 1.8 மடங்கு கேன்சர் ஆபத்து உள்ளது.
* சிகரெட் பிடிப்போருக்கு இரண்டு மடங்கு கேன்சர் அபாயம் உள்ளது.
* மது குடிப்போருக்கு கேன்சர் அபாயம் 1.8 மடங்கு.
* அதிக சூட்டுடன் டீ குடிப்போருக்கு, கேன்சர் வரும் வாய்ப்பு இவர்களை விட, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
* வெயில் பருவத்தை விட குளிர்காலத்தில், குளிர் பிரதேசத்தில் உள்ளவர்கள் சூடாக டீ குடித்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம்.
* சூடான பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு ஓரளவு பாதிப்பு வாய்ப்பு குறைவு தான்.
இவ்வாறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
அதிக சூடாக டீ குடித்தால் தான் கேன்சர் வரும்; அதிக சூடாக காபி குடித்தால்…? இப்படி காபி குடிப்பவர் களுக்கு கேன்சர் வாய்ப்பு அதிகரித்ததே இல்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இவர்களின் ஆய்வு முடிவுகளை சர்வதேச நிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
டாடா நிபுணர்கள்,தங்கள் ஆய்வுக்கு காஷ்மீரில் 1,500 பேரிடம் சர்வே எடுத்துள்ளனர். அவர்களில் அதிக சூடாக டீ குடிப்போருக்கு கேன்சர் ஆபத்து உள்ளதை உறுதி செய்தனர்.
ஆண்டுக்கு, இப்படிப்பட்டவர்களில் சராசரியாக 800 பேருக்கு கேன்சர் வருவதும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் சர்வதேச கேன்சர் ஆராய்ச்சி இதழ், “இன்டர்நேஷனல் கேன்சர் எபிடமாலஜி’யில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
அது சரி, நீங்கள் அதிக சூடாக டீ குடிப்பவரா? அப்படீன்னா, இனி குடிக்க மாட்டீங் கல்ல….

புதன், 12 அக்டோபர், 2011

இயற்பியல்

1. ஒரு குதிரைத்திறன் என்பது விடை : 746 வாட் 2. வௌவால் ஏற்படுத்துவது விடை : மீயொலி 3. குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும் விடை : மாயபிம்பம் 4. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம் விடை : பரப்பு இழுவிசை 5. முதன்மை நிறங்கள் எதனை சொல்லப்படும் விடை : சிவப்பு, பச்சை, நீலம் 6. அகச்சிவப்பு கதிர்களின் இயற்கை மூலம் விடை : சூரியன் 7. ஒரு கிலோகிராம் நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை விடை : 9.8 ச 8. ஒரு சிறிய கோப்பையில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் எப்படி இருக்கும் விடை : சமமாக இருக்கும் 9. காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம் விடை : 18 கி.மீ. 10. தகவல்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சக்திவாய்ந்தவை எவை? விடை : ஆப்டிகல் பைபர் 11. நீராவி இன்ஜினை கண்டு பிடித்தவர் யார்? விடை : ஜேம்ஸ்வாட் 12. தீர்ந்து விடாத ஆற்றல் மூலம் விடை : சூரியன் 13. ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம் விடை : நேர்கோட்டு இயக்கம் 14. ஒரே உயரத்தில் இருந்து தடையின்றி தானே விழும் வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் எப்போது புவியில் விழும் விடை : அவை ஒரே நேரத்தில் விழும் 15. ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர் விடை :கிறிஸ்டியன் டாப்ளர் 16. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்று திசை வேகம் ஏறக்குறைய எத்தனை கி.மீட்டர் இருக்கும்? விடை : 200 கி.மீ 17. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர் விடை : சுற்றுப்பாதைகளின் விதி 18. கருமை நிற பொருட்கள் எல்லா நிறங்களையும் விடை : உட்கவரும் 19. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை விடை : 120ர் ஈ 20. ஒரு மின் விளக்கின் ஆயுள் விடை : 1,000 மணிகள் 21. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம் விடை : மின்காந்த தூண்டல் 22. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு விடை : பதங்கமாதல் 23. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும் விடை : திரவத்தின் மேற்பரப்பில் 24. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி விடை : வேகமாக பரவும்

சனி, 27 ஆகஸ்ட், 2011

வேதியியல்


1.    முடிச்சாயம் தயாரிக்க பயன்படுவது
விடை : சில்வர் நைட்ரேட்
2.    குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள்
விடை : குளோரோஃபார்ம்
3.    வாயு விளக்குப் பொருட்களில் பயன்படுவது
விடை : CeO2
4.    எலக்ட்ரான்களை கண்டறியப் பயன்படும் கருவி எது?
விடை : மின்னிறக்கக்குழாய்
5.    கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியாக பொருந்தாதது எது
விடை : புரோட்டான் - எதிர்மின் சுமை
6.    பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது
விடை : 100% அசிட்டிக் அமிலம்
7.    வெள்ளை துத்தம் என்பது
விடை : ஜிங்க் சல்பேட்
8.    சல்பைடு தாது எம்முறையில் அடர்பிக்கப்படுகிறது
விடை : நுரை மிதப்பு முறை
9.    25% தனி ஆல்கஹால் மற்றும் 75% பெட்ரோல் கலந்த கலவை
விடை : ஆற்றல் ஆல்கஹால்
10.    வெள்ளை சிமெண்ட் வெள்ளையாக இருப்பதன் காரணம் என்ன?
விடை : இரும்பு இல்லாததால்

வியாழன், 28 ஜூலை, 2011

ரமலான் மாதம் தொடர்பான ஆதாரமற்ற செய்திகள்



யூசுஃப் பைஜீ, கடையநல்லூர்
ரமலான் மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதும் அம்மாதத்தில் செய்யப்படும் அமல்கள் சிறப்புக்குரியவை என்பதற்கும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் ஏராளமான சான்றுகள் உள்ளன. அதே வேளையில் நபிகளாரின் பெயரில் இம்மாத சிறப்பு பற்றியும் இம்மாதத்தில் நோற்கப்படும் நோன்பின் சிறப்பு பற்றியும் இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான செய்திகளும் கணிசமாக இடம் பெற்றுள்ளது. இதை பல ஆலிம்கள் பயான்களிலும் கூறிவருகிறார்கள். எனவே இதன் உண்மை நிலையை தெளிவுபடுத்த, இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான ஹதீஸ்களில் முக்கியமானவை இக்கட்டுரையில் இனம் காட்டப்படுகிறது.
ரமலான் என்று கூறாதீர்?
ரமலான் என்று கூறாதீர்கள்!ஏனெனில் அது அல்லாஹ்வுடைய திருமாங்களில் ஒன்றாகும். எனவே நீங்கள் ஸஹ்ரு ரமலான் (ரமலான் மாதம்) என்று கூறுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : பைஹகீ (7293)
இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் அபீ மிஃஷர் என்பவர் பலவீனமானவர் என்பதை இதை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இந்த ஹதீஸில் கீழே குறிப்பிட்டள்ளார்கள்.
ரமலான் மாதத்தை அடைந்தவர் பாவம் மன்னிக்கப்படுகின்றன?
ரமலான் மாதத்தின் முதல் நாள் காலையை அடைந்த எந்த முஸ்லிம்களின் பாவத்தையும் அல்லாஹ் மன்னிக்காமல் விடுவதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக், நூல்கள் : தாரிக் பக்தாத் பாகம் : 5, பக்கம் : 90, அல்இலலுல் முதநாஹிய்யா
இச்செய்தியில் இடம் பெற்றிருக்கும் இரண்டாவது அறிவிப்பாளர் ஸியாத் பின் மைமூன் என்பவரும் மூன்றாவது அறிவிப்பாளர் ஸல்லாம் அத்தவீல் என்வரும் பெரும் பொய்யர், இவர்களை இமாம் புகாரீ, நஸயீ, மற்றும் தாரகுத்னீ ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்ததை இதை பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் இப்னுல் ஜவ்ஸீ தனது அல்இலலுல் முதநாஹிய்யா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
ரமலான் சீராகிவிட்டால்...
''ரமலான் (மாதம் நற்காரியங்கள் செய்வதன் மூலம்) சீராகிவிட்டால் அந்தவருடம் (முழுவதும்) சீராகிவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : ஷ‎ýஅபுல் ஈமான் (பைஹகீ) பாகம் : 3, பக்கம் 340)
இச்செய்தியில் இடம் பெறும் ஆறாவது அறிவிப்பாளர் அபூமுதீஃ என்ற அல்ஹகம் பின் அப்துல்லாஹ் அல்பல்கீ என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் பலவீனமானவர். எனினும் அப்துல் அஸீஸ் பின் அபான் அல்பல்கீ என்பவர் இடம் பெற்றிருப்பதே சரியானதாகும் என்று கூறும் இமாம் பைஹகீ அவர்கள் இவரும் பலவீனமானவர்  என்று அதே நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ரமலானின் முதல் பகுதி அருளாகவும் நடுப்பகுதி மன்னிப்பு வழங்கப்படக்கூடியதாகவும் இறுதிப்பகுதி நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கப்பெறக்கூடியதாகவும் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்  :  இப்னு குஸைமா (பாகம் : 3 பக்கம் : 191),ஷுஅபுல் ஈமான் (பைஹகீ), பாகம் : 3,306)
இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் அலி பின் ஸைத் பின் ஜ‎ýத்ஆன் என்பவர் இடம் பெருகிறார் இவரை அஹமத் பின் ஹன்பல் போன்றோர் விமர்சித்துள்ளனர். (நூல் மீஸானுல் இஃதிதால் பாகம் 5 பக் 156) மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரிலே யூஸ‏þப் பின் ஸியாத் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவரைப்பற்றி புகாரீ அவர்கள், ''ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர்'' என்றும் தாரகுத்னி அவர்கள், ''பொய்யான செய்தியை அறிவிப்பதில் பிரபல்யமானவர்'' என்றும் இன்னும் பல்வேறு அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். (நூல் லிஸானுல் மீஸான் பாகம் 6 பக் 321.)
ஈடு இணையற்ற நோன்பு
நோயோ தக்க காரணமோ இன்றி ரமலானில் ஒரு நாள் நோன்பை விட்டுவிட்டால் காலமெல்லாம் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),நூல் திர்மிதி (655)
இந்த செய்தியை பற்றி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் புகாரியின் விரிவுரை நூலான பத்ஹுல் பாரியில்  குறிப்பிடும் போது இந்த செய்தியில் மூன்று குறைபாடுகள் உள்ளன.1. அறிவிப்பாளரில் குளறுபடிகள்2. இதில் இடம் பெறும் அபுல் முதவ்விஸ் என்பவரின் விவரம்  தெரிவில்லை. 3. இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அபூஹ‎ýரைரா (ரலி) அவர்களிடம் செவியுற்றாரா? என்பதில் ஐயம் உள்ளது என்று கூறி இந்த செய்தி பலவீனமானது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
பரிந்துரை செய்யும் நோன்பு?
அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அறிவிக்கிறார்கள் நோன்பும் குர்ஆனும் கியாம நாளில் அடியானுக்கு பரிந்துரை செய்யும் நோன்பு இறைவனிடத்தில் முறையிடும் :  என் இறைவனே! இந்த அடியானை நான்  பகலில் உணவை விட்டும் ஆசைகளை விட்டும் தடுத்துவிட்டேன். இவருடைய விஷயத்தில் என்னுடைய பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக! என்று கோரும். குர்ஆன் கூறும் :  (யா அல்லாஹ்!) இரவு நேரங்களில் அவனுடைய தூக்கத்தை தடுத்துவிட்டேன் ஆகவே இவர் விஷயத்தில் என்னுடைய பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக என்று கோரும். அவை இரண்டின் பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படும் என நபி (‏ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் அஹ்மத் (6337)
இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறம் ''இப்னு லஹிஆ'' என்பவர் மனன சக்தியில் குறைவுடையவர் என்றும் பலவீனமானவர் என்றும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.(தஹ்தீபுத் தஹ்தீப்)
ரமலான் மாதத்தில் வாழச்செய்வாயாக!
அனஸ் (ரலி) அவர்கள் அறிக்கிறார்கள் :  நபி‏ (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்து விட்டால் ''யா அல்லாஹ் ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு பரகத் செய்வாயாக!' எங்களுக்கு ரமலான் மாதத்தையும் அடையச்செய்வாயாக!'' என்று பிரார்த்தனை செய்வார்கள்.
அறிவிப்பவர் அனஸ் (ரலி)
நூல் அஹ்மத்(2228) பஸ்ஸார், தப்ரானி
இதன் அறிவிப்பாளர் தொடரில் ஸாயிதா பின் அபீர்ருகாத் என்பவர் இடம் பெருகிறார் இவரைப்பற்றி இமாம் புகாரீ அவர்கள் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்று விமர்சனம் செய்துள்ளார். (மீஸானுல் இஃதிதால் பாகம் :  3 பக்கம் :  95)
மாதத்தின் தலைவர்?
அபீ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள் :  மாதங்களில் தலைவர் ரமலான் மாதமாகும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் (தப்ரானி கபீர் பாகம் 9 பக் 205 ஷுஅபுல் ஈமான் பாகம் : 3 பக்கம் :314.)
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெரும் யஸீத் பின் அப்துல் மலீக் என்பவர் இடம் பெறுகிறார்.இவர் பலவீனமானவராவார்.மேலும் இதை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனம் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள். இதே செய்தி தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுல் கபீரில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் சொந்த கூற்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் இது அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டதாகும் என்று இமாம் ஹைஸமீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
மதீனாவில் நோன்பு நோற்பது
மதீனாவில் நோன்பு வைப்பது மதீனா அல்லாத மற்ற ஊர்களில் ஆயிரம் நோன்பு வைப்பது விட சிறப்பானதாகும். மேலும் மதீனாவில்  ஜும்ஆவை நிறைவேற்றுவது மற்ற ஊர்களில் நிறைவேற்றும் ஆயிரம் ஜும்ஆவை விட சிறப்பானதாகும் என் நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என்று பிலால் பின் ஹாரிஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் தப்ரானீ - கபீர் பாகம் : 1, பக்கம் : 372)
    இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெரும் அப்துல்லாஹ் பின் கஸீர் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவரும் பலவீனமானவர்.(லிஸானுல் மீஸான் பாகம் : 3, பக்கம் : 329)
நோன்பு ஏற்றுக் கொள்ளப்படாது
அபூஹ‎ýரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் :  யார் ரமலான் மாதத்தை அடைந்து அவர் சென்ற ரமலானின் நோன்பை களாச் செய்யவில்லையானால் அவரின் நோன்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல் :  தப்ரானீ  அவ்ஸத், பாகம் :  3, பக்கம் :  321)
    இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறம் ''இப்னு லஹிஆ'' என்பவர் மனன சக்தியில் குறைவுடையவர் என்றும் பலவீனமானவர் என்றும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.(தஹ்தீபுத் தஹ்தீப்)
அரஃபா மலையளவு பாவம்
அபூ துஃமா என்பவர் அறிவிக்கிறார் :  நான் இப்னு உமரிடம் இருக்கும் போது ஒரு மனிதர் வந்து அப்துர் ரஹ்மானே! நான் பயணத்திலும் நோன்பு வைப்பதற்கு சக்தி பெற்றுள்ளேன் (நான் நோன்பு நோற்கலாமா?) என கேள்வி கேட்டார். அதற்கு இப்னு உமர் அவர்கள் யார் அல்லாஹ்வுடைய அனுமதியை ஏற்றுக்கோள்வில்லையோ அவன் மீது அரபா மலை அளவு பாவம் ஏற்பட்டுவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் கூற செவியுற்றுள்ளேன்.
நூல் அஹ்மத் (5135), தப்ரானீ கபீர்
இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ''இப்னு லஹிஆ'' என்பவர் மனன சக்தியில் குறைவுடையவர் என்றும் பலவீனமானவர் என்றும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.(தஹ்தீபுத் தஹ்தீப்)
மாலையில் பல் துலக்குதல்
அலி ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் நீங்கள் நோன்பு வைத்தால் காலையில் பல் துலக்கிவிடுங்கள் மாலையில் துலக்காதீர்கள்! ஏனெனில் மாலைநேரத்தில் உதடுகள் காய்ந்த நிலையில் நோன்பாளி இருந்தால்  கியாம நாளில் அவருடைய இரண்டு கண்களுக்கு மத்தியில் ஒளி உன்டாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
    நூல் :  தப்ரானி கபீர் பாகம் : 4, பக்கம் : 78)
    இதில் அபுஅம்ரு என்ற கைஸான் என்பவர் இடம் பெறுகிறார். இவரை ஏராளமான அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார்கள். (மீஸான் அல் இஃதிதால் பாகம் 5 பக் 205)
இரண்டு ஹஜ்ஜின் நன்மைகள்
யார் ரமலான் மாதத்தில் பத்து நாட்கள் இஃதிகாப் இருக்கிறாரோ அவர் இரண்டு ஹ‎‎ஜ், மற்றும் இரண்டு உம்ரா செய்தவர் போன்றவராவார் என நபி (‏ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் ஹஸன் (ரலி)
நூல் :  ஷ‎ýஅபுல் ஈமான், பாகம் :  3, பக்கம் :  425
இதில் முஹம்மத் பின் ஸாதான் என்பவர் இடம் பெறுகிறார். இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்படவேண்டியவை என்று புகாரீ அவர்கள் உட்பட பலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். மேலும் இச்செய்தியில் இடம் பெறும் மற்றொரு அறிவிபப்பாளர் அன்பஸா பின் அப்துர் ரஹ்மான் என்பவரையும் இமாம் புகாரீ அவர்கள் போன்றோர் இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்படவேண்டியவை என்று கூறியுள்ளனர்.. (தஹ்தீப் தஹ்தீப் பாகம் 8 :  பக்கம் :  143, பாகம் :  9, பக்கம் : 145)
    ''யார் ரமலானை மக்காவில்  அடைந்து, (அ‏ங்கே) நோன்‹ வைத்து இயன்ற அளவு இரவு தொழுகை தொழுகிறாரோ மக்கா அல்லாத மற்ற ஊர்களில் நோன்‹ வைத்த நன்மையை விட ஆய‎Šரம் மாதங்கள் நோன்‹ வைத்து தொழுத நன்மைகள் கŠடைக்கின்றன'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் :  இப்னுமாஜா 3108
    இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அப்துர் ரஹீம் பின் ஸைத் அல் அம்மீ என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ் துறையில் ஏராளமான அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்பதை பலவித வார்த்தைகளில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.  (தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 6, பக்கம் : 273)    
''ஒவ்வொரு பொருளுக்கும் ஸகாத் (கடமை) இருக்கிறது. உடலுடைய ஸகாத் நோன்பாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் :  அபூஹ‏‎ýரைரா (ரலி), நூல் : இப்னு மாஜா (1735)
இந்த ஹதீ‏ஸின் அறிவிப்பாளர் தொடரில் 'மூஸா பின் உபைதுல்லாஹ்' என்பவர் இடம் பெறுகிறார். இமாம் அஹ்மத், நஸயீ, இப்னு அதீ, இப்னு மயீன் ஆகியோர் பலவீனமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். (மீஸாலுல் இஃதிதால் பாகம் 6, பக்கம் : 551)
நோன்பு துஆ
அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் நபி ஸல் அவர்கள் நோன்பு திறக்கும் போது ''அல்லாஹும்ம லக்க ஸும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து'' (யா அல்லாஹ் உனக்காக நோன்பு நோற்றேன் உன்னுடைய உனவை கொண்டு நோன்பு திறந்துவிட்டேன்)
    இது அபூதாவூத் என்ற கிதாபில் இடம் பெற்றுள்ளது அது பலவீனமான முர்ஸல் வகையைச் சார்ந்தாகும்.
இதே செய்தி தப்ரானியின் அவ்ஸத் மற்றும் சகீர் ஆகிய நூல்களிலும் இடம் பெறுகிறது. இதில் தாவூத் பின் சிப்ரிகான் என்பவர் இடம் பெறுகிறார் இவர் பலவீனமானவர்.
இதே கருத்தில் தப்ரானி கபீர் என்ற நூலிலும் சில மாற்றங்களோடு இடம் பெற்றுள்ளது. அதில் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் இடம் பெறுகிறார் இவரும் பலவீனமானவரே.
பித்ரா இல்லாமல் நோன்பு கூடாது?
ரமலான் மாதம் (அதாதவது அம்மாதத்தின் நோன்பு) வானத்திற்கும் பூமிற்கும் மத்தியில் தொங்கவிடப்பட்டிருக்கும். பித்ரா தர்மம் கொடுக்கும் வரை அது (அல்லாஹ்விடம்) உயர்த்தப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் : அல்இலலுல் முதநாஹிய்யா, கன்ஸ‎ýல் உம்மால், அல்ஜாமிவுஸ் ஸகீர்.)
இச்செய்தியில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் உபைத் என்பவர் யாரென அறியப்படாதவர் என்று இச்செய்தி பதிவு செய்த இமாம் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தனது ஸிஸானுல் மீஸான் என்ற நூலிலும் உறுதி செய்துள்ளார்கள்.


ஒரு நாள் இரத்த தான பயிற்சி முகாம்

மாநிலத் தலைமை நடத்திய ஒரு நாள் இரத்த தான பயிற்சி முகாம் – அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொறுப்பாளர்கள் பங்கேற்பு

இறைவனின் மாபெரும் கிருபையால் கடந்த 6 ஆண்டுகளாக இரத்ததான சேவையில் முன்னிலை வகித்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த வருடத்தில் தமிழகம் முழுவதும் 120 க்கும் அதிகமான இரத்ததான முகாம்களை நடத்தியது. அதிலே கலந்து கொண்டுகிட்டத்தட்ட ஒன்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் அதிலே இரத்தம் கொடுத்து தங்களின் பங்களிப்பைச் செய்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் இந்த வீரியமான சமுதாயப்பணிகளைக் கண்டு வியப்படைந்த தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து அவர்களுக்கு தன்னார்வ இரத்ததான முகாம்கள் குறித்து ஒரு பயிற்சி முகாம் நடத்த விரும்புவதாகக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இன்று ( 26/07/2011)  சென்னை எழும்பூர் பாண்டியன் ஹோட்டலில் ஒரு மாபெரும் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒரு மாவட்டத்திற்கு, ஒரு மாவட்ட நிர்வாகி மற்றும் அந்த மாவட்ட மருத்துவ அணி என இருவர் வீதம் அழைக்கப்பட்டிருந்தனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் மட்டும் அனைத்துக் கிளைகளில் இருந்தும் ஒவ்வொரு கிளையில் இருந்தும் ஒரு நிர்வாகி மற்றும் ஒரு மருத்துவரணி என இருவர் வீதம் அழைக்கப்பட்டிருந்தனர்.
சரியாக காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. மாநிலப்பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லா தலைமையேற்று நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் சகோ.சுப்புலட்சுமி அவர்கள் இரத்ததானம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இரத்ததானம் தொடர்பாக நம் சகோதரர்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் பொருமையாகவும் தெளிவாகவும் விளக்கமளித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய சகோ.பீ.ஜைனுல் ஆபிதீன், இஸ்லாத்திற்கும் இரத்த தானத்திற்கும் அன்றைக்கு என்ன ஏன் தொடர்பு இல்லாமல் போனது, அதற்கான காரனம் என்ன? என்று தெளிவாக விளக்கினார்.
அதேநேரம் இன்றைக்கு நம் சமுதாயம் மற்ற மக்களை ஒப்பிடும் போது எண்ணிக்கை அளவில் சிறுபாண்மையினராக இருந்தாலும், இன்றைக்கு இரத்ததானத்தில் எல்லோரையும் விட அதிக பங்களிப்பு செய்வதை எடுத்துரைத்தார்.
அதுமட்டுமின்றி மார்க்க ரீதியாக பார்க்கும் போது இரத்த தானம் என்பது ஒரு நிர்பந்தமே என்பதைத் தெளிவாக விளக்கினார். வரக்கூடிய காலங்களில் இதில் நம் பங்களிப்பு மிக அதிகமாக வேண்டும் என்றும் தன்னுடைய உரையில் தெரிவித்தார்.
முதல் அமர்விற்கு பிறகு சரியாக 12.30 மணிக்கு இரண்டாவது அமர்வு துவங்கியது. இரண்டாவது அமர்வில்
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ஆலோசகராக இருக்கும் சகோ.சம்பத் அவர்கள் புரொஜெக்டர் மூலம் இரத்ததானம் சம்பந்தமான பலவகையான நுனுக்கங்கள், ஆராய்வு விசயங்கள் தெளிவாக விளக்கப்பட்டது. 132 முறை இரத்ததானம் செய்த சமூக ஆர்வலர் தாமஸ் மனோகரன் அவர்களும் இந்த அமர்வில் கலந்து கொண்டு தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்தார்.
மூன்றாம் அமர்வு சரியாக 2.30 க்கு துவங்கியது. இந்த அமர்வில் பங்கேற்ற தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ரத்தபாதுகாப்புத் துறை இணை இயக்குனர் டாக்டர் செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டு நம் சகோதரர்களின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கமளித்தார்.
இரத்ததான முகாம்களின் நடைபெறும் நிர்வாகம் சம்பந்தமாக குறைகளுக்கு விளக்கமளித்த செல்வராஜ் அவர்கள் நம் சகோதரர்கள் தெரிவித்த பலவிதமான குறைபாடுகளைக் களைவதாக உறுதியளித்தார்.
சென்ற வருடம் நடத்தப்பட்ட இந்த 120 இரத்ததான முகாம்களை இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் 200க்கும் மேல் அதிகப்படுத்தி முகாம்களை நடத்த திட்டமிட்டுருப்பதாக நம் மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து விருந்தினர்களுக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் சம்பந்தமான நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இறைவனுக்கு நன்றி சொல்லி பயிற்சி முகாம் இனிதே நிறைவுற்றது.

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites