அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 24 ஜனவரி, 2011

அநியாயமாக இடிக்கப்பட்ட டெல்லி நூர் பள்ளி: கொந்தெளித்த டெல்லி முஸ்லிம்கள்!


சட்ட விரோதமாக கட்டப்பட்டப்பட்டுள்ளது என்று கூறி டெல்லி அரசாங்கம் (Delhi Development Authority) கடந்த 12 ஆம் தேதி டெல்லி ஜங்புரியா பி பிளாக்கில் உள்ள நூர் பள்ளியை இடித்து தரைமட்டமாக்கியது.
இதை கண்டித்து ஒரு நாள் முழு அடைப்பு போன்ற பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.
கடந்த 2009 ஜூன் மாதம், “நூர் பள்ளிவாசலை இடித்து நீக்கம் செய்யவும் அருகில் உள்ள வால்மீகி கோயில் இடத்தைக் கோயிலுக்காக விட்டுக்கொடுக்கவும்லெஃப்டினண்ட் கவர்னர் அலுவலக மதத்துறை கமிட்டி சிபாரிசு செய்தது. இதனைத் தொடர்ந்தே பள்ளிவாசலை இடிப்பதற்கான முயற்சிகளை டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆரம்பித்தது.
கடந்த 2009 ஆகஸ்ட் மாதத்திலிருந்து டெல்லி வளர்ச்சி ஆணையம் பள்ளிவாசலை இடிப்பதற்கான முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தது. ஆனால், அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக உடனடியாக அதைச் செய்ய இயலவில்லை.
2010 அக்டோபர் மாதம், பள்ளிவாசலை இதுவரை இடித்து நீக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி டெல்லி வளர்ச்சி ஆணையம் மற்றும் டெல்லி முனிசிப்பல் கார்ப்பரேசன் ஆகியவற்றுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை ஜங்புரா ரெசிடென்ஸ் அஸோசியேஷன் தொடுத்தது.
நூர் பள்ளிவாசல் கட்டிடம் உள்ள  நிலம் வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரத்தை 2010 அக்டோபர் 26 ஆம் தேதி வக்ஃப் போர்டு டெல்லி வளர்ச்சி ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இதனைக் கண்டுகொள்ளாமலேயே டெல்லி வளர்ச்சி ஆணையம் தங்கள் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக கடந்த 12 ஆம் தேதி பள்ளிவாசலைக் காவல்துறை பாதுகாப்புடன் இடித்துத் தள்ளியது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் மஸ்ஜித் இருந்த இடம் முஸ்லிம்களுக்குரியது என்பதற்கான 1975 ஆம் ஆண்டு  கேசட் ஆதாரத்தை  நூர் பள்ளி கமிட்டி தலைவர் சாஹி இமாம் அவர்கள் கோர்ட்டில் சமர்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இடிக்கப்பட்ட இடத்தில் கடந்த வெள்ளிகிழமை தொழுகை நடத்தப்பட்டது.
பள்ளிவாசலை மீண்டும் கட்டி தருவதாக டெல்லி முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளாராம்.
இடிக்கும் வரை வேடிக்கை பார்த்து விட்டு தற்போது பொதுமக்களின் கடும் எதிர்ப்பை பார்த்து விட்டு கட்டித் தருவதாக நாடகமாடுகின்றது டெல்லி காங்கிரஸ் அரசு!
காங்கிரஸின் இது போன்ற முஸ்லிம் வீரோத போக்கு கண்டனத்திற்குரியது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites