அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 4 டிசம்பர், 2010

"கல்வி கற்பது நிச்சயம், அது முஸ்லிம்களின் லட்சியம்''


k.ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்.
மற்ற மதங்களை பின்பற்றுவர்களை விட முஸ்லிம்கள் கல்வி கற்பதில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு கல்வி அறிவே கிடையாது, இவர்கள் படிப்பிற்கு முன்னுரிமை தர மாட்டார்கள். அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதிலும், பணம் சம்பாதிப்பதிலும் தான் ஆர்வமாக உள்ளார்கள் என்று நினைப்பது உண்மையாகத்தான் இருக்கிறது.
நம் முஸ்லிம் சமுதாய மக்கள் தன்னுடைய பெயரைக் கூட எழுதத் தெரியாத அளவிற்கு கல்வியில் பின்தங்கி இருக்கிறார்கள். மேலும் நம் வீட்டில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், போது மருத்துவரிடம் சென்று காண்பிக்கிறோம்.  அவர் என்ன மருந்தை எழுதிக் கொடுக்கிறார், எந்த மருந்தை எந்த வேளையில் சாப்பிட வேண்டும் என்று கூட தெரியதாவர்கள் முஸ்லிம்களில் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது அவர்கள் தரக் கூடிய சேர்க்கை படித்தை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது கூட தெரியாத பெற்றோர்கள் ஏராளம். இதைப்போன்று மணியார்டர் படிவம், வங்கி படிவம் போன்றவற்றை பெரும்பாலான முஸ்லிம்களுக்கு பூர்த்தி செய்யத் தெரியாத அவல நிலைதான் தொடர்கிறது. இதற்கு காரணம் படிப்பறிவின்னை, அதைப் பற்றி விழிப்புர்ணவு இல்லாமை.
நாம் மறுமை வெற்றிபெற மார்க்கத்தைப் பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். மார்க்கத்தை தெரிந்து கொள்வதற்குக்கூட இந்த உலகக்கல்வி அவசியமாகிறது. ஏதாவது ஒரு மொழி தெரிந்திருந்தால்தான் நாம் எதையும் தெரிந்து கொள்ள முடியும். எனவே மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காவது நாம் உலகக்கல்வியை படிக்க முன்வரவேண்டும்.
"உங்களுக்கு முன்னர் முன்னுதார ணங்கள் சென்றுள்ளன. "எனவே பூமியில் பயணம் செய்து (உண்மையைப்) பொய்யெனக் கருதியோரின் முடிவு எப்படி இருந்தது' என்பதைச் சிந்தியுங்கள்! (அல்குர்ஆன் 3:137)
இது மட்டுமல்லாமல் இது போன்ற ஏராளமான வசனங்களில் பூமியில் பயணம் செய்து அவனுடைய அத்தாட்சிகளை சுற்றி பார்த்து சிந்திக்குமாறு கூறுகிறான்.
இறைவனுடைய அத்தாட்சிகளையும், அவனுடைய ஒவ்வொரு அற்புதப் படைப்புகளையும் சிந்திப்பதற்கும், ஆராய்வதற்கும் உலகக்கல்வி தேவைப்படுகிறது. இந்த உலகக் கல்வி இல்லாததின் காரணத்தினால் தான் இறைவனுடைய வல்லமைகளையும், அத்தாட்சிகளையும் சிந்திக்காமல் இருக்கிறோம். இன்னும் ஆட்சி, அதிகாரத்திற்கும் கல்வி தேவையென்று  அல்லாஹ் கூறியுள்ளான்.
"தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான் என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். "எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை'' என்று அவர்கள் கூறினர். "உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடல் (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்'' என்று அவர் கூறினார்.'' (அல்குர்ஆன் 2:247)
ஆட்சி செய்வதற்கு கல்வி அவசியம் என்பதால்தான் தாலூத் என்ற நல்லடியாருக்கு ஆட்சியதிகாரத்தை தந்தான். ஆட்சிக்கு அல்லாஹ் செல்வத்தை பார்க்கவில்லை, கல்வியை தான் பார்கிறான் என்பது இந்த வசனத்தின் மூலம் தெரிகிறது.
இன்னும் அல்லாஹ் கூறுகிறான் இஸ்லாத்தை கல்வியாளர்கள் அறிந்து கொள்வார்கள் என்று
(முஹம்மதே!) "உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை'' என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது. (அல்குர்ஆன் 34:6)
கல்வி வழங்கப்பட்டவர்கள் இஸ்லாத்தை முழுமையாக விளங்கி கொள்வார்கள் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறகிறான். இதை நாம் கண்கூடாக பார்கிறோம். எத்தனையோ மாற்று மத சகோதரர்கள் குர்ஆனை சிந்தித்து பார்த்து இன்னும் இறைவனுடைய படைப்பகளையும் சிந்தித்து எது உண்மை என விளங்கி இஸ்லாத்தை ஏராளமானவர்கள் தழுவுவதைப்பார்கிறோம். இதற்கெல்லாம் முக்கிய காரணம் உலகக் கல்வியும், படிப்பறிவும் தான். கல்வியறிவால் தான் அவர்கள் அனைத்தையும் சிந்திக்கின்றனர்.
இது மட்டுமல்லாமல் கல்வியை வலியுறுத்தி ஏராளமான வசனங்களும், ஹதீஸ்களும் உள்ளன. னவே கல்வியை கற்பதற்க்கு முயற்சி செய்யவேண்டும்.
குழந்தைகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும்,
குழந்தைகள் தளர்ந்தாலும் படிப்பு விஷயத்தில் பெற்றோர்கள்  தம் குழந்தைகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும். உன்னால் படிக்க முடியும். நீ படி, நீ ஒரு டாக்கடராக வேண்டும், கலெக்ட்ராக வேண்டும் நீ நமது சமுதாயத்தில் சிறந்தவனாக வர வேண்டும் என்று ஆர்வமூட்ட வேண்டும். இப்படி ஒவ்வொரு பெற்றோரும் நடந்து கொண்டால் வருங்காலத்தில் முஸ்லிம் சமுதாயம் முழுமையான படிப்பறிவு பெற்ற சமுதாயமாக மாறும் என்பதில் ஐயமில்லை.
ஆண், பெண் என பாரபட்சம் பார்க்க கூடாது.
படிப்பு விஷயத்தில் ஆண், பெண் என்று பாரபட்சம் காட்டாமல் படிக்க வைக்க வேண்டும். ஆனால் இதற்கு மாற்றமாக நம் சமுதாயத்தினர் பெண்களை படிக்க வைப்பதில்லை. "கல்யாணம் செய்து கணவன் வீட்டுக்கு போகும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கூறுகிறார்கள். கல்யாணம் ஆனாலும் படிப்பு தேவை. படிப்பு இருந்தால்தான் கணவன் குடும்பத்தை சீராக நடத்தி செல்வாள்.இன்னும் தன் கணவன் தவறு செய்யும் சரியானதை கூறி திருத்துவாள்.தம் குழந்தை படிப்பதற்கும் படிப்பில் ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்கும் உதவுவாள்.
மூன்று பேருக்கு (அல்லாஹ்விடத்தில்) இரட்டை நன்மைகள் உண்டு.
1. வேதக்காரர்களில் ஒருவர் தமது (சமூகத்திற்கு நியமிக்கப்பட்ட) இறைத்தூதரையும் (இறுதித் தூதர்) முஹம்மதையும் நம்பிக்கைகொண்டார். 
2. ஓர் அடிமை அல்லாஹ்வின் கடமைகளையும் தம் எஜமானரின் கடமைகளையும் நிறைவேற்றினான்.
3. ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்து அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை செம்மையாகச் செய்து, அவளுக்கு கல்வி கற்பித்து, அதையும் செம்மையாகச் செய்தார். பிறகு அவளை அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்து அவளைத் தாமே மணந்தும் கொண்டவர். (இம்மூவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு.) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 அறிவிப்பவர் ; அபூமூசா அல்அஷ்அரீ (ரலிலி), நூல்: புகாரி (97)
அடிமையாக இருப்பவர்களுக்கே கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் ஊக்கமளித்துள்ளார்கள் என்றால் நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஆர்வம் அவசியம்:
படிக்க வேண்டுமென வீட்டில் அனுப்பினாலும் படிப்பதற்கு நாம் முயற்சி செய்வதில்லை. படிப்பு வரவேண்டுமென்றால் முதலில் நாம் படிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் இருக்கவேண்டும். நபித்தோழர்கள் நபிகளார் காலத்தில் மார்க்க விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு ஆர்வபட்டு முறைவைத்து கற்று வந்துள்ளார்கள்.
நானும் அன்சாரிகளில் ஒருவரான என் அண்டை வீட்டுக்காரரும் பனூஉமய்யா பின் ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்தோம். - அது மதீனாவின் மேடான கிராமப் பகதிகளில் ஒன்றாகும்-  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அன்னாரின் அவைக்கு) நாங்கள் (இருவரும்) முறைவைத்துச் சென்றுகொண்டிருந்தோம்.  அவர் ஒருநாள்  செல்வார்; நான் ஒருநாள் செல்வேன்.  நான் சென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டு வந்து (அவரிடம் அறிவித்து)விடுவேன்.  அது போன்று அவர் சென்றுவரும்போதும் அவ்வாறே செய்வார். 
அறிவிப்பவர் : உமர் (ரலி), நூல் :புகாரி (89)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலிலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். (ஒருநாள்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து "அபூ அப்திர்ரஹ்மான்! தாங்கள் தினமும் எங்களுக்கு அறிவுரைகூற வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன்' என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலிலி) அவர்கள் "உங்களைச் சலிலிப்படையச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைச் செய்யவிடாமல் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் நாங்கள் சலிலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு  அறிவுரை கூறிவந்தார்கள்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூவாயில் ஷகீக் பின் சலமா, நூல் :புகாரி (70)
ஆண்கள் மட்டும் இவ்வாறு கல்வி கற்பதில் ஆர்வமாக இருக்கவில்லை, பெண்களும் நபிகளாரிடம் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டியுள்ளார்கள்.  
 (ஒருசமயம்) பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம், "(நாங்கள் தங்களை அணுகி மார்க்க விளக்கங்கள் கேட்க முடியாதபடி) தங்களி டம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே, எங்களுக் காக (தனியாக) ஒரு நாளை ஒதுக்குங்கள்'' எனக் கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே  அப்பெண்களுக்கென ஒரு நாளை நபி (ஸல்) அவர்கள் வாக்களித்து, அந்நாளில் அவர் களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்; (மார்க்கக் கட்டளைகளை) வலியுறுத்தினார்கள். ''உங்களில் ஒரு பெண் (தனது மரணத்திற்கு) முன்பாக தம் குழந்தை களில் மூவரை (இறப்பின் மூலம்) இழந்து (இறைவனிடம்) அனுப்பிவைத்துவிடுகிறாரோ  அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலி ருந்து காக்கும் திரை (தடை)யாக இருப்பார்கள்'' என்று கூறினார்கள். உடனே ஒரு பெண்மணி,  "இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்...?' என்று கேட்டார்.  நபி (ஸல்) அவர்கள் "(ஆம்) இரண்டு, குழந்தை களை இழந்துவிட்டாலும்தான்'' என்றும் அவ்வுரையில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல் :புகாரி(101)
கல்வி வளர்ச்சிக்கு இறைவனிடம் கேட்க வேண்டும்
கல்வி வரவில்லையென்று தளர்ந்து விடக் கூடாது. சிலருக்கு கல்வி வரவில்லை என்று மனம் தளர்ந்து தற்கொலை செய்யக்கூடியவர்களையும் பார்க்கிறோம். ஆனால் இறைவன் கல்வி ஞானத்தை தன்னிடம் கேட்கும் படி கூறுகிறான்,
"என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து'' எனக் கூறுவீராக (அல்குர்ஆன்  20;114)
இதைப் போன்று மூஸா நபி அவர்களும் கல்வியை இறைவனிடம் கேட்டதையும் குறிப்பிடுகின்றான்.
 "என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!'' என்றார்.  எனது பணியை எனக்கு எளிதாக்கு! எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அல்குர்ஆன் 20: 25,26,27)
கல்வி கற்க ஆசைப்படவேண்டும்
கல்வி விஷயத்திற்கு பொறாமைபட வேண்டும். அது அல்லாமல் மற்ற விஷயத்திற்கு பொறாமைபட்டுக் கொண்டு இருக்கிறோம்.ஆனால் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
7528 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இரண்டு விஷயங்கüல் தவிர வேறெதற்காகவும் பொறாமைப்படக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் ஞானத்தை வழங்கினான். அதை அவர் அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார். (இதைக் கண்ட) மற்றொருவர், "இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்றே எனக்கும் வழங்கப்படுமானால் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே!'' என்று (ஆதங்கத் துடன்) கூறினார். 2. மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான்.  அதை  அவர் உரிய வழியில் செலவிடுகிறார்.
(இதைக் காணும்) மற்றொருவர், "இவருக்கு வழங்கப்பட்ட (செல்வத்)தைப் போன்று எனக்கும் வழங்கப்பட்டால், இவரைப் போன்றே நானும் செயல்படுவேன்'' என்கிறார்கள்.
இதை அபூஹுரைரா (ர-),நூல் :புகாரி (7528)
நம் மார்க்கத்தில் பொறாமை என்பது கிடையாது. ஆனால் ஒருவருக்கு இறைவன் கல்வியை அதன் படி அவர் செயல்படும் போது அவரைப்  போன்று நாமும் கல்வி கற்க வேண்டும். அதன் படி செயல்படவேண்டுமெனப் பொறாமைப்படலாம் என்பது இந்த ஹதீஸிலிருந்து தெரிகிறது. அப்படியென்றால் கல்விக்கு நம் மார்க்கம் எந்த அளவிற்கு முக்கியதுவம் தந்துள்ளது என்பதை சிந்துத்துப் பாருங்கள். எனவே கல்வி கற்பதில் நாமும் ஆர்வமுடன் இருந்து நம் குழந்தைகளையும் படிக்க வைத்து நல்லெழுக்கமுள்ள குழந்தைகளாகவும் அறிவாளிகளாகவும் மாற்ற முயற்சிப்போம்.


0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites