அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 16 டிசம்பர், 2010

தற்கொலையே தீர்வானால் நரகமே பரிசாகும்



எம்.ஜெசீமா பர்வீன், கோவிந்தகுடி
இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. ஒரு சிலரின் வாழ்க்கை இன்பப்பூஞ்சோலையாகிறது. ஆனால் சிலரின் வாழ்க்கை துன்பம் தரும் அனலாக மாறிவிடுகிறது. ஒவ்வொரு மனிதனும் தனக்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்றே நினைக்கின்றான். ஏதாவத பிரச்சனை நேர்ந்தால் அதற்கு மரணம் தான் தீர்வு என்று எண்ணி தன்னைத் தானே மாய்துக் கொள்கின்றான்.
இன்றைய செய்தித்தாள்களை புரட்டினால் நாள் தோறும் தற்கொலை செய்திகள் வந்த வண்ணமே உள்ளது. இவ்வாறு தற்கொலை நடப்பதற்காள காரணங்களை ஆராய்ந்து பார்த்தால்..
வரதட்சனை கொடுமையால் தீக்குளித்து சாவு
காதல் தோல்வியால் காதல் ஜோடிகள் தற்கொலை
தேர்வில் தோல்வியால் மாணவர் தற்கொலை
வறுமையால் ஏழை விவசாயி தற்கொலை
என இது போன்ற பல காரணத்தால் பெரியவர், சிறியவர், ஏழை, பணக்காரர், முஸ்லிம், இந்து என்ற எந்த வேறுபாடுகளும் இல்லாமல் தற்கொலை செய்துக் கொள்வதை அவ்வப்போது செய்தித்தாள்களில் பார்க்கிறோம்.
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)
மனிதான பிறந்த அனைவருக்கும் சோதனை உள்ளது. அல்லாஹ்வை நம்பி அவன் வழியில் வாழும் ஓர் நல்லடியாராயிருப்பினும் அவரும் சோதிக்கபடாமல் இருப்பதில்லை.
"நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? (அல்குர்ஆன் 29:2)
இவ்வாறு சோதிக்கப்படும் போது தற்கொலை செய்துக் கொள்ளும் கோழைச் செயல் மறுமை நாளில் நிரந்தர நரகத்திற்கு கொண்டு சேர்த்துவிடும்.
உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். வரம்பு மீறியும், அநீதி இழைத்தும் இதைச் செய்பவரை நரகில் நுழைப்போம். இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே உள்ளது. (அல்குர்ஆன் 4:29,30)
பிரச்சனைகளுக்கு தற்கொலைத்தான் தீர்வு என்றால் மறுமை நாளில் தற்கொலைக்கு தண்டனை நிரந்தர நரகமாகும்.
உண்மை மார்க்கத்தில் இருக்கும் இஸ்லாமிய சமுதாயமும் தடைசெய்யப்பட்ட தற்கொலை போன்ற செயலில் ஈடுபடுபடுவது வேதனைக்குரிய விஷயமாகும். இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆறு நிமிடத்திற்கும் ஒரு தற்கொலை நடக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு 240 தற்கொலைகள் நிகழ்கின்றன. இந்தியாவிலலேயே மிக அதிகமாக தற்கொலை நடக்கும் மாநிலம் கேரளமாகும். உலகெங்கும் ஒரு வருடத்திற்கு பத்து இலட்சம் தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன.
இந்த கொடுமையான நிகழ்வுக்கு மறுமையில் கிடைக்கும் தீர்வை நபிகளாரின் பொன்மொழிகளில் பாருங்கள் :
 யார் வேண்டுமென்றே பொய்யான விஷயத்தில் சத்தியம் செய்யும்போது (நான் சொல்வது பொய்யென்றால்) இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தில் உள்ளவனாவேன் என்று கூறுகிறாரோ அவர் கூறியதுபோல் (வேறு மார்க்கத்தில்) ஆவார். மேலும் யார் இரும்பு ஆயுதத்தால் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அவர் அதே ஆயுதத்தால் நரகில் வேதனை செய்யப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
   அறிவிப்பவர் :  ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி), நூல் :புகாரி (1363)
 "யார் தமது கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெரித்துக்கொண்டிருப்பார். யார் தம்மைத்தாம் (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
   அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி (1365)
யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மே-ருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக்கொண்டேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (-), நூல் :புகாரி(5778)
மேற்கூறப்பட்ட நபிமொழிகள் தற்கொலை எவ்வளவு பெரிய பாவம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. எனவே இந்த தற்கொலை என்ற பெரும் பாவத்தின் பக்கம்கூட செல்லாதவர்களாக நாம் இருப்போம். யாருக்கேனும் உலக வாழ்க்கை வெறுத்து தற்கொலை செய்யும் எண்ணம் வந்தால் நபிகளார் காட்டிய பிரார்த்தனை செய்யட்டும்.
உங்கüல் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாகவேண்டும் என்றிருந் தால், "இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின் எனக்கு இறப்பைத் தருவாயாக!'' என்று கேட்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மா-க் (ரலி), நூல் :புகாரி (5671,6351)

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites