அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

மருத்துவக் குறிப்புகள்


1. விஷேச தினத்தில் அந்த நாள் வராமலிருக்க...
நிறைய பேர் விசேஷ நாட்களில் மாதவிடாய் வராமலிருக்க மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவார்கள். இது உடம்புக்குக் கேட்டை விளைவிக்கும்.
இதற்கு மிக எளிய வழி ஒரு டம்ளர் பாலை எடுத்து சூடு செய்து அதில் ஒரு மூடி எலுமிச்சை சாற்றைப் பிழிந்தால் பால் திரியும். இதை விடியற்காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அந்த நாள் முழுவதும் இது வராமல் நிம்மதியாக இருக்கலாம். மூன்று நாட்களுக்கு இதைச் செய்து சமாளிக்கலாம்.
2. அந்த நாள் வருவதற்கு...
சிலருக்கு மாதவிடாய் சரியாக வந்து விடும். இன்னும் சிலருக்கு மாதவிடாய் சரியாக வராது. இப்படிப்பட்டவர்கள் நிம்மதியாக எங்கும் செல்ல முடியாது.
இதற்கு மாவிலக்குப் பட்டையை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) வாங்கி அதனுடன் உள்ளி (சிறிய வெங்காயம்), பூண்டு, மிளகு இம்மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து கொட்டைப் பாக்கு அளவுக்குத் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மாதாமாதம் சரியான நேரத்தில் அது வந்து விடும்.
3. அந்த நாளின் வயிற்று வலிக்கு...
சில பெண்களுக்கு அந்த நாளின் போது வயிறு வலிக்கும். இதைப் போக்க பிரண்டை உப்பு நல்ல உதவி செய்கின்றது. அதில் இரண்டு குண்டு மணியளவு எடுத்து வெண்ணையில் குலைத்துத் தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் அந்த நாள் வலி குணமாகும்.
அந்த நாளுக்கு முன்னும் பின்னும் வயிறு வலித்தால் கல்யாண முறுக்கு இலையின் சாற்றை காலையில் சாப்பிட வேண்டும். இதைத் தொடர்ந்து பத்து நாட்களுக்குச் சாப்பிட்டால் அந்த நாள் வயிற்று வலி தீரும்.
4. மாதவிலக்கு நீடித்தால்...
மாதவிலக்கு அதிக நாட்கள் நீடித்திருந்தால் சிரமமாக இருக்கும். அதைப் போக்க அருகம்புல்லையும், மாதுளை இலையையும் சேர்த்து கசாயம் வைத்து வடிகட்டி, தினந்தோறும் அரை தம்ளர் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் இரண்டொரு நாட்களில் மாதவிடாய் நின்று விடும்.
மாதவிலக்கு அதிக நாட்கள் நீடித்தால் மாங்கொட்டைப் பருப்பை நன்றாக வெயிலில் காய வைத்துப் பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சுத்தமான தேன் விட்டுக் குலைத்து, காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் மூன்றே நாட்களில் சரியாகி விடும். இரத்தப் போக்கு அதிகமாக இருந்தாலும் இந்த மருந்து குணப்படுத்தும்.
தொகுப்பு: ஹெச்.கே. பானு

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites