அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 30 மே, 2011

பெர்முடா முக்கோணம்


வட அட்லாண்டிக் பெருங்கடல் பெர்முடா, மியாமி, பியூர்டோரிகா இந்த மூன்று பகுதிகளையும் இணைத்தால் இரு முக்கோண பகுதி கிடைக்கும். இதில் என்ன விசேஷம் என்று பார்ப்போம்.
இந்த முக்கோணத்தின் இயல்பு எல்லா விஞ்ஞானிகளையும் பயமுறுத்தும் வகையில்அமைந்திருப்பது தான். அப்படி என்ன இருக்கு இதில் ஆம்! இந்த முக்கோண
பரப்பிற்கு உள்ளே வருகின்றன எந்த ஒரு பொருளையும் இது தனக்குள் இழுத்துக்கொள்ளுமாம். பல ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை 40 கப்பல்களையும், 20
விமானங்களையும் சிறு சிறு மரக்கலங்களையும் உள்ளிழுத்திருக்கிறது.
இதில் 1872ம் ஆண்டில் மேரி செலஸ்டினு பெயர் கொண்ட ஒரு பாய்மரக்கப்பல்
தான் பதிவான முதல் பதிப்பு. ஏன் இப்படி நடக்கின்றது என நிறைய ஆராய்ச்சிகளும் விளக்கவுரை களும் பல விஞ்ஞானிகளிடம் இருந்துகிடைத்திருக்கின்றன. அதில் வாலன்டைன் என்பவர் இந்த மாதிரி காணாமல்
போன பொருள்கள் அனைத்தும் எங்கேயும் போய்விடவில்லை.

அது எல்லாம் அங்கயேதான் இருக்கின்றன. ஆனால் வேறு பரிமாணத்தில் இருக்கின்றன என கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டு சோதிட வல்லுனர் ஒருத்தர் அந்த பரப்புக்கு அடியில் உள்ள ஒரு சக்தி மையத்தில் தான்நடக்கிறது என சொல்லியிருக்கிறார். திரும்பவும் அந்த பொருட்களை மீட்க முடியும் என்றும் சொல்கிறார்.
அதே மாதிரி படிகங்களில் இருந்து வருகின்ற ஒளி ரேகைகள் இத்தகைய பொருட்களை
வேறு பரிணாமத்திற்கு மாற்றி உள்ளிழுக்கின்றன என்ற கருத்தையும்விஞ்ஞானிகளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
அண்மைக்கால ஆய்வுகள் படி விஞ்ஞானிகள் எல்லா திட பொருட்களும் அதற்குள் உள்ளடக்கிய சக்தியை பெற்றிருப்பதாகவும், திடப்பொருள்கள் யாவும் இந்த சக்தியின் மறு உருவம் என்றும் இந்த சக்தி ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இயங்குகின்ற இலத்திரன் வடிவத்தில் இருக்கின்றது என முடிவாக கூறுகிறார்கள்.
இந்த இலத்திரன்களை காலம் என்னும் பரிணாமத்தில் திரும்பி செயல்பட
வைத்தால், அதாவது ஒரு திடப்பொருள் உருவாகிறது என்ற செயல் முறையை தலைகீழாக
செய்தால் அப்படி செய்யும்போது எல்லா பொருளும் நுண்ணிய அணுக்களாக மாறி காற்றில் கலந்துவிடும் என்கின்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இந்த செயல் முறைக்கு எதிர் மறை செயல் திறன்பெயரும் வைத்திருக்கிறார்கள்.
இதுதான் ஒரு பொருளின் ஐந்தாவது பரிணாமமாம்.
பேசினால் போதும்: தானாகவே சார்ஜ் ஏறும் கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு பேசினாலே பற்றரியில் சார்ஜ் ஏறும் புதிய வகையான கைத்தொலைபேசிகளை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய தொழிநுட்பத்தின்படி ஒருவர் பேசும் ஒலி மின் சக்தியாக மாறி கைத்தொலைபேசியின் பற்றரியில் சார்ஜ் ஏற்றப்படுகிறது. மேலும் கைத்தொலைபேசியில் பேசுபவரை சுற்றி கேட்கும் சப்தம், இசை உள்ளிட்டவைகளின் ஒலியாலும் இவ்வகையான தொலைபேசியில் சார்ஜ் ஏற்றலாம்.
 சியோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான சாங் வூகிம் என்பவர் இத்தகைய கைத்தொலைபேசியை கண்டுபிடித்திருப்பதாக தி சன்டே டெலிகிராப் என்னும்
நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மின்சாரம் இன்றி சுற்றுப்புறத்தில் உள்ள ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி கைத்தொலைபேசியின் பற்றரியில் சார்ஜ் ஏற்றப்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. கைத்தொலைபேசி பயன்பாட்டில்
இல்லாவிட்டாலும் சத்தம் நிறைந்த இடங்களில் வைக்கப்படும் இத்தகைய கைத்தொலைபேசிகள் தானாக சார்ஜ் ஏற்றப்படுகின்றன

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites