அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 12 ஜனவரி, 2011

அண்டை வீட்டார் தொடர்பாக வந்துள்ள ஆதாரமற்ற செய்திகள்



உள்ளத்தின் கோபத்தை போக்கும்
அன்பளிப்புச் செய்யுங்கள்! ஏனெனில் அன்பளிப்பு உள்ளத்தின் கோபத்தை போக்கிவிடும். ஓர் அண்டைவீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பின் துண்டை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத  வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுýரைரா (ரலி), நூல் : திர்மிதீ (2056)
இந்த செய்தியை பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே இந்த ஹதீஸின் இறுதியில் இதில்இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அபூமஃஷர் என்பவரை அவரின் நினைவாற்றல் தொடர்பாக பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
வீட்டுப் பொருட்களை வீதியில் எறியுங்கள்
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து தன் அண்டைவீட்டாரைப் பற்றி புகார் செய்தார்."நீர் சென்று பொறுமையாக இரு! என்று கூறினார்கள். அந்த மனிதர் (மீண்டும்) இரண்டாம் தடவையோ அல்லது மூன்றாம் தடவையோ (புகார் கூற) வந்த போது நபி (ஸல்) அவர்களிடம் " நீர் சென்று உன் வீட்டுப் பொருட்களையெல்லாம் வீதியில் எறி! மக்கள் என்னவென்று விசாரிப்பார்கள். நீர் அவர்களிடம் விவரத்தை கூறு! மக்கள் அவரை சபிப்பார்கள், அல்லாஹ்வும் அவ்வறே செய்வான்'' என்று கூறினார்கள். அவரும் அவ்வாறு செய்தார் (நபிகளார் சென்னபடியே நடக்கவும் செய்தது. இதன் பின்னர்) அவரின் அண்டை வீட்டுக்காரர் வந்து, நீர் உம் வீட்டுக்கு திரும்பிச்செல்லும்! (இனிமேல்) நீ வெறுக்கும் எதையும் என்னிடம் காணமாட்டீர்! என்று கூறினார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அபூதாவூத் (4486)
இச்செய்தியில் இடம் பெற்றியிரும் மூன்றாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் அஜ்லான் என்பவரின் நனைவாற்றல் தொடர்பாக ஹதீஸ்கலை அறிஞர்கள் குறைகூறியுள்ளனர். இவர்நல்லவர் எனினும் அபூஹýýýரைரா (ரலி) அவர்களின் செய்தியில் இவருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிபிட்டுள்ளார்கள்.( இந்த செய்தியும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் மூலமதான் அறிவிக்கப்பட்டுள்ளது.) மேலும் இமாம் முஸ்லிம் அவர்கள் இவரை ஆதாரமக் கொள்ளவில்லை. இவரின் செய்திகளை துணைச் சான்றாகவே குறிப்பிட்டுள்ளார்கள் (தஹ்தீபுத் தஹ்தீப், தக்ரீபுத் தஹ்தீப்) மேலும் இவரை பிற்காலத்தில் வந்த ஹதீஸ்கலை அறிஞர்கள் அவரின் நினைவாற்றல் தொடர்பாக விமர்சனம் செய்துள்ளனர். இவரின் 13 செய்திகனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கள். இவை அனைத்தும் துணைச்சான்றுகளாகவே கொண்டுவந்துள்ளார்கள் என்று ஹாகிம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
பிற்கால சோதனை
என்னுடை இந்த சமுதாயம் எனக்கு பின்னர் சோதனை உட்படுத்தப்படும். அல்லாஹ்வின் தூதரே! எந்த முறையில் என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அண்டை வீட்டுக்காரன், தன் அண்டைவீட்டுக்காரனின் உரிமை அறிந்திருக்கமாட்டான் என்று கூறினார்கள். (நூல் : ஹக்குல் ஜார், பக்கம் : 2)
இந்த செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல! இமாம் தஹபீ அவர்கள் "இது (நபிகளார் பெயரில்) இட்டுக்கட்டப்பட்டது' என்று  கூறியுள்ளார்கள்.
மறுமைநாளின் அடையாளம்
கெட்ட அண்டைவீட்டான் இருப்பதும் குடும்ப உறவை முறிப்பதும் ... மறுமை நாளின் அடையாளங்களாகும். (நூல் : ஹக்குல் ஜார், பக்கம் : 2)
இதில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் உமர் பின் ஹம்சா என்பவர் பலவீனமானவராவார். (தக்ரீபுத் தஹ்தீப்)
முஃமினின் அடையாளம்
உன் அண்டை வீட்டாரிடன் நல்லமுறையில் நடந்துகொள்! நீ முஃமினாக ஆகிவிடுவாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : ஹக்குல் ஜார், பக்கம் : 4)
இச்செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அபூதாரிக் என்பவர் யாரென அறியப்படாதவர். (தக்ரீபுத் தஹ்தீப்) இவரின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படாததால் இச்செய்தி பலவீனமடைகிறது.
அண்டைவீட்டாரின் கடமைகள்
அல்லாஹ்வின் தூதரே! என் அண்டைவிட்டாருக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்று கேட்டேன்? அதற்க " அவன் நோயுற்றால் அவனை நோய்விசாரிக்கச் செல்வது, அவன் இறந்து விட்டால் அவனை பின்தொடர்வது (அதாவது அவனின் ஜனாஸாவை பின்தொடர்வது), அவன் கடன் கேட்டால் கடன் கொடுப்பது, அவன் தவறுசெய்தால் அதை (மற்றவர்களுக்கு தெரியாமல்) மறைப்பது, அவனுக்கு நன்னை ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவது, சோதனை ஏற்பட்டால் பொறுமையை மேற்கொள்ளச் செய்வது, மேலும் உனது கட்டடத்தை அவனுக்கு காற்று செல்லாமல் இருக்கும் வகையில் கட்டாமல் இருப்பதாகும். மேலும் உன் சட்டியின் (கறி) வாசனையால் அவனுக்கு தொல்லை தராதே! எனினும் ஒரு கையளவு அதிலிருந்து அவனுக்கு கொடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : ஹக்குல் ஜார், பக்கம் : 4)
இதில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் அபூபக்ர் அல்ஹýதலீ என்பவர் ஹதீஸ்துறையில் கைவிடப்பட்டவர், பலவீனமானவர்(தக்ரீபுத் தஹ்தீப்) மேலும் இமாம் தஹபீ அவர்களும் அதே நூலில் இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அண்டைவீட்டாரின் உரிமை பற்றி உங்களுத் தெரியுமா? அவன் உதவி தேடினால் அவனுக்கு நீ உதவுவது, கடன் கேட்டால் கடன் தருவது, அவன் வறுமையை அடைந்தால் அதை நீ நீக்குவது, அவன் நோயுற்றால் நீ நோய்விசாரிக்கச் செல்வது, அவனின் அனுமதி இல்லாமல் அவனுக்கு காற்று செல்லா வண்ணம் கட்டடத்தை உயர்த்தாமல் இருப்பதாகும். பழங்களை வாங்கினால் அவனுக்கு நீ அன்பளிப்புச் செய்! இல்லையெனில் இரகசியமாக அதை கொடுத்துவிடு, அவனின் குழந்தை கோபமூட்டும் வகையில் உன் குழந்தை,  இந்த பழத்தை வெளியில் கொண்டு செல்லாமல் இருக்கட்டும். அவனுக்கும் ஒருபிடி கொடுக்காமல் உன் சட்டியின் கறிவாசனை அவனை தொல்லை தராமல் இருக்கட்டும் என்று கூறிய நபிகளார், என்னை அவர்களுக்கு வாரிசாக்கிவிடுவார்களோ என்று நான் எண்ணும் அளவிற்கு அண்டைவீட்டாரிடம் நல்லமுறையில் நடக்கும்படி தொடர்ந்து ஜிப்ரீல் (அலை) அவர்கள் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள் என்று கூறினார்கள். (நூல் : ஹக்குல் ஜார், பக்கம் : 4)
இமாம் தஹபீ அவர்கள் அதன் அறிவிப்பாளர் தொடரில் ýவைத் பின் அப்துல் அஸீஸ் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். மேலும் இதே கருத்து முஆவியா (ரலி) அவர்கள் வழியாக நபிகளார் கூறியதாக இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடர் அறுந்த செய்தியாகும் என்று கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! அண்டைவீட்டார்களின் உரிமை என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அவன் அழைத்தால் அதற்கு நீ பதிலளிப்பதும், அவன் உதவி தேடினாôல் உதவி செய்வதும், அவனுக்கும் ஒருபிடி கொடுக்காமல் உன் சட்டியின் கறிவாசனை அவனை தொல்லை தராமல் இருப்பதுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள பதிலளித்தார்கள். (நூல் : ஹக்குல் ஜார், பக்கம் : 5)
இதன் தொடரில் இடம்பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் ராஃபிவு என்பவர் பலவீனமானவர் என்று இந்த செய்தியின் இறுதியில் இமாம் தஹபீ குறிப்பிட்டுள்ளார்கள்.
போருக்கு வரக்கூடாது
ஒரு போருக்கு நபி (ஸல்) அவர்கள் செல்லும் போது, யார் அண்டைவீட்டாருக்கு தொல்லை கொடுத்தாரோ அவர் நம்முடன் சேரவேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : அல்முஃஜமுல் அவ்ஸத்-தப்ரானீ, பாகம் : 9, பக்கம் : 181)
இச்செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அப்துர்ரஹ்மான் பின் ஜைத் பின் அஸ்லம் என்பவர் பலவீனமானவர் (நூல் : தக்ரீபுத் தஹ்தீப்)

நம்மை சார்ந்தவன் இல்லை
யார் அண்டைவீட்டில் ஒரு மனிதனின் அந்தரங்கத்தையோ அல்லது ஒரு பெண்ணின் முடியையோ அல்லது அவளின் உடலில் ஏதோவது ஒரு பகுதியையோ எட்டிப் பார்த்தால் பெண்களின் அந்தரங்தத்தை தேடிஅலையும் நயவஞ்சகர்களுடன் நரகத்தில் நுழையவைப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகும். அவனை கேவலப்படுத்தாமல் இவ்வுலகத்திலிருந்து அல்லாஹ் வெளியேற்றமாட்டான். யார் அநியாயமாக அண்டைவீட்டாருக்குத் தொல்லை தருவானோ அவனுக்கு சுவர்க்கத்தை தடைசெய்துவிடுகிறான். நரகத்தை தங்குமிடமாக ஆக்கிவிடுவான். தம் குடும்பத்தினரை விசாரிப்பது போல் அண்டைவீட்டாரின் உரிமையைப் பற்றி அல்லாஹ் விசாரிப்பான். யார் அண்டைவீட்டாரின் உரிமையை வீணாடித்திருப்பானோ அவன் நம்மைச் சார்ந்தவன் இல்லை என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (நூல் : அல்மதாலிபுல் ஆலிய்யா, பாகம் : 7, பக்கம் : 423)
இச்செய்தியில் இடம் பெறும் மைஸரா பின் அப்து ரப்பிஹி என்பவர் நபிகளார் பெயரில் ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்பவர். இந்த செய்தி பதிவு செய்த ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் அந்த செய்தியின் இறுதியேலே இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
தொல்லை தராதே!
நபி(ஸல்) அவர்களிடம ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர் இருக்கும் இடத்தில் நான் தங்கினேன். ஆனால் பக்கத்திலிருந்த அண்டைவீட்டார்கள் எனக்கு மிகவும் கடுமையாக தொல்லைகளை தந்தார்கள் என்று கூறினார். உடன் நபிகளார் அவர்கள் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), அலீ (ரலி) ஆகியோரை அனுப்பி அவர்களை பள்ளிவாசலுக்கு அழைத்துவர அனுப்பினாôர்கள். அவர்கள் பள்ளியின் வாசலில் நின்றார்கள். அப்போது,  "அறிந்து கொள்ளுங்கள்! நாற்பது வீடுகள் அண்டைவீடாகும். எவரின் நாசவேலைகளிலிருந்து பக்கத்துவீட்டார் பயப்படுகிறாரோ அவர் சுவர்க்கம் செல்லமுடியாது'' என்று சப்தமிட்டுகூறினார்கள்.
அறிவிப்பவர் : கஅப் பின் மாலிக் (ரலி), நூல் : அல்முஃஜமுல் கபீர் - தப்ரானீ, பாகம் : 19, பக்கம் : 73)
இந்த செய்தியில் இடம் பெறும் யூசுஃப் பின் அஸ்ஸஃபர் என்பவர் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டவர். இவர் பொய் சொல்லுபவர் என்று தாரகுத்னீ அவர்களும் இவரை எந்த நிலையில் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று இப்னுஹிப்பான் அவர்களும் கூறியுள்ளனர். (நூல் : அல்லுஅஃபாவுல் வல்மத்ரூகீன்-இப்னுல் ஜவ்ஸீ பாகம் : 3, பக்கம் : 220)
அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் செய்பவன்
யார் தன் அண்டை வீட்டாருக்கு தொல்லை தருவானோ அவன் எனக்குத் தொல்லை தந்துவிட்டான், யார் எனக்கு தொல்லை தந்தானோ அவன் என்னுடன் பேரிட்டுவிட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் :  ஹக்குல் ஜார், பக்கம் : 2)
இதில் இடம் பெறும் இஜ்ண்டாவது அறிவிப்பாளர் அப்பாத் பின் பஷீர் என்பவர் அனஸ் (ரலி) அவர்கள் மூலமாக பொய்யான செய்திகளை கூறுபவர் என்று இமாம் தஹபீ அவர்கள் தனது மீஸானுல் இஃதிதால் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இந்த செய்தியின் இறுதியிலும் இது மறுக்கப்படவேண்டிய செய்தி என்று கூறியுள்ளார்கள்.
இதே செய்தி வேறு நூலிலும் இடம் பெற்றுள்ளது.
யார் தன் அண்டைவீட்டாருக்கு தொல்லை தருவானோ அவன் எனுக்கு தொல்லை தந்தவனாவான், எவன் எனக்கு தொல்லை தந்தானோ அவன் அல்லாஹ்வுக்கு தொல்லை தந்தவனாவான், எவன் தன் அண்டைவீட்டாருடன் போர்புரிவானோ (சண்டையிடுவானோ) அவன் என்னிடம் போர்புரிபவனாவான். எவன் என்னிடம் புரிந்தானோ அவன் அல்லாஹ்விடம் போர்புரிந்தவனாவான் என்று நபிகளார் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : தவ்பீக்
இந்த செய்தியை அபூஷைக் இப்னு ஹிப்பான் என்பவர் தனது கிதாபுத் தவ்பீக் என்ற நூலில் பதிவு செய்திருப்பதாக "அத்தர்கீபுத் வத்தர்ஹீப்' என்ற நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். தவ்பீக் என்ற நூல் நம்மிடம் இல்லாததால் அதன் அறிவிப்பாளர் வரிசையை சரிகாணமுடியவில்லை. 'அத்தர்கீபுத் வத்தர்ஹீப்' என்ற நூலின் ஹதீஸ்களை ஆய்வு செய்த ஷைக் அல்பானீ அவர்கள் இந்த செய்தி பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். எந்த அறிவிப்பாளர் பலவீனமானவர் என்ற விவரத்தை அவர்கள் குறிப்பிடவில்லை.
மோசமான மூன்று நபர்கள்
மூன்று நபர்கள் மிகவும் மோசமானவர்களில் உள்ளவர்கள். 1.  நீ நல்லது செய்தால் உனக்கு நன்றி செலுத்தாத, நீ தவறிழைத்தால் மன்னிக்காத தலைவன் 2. நல்லதை கண்டால் அதை மறைத்து, (உன்னிடம்) தீயதைக் கண்டால் பரப்பிவிடும் அண்டைவீட்டுக்காரன். 3. நீ இருந்தால் உனக்கு தொல்லை தந்து நீ இல்லாத நேரத்தில் மோசடிதனத்தில் (விபச்சாரத்தில்) ஈடுபடும் மனைவி என்று நபிகளார் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஃபழாலா பின் உபைத் (ரலி), நூல் : அல்முஃஜமுல் கபீர்- தப்ரானீ, பாகம் : 18, பக்கம் : 318)
இச்செய்தியில் இடம் பெறும் முஹம்மத் பின் இஸாம் பின் யஸீத் என்பவர் யாரென அறியப்படாதவர். (நூல் : மஜ்மவுஸ் ஸவாயித், பாகம் : 8, பக்கம் : 168)
இதே கருத்தில்    ''மூன்று நபர்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள்... வாசகம் கூடுதலாக அபூஹýரைரா(ரலி) அறிவிக்கும் செய்தி "மீஸானுல் இஃதிதால்' என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. எனினும் அதுவும் பலவீனமானதாகும். அதில் அஷ்அஷ் பின் பர்ராஸ் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று அதே நூலில் அதே இடத்தில் கூறப்பட்டுள்ளது. (மீஸானுல் இஃதிதால் பாகம் : 1, பக்கம் : 325)
ஆடை வழங்காதவன்
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஆடைஅணிவியுங்கள் என்று கேட்டார். நபிகளார் அவரை கண்டுகொள்ளவில்லை. அவர் (திரும்பவும்) அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஆடைஅணிவியுங்கள் என்று கேட்டார். அப்போது " உமக்கு, "இரண்டு உபரியான ஆடைகள் உள்ள அண்டைவீட்டார் உள்ளாரா?' என்று நபி (ஸல்) அவர்கள கேட்டார்கள். ஆம். ஒன்றுக்கும் மேற்பட்டவை உள்ளது என்றார். அதற்கு "  உம்மையும் அவரையும் அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒன்றுசேர்க்கமாட்டான்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : அல்முஃஜமுல் அவ்ஸத் - தப்ரானீ, பாகம் : 7, பக்கம் : 170)
இச்செய்தியில் இடம் பெறும் அல்முன்திர் பின் ஸியாத் என்பவர் நபிகளார் பெயரில் பொய்யான் செய்திகளை இட்டுக்கட்டிச் சொல்பவர் (நூல் : லிஸானுல் மீஸான் பாகம் : 6, பக்கம் : 89)

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites