அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 23 ஜூலை, 2010

தீவிரவாதம்



சமீபகாலங்களாக உலகத்தில் தீவிரவாதம் அதிகரித்துக் கொண்டு செல்வதை நாம் கண்டு வருகிறோம். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் விமானம் இரயில் வண்டி பேருந்து போன்ற வாகனங்களில் அச்சத்துடன் பயனம் செய்து வருகிறார்கள். ஓன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளும் பெரியவர்களும் அப்பாவி மக்களும் இந்த கொடூரத்திற்கு பலியாகுகிறார்கள். இதற்காக காலவ் துறையினரும் இரவு பகலாக எச்சரிக்கையுடன் பாடுபடுகிறார்கள். வெடிகுண்டுகளையும் வெடிமருந்துகளையும் கடத்துவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது  .....


இது போன்ற மாபாதகச்செயலில் ஈடுபடுவோர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியப் பெயரை வைத்துள்ளார்கள். இந்தக் கோரச்செயலில் ஈடுபட்டு மரணிப்பதை தியாகம் என்று என்று எண்ணிக்கொள்கிறார்கள். ஓன்றும் அறியாத அப்பாவி மக்களை கொலை செய்யும்போது அல்லாஹþ அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று ஆவேசத்துடன் முழங்குகின்றார்கள். அல்லாஹ் இதை விரும்புகின்றான் என தவறாக எண்ணிக்கொண்டு அல்லாஹ் மண்ணிக்காத மாபெரும் குற்றத்தை அரங்கேற்றுகிறார்கள்.
இவர்கள் அணிந்திருக்கும் ஜþப்பா தொப்பி வைத்திருக்கும் தாடி தீவிரவாதத்தில் ஈடுபடும் போடு இடும் முழக்கம் ஆகியவற்றையெல்லாம்  பார்த்த மக்கள் இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என்று நினைக்கின்றார்கள். இன்று மாற்றுமத சகோதரர்கள் இஸ்லாத்தை குர்ஆன் ஹதீஸ் வாயிலாக தெரிந்து கொள்வது மிகவும் குறைவாகும்.

  முஸ்லிம்களின் நடவடிக்கைகளை பார்த்துத்தான் இஸ்லாத்தை அவர்கள் புரிந்து கொள்கின்றார்கள். எனவே முஸ்லிம் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த நாசவேளையில் ஈடுபடுவோர்களைப் பார்த்து இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என்று முடிவுசெய்து விடுகிறார்கள்.

தீவிரவாதத்தைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்று இம்மக்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இஸ்லாமியர்களை வைத்து இஸ்லாத்தை எடைபோடாமல் குர்ஆன் ஹதீஸ் இவ்விரண்டின் மூலம் இஸ்லாத்தை புரிந்துகொள்ள வேண்டும். அறிந்தவர்கள் அறியாத மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொல்ல வேண்டும்.

அநியாயமாக ஓருவன் ஓருவரைக் கொன்றுவிட்டால் அவனுக்கு இஸ்லாம் உலக மக்கள் அனைவரையும் கொலை செய்தவனுடைய தண்டனையை தருகிறது. இந்த உலகத்தில் இதுபோன்ற தீவிரவாதத்தில் ஈடுபடுவோருக்கு  அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனையைத் தருவார்கள். பல்லாயிரம் மக்களை கொன்ற இவனுக்கு இவ்வளவுத்தான் தண்டனை வழங்க முடியும். எனவே இவனுக்கு  அல்லாஹ் மறுமையில் இவ்வளவு மாபெரும் தண்டனையை வழங்குகிறான். ஓருவன் ஓருவரின் உயிரைக் காப்பாற்றினால் உலக மக்கள் அனைவரின் உயிரையும் காப்பாற்றியதற்குரிய நன்மையை தருவதாகக் கூறி பிறர்நலத்தைக் காக்கச் சொல்கிறது.

கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், "ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம்.

அல்குர்ஆன் (5 : 32)

தீவிரவாதிகளின் கொடுமைக்கு குழந்தைகளும் பலியாகுகிறார்கள். போர் என்று வந்துவிட்டால் இன்று எந்த நாடும் பெரியவர் சிரியவர் என்று பார்ப்பதில்லை. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் போராக இருந்தாலும் முதியவர்களையும் சிரியவர்களையும் கொல்லக் கூடாது என்று கட்டளையிடுகின்றது. போரில் இவர்களைக் கொல்லத்தடை செய்த இஸ்லாம் இந்தக் கொடூரச் செயலில் இவர்களைக் கொல்வதை எப்படி ஆதரிக்கும்.

நபி(ஸல்) அவர்கள் ஓரு முஸ்லிம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக நமக்கு கூறிச்சென்றார்கள். மற்ற மக்களுக்கு நாவாலும் கரத்தாலும் துன்பம் தராதவனே முஸ்லிம் என்று சொன்னார்கள். நாவால் மக்களுக்கு துன்பம் தரக்கூடாது என்று இஸ்லாம் கூறும் போது எப்படி தீவிரவாதத்தில் ஈடுபடுவதை ஆதரிக்கும் என்று சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


எவனுடைய நாவாலும் கரத்தாலும் மக்கள் பாதுகாப்புஅடைந்திருக்கிறார்களோ அவனே முஸ்லிம்.

நூல் : நஸயீ (4909)

மக்களிடத்தில் கொடூரமாக நடந்து கொள்பவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான். தீவிரவாதத்திலிருந்து விலகினால் தான் அவனது அருளைப் பெறமுடியும் என இஸ்லாம் கூறுகின்றது.

மக்களுக்கு எவன் இரக்கம் காட்டவில்லையோ அவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்.

நூல் : புகாரி (7376)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் மக்கள் மென்னையைக் கண்டதால் அவரை நபியாக பலர் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் கடுமையைக் கையாண்டு இருந்தால் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றவர்களும் இஸ்லாத்தை விட்டு ஓடியிருப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவ ராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக!

அல்குர்ஆன் (3 : 159)

இஸ்லாம் மக்களே தவறு செய்தாலும் அதை மண்ணித்து விடுமாறு கூறுகிறுது என்பதற்கு பின்வரும் சம்பவம் நல்ல சான்றாக உள்ளது.


பள்ளிவாசலில் ஓரு கிராமவாசி சிறுநீர் கழிப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். (சஹாபாக்கள் அவரைத்தாக்க நினைக்கும் போது) அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். அவர் சிறுநீர் கழித்து முடித்தப் பின் தண்ணீரை கொண்டுவரச் சொல்லி அதை அங்கு ஊற்றினார்கள்.

நூல் : புகாரி (219)

தீவிரவாதத்தில் ஈடுபடுவோருக்கு மறுமையில் மட்டும் தண்டனை வழங்காமல் இந்த உலகத்திலும் கடுமையான தண்டனையை தருகிறது. கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகிய வையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.

தீவிரவாதத்தை வேறுடன் கிள்ளி எரியச் சொல்லும் இஸ்லாத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்ளும் வாய்ப்பகை இறைவன் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வழங்குவானாக



0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites