அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 25 மே, 2010

இவர்களை தெரியுமா? பாகம் 1



ஷீஆக்களின் வழிகெட்ட  கொள்கைகள்:
அறிமுகம்:
இஸ்லாம் என்ற வாழ்க்கைத் திட்டத்தின் மூலம் ஜாஹிலிய்யா சமூகத்தை நபி (ஸல்) அவர்கள் ஒரே சமுதாயமாக மாற்றியமைத்தார்கள். அதற்கு முன்னர் அவர்கள் குலத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் சிதரிக்கிடந்தனர். இவர்கள் போன்று சண்டையிட்டுப் பிரிந்த சமுதாயம் உலகில் யாரும் இருக்கவில்லை. நரகின் விளிம்பில் இருந்தார்கள். இஸ்லாத்தின் ஒளிக்கீற்று அவர்களின் வாழ்வில் பட்ட பின்னர் உலக வரலாற்றில் அந்த சமுதாயத்தில் காணப்பட்ட ஒற்றுமை போன்று ஒரு போதும் காணப்பட்டதில்லை.
நபி (ஸல்) அவர்களின் பின்னர் இந்த ஒற்றுமையைக் குலைப்பதை இலட்சியமாகக் கொண்டவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு முதலில் பலியானவர்கள் ஷீஆக்களும் காரிஜியாக்களுமாவர். இந்த இரு பிரிவினரும் இஸ்லாத்திற்கு கேடு விளைவித்த அளவுக்கு வேறு எந்தப் பிரிவினரும் கேடு விளைவித்ததில்லை.
இப்பிரிவுகள் தோன்றுவதற்கு தனியொரு நபர் மீது கொண்ட விருப்பு வெறுப்பு என்பனவே காரணங்களாக அமைந்தன. அலி (ரழி) அவர்களின் மீது வெறுப்பு எல்லை மீறிப் போனதால் காரிஜிய்யா என்ற பிரிவு தோன்றியது. அரசியல் காரணங்களுக்காக அலி (ரழி) அவர்களை எதிர்க்க ஆரம்பித்த இந்தக் கும்பல் அல்லாஹ்வின் தூதர் பெயரால் பொய்களைப் பரப்பி அல்குர்ஆனுக்கு தவறான விளக்கம் கூறி கிளர்ச்சி செய்தனர்.
இதேபோல் இவர்களுக்கு எதிராக அலி (ரழி) அவர்களை ஆதரிக்க முன்வந்த கூட்டமே ஷீஆشيعة எனப்படுகின்றனர். இவர்கள் தான் இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக ஷீஅத்து அலிஎன்று அழைக்கப்பட்டனர். ஷீஆشيعة என்ற சொல் கட்சி குழு என்ற கருத்தைத் தருகிறது.
அலி (ரழி) அவர்களின் அரசியல் தலைமைக்கு ஆதரவாக வளர்ந்த இப்பிரிவினர் நாளடைவில் அவர்களை அவதார புருஷராகவும் தெய்வீக அம்சம் பொருந்தியவராகவும் நபி (ஸல்) அவர்களை விட உயர்வானவராகவும் கருதலானார்கள். இந்த வெறி முற்றிப்போன போது அபூபக்கர் (ரழி) உமர் (ரழி) உஸ்மான் (ரழி) போன்ற உன்னத ஸஹாபாக்களை இழிவுபடுத்த ஆரம்பித்தனர்.
இன்று இவர்கள் பல பிரிவுகளாக பல கொள்கைகளுடன் உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். ஈரானில் அவர்களின் ஆட்சியே உள்ளது. ஷீஆக்கள் இந்நாட்டில் நுழைவதற்கு சிலர் இன்று வழி அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இஸ்லாத்தை விட்டு முற்றிலுமாக வெளியேறிவிட்டஷீஆக்கள்தான் உண்மை முஸ்லிம்கள் என்ற பிரசாரம் கூட சில இயக்கவாதிகளால் முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஏகத்துவக் கொள்கையைத் தூக்கி எறிந்துவிட்டு அரசியலுக்கும் அனைத்து துறைக்கும் வழிகாட்டும் இயக்கங்கள் என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டுஷீஆப்புரட்சியாகிய ஈரானியப் புரட்சிக்கு இஸ்லாமிய சாயம் பூசிக்கொண்டிருக்கின்றன இந்த இயக்கங்கள். எனவே ஷீஆக்கள் என்றால் யார்? அவர்களின் கொள்கைகள் என்ன? என்பனவற்றை சுருக்கமாக இங்கு நோக்குவோம்.
அஷ்ஷீஆ : الشيعة
இப்பெயருக்குள் அனைத்து உட்பிரிவுகளும் அடங்கிவிடும். இதுவே மிகப் பிரபல்யமான பெயர்.
பிரதான பிரிவுகள்:
ஷீஆ இயக்கத்திற்குள் கிட்டத்தட்ட 70 திற்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உண்டு என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அவற்றில் பிரதான நான்கு பிரிவுகள் உள்ளன.
அஸ்ஸபயிய்யா
அஸ்ஸைதிய்யா
அல்கைஸானிய்யா
அர்ராபிழா
அஸ்ஸபயிய்யா:
இவர்கள் அப்துல்லாஹ் பின் சபா எனும் யூதனைப் பின்பற்றுவோர். இவர்கள் அலி (ரழி) மரணிக்கவில்லை என்றும் அவர்கள் மேகத்தில் இருப்பதாகவும் இடி அவரின் ஓசை மின்னல் அவரின் பார்வை என்றும் இறுதிகாலத்தில் மீண்டும் வந்து நீதத்தால் பூமியை நிரப்புவார் என்றும் நம்புகின்றனர். இது அர்ரஜ்இய்யாவாகும்.
(அல் மிலல் வன்னிஹல் பாகம் 1 பக்கம் 146)
உட்பிரிவுகள்
அல்குராபிய்யா (காகம்): الغرابية
அலி (ரழி) முஹம்மத் (ஸல்) ஆகிய இருவரும் உருவ அமைப்பில் ஒன்று என்றும்இ ஜிப்ரீல் (அலை) வஹியை மாற்றிவிட்டார் என்று ஜிப்ரீல் (அலை) அவர்களை திட்டும் சபிக்கும் கூட்டம்
(அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 250)
அன்னமிரிய்யா:
முஹம்மத் அலி பாதிமா ஹஸன் ஹுஸைன் ஆகிய ஐவரில் அல்லாஹ் குடிகொண்டிருப்பதாக நம்புகின்றனர். இக்குழுவின் தலைவன் தன்மீதும் அல்லாஹ் இறங்கியுள்ளதாகவும் கூறினான்.
(அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 252)
அஸ்ஸபயிய்யா என்ற பெயரில் அழைக்கப்படும் இக்குழு யூதன் அப்துல்லாஹ் இப்னு ஸபாவின் பித்தர்களே. இவன் தன்னை முஸ்லிமாகக் காட்டிக்கொள்ள நடித்தான்.
இவன் மூலமாகவே ஷீஆக் கொள்கை உருவானது என்பதை
1. தாரீகுத் தபரி
2. அல்பிதாயா வன்னிஹாயா
3. மீஸானுல் இஃதிதால்
4. லிஸானுல் மீஸான்
5. தாரீகு இப்னு கல்தூன் போன்ற நூல்களில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றமான ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஷீஆஇயக்கம் உருவாவதற்கு பாரசீகப் பகுதியில் காணப்பட்ட சிந்தனைகளே காரணம் என பல ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பாரசீக மக்கள் மன்னர் ஆட்சி முறைக்கு பழக்கப்பட்டவர்கள். அதனால் அவர்களுக்கு வாரிசுரிமை ரீதியிலான தலைமைத்துவமே பரிச்சியமாக இருந்தது. தகுதியான ஒரு தலைமையைத் தேர்வு செய்யும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே வாரிசுரிமை அடிப்படையிலேயே இஸ்லாமிய அரசியலும் அவர்கள் நோக்கினர். ஆகவே தான் ஷீஆஇயக்கம் பாரசீக சிந்தனைத் தாக்கத்தினால் வளர்ச்சியுற்றது என Pழணல போன்ற ஐரோப்பிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

செவ்வாய், 18 மே, 2010

மனித படைப்பை பற்றி குர்ஆனும் விஞ்ஞானமும்


குர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல்! இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ளடக்கியது. குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அனேகக் குறிப்புகள் தற்கால ஆய்வுகளுடன் / நிரூபனங்களுடன் 100% ஒத்துப்போகிறது. எனவேதான் "இதில் முரண்பாடுகளிருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்" என்று ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சவால் விடுகிறது. உலகில் வேறு எந்தநூலும், கொள்கையும் இவ்வாறு சவால் விட்டதாக அல்லது அத்தகைய சவால்களை எதிர்கொண்டு நிலைத்திருப்பதாகவோ அறியமுடியவில்லை.

நிற்க,

திருவாளர் தருமி "மதங்கள்" என்ற தலைப்பில் "இஸ்லாம்-2" குறித்து எழுதி இருந்தார். மனிதவிந்து உற்பத்தியாகுமிடம் குறித்து விந்தையான பதிவு அது! குர்ஆன் வசனம் 86:05-07 மேற்கோள் காட்டிஎழுதிஇருந்தார்.

மனிதன் எதிலிருந்து படைக்கப் பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும்.
குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான்.
அது முதுகுத் தண்டுக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது.    குர்ஆன்வசனம் : 86:05-07
(சமீப காலத்திற்கு முன்பு வரை மனிதனின் விதைப் பையிலி-ருந்து தான் விந்து வெளிப்படுகிறது என்று நம்பி வந்தனர். ஆனால் விதைப் பையில் விந்து உற்பத்தியானாலும் அது மேலேறிச் சென்று முதுகுத் தண்டிற்கும் முன் பகுதிக்கும் இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கிருந்து தான் வேகமாகத் தள்ளப்படுகிறது என்பதை சமீப காலத்தில் கண்டு பிடித்தனர்.
இதை 1400 ஆண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன் (86:7) இந்தச் சொற்றொடர் மூலம் குறிப்பிட்டிருப்பது, இது முஹம்மது நபியின் வார்த்தை இல்லை. மாறாக இறைவனின் வார்த்தையே என்பதை நிரூபிக்கும் சான்றாக அமைந்துள்ளது.)

அவரின் கேள்வி என்னவென்றால், "மனிதன் விந்திலிருந்து படைக்கப் பட்டான்" என்று நேரடியாகச் சொல்லாமல் "முதுகுத் தண்டிற்கும், விலா எழும்புக்கும் இடையில் இருந்து குதித்து வெளியாகும் நீரினால் படைக்கப்பட்டுள்ளான்" என்று ஏன் சொல்ல வேண்டும்? என்றதோடு விந்துக்கும் முதுகுத் தண்டிற்கும் என்ன தொடர்போ? என்று அறிவியல்(!) பூர்வமாகக் கேள்வி கேட்டிருந்தார்! அவரின் பதிவிலிருந்தும் பின்னூட்டங்களிலிருந்தும் திரும்பத் திரும்ப தெரிவது, இஸ்லாம் குறித்த அரைகுறை தகவல்களுடன் அறிவியலைப் பற்றிய அறியாமையும்தான்! 


இது தருமியின் புதிய ஆய்வொன்றுமில்லை. ஏற்கனவே அவர் வேறொரு வசனத்தை எடுத்தெழுதி, அதற்கு விளக்கம் சொல்லப் பட்டகருதான்:
படைப்புக்கொள்கை: இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது யாருடைய ரத்தம் ? மனிதன் படைக்கப் படுவதற்கு முன் எங்கிருந்து ரத்தம் வந்தது? ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ? - தருமி

முதல் மனிதனின் படைப்பையும் அவன் சந்ததியினரின் பிறப்பையும் குழப்பிக் கொண்டுள்ளீர்கள் . முதல் மனிதன் இறைவனின் அற்புதங்களால் களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைக்கப்பட்டார் (6:2, 7:12, 15:33, 32:7, 35:11, 55:14) என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. மனித வளர்ச்சி நிலைகளைப் பற்றி எந்த வேத நூலும் விவரிக்காத வகையில் குர் ஆன் விவரிக்கிறது, பார்க்க: 23:12,13 &14). இஸ்லாம் சொல்லும் படைப்புக் கொள்கை தவறு என்பது உங்கள் வாதமானால், நீங்களே சொல்லுங்கள் மனிதன் எதிலிருந்து தோன்றினான்? பகுத்தறிவு பெற்ற குரங்குகள்தான் தற்கால மனிதனின் மூதாதையர் என்றால், இன்னும் சில குரங்குகள் ஏன் பகுத்தறிவடைந்து மனிதனாகவில்லை?

குர்ஆன் வசனம் 86:07இல் ஒரு குழந்தையின் உருவாக்கத்தில் உள்ள ஒரு பகுதி மட்டும் சொல்லப் படுகிறது. يخرج مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ என்பதற்கு விலாஎலும்புகளுக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிலிருந்து வெளியேறும் திரவம், கருவுக்கான பகுதி மூலம் என்று சொல்கிறது. இங்குக் கேள்வி என்னவென்றால் விந்து (مَنِيٍّ/SPERM) நேரடியாகச் சொல்லாமல் ஏன் திரவம் (مَاءٍ/FLUID) என்று மறைமுகமாகச் சொல்ல வேண்டும்? என்பதே!

குர்ஆனின் இன்னொரு வசனத்தில் (075:037) "கருவறைக்குள் (செலுத்தப்பட்ட) விந்தின் ஒரு துளியாக மனிதன் (مَنِيٍّ) இருக்கவில்லையா?" என்று கேட்கும் குர்ஆன், வசனம் 86:06 இல் திரவம் என்று பொதுமையில் குறிப்பிடுகிறது!

இரண்டும் வெவ்வேறு வடிவிலானவை / நிலைகளைக் கொண்டவை என்ற வேறுபாடு நன்கு தெரிந்திருப்பதால் வெவ்வேறான சொல்லாடல் கையாளப் பட்டுள்ளது. ஆணிடமிருந்து வெளியாகும் தாது (SEMEN) பல்வேறு சுரப்பிகளைக் கடந்து இறுதியில் விந்தாக (SPERM) மாற்றமடைகிறது.

கருவாக்கத்திற்கு ஆணின் விந்து (SPERM) பகுதி மூலமாகும். அந்த விந்து ஆணின் விரையிலிருந்து உருவாகிறது என்பதும் பொதுவானது. பொதுவான ஒன்றை குர்ஆன் வெவ்வேறு பதங்களில் குறிப்பிடுவதற்கு வேறுபட்ட காரணம் இருக்க வேண்டும். கர்ப்பத்தில் விந்துத்துளியாக இருக்கவில்லையா? என்று கேட்கும் குர்ஆன், விலா எலும்புகளுக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிலிருந்து வெளியேற்றப்பட்ட திரவம் என்று வேறுபடுத்துவதுஎப்படிச்சாத்தியமாயிற்று?





தாது (SEMEN) என்ற விந்தின் (SPERM) மூலப்பொருள் பற்றி நவீன மருத்துவம் விளக்குகிறது. குர்ஆன் வசனம் 86:06ம் இதைத்தான் சொல்கிறது. நுண்ணாடி (MICROSCOPE) மருத்துவ உபகரணங்களும் சாத்தியமில்லாத காலகட்டத்தில் எழுதப்படிக்கத் தெரிந்திராத ஒருவரால் ஒரே விசயத்தை துல்லியமான வெவ்வேறு சொற்களால் விளக்க முடிந்தது?

விந்து (SPERM) ஆணின் விரையிலிருந்து உருவாகிறது என்று பொதுவாக நம்பப்பட்ட காலத்தில் (சமீபகாலம் வரையிலும்கூட) எல்லோரையும்போல் இருகால்களுக்கு இடைப்பட்ட உறுப்பிலிருந்து விந்து வெளியாகிறது என்று சொல்லாமல் "விலா எலும்புக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிருந்து உருவாகும் 'திரவம்' என்று துல்லியமாக வேறுபடுத்திச் சொல்வதன் மூலம் படைப்பின் ரகசியங்களை அறிவித்தவன் படைத்தோன் அல்லாஹ் என்பது இன்னொரு முறை உறுதியாகிறது.
தருமியின் பதிவிலும் பின்னூட்டத்திலும் விந்து உற்பத்தியாகுமிடம் விரை (TESTICLE) என திரும்பத் திரும்ப சொல்கிறார்.அவரது பதிவில் பின்னூட்ட் இட்டுள்ள அறிவுசீவிகளும் "ஆமா, ஆமா" என்கின்றனர். நவீன மருத்துவமும் குர்ஆனும் வெவ்வேறு நிலைகளைச் சொல்கின்றன.

தாதுவுடன் (SEMEN) பல்வேறு திரவங்களும், தனிமங்களும் கலந்துள்ளது. SEMINAL VESICLES, PROSTATE GLANDS மற்றும் விரைகளில் சுரக்கும் பிற சுரப்பிகளும் கலந்துதான் விந்தாக (SPERM) வெளியேற்றப்படுகிறது. தாதுவுடன் Citric acid, prostaglandin, flavin, ascorbic acid, ergothioneine, cholesterol, phospholipids, fibrinolysin, zinc, phosphatase acid, phosphase, hyaluronidase ஆகிய தனிமங்களுடன் கலந்து விந்தணு fallopian tube நோக்கி நீந்திச் செல்கிறது. இக்கலவைகள் இல்லாமல் பயணிக்கும் கோடிக்கணக்கான விந்தணுக்களால் மட்டும் ஆரோக்கியமான கருவாக்கம் சாத்தியமில்லை என்று நவீன மருத்துவம் சொல்கிறது.

இருதொடைகளுக்கு இடைப்பட்ட உறுப்பிலிருந்து வெளியாகும் விந்தணுவைச் சொல்லாமல், முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடைப்பட்ட பல்வேறு சுரப்பிகளிலிருந்து உருவாகும் தாது (SEMEN) குறித்து இவ்வசனத்தில் சொல்லப்பட்டு உள்ளது.

"
எல்லாம் தெரிந்த" கடவுள் அறிவியல் உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால், 2 + 2 = 4 என்றல்லவா சொல்ல வேண்டும். விந்திலிருந்து மனிதன் பிறக்கிறான் என்று சொல்வதை விட இடுப்பிலிருந்து வரும் திரவத்தால் மனிதன் பிறக்கிறான் என்பது என்ன அறிவியல்?" என்று தருமி கேட்கிறார். தான் விரும்பும் சொல்லை - அது பிழையாக இருந்தாலும் -தான் நம்பாத கடவுள் சொல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது அவருக்கே ஓவரா தெரியவில்லை? ;-)

மேலும் முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் என்ன தொடர்பென்றும் தருமி கேட்டுள்ளார். முதுகுத்தண்டில் ஏற்படும் பாதிப்புகளால் ஆணின் தாது விருத்தி/விந்து செலுத்தும் வீரியம் குறையும் என்று முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் உள்ளத் தொடர்பை தற்கால மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன. (Spinal Cord Injury (SCI) என்று கூகிலிட்டால் தொடர்புடைய சுட்டிகள் கிடைக்கும்.)

கருவின் பல்வேறு நிலைகள் குறித்து விளக்கும்போது வெவ்வேறு சொற்களைக் குர்ஆன் ஆளுகின்றது. காட்டாக,

"
ஒவ்வொருவனுக்கும் அவன் மனிதனாக (பிறப்பெடுக்கு) முன்னர் ஒரு கால இடைவெளி சென்றுவிடவில்லையா? அக்காலகட்டத்தில் அவன் இன்ன ஒன்றாய் இருந்தான் என்று குறிப்பிட்டுக் கூறவியலா நிலையில் இருக்கவில்லையா?

(
பின்னர், ஆண்-பெண்ணின்) மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத்துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம்...."
அல்குர்ஆன்76:1-2.

ஆணின் விந்தும் பெண்ணின் சினைமுட்டையும் கலந்துதான் கரு உருவாகிறது என்பது அண்மைக்காலக் கண்டுபிடிப்புத்தான்.

இஸ்லாம்-1இல் இவர் எடுத்து வைத்த கேள்விகள் கேலிக்கூத்தானவை.

வெளிச்சுட்டிகள்:
www.dharumi.blogspot.com/2009/11/354-2.html


சனி, 15 மே, 2010

பற்களை பாதுகாப்போம்! நோய்களைத் தவிர்ப்போம்!!



எத்தகைய சுத்தமானவருக்கும் வாயில் அதிகமான பாக்டீரியாக்கள் இருக்கும். வாய் சுத்தம் மிகவும் முக்கியமானது. வாய் சுத்தம் இல்லாவிட்டால் பலவித நோய்கள் உண்டாகும். சின்ன பிள்ளைகளுக்கு பற்சொத்தை போன்ற பிரச்சினைகள் வரும். நாற்பது வயதாகிவிட்டால் தொடர்பான நோய்கள் வரும். பாதிப்பு நீரிழிவினாலும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிப்பால் இதய நோய்களும் வரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
வாயினுள் அதிகமான பாக்டீரியாக்கள் வளருவதாக சொல்கிறார்களே அது ஏன்? என்ற கேள்வி உங்களுக்குள் இருக்கும். வாயிலிருந்து சுரக்கும் திரவங்களில் சர்க்கரை அளவு அதிகமிருக்கும். இது பாக்டீரியா போன்ற பிற கிருமிகளும் வளர்வதற்கு ஏற்றதாக இருப்பதால்தான் வாய்க்குள் கிருமிகள் அதிகம் உருவாகின்றன.
இவை ரத்தநாளங்கள் வழியாக சென்று ரத்தக் கொழுப்பை உறைய வைத்து ரத்தத்தை உறையச் செய்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிரச்சினையுள்ளவர்களின் ரத்தத்தில் பைப்ரினோஜென் (fibrinogen) என்ற பொருள்தான் ரத்தத்தை உறைய செய்துவிடுகிறது.
பற்களை (வாயை)பாதுகாப்பதன் மூலம் பல நோய்களைத் தவிர்க்கலாம். அதை எந்த வயதிலிருந்து தொடங்குவது என்பதுதான் பிரச்சினையா? பல் முளைக்க ஆரம்பிப்பதில் இருந்தே பற்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பிள்ளைகளுக்கு முளைப்பது பால் பற்கள். இவற்றின் எண்ணிக்கை -20. இவை விழுந்து முளைப்பதுதான் நிலைப்பற்கள். இவற்றின் எண்ணிக்கை-32. பால் பற்கள் மெல்லுவதற்கு முக்கியம்.
உரிய நேரத்தில் இவை விழுந்து விட்டால் அடுத்து வரும் பற்கள் இடைவெளியை நோக்கி வளர்ந்து இடுக்குப் பற்களை உருவாக்கும். இதனால் மன அளவிலும் பாதிப்பு ஏற்படும். பால் பற்கள் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தை எதையாவது சாப்பிட்டால் ஈரில் குத்தி வலிக்கும் என பயந்து சாப்பிட மறுக்கும். இதனால் ஊட்டச்சத்துக்குறைவு உண்டாகும்.
பால் பற்கள் திடமாக இருக்கவேண்டுமானால் பிள்ளைகளுக்கு கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை தரவேண்டும். இது தாடை எலும்பையும் உறுதியாக வைத்திருக்கும். பல் பாதிப்பு என்றாலே முதலில் வருவது பற்சிதைவுதான். இதற்கு முக்கியக் காரணம், பற்களின் மேற்பரப்பில் அமைந்துள்ள குழிகளிலும், பற்களின் இடையில் உள்ள சந்துகளிலும் பாக்டீரியாக்கள் தங்கி அமிலத்தை சுரப்பதுதான்.

வெள்ளி, 14 மே, 2010

சிகரெட், மதுவை விட ஆபத்தானது! சர்க்கரை பற்றிய சில கசப்பான உண்மைகள்


மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சர்க்கரையும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும் போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப் படுகின்றன.
சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.
சிகரெட், மது முதலியவற்றைவிட சர்க்கரை அதிக ஆபத்தானது எனலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சரும நோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல் நோய், சிறுநீரகக் கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சர்க்கரை உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பை யும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.
சர்க்கரை அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத் தனத்தையும் வன்செயலை யும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.
சர்க்கரையும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவை அதிகரித்து விடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசை நார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.
தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரை நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.
உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப் படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டே கிளேன்டின் E2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது. கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சர்க்கரை இன்னும் துரிதப்படுத்துகிறது.

வியாழன், 13 மே, 2010

ஒரு ஹதீஸ் ளயீஃபானது தான் என்பதில் இமாம்களுக்கிடையில் ஒற்றுமை இருக்கின்றதா?

ஒரு ஹதீஸ் ளயீஃபானது தான் என்பதில் இமாம்களுக்கிடையில் ஒற்றுமை இருக்கின்றதா? மேலும் ளயீஃபான ஹதீஸின் அடிப்படையில் ஒருவர் அமல் செய்தால் அவை இறைவனால் நிராகரிக்கப்படுமா?

ஒரு ஹதீஸ் பலவீனமானது என்பதை அதன் அறிவிப்பாளர் தொடர் மற்றும் அவர்களின் தரத்தை வைத்தே முடிவு செய்கிறோம். எனவே ஓர் அறிவிப்பாளர் பலவீனமானவர் என்பதில் இமாம்களுக்கிடையில் ஒற்றுமை உள்ளதா? என்று கேட்பதே சரியானதாகும்.
அறிவிப்பாளர்களைப் பொறுத்த வரை பொய்யர் என்று எல்லா அறிஞர்களும் ஒருமித்த கருத்தில் சிலரைப் பற்றி கூறியிருப்பார்கள். அல்லது பலீவனமானவர் என்று கூறியிருப்பார்கள்.
ஆனால் அதே சமயம் எல்லா அறிவிப்பாளர்களைப் பற்றியும் எல்லா அறிஞர்களிடமும் ஒருமித்த கருத்து இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அறிவிப்பாளரின் தரம் என்பது, அவரது வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து முடிவெடுக்கப்படுகின்றது. இவ்வாறு ஆராயும் போது ஒரு அறிவிப்பாளரைப் பற்றி ஒரு ஹதீஸ் கலை அறிஞருக்குத் தெரிந்த செய்தி மற்றவருக்குத் தெரியாமல் போகலாம். அல்லது அவரை விட இவருக்குக் கூடுதலாகத் தெரிந்திருக்கலாம். இது போன்ற காரணங்களால் ஒரு அறிவிப்பாளரைப் பற்றி இமாம்களிடத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு.
பல ஹதீஸ் கலை அறிஞர்கள் ஓர் அறிவிப்பாளரை நல்லவர் என்று கூறியிருப்பார்கள். ஒரே ஒருவர் மட்டும் அந்த அறிவிப்பாளரைப் பலவீனமானவர் என்று கூறி அதற்குத் தக்க சான்றையும் கூறுகின்றார் என்றால் இந்த ஒருவரின் விமர்சனத்தையே நாம் ஏற்க வேண்டும். ஏனெனில் ஒருவரை நல்லவர் என்று கூறுபவர்களுக்கு அவரது குறையைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். அவரைக் குறை கூறுபவர் தக்க சான்றின் அடிப்படையில் கூறும் போது அந்த விமர்சனத்தின் அடிப்படையில் அவரைப் பலவீனமானவர் என்றே முடிவு செய்ய வேண்டும். இது பெரும்பான்மை அடிப்படையிலோ, அல்லது ஒருமித்த கருத்தின் அடிப்படையிலோ முடிவு செய்யப்படும் விஷயமல்ல என்பதே இதற்குக் காரணம்.
பலவீனமான அறிவிப்பு என்று தெரிந்த பின்னரும் அதைப் பின்பற்றி அமல் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? என்று கேட்டுள்ளீர்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? இலலையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய செய்திகள் தான் பலவீனமான ஹதீஸ்களாகும்.
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.
(அல்குர்ஆன் 17:36)
உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதன் பால் சென்று விடு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹஸன் பின் அலீ (ரலி)
நூல்: திர்மிதீ 2442
நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டால் அதைப் பின்பற்றுவது தடை செய்யப் பட்டுள்ளது என்பதை மேற்கண்ட குர்ஆன் வசனமும்  ஆதாரப் பூர்வமான ஹதீசும் தெளிவாகக் கூறுகின்றன. எனவே பலவீனமான ஹதீஸ்களைப் பின்பற்றி அமல் செய்யக் கூடாது. அது குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமானதாகும்.

ஒரு ஹதீஸின் தரத்தை இனம் கண்டு தான் பின்பற்ற வேண்டுமா

ஒரு ஹதீஸின் தரத்தை இனம் கண்டு தான் பின்பற்ற வேண்டுமா? அவ்வாறு ஹதீஸின் தரத்தைப் பற்றி ஆராயும் போது, ஒரு அறிவிப்பாளரை அதிகமானவர்கள் நல்லவர் என்று கூறி, ஒருவர் மட்டும் அவரைப் பற்றி குறை கூறியிருந்தால் எப்படி முடிவு செய்ய வேண்டும்? மெஜாரிட்டி அடிப்படையில் தீர்மானிக்கலாமா?

நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை ஹதீஸ்கள் என்கிறோம். இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையை ஆய்வு செய்து அவற்றில் ஆதாரப்பூர்வமானவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக முழுமையான விளக்கத்திற்கு ஏகத்துவத்தில் இடம் பெறும் "ஹதீஸ் கலை' என்ற தொடரைப் பார்வையிடுக!
ஒரு அறிவிப்பாளரைப் பற்றி அதிகமான ஹதீஸ் கலை அறிஞர்கள் நல்லவர் என்று கூறியிருந்து, ஒரேயொரு ஹதீஸ் கலை அறிஞர் மட்டும் அந்த அறிவிப்பாளரை பலவீனமானவர் என்று கூறி, அதற்குச் சரியான காரணத்தையும் கூறுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். இங்கு மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது. அந்த அறிவிப்பாளரைப் பற்றிய மோசமான விமர்சனத்திற்கு முன்னுரிமை கொடுத்து அவர் பலவீனமானவர் என்ற முடிவுக்கே வர வேண்டும். ஏனெனில் நல்லவர் என்று விமர்சனம் செய்தவர்களுக்கு அவரது குறையைப் பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்.
ஒருவரது குறையைப் பற்றித் தெரியாத போது அவரை நல்லவர் என்றே விமர்சனம் செய்வார்கள். ஆனால் ஒருவரை மனன சக்தி குறைவானர் என்றோ, பொய்யர் என்றோ ஒரு ஹதீஸ் கலை அறிஞர் விமர்சனம் செய்கின்றார் என்றால் அவரது குறையை நன்கு தெரிந்து தான் விமர்சனம் செய்கின்றார். எனவே இந்த விமர்சனத்திற்கு முன்னுரிமை கொடுத்து அந்த அறிவிப்பாளரைப் பலவீனமானவர் என்றே முடிவு செய்ய வேண்டும்.

செவ்வாய், 11 மே, 2010

தலையங்கம்: பெற்​றோர் வயிற்​றில் பால்

தமிழ்​நாட்​டில் தனி​யார் பள்​ளி​க​ளில் பயி​லும் மாண​வர்​க​ளின் பெற்​றோர் அனை​வ​ருக்​கும் மகிழ்ச்​சி​யா​ன​தா​க​வும்,​​ ஒரு விடி​ய​லைக் காட்​டி​ய​தா​க​வும் அமைந்த செய்தி-​ இரு நாள்​க​ளுக்கு முன்பு,​​ தனி​யார் பள்​ளி​க​ளில் கட்​ட​ணத்தை நிர்​ண​யித்து அரசு வெளி​யிட்ட அறிக்​கை​தான்.​ ​அறிக்​கை​யோடு நின்​று​வி​டா​மல்,​​ தற்​போது தமிழ்​நாட்​டின் பெரும்​பா​லான கல்வி மாவட்​டங்​க​ளில் அந்​தந்த முதன்​மைக் கல்வி அலு​வ​லர் மூல​மாக ஒவ்​வொரு பள்​ளிக்​கும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள கட்​டண விவ​ரக் கடி​தம் வழங்​கப்​பட்டு வரு​கி​றது என்​பது மேலும் மகிழ்ச்​சி​யூட்​டு​வ​தாக இருக்​கி​றது.​கல்​விக் கட்​ட​ணத்தை நிர்​ண​யம் செய்ய,​​ நீதி​பதி கே.​ கோவிந்​த​ரா​ஜன் தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட கமிட்டி,​​ இந்​தக் கட்​ட​ணத்தை மிக​வும் சரி​யா​க​வும்,​​ நியா​ய​மா​க​வும் நிர்​ண​யித்​துள்​ளது என்​ப​தில் எந்​த​வி​த​மான மாற்​றுக் கருத்​துக்​கும் இட​மில்லை.​ ஏனெ​னில்,​​ ​ இந்​தக் கட்​ட​ணங்​கள் அனைத்​தும் அறி​வி​யல்​பூர்​வ​மாக,​​ ஒவ்​வொரு பள்​ளிக்​கு​மா​கத் தீர்​மா​னிக்​கப்​பட்​டவை என்​ப​து​தான் இதன் சிறப்பு.​ஒவ்​வொரு பள்​ளி​யும் கொண்​டி​ருக்​கும் இடத்​தின் பரப்​ப​ளவு,​​ கட்​ட​டங்​க​ளின் அளவு,​​ உள்​கட்​ட​மைப்பு வசதி,​​ தள​வாட வச​தி​கள்,​​ ஆய்​வுக்​கூ​டம்,​​ நூல​கம்,​​ பணி​யா​ளர்,​​ ஆசி​ரி​யர்​கள் எண்​ணிக்கை ஆகி​ய​வற்​றைக் குறித்து அந்​தந்​தப் பள்​ளி​யி​ட​மி​ருந்து தக​வல் பெற்று அளிக்​கு​மாறு,​​ தமி​ழ​கத்​தின் அனைத்து மாவட்​டங்​க​ளி​லும் உள்ள முதன்மை கல்வி அலு​வ​ல​ருக்கு ஒரு படி​வத்தை இக்​க​மிட்டி வழங்​கி​யது.​ இந்​தப் படி​வங்​களை 10,934 பள்​ளி​கள் பூர்த்தி செய்து தந்​தன.​ 701 பள்​ளி​கள் இப்​ப​டி​வங்​களை இது​வரை பூர்த்தி செய்து தரவே இல்லை.​இந்​தக் கமிட்டி செய்த மிக நல்​ல​தொரு செயல்,​​ இவர்​கள் தந்த விவ​ரங்​க​ளைக் கொண்டு,​​ அப்​பள்​ளிக்கு ஓராண்​டுக்கு எவ்​வ​ளவு செல​வா​கக்​கூ​டும் என்று கணக்​கிட்டு,​​ அதில் பள்ளி நடத்​தும் தாளா​ள​ருக்​கும் இழப்பு இல்​லாத வகை​யில் ஒரு விகி​தா​சார லாபத்​தைச் சேர்த்து,​​ அதை அந்​தப் பள்​ளி​யின் மாண​வர் எண்​ணிக்​கைக்கு ஏற்ப கல்​விக் கட்​ட​ணங்​களை வகுத்து அளித்​துள்​ள​னர்.​இந்த நடை​முறை செல​வி​னக் கணக்​கின் அடிப்​ப​டை​யில்,​​ அதி​க​பட்​ச​மாக மேனி​லைப் பள்​ளி​யில் ரூ.​ 11,000,​ உயர்​நி​லைப் பள்​ளி​க​ளுக்கு ரூ.​ 9 ஆயி​ரம்,​​ நடு​நி​லைப் பள்​ளி​க​ளுக்கு ரூ.​ 8 ஆயி​ரம்,​​ தொடக்​கப் பள்​ளி​க​ளுக்கு ரூ.​ 5 ஆயி​ரம்,​​ கிரா​மத் தொடக்​கப்​பள்​ளிக்கு ரூ.3,500 எனக் கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்டு அறி​விக்​கப்​பட்​டது.​ இத​னால் பெற்​றோர் அடைந்த மகிழ்ச்​சிக்கு அளவே இல்லை என்று சொல்​ல​லாம்.​ஆனால்,​​ நாம் எதிர்​பார்த்​த​தைப் போலவே தனி​யார் பள்​ளி​கள் அர​சின் இந்த ஆணையை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தடை​யாணை பெறும் முயற்​சி​யில் இறங்​கி​விட்​டன.​ இதற்​காக அனைத்து தனி​யார் பள்​ளி​க​ளி​ட​மும் சந்தா நிலுவை வசூல் படு வேக​மாக நடந்து வரு​கி​றது.​அர​சின் கட்​ட​ணத்தை எதிர்க்​கும் பள்ளி நிர்​வா​கி​கள் சொல்​லும் கார​ணம்,​​ இந்​தக் கட்​ட​ணம் எங்​க​ளுக்​குக் கட்​டுப்​ப​டி​யா​காது என்​ப​து​தான்.​ இந்​தப் பள்​ளி​கள் கொடுத்த வரவு,​​ செலவு கணக்​கு​க​ளின் அடிப்​ப​டை​யில்​தான் இந்​தக் கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.​ அப்​ப​டி​யெ​னில் அந்​தப் பள்​ளி​கள் தவ​றான அல்​லது பொய்​யான தக​வல்​க​ளைப் படி​வங்​க​ளில் பூர்த்தி செய்து தந்​த​னவா?​ ​ இவர்​கள் பல்​வேறு தலைப்​பு​க​ளின் கீழ் வாங்​கும்,​​ மறை​வு​வ​ரு​வாய் குறித்து இக்​க​மிட்​டி​யின் படி​வத்​தில் பூர்த்தி செய்து தர இய​ல​வில்லை என்​று​தானே பொருள்?​ ​அரசு வெறு​மனே கல்​விக்​கட்​ட​ணம் அறி​விக்​கும்;​ நாம் வழக்​கம்​போல அதை பல வகை​யில் அதி​க​ரித்​துக் கொள்​ள​லாம் என்ற எண்​ணத்​து​டன் தனி​யார் பள்​ளி​கள் இருந்​தன.​ ஆனால்,​​ அரசு தற்​போது அறி​வித்​துள்ள நிபந்​த​னை​க​ளின்​படி,​​ எந்​தெந்த தலைப்​பு​க​ளின் கீழ் கட்​ட​ணம் வாங்​கி​னா​லும்,​​ மொத்​தக் கட்​ட​ணம்,​​ மேனி​லைப் பள்​ளிக்கு ரூ.​ 11 ஆயி​ரத்​தைத் தாண்​டக்​கூ​டாது என்​ப​து​தான் இவர்​க​ளுக்​குப் பெரும் இடை​யூ​றாக இருக்​கி​றது.​இது​நாள்​வரை எல்​கேஜி-​க்கும்​கூட கணினி கட்​ட​ணம்,​​ நூல​கக் கட்​ட​ணம் வசூ​லித்த அக்​கி​ர​மங்​க​ளுக்கு முடிவு ஏற்​பட்​டுள்​ளது.​ இந்​தப் புதிய முறை,​​ தனி​யார் பள்​ளிக்கு மிகப் பெரும் கடி​வா​ள​மாக இருக்​கி​றது.​ ஆகவே இப்​போது இதை எதிர்க்​கி​றார்​கள்.​ நீதி​மன்​றத்​தில் தடை​யாணை பெற முயல்​கி​றார்​கள்.​விடு ​திக் கட்​ட​ணம்,​​ பள்​ளிப் பேருந்​துக் கட்​ட​ணம் ஆகி​ய​வற்​றில் அரசு தலை​யி​டாது என்று அறி​வித்த போதி​லும்,​​ இத​னால் கிடைக்​கும் வரு​வாய் சில பள்​ளி​க​ளுக்கு மட்​டுமே கிடைக்​கி​றது.​ எல்​லாத் தனி​யார் பள்​ளி​க​ளி​லும் பேருந்​து​கள் இருந்​தா​லும்,​​ விடு​தி​கள் கிடை​யாது.​ எனவே அதி​கம் சம்​பா​திக்க வழி இல்​லா​த​தால் இந்த எதிர்ப்பை முன்​வைத்​துள்​ள​னர்.,​​இந்​தக் கட்​ட​ணம் கட்​டுப்​ப​டி​யா​காது என்று இப்​பள்​ளி​கள் கரு​தி​னால்,​​ தங்​கள் பள்​ளி​களை அர​சுக்கு ஒப்​ப​ளித்​து​விட்டு,​​ ஒதுங்​கிக்​கொள்ள வேண்​டும்.​ அல்​லது இவ்​வாறு பணிய மறுத்து,​​ தமிழ்ச் சமு​தா​யத்​தில் கல்​விச் சூதாட்​டத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கத் தடை​யாக இருக்​கும் இந்​தக் கல்வி நிறு​வ​னங்​களை அரசே ஏற்க முன்​வர வேண்​டும்.​ஒவ்​வொரு பள்​ளிக்​கும் தனித்​த​னி​யாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள கல்​விக் கட்​ட​ணங்​கள் ​ குறித்து ஜ்ஜ்ஜ்.​ ல்ஹப்ப்ண்ந்​ஹப்ஸ்ண்.ண்ய்​ என்ற முக​வ​ரி​யில் வெளி​யி​டப்​ப​டும் என்று அரசு குறிப்​பிட்​டுள்​ளது என்​றா​லும்​கூட,​​ ஒவ்​வொரு தனி​யார் பள்​ளி​யும் தங்​க​ளுக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள கட்​டண விவ​ரத்தை பள்​ளிக்​கூட வாச​லில் மக்​கள் பார்​வை​யில்​ப​டும்​வ​கை​யில் வைக்க வேண்​டும் என்று பள்​ளிக் கல்​வித் துறை உத்​த​ர​விட வேண்​டும்.​ அதைக் கடு​மை​யாக நடை​மு​றைப்​ப​டுத்​த​வும் வேண்​டும்.​ நீண்​ட​கா​ல​மாக இருந்த நடுத்​தர மக்​க​ளின் மனக் குமு​ற​லுக்கு துணி​வு​டன் முற்​றுப்​புள்ளி வைத்​தி​ருக்​கும் தமி​ழக அரசை எவ்​வ​ளவு பாராட்​டி​னா​லும் தகும்.​ எந்​த​வித நிர்​பந்​தங்​க​ளுக்​கும் அடி​ப​ணி​யா​மல் இந்​தக் கல்வி கட்​டண முறையை அரசு நடை​மு​றைப்​ப​டுத்த வேண்​டும் என்​ப​தும்,​​ தனி​யார் பள்​ளி​கள் நீதி​மன்​றத்​தின் தடை உத்​த​ர​வைப் பெற்​று​வி​டா​வண்​ணம் அரசு முனைந்து செயல்​பட வேண்​டும் என்​ப​தும் நமது வேண்​டு​கோள்.​தவ​றுக்​குத் துணை​போ​கா​மல் மக்​கள் மன்​றம் இந்​தப் பிரச்​னை​யில் அர​சுக்கு ஆத​ர​வா​கத் துணை நிற்​பது அவ​சி​யம்.​ 

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites