அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 5 மார்ச், 2013

ரேஷன் கடை - இனி அப்படி ஏமாற்ற முடியாது

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசிபருப்புசர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால்அவைகள் இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். 
இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும்அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:
குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) 
என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
உதாரணமாக 

PDS 01 BE014
என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.
மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவேஇந்த குறியீட்டினை தங்களது மாவட்டக் குறியீட்டினைக் கொண்டு மாற்றிட வேண்டும்.
அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில் அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.
குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவேஅந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.
எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில் (server) மாலை மணிக்கு மேல் அதிக பளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது சம்பந்தப்பட்ட கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் jrpds1chennai@yahoo.co.in என்ற மின் அஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம்

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

மருத்துவ முகாம் (அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்)


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடந்த கூடிய அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லத்தில் இன்று (16.02.13) சிறார் நல்வாழ்வு திட்டத்தில் சுவாமிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர் ஆகியோர் முகாமிட்டு மாணவர்களுக்கு சிறு உபாதைகளான கண் நோய், பூச்சி பல், சொறி சிறங்கு, தொழு நோய் பற்றிய விபரம் கூறப்பட்டு அதற்குறிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் டெங்கு நோய் சம்பந்தப்பட்ட ஈடிஸ் கொசுவின் விபரம் அடங்கிய குறும்படம் பற்றிய விபரமும் கூறப்பட்டது.


மேலும் விவரங்கள் :




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு:
TAMILNADU THOWHEED JAMATH,
INDIAN BANK,
A/C NO: 788274827,
MANNADY BRANCH.

டிடி அல்லது செக் அனுப்ப விரும்புவோர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் பின் வரும் முகவரிக்கு அனுப்பவும்:
TNTJ மாநிலத் தலைமையகம்
30,
அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி,
சென்னை-1

வால்மார்ட்டுக்கு சீல்!

Photo: வால்மார்ட்டுக்கு சீல்!

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு நிலவி வரும்நிலையில், 'தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்' என்று அழுத்தமாக அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.

இந்நிலையில், சென்னை, வானகரம் அருகே 10 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட நிலத்தில், சுமார் 7 ஏக்கரில் 'வால்மார்ட்' நிறுவனம் பெரிய அளவிலான குடோன் ஒன்றை கட்டி வருகிறது. இதற்கு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளிக்காத நிலையிலும் கட்டுமானப் பணி தொடர்ந்தது. இந்த நிலையில், இன்று காலை பெருநகர வளர்ச்சி குழுமம், வால்மார்ட் கட்டடத்துக்கு சீல் வைத்துள்ளது. 'அனுமதியின்றி கட்டடம் கட்டியதற்காக இந்த நடவடிக்கை' என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



நன்றி : விகடன் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு நிலவி வரும்நிலையில், 'தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்' என்று அழுத்தமாக அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.
ந்நிலையில், சென்னை, வானகரம் அருகே 10 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட நிலத்தில், சுமார் 7 ஏக்கரில் 'வால்மார்ட்' நிறுவனம் பெரிய அளவிலான குடோன் ஒன்றை கட்டி வருகிறது. இதற்கு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளிக்காத நிலையிலும் கட்டுமானப் பணி தொடர்ந்தது. இந்த நிலையில், இன்று காலை பெருநகர வளர்ச்சி குழுமம், வால்மார்ட் கட்டடத்துக்கு சீல் வைத்துள்ளது. 'அனுமதியின்றி கட்டடம் கட்டியதற்காக இந்த நடவடிக்கை' என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலிவு விலை உணவகம் இன்று திறப்பு


மலிவு விலை உணவகம் இன்று திறப்புhttp://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News-Paper_76061213017.jpg

சென்னை : சென்னை மாநகராட்சி சார்பில் 15 இடத்தில் அமைக்கப்படும் உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார். சென்னையில்மாநகராட்சி மூலம் 1,000 சிற்றுண்டி உணவகங்கள் தொடங்கப்படும் என்று கடந்த மாதம் 13ம் தேதி முதல்வர் அறிவித்தார். முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் மண்டலத்துக்கு ஒரு உணவகம் என்ற வீதத்தில் 15உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகங்கள் இன்று திறக்கப்படு கிறது. 

சாந்தோம் பத்திரப்பதிவு துறை தலைவர் அலுவலகம் அருகில் மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள உணவு கூடத்தை முதல்வர் ஜெயலலிதா மதியம் 12 மணிக்கு தொடங்கி வைக்கிறார். 
மலிவு விலை உணவகத்தில் ஒரு இட்லி (100 கிராம்) ஒரு ரூபாய்க்கும்சாம்பார் சாதம் (350 கிராம்) ரூபாய்க்கும்தயிர் சாதம் (350 கிராம்) ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காலை மணி முதல் காலை 10 மணி வரை இட்லி கிடைக்கும். மதியம் 12 மணி முதல் மதியம் மணி வரை தயிர் சாதம்சாம்பார் சாதம் கிடைக்கும். வாரத்தின் 7நாட்களும் இந்த உணவு கூடங்கள் திறந்திருக்கும். உணவு கூடத்தில் அந்தந்த பகுதியில் உள்ள சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் 10 முதல் 12 பேர் பணியாற்றுவார்கள்.

உணவுக்கூடங்கள் இருக்கும் இடங்கள்

1. 
மாநகராட்சி வணிக வளாகம் திருவொற்றியூர்
2. 
மாநகராட்சி கட்டிடம் மாத்தூர்
3. 
சமூக நல கூடம் சூரப்பட்டு
4. 
மாநகராட்சி கட்டிடம் பழைய வண்ணாரப்பேட்டை
5. 
மாநகராட்சி கட்டிடம் பிராட்வே.
6. 
பழைய மண்டல அலுவலகம் புளியந்தோப்பு
7. 
மாநகராட்சி கட்டிடம் ஓரகடம்
8. 
பழைய மண்டல அலுவலகம் கீழ்ப்பாக்கம்
9. 
மாநகராட்சி கட்டிடம் சாந்தோம்
10. 
மாநகராட்சி கட்டிடம் தியாகராயநகர்
11. 
மாநகராட்சி கட்டிடம் மதுரவாயல்
12. 
மாநகராட்சி கட்டிடம் நங்கநல்லூர்
13. 
மாநகராட்சி கட்டிடம் திருவான்மியூர்
14. 
வணிக வளாகம் பெருங்குடி
15. 
தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய தொழிற்பயிற்சி கூடம் துரைப்பாக்கம்.

புதன், 30 ஜனவரி, 2013

உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படித் திரும்பப் பெறுவது?

இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்துவிட்டு நண்பர்களுடன் பகிரவும்.

1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்டவேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள்
நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:
நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.

2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி
மற்றும்கல்லூரி)


யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை:
விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை:
காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

3.ரேஷன் கார்டு!
யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது
ஏதாவது ஒரு அடையாள அட்டை

எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட
வேண்டும்.

கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:
சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தரவேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

4.டிரைவிங் லைசென்ஸ்!
யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை:
விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை:
காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பமனு கொடுக்கவேண்டும்.

5.பான் கார்டு!

யாரை அணுகுவது?
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய். கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை:
பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

6.பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.

எவ்வளவு கட்டணம்?
தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:
விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை:
முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு
முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

7.கிரயப் பத்திரம்!
யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?
ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20ரூபாய்.

கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:
கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

8.டெபிட் கார்டு!
யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.

கால வரையறை:
வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை:
டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

9 மனைப் பட்டா!

யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.

கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:
முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

9.பாஸ்போர்ட்!

யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.

கால வரையறை:
இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை:
பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட
பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

10.கிரெடிட் கார்டு!

கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக
வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து
பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.

யாரை அணுகுவது?
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை:
15 வேலை நாட்கள்.

நடைமுறை:
தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

புதன், 5 டிசம்பர், 2012

அதிகரிக்கும் ஆண் மலடு - ஆய்வில் எச்சரிக்கை


இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் சில காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் இது கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குறைபாட்டிற்கு காரணம்
விந்தணு குறைபாட்டுக்கு காற்று மாசுபடுதல், ஜங்க் உணவுகள், சுற்றுப்புற மாசு, உடல் பருமன், ஸ்டரஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி புகைத்தல், குடித்தல், உடல் பருமனோடு நாம் உபயோகப்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெளியாகும் ஈஸ்ட்ரோஜனை ஒத்த வேதியியல் பொருட்கள் மூலமும் விந்தணுக்கள் குறைகின்றன என்கிறது.
விந்தணு வீழ்ச்சி
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு வீழ்ச்சி 90களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கைக்கு எதிரான நிலை
தாமதமான திருமணங்களும் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதும் விந்தணுக்கள் குறைவதற்கு முக்கிய காரணங்கள் என்கிறார் மருத்துவர் மல்பானி. ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதன் மூலம் விந்தணுக்கள் குறைகின்றன என்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறும் அவர், விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பதே.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று கூறி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையினர் இதை புரிந்து இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சந்ததிகள் உருவாக முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
தூக்கக்குறையாடு ஆண்மையை பாதிக்கும் ஆய்வில் தகவல்
ஐந்து மணிநேரத்திற்கு குறைவாக உறங்கும் ஆண்களுக்கு ஆண்மையை தூண்டும் ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு வாரம் தூக்கம் கெட்டாலே இந்த பாதிப்பை உணரலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்களின் பாலுணர்வை ஊக்குவிப்பதில் 'டெஸ்ட்டாஸ்ட்டுரோன்' என்னும் ஹார்மோனிற்கு முக்கிய பங்கு உண்டு. இந்த ஹார்மோன் குறிப்பிட்ட அளவு சுரந்தால் மட்டுமே ஆண்களுக்கு உற்சாகம், ஏற்படும். பாலுணர்வில் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும். ஆனால் நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் இளைஞர்களுக்கு அவரது பாலியல் உணர்வை தூண்டும் பிரதான ஹார்மோனின் சுரப்பு குறைந்துவிடும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சிகாகோ பல்கலைக் கழகம் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த சராசரியாக 24 வயது கொண்ட 10 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும், ஒல்லியான தேகத்துடனும், பலவித உடல் பரிசோதனைகளும், உளவியல் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். அதன் பிறகு இவர்கள் மூன்று நாட்களுக்கு இரவில் 10 மணி நேரம் வரை தூங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் எட்டு நாட்களுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்க அனுமதிக்கப்பட்டனர்.
ஆய்வின் ஒவ்வொரு நாளின்போதும், 24 மணி நேரத்திற்கும் ஒவ்வொரு 15 முதல் 30 நிமிடங்களுக்கும் அவர்களது ரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தபட்டது. இதில் குறைவாக தூங்கியதற்கு பின்னர் இவர்களது 'டெஸ்ட்டாஸ்ட்டுரோன்' அளவு குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த டெஸ்டோஸ்டெரோன் சுரக்கும் அளவுக்கும், ஆண்களின் சக்தி குறைவு, விறைப்பு தன்மை குறைதல், கவனக்குறைவு மற்றும் சோர்வடைதல் ஆகியவற்றுக்குமிடையே தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் உடல் பலம், தசைகள் மற்றும் எலும்பு வலுவடைதல் ஆகியவற்றிலும் இந்த 'டெஸ்ட்டாஸ்ட்டுரோன்' முக்கிய பங்காற்றுவதாக ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற ஈவ் வான் என்ற மருத்துவ துறை பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
மேலும், உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பு குறைவதற்கும், டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைதலுக்கும் தொடர்பு உள்ளது. இதேபோல் தூக்கமின்மை நிச்சயம் பாலியல் உணர்வை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு முடிவு இரவில் அதிகநேரம் கண்விழித்து இருக்கும் நமது இளைய தலைமுறையினருக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளது.
அதிகமா ஜங்க் புட் சாப்பிடுவது ஆண்மைக்கு ஆபத்து ஆய்வில் தகவல்
பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட ஜங்க் புட் எனப்படும் நொருக்குதீனிகளை உட்கொள்ளும் இளைஞர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ செல்லும் இளைய தலைமுறையினர், வீட்டில் இருந்து உணவை எடுத்துச்செல்வது வழக்கம். ஆனால் இன்றைக்கு பாஸ்ட் புட், ஜங்க்

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites