அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 22 நவம்பர், 2010

சுப்ஹான மவ்லித் ஓர் பார்வை



தமிழகத்தில் ரபீவுல் அவ்வல் மாதம் பரவலாக ஓதப்படும் சுப்ஹான மவ்லித், யார், எழுதினார்? இதன் நோக்கம் என்ன? இதை ஓதுவதினால் ஏற்படும் நன்மைகள் என்ன? என்பதை மவ்லித் ஓதுவதை ஆதாரிக்கும் நபர் எழுதிய 'சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித்' என்ற நூலில் இருந்த சில தகவல்களை இங்கு திரட்டித் தந்துள்ளோம்.
சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?
தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது.
மகுடமாய்த் திகழும் சுப்ஹான் மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ, அல்இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 'இயற்றியவர் யார்?' என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)
சுப்ஹான மவ்லிதின் பெயர் காரணம்?
இந்த மவ்லித் ''ஸுýப்ஹானல் அஸீஸில் ஃகஃப்பார் என்று தொடங்குவதால் இதன் முதல் சொல்லான ஸுப்ஹான என்பதே இந்த மவ்லிதுக்குரிய பெயராக அமைந்தது. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)
'மவ்லித்' என்பதின் பொருள்
'மவ்லிது' எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் 'பிறந்த நேரம்' அல்லது 'பிறந்த இடம்' என்பதாகும். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 8)
மவ்லித் ஓதுதலை உருவாக்கியவர் யார்?
மவ்லிது ஓதும் அமலை அரசின் பெருவிழாக்களில் முக்கியம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்திவர், தலை சிறந்த-வள்ளல் தன்மை மிக்க-அரசர்களில் ஒருவரான 'அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீத் கவ்கப்ரீ - பின்- ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்' என்பவர் ஆவார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)
ஆஹா மெகா ஆஃபர்
உங்கள் நோக்கம் நிறைவேற உங்களுக்கு முழுயைôக பாதுகாப்பு பெற வருடத்தில் ஒருமாதம் மெகா ஆஃபர் நாள் வந்துள்ளது என்று மவ்லித் பிரியர்கள் அறிவித்துள்ளனர்.
மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும் நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியான நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மவ்லிதின் தனித்தன்மைகளைச் சார்ந்ததென்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருக்கின்றதென இமாம் கஸ்தலானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites