அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 22 நவம்பர், 2010

பொது இடங்களிலுள்ள கணனியைப் பயன்படுத்துகிறீர்களா?


நீங்கள் சொந்தமாக கணனி இணைய இணைப்பு வைத்திருந்தாலும் கூட சில வேளைகளில் இண்டர்நெட் மையம், நூல் நிலையம், விமான நிலையம் போன்ற பொது இடங்களில் காணப்படும் பலரின் பாவனைக்கென வைக்கப்பட்டிருக்கும் கணனிகளையும் பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் உங்களுக்கும் வரலாம். இவ்வாறு பொது இடங்களிலுள்ள கணனிகளைப் பயன்படுத்தும் போது
* மின்னஞ்சல் கணக்கிற்குரிய பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்ட்
* பேஸ்புக் போன்ற தளங்களில் பயன்படுத்தக் கூடிய பயனர் பெயர் பாஸ்வர்ட்.
* கடன் அட்டை விவரங்கள்
* அந்தரங்க தகவல்களைக் கொண்ட மின்னஞ்சல்கள்
* நீங்கள் பரிமாறிக் கொள்ளும் பைல்கள்.
* நீங்கள் பார்க்கும் பார்க்கக் கூடாத தளங்களின் பெயர்கள் போன்ற பல அந்தரங்க விடயங்களை இழக்க வேண்டி வரலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா?
பொது இடங்களிலுள்ள கணனிகளில் எமது அந்தரங்க விடயங்களைப் பாதுகாப்பதற்கு யாரும் உத்தரவாதம் தருவதில்லை. அவ்விடயங்களில் பணியாற்றும் கணனி நிர்வாகிகள் எமது அந்தரங்க தகவல்களையிட்டு கவலைப்படுவார் என நாம் எதிர்பார்க்க முடியாது. சில இடங்களில் எமது அந்தரங்க தகவல்களுக்குப் பாதுகாப்புத் தரலாம். எனினும் பொதுக் கணனிகளில் எமது தகவல்கள் நூறு வீதம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நாமும் சில முன்னெச்சரிகை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பொதுக் கணனிகளைப் பயன்படுத்தும் போது எவ்வாறு நாம் அவதானமாக நடந்து கொள்வது என்பதைக் கிழே பட்டடியலிடுகிறேன் மேலே படியுங்கள்.
* இணையத்தில் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தி விட்டு அந்த இணைய களத்திலிருந்து முறையாக Log Out செய்து வெளியேறுங்கள். பிரவுசர் விண்டோவை மூடிவிட்டால் அல்லது வேறொரு இணைய தள முகவரியை டைப் செய்து விட்டால் போதுமானது என நினைக்கக் கூடாது. முறையாக லொக் அவுட் செய்யாமல் வெளியேறுவது உங்களுக்குப் பின்னர் கணனியைப் பயன்படுத்தும் நபரின் கையில் உங்கள் அந்தரங்க தகவல்கள் போய்ச் சேர்ந்துவிட வாய்ப்புள்ளது.
* பொதுக் கணனிகளில் மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய தேவைகளேற்படும் போது வழமையான உங்கள் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பாமல் அதற்கென தற்காலிகமாக இரு மின்னஞ்சல் கணக்கை உருவாக்கி அனுப்பலாம். அல்லது பொதுக் கணனியில் மின்னஞ்சல் தேவை முடிந்தவுடன் உடனடியாக உங்கள் பாஸ்வர்டை மாற்றிக் கொள்ளுங்கள்.
* வெப் மெயில் சேவைகளில், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் இன்ஸ்டண்ட் மெஸ்செஞ்சர்களில் தானாகவே லொகின் செய்யும் வசதி உள்ளது. இவை எமது வசதிக்காகவே பயனர் கணக்கையும் பாஸ்வர்டையும் கணனியில் சேமித்து வைக்கும். எனவே இந்த வசதியை முடக்கி விடுங்கள்.
* மின்னஞ்சல் இணைப்புகளில் வரும் பைல்களை டவுன்லோட் செய்யும் போது அவற்றை உங்கள் பென் ட்ரைவில் சேமித்துக் கொள்ளுங்கள். டவுன்லோட் செய்த பைலை ஹாட் டிஸ்கில் சேமிப்பதனால் அதனை பென் ட்ரைவில் ஏற்றி விட்டு ஹாட் டிஸ்கிலிருந்து அந்த பைலை அழித்து விடுவதோடு ரீசைக்கில் பின்னையும் காலி செய்து விடுங்கள்.
* டவுன் லோட் செய்த பைல்களை உங்கள் பென் ட்ரைவில் ஏற்று முன் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள். அவ்வாறே அதனை உங்கள் கணனியில் மறுபடி ஏற்று முன்னரும் வைரஸ் ஸ்கேன் செய்யுங்கள்.
* பொதுக் கணனிகளில் உங்கள் அந்தரங்க விடயங்களைக் கொண்ட பைல்களை படங்கள் பரிமாறிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
* பொதுக் கணனிகளில் முக்கியமான தகவல்களை வழங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சில திருடர்கள் நீங்கள் கீபோர்டில் அழுத்தும் ஒவ்வொரு கீயின் அசைவுகளையும் பதிவு செய்யக் கூடிய Keyiogger  மென்பொருள்களை நிறுவியிருக்கக் கூடும் இந்த மென்பொருள் பதிவு செய்யும் தகவல்களைத் திருடர்களுக்கு ஈமெயிலில் அனுப்பி விடும் நீங்கள் முக்கிய தகவல்களைக் கணனியில் சேமிக்காது விட்டாலும், அவற்றை முறையாக அழித்தாலும் கூட உரிய தகவல்கள் திருடரின் கையில் போய் சேர்ந்து விடும்.
* சில இடங்களில் கணனிகளைக் கண்காணிப்பதற்கென பாதுகாப்புக் கேமராக்கள் பொருத்தியிருப்பார்கள். எனவே இந்த கேமராவின் பார்வையிலிருந்தும் உங்கள் அந்தரங்க தகவல்களை மறைக்க மறந்து விடாதீர்கள்.
* பொதுக் கணனிகளைப் பயன் படுத்தும் போது அருகில் நடமாடும் ஆசாமிகளை இட்டும் கவனமாயிருங்கள். அவர்கள் உங்கள் பின்புறமிருந்து தோளிற்கு மேலாக நீங்கள் அறியாமலேயே உங்கள் கணனித் திரையைப் நோட்டமிடலாம்.
* இணையத்தில் பொருட்கள் வாங்குதல் (Online Shopping)  வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் (Online Banking) போன்ற செயற்பாடுகளுக்குப் பொதுக் கணனிகள் பொருத்தமானதல்ல. எனவே அக்கணனிகளில் கிரடிட் காட் விவரங்களை வழங்காது தவிர்த்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் முக்கியமான அந்தரங்க தகவல்களை கணனியில் டைப் செய்து விட்டு வேறு வேலையாக ஒரு போதும் எழுந்து செல்லாதீர்கள். இவ்வாறு நகர்ந்து செல்வதனால் அடுத்தவர்கள் உங்கள் அந்தரங்க தகவல்களைப் பார்ப்பதற்கு வசதியாக அமைந்துவிடும்.
* பிரவுஸரிலுள்ள ‘Auto complete’வசதியானது எமது டைப்பிங் வேலைகளைக் குறைத்து விடக் வடிய பயனுள்ள வசதி எனினும் பொதுக் கணனிகளில் இந்த வசதியைப் பயன்படுத்துவது ஏற்ற செயலல்ல இந்த வசதியை முடகுவதற்கு இன்டர்நெட் 1lஸ்ப்லோரரில் Tools மெனுவில் Intenet Options தெரிவு செய்யுங்கள் தோன்றும் டயலொக் பொக்ஸில் Content டேபில்  Autocomplete  பட்டனில் க்ளிக் செய்ய வரும் பெட்டியில் பாஸ்வர்ட் சம்பந்தப்பட்ட தெரிவுகளை நீக்கி விடுங்கள்.
* அதே போல் உங்கள் இணைய பயன்பாட்டை பிரவுசர் Temporary Intenet Files எனும் போல்டரில் சேமித்து விடும். அவற்றை அழிப்பதற்கு இதே  Intenet Options டயலொக் பொக்ஸில் Generalடேபில்  Temporary Intenet files  என்பதன் கீழ் Delete Cookies, Delete Files பட்டன்களில் க்ளிக் செய்து விடுங்கள்.
* பயபொக்ஸ் பிரவுஸரில் Tool options Privacy  க்ளிக் செய்யுங்கள். அங்கு  Clear History When Firefox Closes என்பதைத் தெரிவு நிலைக்கு மாற்றுங்கள். இதன் மூலம் பய பொக்ஸ் பிரவுஸரில் உங்கள் இணைய நடவடிக்கைகள் அனைத்தையும் அழித்து விடலாம்.
பொதுக் கணனி பயன்பாட்டில் மேற்சொன்ன விடயங்களுக்கு மேலாக சமயோசித புத்தியும் உங்களிடம் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். சரி, இவ்வளவு விடயங்களைச் சொல்லி உங்களைப் பயமுறுத்திய நான் ஒருபோதும் பொதுக் கணனிகளைப் பாவிக்கும் போது எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுப்பதேயில்லை. காரணம் என்னவென்றால் என்னிடம் திருடுவதற்கு எதுவுமேயில்லை.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites