நீங்கள் சொந்தமாக கணனி இணைய இணைப்பு வைத்திருந்தாலும் கூட சில வேளைகளில்இண்டர்நெட் மையம், நூல் நிலையம், விமான நிலையம் போன்ற பொது இடங்களில் காணப்படும்பலரின் பாவனைக்கென வைக்கப்பட்டிருக்கும் கணனிகளையும் பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பம்உங்களுக்கும் வரலாம். இவ்வாறு பொது இடங்களிலுள்ள கணனிகளைப் பயன்படுத்தும் போது
* மின்னஞ்சல் கணக்கிற்குரிய பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்ட்
* பேஸ்புக் போன்ற தளங்களில் பயன்படுத்தக் கூடிய பயனர் பெயர் பாஸ்வர்ட்.
* கடன் அட்டை விவரங்கள்
* அந்தரங்க தகவல்களைக் கொண்ட மின்னஞ்சல்கள்
* நீங்கள் பரிமாறிக் கொள்ளும் பைல்கள்.
* நீங்கள் பார்க்கும் பார்க்கக் கூடாத தளங்களின் பெயர்கள் போன்ற பல அந்தரங்கவிடயங்களை இழக்க வேண்டி வரலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா?
பொது இடங்களிலுள்ள கணனிகளில் எமது அந்தரங்க விடயங்களைப் பாதுகாப்பதற்கு யாரும்உத்தரவாதம் தருவதில்லை. அவ்விடயங்களில் பணியாற்றும் கணனி நிர்வாகிகள் எமது அந்தரங்கதகவல்களையிட்டு கவலைப்படுவார் என நாம் எதிர்பார்க்க முடியாது. சில இடங்களில் எமதுஅந்தரங்க தகவல்களுக்குப் பாதுகாப்புத் தரலாம். எனினும் பொதுக் கணனிகளில் எமதுதகவல்கள் நூறு வீதம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நாமும் சில முன்னெச்சரிகைநடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பொதுக் கணனிகளைப் பயன்படுத்தும் போது எவ்வாறு நாம் அவதானமாக நடந்து கொள்வது என்பதைக்கிழே பட்டடியலிடுகிறேன் மேலே படியுங்கள்.
* இணையத்தில் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தி விட்டு அந்த இணைய களத்திலிருந்துமுறையாக Log Out செய்து வெளியேறுங்கள். பிரவுசர் விண்டோவை மூடிவிட்டால் அல்லதுவேறொரு இணைய தள முகவரியை டைப் செய்து விட்டால் போதுமானது என நினைக்கக் கூடாது.முறையாக லொக் அவுட் செய்யாமல் வெளியேறுவது உங்களுக்குப் பின்னர் கணனியைப்பயன்படுத்தும் நபரின் கையில் உங்கள் அந்தரங்க தகவல்கள் போய்ச் சேர்ந்துவிடவாய்ப்புள்ளது.
* பொதுக் கணனிகளில் மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய தேவைகளேற்படும் போது வழமையான உங்கள்மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பாமல் அதற்கென தற்காலிகமாக இரு மின்னஞ்சல் கணக்கைஉருவாக்கி அனுப்பலாம். அல்லது பொதுக் கணனியில் மின்னஞ்சல் தேவை முடிந்தவுடன்உடனடியாக உங்கள் பாஸ்வர்டை மாற்றிக் கொள்ளுங்கள்.
* வெப் மெயில் சேவைகளில், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் இன்ஸ்டண்ட்மெஸ்செஞ்சர்களில் தானாகவே லொகின் செய்யும் வசதி உள்ளது. இவை எமது வசதிக்காகவே பயனர்கணக்கையும் பாஸ்வர்டையும் கணனியில் சேமித்து வைக்கும். எனவே இந்த வசதியை முடக்கிவிடுங்கள்.
* மின்னஞ்சல் இணைப்புகளில் வரும் பைல்களை டவுன்லோட் செய்யும் போது அவற்றை உங்கள்பென் ட்ரைவில் சேமித்துக் கொள்ளுங்கள். டவுன்லோட் செய்த பைலை ஹாட் டிஸ்கில்சேமிப்பதனால் அதனை பென் ட்ரைவில் ஏற்றி விட்டு ஹாட் டிஸ்கிலிருந்து அந்த பைலைஅழித்து விடுவதோடு ரீசைக்கில் பின்னையும் காலி செய்து விடுங்கள்.
* டவுன் லோட் செய்த பைல்களை உங்கள் பென் ட்ரைவில் ஏற்று முன் வைரஸ் பரிசோதனைக்குஉட்படுத்துங்கள். அவ்வாறே அதனை உங்கள் கணனியில் மறுபடி ஏற்று முன்னரும் வைரஸ்ஸ்கேன் செய்யுங்கள்.
* பொதுக் கணனிகளில் உங்கள் அந்தரங்க விடயங்களைக் கொண்ட பைல்களை படங்கள் பரிமாறிக்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
* பொதுக் கணனிகளில் முக்கியமான தகவல்களை வழங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.ஏனெனில் சில திருடர்கள் நீங்கள் கீபோர்டில் அழுத்தும் ஒவ்வொரு கீயின் அசைவுகளையும்பதிவு செய்யக் கூடிய Keyiogger மென்பொருள்களை நிறுவியிருக்கக் கூடும் இந்தமென்பொருள் பதிவு செய்யும் தகவல்களைத் திருடர்களுக்கு ஈமெயிலில் அனுப்பி விடும்நீங்கள் முக்கிய தகவல்களைக் கணனியில் சேமிக்காது விட்டாலும், அவற்றை முறையாகஅழித்தாலும் கூட உரிய தகவல்கள் திருடரின் கையில் போய் சேர்ந்து விடும்.
* சில இடங்களில் கணனிகளைக் கண்காணிப்பதற்கென பாதுகாப்புக் கேமராக்கள்பொருத்தியிருப்பார்கள். எனவே இந்த கேமராவின் பார்வையிலிருந்தும் உங்கள் அந்தரங்கதகவல்களை மறைக்க மறந்து விடாதீர்கள்.
* பொதுக் கணனிகளைப் பயன் படுத்தும் போது அருகில் நடமாடும் ஆசாமிகளை இட்டும்கவனமாயிருங்கள். அவர்கள் உங்கள் பின்புறமிருந்து தோளிற்கு மேலாக நீங்கள் அறியாமலேயேஉங்கள் கணனித் திரையைப் நோட்டமிடலாம்.
* இணையத்தில் பொருட்கள் வாங்குதல் (Online Shopping) வங்கி நடவடிக்கைகளைமேற்கொள்ளுதல் (Online Banking) போன்ற செயற்பாடுகளுக்குப் பொதுக் கணனிகள்பொருத்தமானதல்ல. எனவே அக்கணனிகளில் கிரடிட் காட் விவரங்களை வழங்காது தவிர்த்துக்கொள்ளுங்கள்.
* உங்கள் முக்கியமான அந்தரங்க தகவல்களை கணனியில் டைப் செய்து விட்டு வேறு வேலையாகஒரு போதும் எழுந்து செல்லாதீர்கள். இவ்வாறு நகர்ந்து செல்வதனால் அடுத்தவர்கள்உங்கள் அந்தரங்க தகவல்களைப் பார்ப்பதற்கு வசதியாக அமைந்துவிடும்.
* பிரவுஸரிலுள்ள ‘Auto complete’வசதியானது எமது டைப்பிங் வேலைகளைக் குறைத்துவிடக் வடிய பயனுள்ள வசதி எனினும் பொதுக் கணனிகளில் இந்த வசதியைப் பயன்படுத்துவதுஏற்ற செயலல்ல இந்த வசதியை முடகுவதற்கு இன்டர்நெட் 1lஸ்ப்லோரரில் Tools மெனுவில் Intenet Options தெரிவு செய்யுங்கள் தோன்றும் டயலொக் பொக்ஸில் Content டேபில் Autocomplete பட்டனில் க்ளிக் செய்ய வரும் பெட்டியில் பாஸ்வர்ட் சம்பந்தப்பட்டதெரிவுகளை நீக்கி விடுங்கள்.
* அதே போல் உங்கள் இணைய பயன்பாட்டை பிரவுசர் Temporary Intenet Files எனும்போல்டரில் சேமித்து விடும். அவற்றை அழிப்பதற்கு இதே Intenet Options டயலொக்பொக்ஸில் Generalடேபில் Temporary Intenet files என்பதன் கீழ் Delete Cookies, Delete Files பட்டன்களில் க்ளிக் செய்து விடுங்கள்.
* பயபொக்ஸ் பிரவுஸரில் Tool options Privacy க்ளிக் செய்யுங்கள். அங்கு Clear History When Firefox Closes என்பதைத் தெரிவு நிலைக்கு மாற்றுங்கள். இதன்மூலம் பய பொக்ஸ் பிரவுஸரில் உங்கள் இணைய நடவடிக்கைகள் அனைத்தையும் அழித்து விடலாம்.
பொதுக் கணனி பயன்பாட்டில் மேற்சொன்ன விடயங்களுக்கு மேலாக சமயோசித புத்தியும்உங்களிடம் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். சரி, இவ்வளவு விடயங்களைச்சொல்லி உங்களைப் பயமுறுத்திய நான் ஒருபோதும் பொதுக் கணனிகளைப் பாவிக்கும் போது எந்தமுன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுப்பதேயில்லை. காரணம் என்னவென்றால் என்னிடம்திருடுவதற்கு எதுவுமேயில்லை.
இஸ்லாத்தின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டு அதை முழுமையாக அறிவதற்காக ஏரளாமான ஆண்களும், பெண்களும் வருகை தருகிறார்கள். அவர்களுக்காக சேலத்தில் ஒரு மாதம் இஸ்லாமிய பயிற்சியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கி வருகிறது.
இந்த ஒரு மாத பயிற்சியில்
·இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை,
·திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி,
·துஆ மனனம்,
·தொழும் முறை,
·நபிகளார் வரலாறு,
·இஸ்லாமிய ஒழுங்குகள்,
போன்றவை போதிக்கப்படுகிறது.
மேலும் பயிற்சி காலத்தில் உணவு, எண்ணெய் மற்றும் அத்தியாவசியத் தேவைகள், தங்குமிடம், மருத்துவம் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள், போக்குவரத்துச் செலவுகள் போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.
இதைப் போன்று இலவசமாக கத்னாவும், இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும், கெஸட்டில் பெயர் மாற்றம் போட்டுத் தரப்படுகிறது.
இன்னும் இதுபோன்ற பல நற்பணிகளை தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது. இந்த நல்ல பணிகள் உங்கள் போன்றவர்களின் உதவிகள் மூலமே செய்யப்படுகிறது. எனவே இம்மை மறுமை வெற்றிக்கு இந்த நல்லபணிகளுக்கு வாரி வழங்குகள்.
அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களாகவும் வழங்கலாம்.
இப்பணிக்கு உங்கள் ஜகாத் தொகையையும் பயன்படுத்தலாம்.
உங்கள் உதவிகளை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
நாகரீக வாழ்க்கையில் கௌரவத்தின் ஓர் அங்கமாக வங்கிகளின் கடன் அட்டைகள் முக்கிய இடம் பிடித்துள்ளன. கடன் அட்டைகள் வைத்திருப்பது அந்தஸ்தில் உயர்நிலையில் இருப்பதாக வெளி உலகத்துக்கு காட்டிக் கொள்ளும் அடையாளமாக திகழ்கிறது.
ஆகையால் கடன் அட்டைகள் என்றால் என்ன? அதில் உள்ள வகைகள் என்னென்ன? அதில் உள்ள பயன் என்ன? தீமைகள் என்ன? இஸ்லாமிய பார்வையில் இது ஆகுமானதா? என்பதை நாம் விளக்க கடமை பட்டுள்ளோம்.
கடன் அட்டைகளின் வகைகள்.
நாம் இங்கே நமக்கு தெரிந்த அளவை வைத்து அட்டைகளின் வகைகளை இங்கே குறிப்பிடுகிறோம்.
1. Aprவகை அட்டைகள்
Apr (Annual Percentage Rate) என்றால், நீங்கள் இந்த அட்டையை உங்கள் தினசரி தேவைக்காக உபயோகப்படுத்தும் பணத்துக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வட்டி கட்ட தேவையில்லை. (குறைந்த பட்சம் 6 மாதம்) ஆனால் அவர்கள் குறிப்பிடும் Apr (Annual Percentage Rate) வைக் கட்ட வேண்டும் பெரும்பாலும் மிகச் சொற்பமான தொகையாக இவை இருக்கும்.
இதில் இன்னொரு வகை ஆடத APR on Balance Transfers, இதில் விஷேசம் என்ன வென்றால் இன்னொரு கடன் அட்டையில் இருக்கும் பேலன்ஸ் ஐ அதாவது நீங்கள் வேறு கடன் அட்டைகளில் செலுத்த வேண்டிய தொகையை இந்த அட்டைக்கு மாற்றிக் கொள்ளலாம். மேலும் அந்த தொகைக்கு அவர்கள் குறிப்பிடும் காலம் வரை வட்டி கட்ட தேவையில்லை.
இன்னும் சில நிறுவனங்கள் அவர்கள் வழங்கும் காசோலைக்கும் இந்த மாதிரி வசதியை தருவார்கள். இந்த வசதியை பன்படுத்தி நீங்கள் உங்களின் Savings,Fixed deposit கணக்குகளுக்கும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.
2. Sky Milesஅட்டைகள்
இந்த வகை அட்டைகள், நீங்கள் சேகரிக்கும் புள்ளிகளை பொறுத்து, இலவச விமான பயணம் போன்றவற்றை பெற்று தரும். இந்த வகை அட்டைகள் பெரும்பாலும் இலவசமாக கிடைக்காது. வருடாந்திர கட்டணமும் இலவவசமாக கிடைக்காது. இருவருடாந்திர கட்டணம் இருக்கும். சில அட்டைகள் முதல் வருடம் மட்டும் இலவசமாக இருக்கும். அது போன்ற அட்டைகளை வாங்கி உபயோகித்த பின்னர் முதல் வருடம் முடிந்த உடன் கேனஸல் செய்து விடலாம்.
3. Points அட்டைகள்
இந்த வகை அட்டையில் நீங்க உபயோகிக்ககும் அல்லது செலவு செய்யும் பணத்துக்கும் ஒரு புள்ளி, இரண்டு புள்ளி என்று அளிப்பார்கள். ஒரு குறிப்பிட்ட புள்ளிகளை நீங்கள் அடைந்த பின்னர் அவர்கள் குறிப்பிடும் இலவச பொருட்களை உங்களின் புள்ளிகளை உபயோகித்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
4. Cash Back அட்டைகள்
இந்த மாதிரியான அட்டைகளின் மூலம் நீங்கள் செலவு செய்யும் பணத்தின் ஒரு பகுதியை 5% 10% என்று திருப்பி கொடுப்பார்கள். இவ்வகை அட்டைகளை நீங்க பெரிய பெரிய பொருட்கள் வாங்க உபயோகித்தால் எ.கா கேமரா, டீ.வி போன்றவற்றை வாங்க உபயோகித்தால் பெரும் சேமிப்பாக இருக்கும்.
5. Secure Credit Card அட்டைகள்
இது ஒரு வகையான டெபிட் கார்டு என்றே கூறலாம். முதன் முதலில் Credit History இல்லாதவர்கள் இங்கு வரும் பொழுது Credit History ஐ வளர்க்க இது போன்ற அட்டைகள் உபயோகித்து வளர்த்து கொள்ளலாம். இந்த வகை அட்டைகளில் முதலில் நீங்கள் ஒரு தொகையை முன்பணமாக கொடுக்க வேண்டும். பின்னர் அவர்கள் நீங்க முன பணமாக கொடுத்த தொகைக்கு ஈடான அட்டையை கொடுப்பார்கள். நீங்க அதை கடன் அட்டை போல உபயோகித்து கொள்ளலாம்.
இது தவிர பல வகை அட்டைகள் உண்டு. உங்களின் Credit History ஏதாவது ஒரு காரணத்தால் மோசமான இருந்தால் அதை சரி செய்யும் வகையான அட்டைகள், credit score ஐ மேம்படுத்த மாணவர்களுக்கு என்றே பிரத்யோகமான அட்டைகள், அப்புறம் தொழில் செய்பவர்களுக்கு என்று பலதரப்பட்ட அட்டைகள் உண்டு.
நண்மைகள்.
இந்த மாதிரியான கார்டுகளால் சில நன்மைகள் இருக்கிறது.
1) ஒரு பொருளை வாங்குவதற்காக பணத்தை கைநிறைய வைக்க வேண்டிய தேவையில்லை. இதனால் திருடர்கள் பயமில்லாமல் இருக்கலாம்.
2) நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் நினைத்த பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
தீமைகள்.
இந்த கடன் அட்டைகளால் சில நன்மைகள் இருந்தாலும் இதில் பல தீமைகள் இருக்கிறது. இதனுடைய தீமைகளை விளக்கி பாதிக்கப்பட்ட ஒருவர் கதையாக வடித்திருக்கிறார். பாருங்கள்.
மணிக்கு அந்தக்கடிதம் வந்ததுலிருந்துதான் தொடங்கியது சனி.
திரு சுப்ரமணியன் கோவிந்தராஜன், தாங்கள் கடன் அட்டையில் இரண்டு மாதங்களாக ரூ 150000 கட்டப்படாமல் நிலுவையில் இருக்கிறது. தாங்கள் உடனே ஆவண செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம், ஓம் வங்கி.
எப்படி சாத்தியம்? வீட்டின் கடைசி செலவுக்காக கடன் வாங்கியது உண்மை. ஆனால் அடுத்த மாதம் அலுவலகத்தில் எல்லா கடனங்களையும் எடுத்து வங்கிக்கு காசோலை அனுப்பி விட்டதே, இரண்டு மாதங்களாக நிலுவையா? வங்கிக்கே பேசிவிடலாமா?
உங்கள் சேமிப்பு கணக்கு பற்றிய தகவல்களுக்கு 1 ஐ அலுத்தவும்.
ஏழெட்டு எண்களை அழுத்தி உங்கள் அழைப்பு எங்களுக்கு முக்கியமானது, தயவு செய்து காத்திருக்கவும் 20 நிமிடம் கேட்டுக் கொண்டிருந்த பின்
வணக்கம் என் பெயர் ஜான் உங்களுக்கு என்ன சேவை வேண்டும் அப்பாடா மனிதக்குரல்.
என் பெயர் சுப்ரமணியம் கோவிந்தராஜன் என் அட்டை எண்................................;
ஒரு நிமிடம் திரு கோவிந்தராஜன்..
உங்கள் கணக்கில் இன்னும் 1.5 லட்சம் கட்டப்படாமல் நிலுவையில் இருக்கிறது.
நான் சென்ற 3 ம் தேதி அதற்கு காசோலை அனுப்பி விட்டேனே.
இன்று தேதி 5 தான் ஆகிறது, ஒரு வேளை கணக்கு சேர்க்கப்படாமல் இருக்கலாம்.
நான் சொல்வது போன மாதம் 3 ம் தேதி.
மன்னிக்கவும் திரு கோவிந்தராஜன் இன்னும் எங்களுக்கு அந்தக் காசோலை வந்து சேரவில்லை.
ஆனால் வங்கி கணக்கில் அந்தப்பணம் குறைந்து விட்டிருக்கிறதே.
இன்னும் இந்தக்கணக்குக்கு வரவில்லை திரு கோவிந்த ராஜன். நீங்கள் உடனே அந்தப்பணத்தை கட்ட வேண்டும். எங்கள் கடன் மீட்புத்துரைக்கு உங்கள் கணக்கு பற்றிய தகவல்களை அனுப்பி விட்டோம்.
ஆனால் நான் அனுப்பி விட்டேனே.
உங்கள் காசோலை எண்ணை சொல்கிறீர்களா? சரி பார்க்கிறேன்.
சொன்னான்.
ஆம் இந்தக்காசோலை எங்கள் வங்கிக்கு வந்திருக்கிறது. ஆனால் வேறு எண்ணுக்கு உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கடன் அட்டைகள் இருக்கின்றனவா.
இல்லையே உங்கள் வங்கியிலிருந்து ஒரே ஒரு அட்டைதான். எந்த எண்ணுக்கு சென்றுள்ளது?
மன்னிக்கவும் வேறு ஒருவர் பெயரில் உள்ள அட்டை எண்ணை நாங்கள் தெரிவிக்க கூடாது.
காசோலை எண் தவறுதலாக போட்டிருக்கலாம்.
மன்னிக்கவும் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்வதிற்கில்லை.
அந்த அட்டைக்குரியவரிடம் பேசி தவற்றை சரி செய்யலாம் அல்லவா.
அதை இந்த வங்கி செய்யாது. நீங்கள் செய்து கொள்ள தடை இல்லை.
எனக்கு யாருடைய கணக்கு என்பது எப்படி தெரியும்?
மன்னிக்கவும் நான் தகவல் தர இயலாது.
உங்கள் மேலாளரிடம் பேசி பார்க்கலாமா?
தாரளமாக ஆனால் அவரும் இத்தகவல்களை தரமாட்டார்.
அப்போது என்னதான் வழி?
தாங்கள் 1.5 லட்சத்தை உடனடியாக கட்ட வேண்டும்.
எப்படி கட்டுவது?
மன்னிக்கவும் வேறு ஏதேனும் கேள்வி இருக்கிறதா? நல்ல நாளுக்கு வாழ்த்துக்கள் வைத்து விட்டான்.
நல்ல நாள்? இதை விட மோசமான நாள் இருக்க முடியுமா?
என்ன செய்வது? எப்படி இந்த பிரச்சனையிலிருந்து மீள்வது? யாரை ஆலோசிப்பது.. ஒன்றும் புரியாமல் அடிவயிரு கணக்க, வீட்ற்கு சென்றால் வாசலிலேயே மடக்கினார் செயலாளர் ராமராவ்.
என்ன மணி உங்கள் வீட்டுக்கு இப்படிப்பட்ட விருந்தாளிங்க எல்லாம் வருவாங்களா?
யார் அது விருந்தாளி?
இது மரியாதைக்குரியவர்கள் இருக்கும் இடம். இந்த மாதிரி ரவுடிங்க எல்லாம் வராம பாத்துக்குங்க
ராமாராவுடன் சண்டை பிடிக்க நேரமில்லாமல் வீட்டிற்கு விரைந்தான். 3 தடி ஆட்கள் அழைப்பு மணியை புறக்கணித்து கதவை ஓங்கி தட்டிக் கொண்டுடிருந்தார்கள்.
யாருங்க நீங்க
நாங்க வங்கியிலிருந்து வாரோம். கடன் வாங்னீயே திருப்பி கொடுக்க வேணாம்?
அந்த முகங்கள் அவர்கள் உடைகள் எதுவும் பன்னாட்டு வங்கியின் பெயருடன் ஒத்து வர வில்லை. ஆரம்பிக்கும் போதே ஒருமையில் ஆரம்பிக்கீறானே..
வாங்க உட்கார்ந்து பேசலாம்.
எடுறா என்றான் அவர்களுள் தலைவன் போல தோற்றமளித்தவன்.
என்னாது.. கொடுக்க முடியாதாமா? கைகால் போனா பரவாயில்லையின்னு கேளு கடன் வாங்கி திருப்பிக் கொடுக்க முடியாத நாய்க்கு வாய் மட்டும் வண்டலூர் வரைக்கும்.
என்னய்யா எப்ப தருவே?
நான் பணத்தை அனுப்பிடேனுங்க. ஆனா ஒரு தப்பு நடந்து போச்சு
எல்லாரும் இப்படித்தான் ஆரம்பிக்கிறாங்க
இல்லீங்க நிஜமாகவே வேர ஒரு கணக்கு பணம் போயிருச்சு
அதுக்கு என்னை என்னா பண்ணச்சொல்ர?
நான் மேலதிகாரங்கிட்ட பேசி சரி பண்ணிருவேங்க
மொட்டை.. போட்டிருந்தவன் கேட்டான். அவன் என்ன தான் சொல்ரான்? குடும்பத்தோடு மரியாதையா வாழனுமா? வேணாமா? நாம் யாருன்னு காட்டிட்டு வா அப்பதான் தெரியும் இவனுங்களுக்கு. மணி பேசியதை காதில் வாங்கி கொண்டாகதாகவே காட்டிக் கொள்ளவே இல்லை.
தோ பாரு மணி ஒரு வாரம் உனக்கு தாரேன் அதுக்குள்ள பைசல் பண்ணாச் சரி இல்லாட்டி என்ன வேனும்னாலும் நடக்கும்.
வெளியேறி விட்டார்கள் இரண்டுநிமிடம்தான் உள்ளே இருந்தார்கள், ஆனால் ஒரு தேர்ந்த நாடகம் போல மேலே கை வைக்காமல் நேரடியாக திட்டாமல் செய்தியை மணிக்கு சொல்லி விட்டார்கள் நாங்கள் எநத அளவுக்கும் இறங்குவோம்.
அடுத்த வந்த நாட்கள் அன்றை விட மோசமாவே இருந்தன.
அட்டைக்கு அனுப்பப்படும் காசோலை யாருடைய கணக்கில் இருந்து வந்தது என்பது உங்களுக்கு அந்த அ;ட்டைதாரருக்கும் என்ன கொடுக்கல் வாங்கலோ? அவராக முன் வந்து சரி செய்தால் மட்டுமே முடியும்.
சரி அவர் பெயர் முகவரி சொன்னீங்கன்னா கேட்டுபாக்கிறேனே.
மன்னிக்கவும் நாங்கள் அந்த எண்ணைத் தர முடியாது. நீங்கள் இப்போது உடனடியாக 175000 த்தை கட்டுவது தவிர வேறு வழி கிடையாது.
வங்கி மேலதிகாரிகள் கைகழுவி விட்டடார்கள்.
வாரம் கழிந்தவுடன் சரியாக வந்து விட்டார்கள் தாதாக்கள்.
என்னா மணி இன்னும் கட்டலியாமே? என்னா தெனாவட்டு உனக்கு?
இல்லைங்கே ஏதாவது பண்ணி சரி பன்னிடுவேன்.
த்தா உனக்கெல்லாம் ஒரு வீடு? சோருதானே திங்கிறே? கடன் வாங்கினா திருப்பி கொடுக்கனும்ன்ற அக்கரை வேனாம்?
எப்படியும் இன்னும் ஒரு ரெண்டு மூணு நான்லே...
கடைசியா இன்னும் இரண்டு நாளன் கொடுக்கிறேன் மவனே அதுக்குள்ளே கணக்குத்தீர்க்லே...
யாரை கேட்பது?
உங்க அப்பா கிட்ட இருந்து ஏதாச்சும்?
அவரு கடைசி காசையும் சுரண்டிதானே 3 லட்சம் கொடுத்தாரு? உங்களுக்கு தெரியாதா?
எந்த வழியும் இல்லை. அலுவலகத்தில் வங்கிகளில் தெரிந்தவர்களிடம் எல்லாம் எல்லை வரைக்கடன் வாங்கித்தான் வீடே முழுமையாகியிருக்கிறது. நண்பர்கள் எல்லாரும் முடியாது என்றே சொல்லி விட்டாôகள்.
நடை பிணமாகத்தான் அலைந்தான் மணி ஐந்து வட்டிக்கு தர்ரேன் ஆனா ரெண்டு மாசத்துக்குள்ள திருப்பனும் ரெண்டு மாசத்துக்குள்? வேறு குண்டர்களை அழைப்பதில்தான் இது முடியும்.
வேணாங்க.
வீட்டை அடகு வைக்கலாமா? இதை எப்படிங்க அடகு வைக்க முடியும்? ஏற்கனவே அடகுக்தானே வீட்டுக்கடன் வாங்கியிருக்கோம்.?
ஒன்றும் புரியவில்லை தற்கொலை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. ஒரு நாள் அம்சா பதட்டமாக அழைக்க வீட்டிற்கு வேகமாக ஓடினான்.
வீட்டு வாசல்ல ஒரு வண்டியில் அவன் தொûக்காட்சியும் குளிர்பதனப்பெட்டியும். அதே தாதா தான் நின்று மேற்பார்வை பார்த்து கொண்டிருந்தான் மணி வந்துட்டியா? காசை திருப்பி கொடுக்க வக்கில்லா உனக்கு படம் பார்க்கனுமா?
ராமராவ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். மணி இதெல்லதம் சரியில்லை. நான் முதல்லேயே சொன்னனேன், இது மரியாதை பட்டவங்க இருக்கிற இடம்னு. நீங்க கூடிய சீக்கிரம் காலி பண்ணிடுங்க. குழந்தைங்க எல்லாம் பயப்படுது பாருங்க.
வீட்டில் தொலைக்காட்சி போனதில் நிசப்தம்.
அடுத்த முறை தாதா வந்த போது மணியும் வீட்டில் இருந்தான் நல்ல வேலையாக..
மணி உன் மூஞ்சுக்குதான் இவ்வளவு நாள் மேல வைக்காமே விட்டு வச்சிருக்கேன்...
இதோ பாருங்க நீங்க பன்றது சட்டப்படி தப்பு தீர்ப்பு கூட வந்திருக்கு தெரியுமா?
நீ சரிபடமாட்டே சட்டம் பேசுறீயா? தயிர் சோத்துக்கு
இவ்வளவு திமிறு கூடாது.. இதோ கூபிடுறேன் நம்ம பசங்கள..
அய்யயோ அவங்ககிட்ட ஏன் வம்பு.. ஏதாச்சும் கொடுத்து அனுப்புங்க கண்ணில் கலவரத்தோடு அம்சா...
என்ன இருக்கிறது கொடுக்க?
ஏன் உன் பொண்டாட்டி அனுப்பேன் அம்சாவா போரு?அம்சாலதேனே இருக்கா?
கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.
இந்த தாலி ஒன்னுதான் இருக்கு சாமி படத்துக்கு கீழே கயிரு இருக்கு அதை எடுத்துகிட்டு வாங்க..
சமையல் அறையைத் தாண்டும் போதுதான் அதைப்பார்த்தான்.
மாட்சிமை தாங்கிய நீதிபதி அவர்களே.. என் கட்சிக்காரர் மணி உணர்ச்சியின் தூண்டுதால்தான் இந்தக் கொலையை செய்திருக்கிறார் என்பதால் குறைந்த பட்ச தண்டனையை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதில் பல தீமைகள் இருந்தும், இதில் பல நபர்கள் பாதிக்கப்பட்டு இருந்தும் ஏன் இதில் மக்கள் விழுகிறார்கள். இதற்கு காரணம் என்ன? என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கையில் பொதுவாக மக்கள் கவர்சிக்கு அடிமையாக இருக்கிறார்கள். இரண்டாவது ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற எண்ணமும். இதற்கும் மேலாக வங்கிகளின் கவர்சிகரமான விளம்பரங்களையும். அவர்களின் பேச்சையும் நம்பிவிடுதலும் காரணமாக அமைகின்றன.
வங்களின் முகவர்கள் என கூறிக் கொண்டு கவர்சிகரமான உறுதிமொழிகளை அள்ளி வீசுகிறார்கள், அரசு அலுவலர்கள் வியாபாரிகள் முதல் பாமர மக்கள் வரை, தங்களின் பேச்சுத்திறமையால் கடன் அட்டைகளை வாங்க மறுத்து விடுகின்றனர். அட்டைகளை வாங்கும் வரை தொடர்ந்து தொலைபேசியில் பேசுகின்றனர். கடன் அட்டைகள் மூலம் பெரும் ரொக்கப்பணத்திற்கு 50 நாள் வரை (வங்கியை பொருத்தவரை இந்த நாட்களில் ஏற்றத்தாழ்வு உள்ளன.) வட்டி கடையாது. பொருள்களாக வாங்கினால் 45 நாட்களுக்குள் திருப்பி செலுத்தினால் வட்டி கிடையாது என உறுதி கூறுகின்றனர்.
வாடிக்கையாளர்கள் ஆர்வத்தில் பொருளோ, பணமோ பெற்று ஒரு சில தவணைகளை ஒழுங்காகக்கட்டியதும்தான் புதிய வடிவில் விதி விளையாட ஆரம்பிக்கிறது.
வாடிக்கையாளர்களிடம் தொலைபேசி மூலம் நான் தாங்கள் வைத்திருக்கும் கடன் அட்டைக்குரிய வங்கியின் முகவர் பேசுகிறேன். நமது வங்கியும் மருத்துவ காப்பீடு நிறுவனமும் உடன் பாடு செய்து கொண்டுள்ளது. நீங்கள் மருத்துவ காப்பீடு பாலிசி எடுத்துக் கொண்டால் ஒரு தவணை மட்டும் பணம் செலுத்தினால் போதும் அதையும் கிரிடிட் மூலம் வழங்குகிறோம் என கூறுகின்றனர்
அப்படியா விவரம் கூறுங்கள் என தப்பித்தவறி கேட்டு விட்டால் போதும் பேச்சிலேயே அவரை மயக்கி உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரம் வயது ஆகியவற்றை கூறுங்கள் எவ்வளவு தொகை உங்கள் காப்பீடு கிடைக்கும் உங்களது பிரிமியம் தொகை எவ்வளவு என்பதை உடனே கூறிவிடுகிறேன் என கூறுகின்றனர்.
அப்பாவி வாடிக்கையாளரும் விவரம் கூறிவிட்டால் பிரிமிய தொகையை கூறிய உடனேயே உங்களுக்கு விருப்பமில்லாவிடில் பாலிசியை ரத்து செய்து விடுவோம். விருப்பம்மிருந்தால் உங்கள் கிரிடிட் கார்டுலிருந்து பணம் பெற்றுக் கொள்ளப்படும் உங்கள் கிரிடிட் கார்டு நம்பரை கூறுங்கள் என கேட்கின்றனர்.
கிரிடிட் கார்டு நம்பரை கூறிவிட்டால் அடுத்த விநாடியே வாய்ஸ் மெயில் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து விட்ட தகவல் வந்துவிடும்.
வங்கியிலிருந்து மாதாந்திர அறிக்கை கிடைக்கும் போதுதான் கடன் அட்டையிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளருக்கு தெரிய வருகிறது. ஒரு சிலரிடம் கடன் அட்டையில் எவ்வளவு பெற முடியுமோ அவ்வளவு தொகையும் 2,3 பாலிசிகள் பெயரில் எடுத்து விடுகின்றனர். அவர் அலறியடித்து வங்கிக்கு சென்று <ச்ண்ப்ங்:///றறச்சென்று> கேட்டாலோ அது தனி பிரிவு அங்கு சென்று கேளுங்கள் என கூறுகின்றனர். அங்கு சென்று கேட்டால் தலமை அலுவலகம் மும்பையில் உள்ளது. அங்கு தொடர்பு கொள்ளுங்கள் என பொறுப்பில்லாத பதில் வருகிறது.
இருப்பினும் மும்பையிலுள்ள அலுவலகத்தின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என கூறுகின்றனர். ஆனால் அங்கிருந்து வரும் பதிலை புரிந்து விபமரிந்தவர்கள் உதவியுடன் பாலிசிரைய ரத்து செய்யக் கோரி பாலிசி ரத்தாகி பணம் திரும்ப வங்கிக்கு வந்ததும் புதிய பிரச்சனை வருகிறது.
தாங்கள் பெற்ற கடனுக்கு வட்டி சேவை வரி என இஷ்டத்திற்கு தொகையை குறிப்பிட்டு நோட்டிஸ் அனுப்புகின்றனர். இரண்டு நோடடிஸ்களுக்கு பதில் இல்லையெனில் வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கலிருந்து பணத்தை தாமாகவே வங்கிகள் வரவு வைத்து வைத்துக்கொள்ளும் நூதன மோசடியில் ஈடுபடுகின்றனர்.
மன உலைச்சலில் தவிக்கும் வாடிக்கையாளர்கள் வெளியே சொல்ல முடியாமல் உயிரை விடவும் முனைந்து விடுகின்னர். முதலில் தொடர்பு கொண்ட வங்கியின் முகவர் முகவரியே இல்லாத நபராகிவிடுகிறார்.தேடிப்பிடித்து தொடர்பு கொண்டாலும் பொறுப்பில்லாமல் தலைமை அலுவலுகத்ûதை தொடர்பு கொள்ளுங்கள் என்கின்றனர்.
வங்கியின் துணையோடு ரகசியமாக நடக்கும் நூதன மோசடியில் ஏமர்நதோர் ஏராளம். சொல்ல வழி தெரியாத வங்கி கடன் அட்டை தாரர்களுக்கு வழிகாட்டுவோர் யாரோ? கவர்சி வார்த்தையில் நம்பிக் கடன் அட்டையில சிக்கி வழ்வை சீரழிக்காதிருக்க விழிப்புணர்வை சமுதாய இயக்கமாகிய தவ்ஹீத் ஜமாத் ஏற்படுத்த வேண்டும் அதில் ஒரு பகுதிதான் இந்த கட்டுரை
இஸ்லாம் வழங்கும் தீர்ப்பு.
இஸ்லாத்தை பொருத்த வரை கடன் வாங்கலாம், கொடுக்கலாம் தவறில்லை. ஆனால் கடன் கொடுத்ததற்காக அதிமாக எதையும் பெறக்கூடாது. அப்படி பெறுவதற்கு இஸ்லாம் வட்டி என்று சொல்கிறது. இந்த வட்டி சம்பந்தபட்ட அனைத்ûயும் தடையும் செயதிருக்கிறது. அந்த அடிப்படையில் வங்கிகள் கடன் அட்டைக்காக நிர்ணயிக்கும் நாட்களில் பணத்தை செலுத்திவிட்டால் வட்டியாகாது. ஆனால் கடன் அட்டை வாங்கும் போதே வங்கி நிர்ணயிக்கும் காலத்தை விட அதிகமாகிவிட்டால் நான் வட்டி தருவேன் என்று கடன் அட்டை வாங்குபவர் கையெழுத்து போடுவதினால் அந்தக்குற்றத்திற்கு ஆளாகிவிடுகிறார். மேலும் கடன் அட்டைகளால் ஏற்படும் தீமைகளையும் பார்த்தோம். எனவே சில நன்மைகளை பார்ப்பதை விட அதிகமான தீமைகள் இருப்பதினாலும், வட்டி கொடுப்பதற்கு துணை போவதினாலும் இந்த கடன் அட்டைகளை விட்டும் விலகிக் கொள்வதே சிறந்த அறிவார்ந்த செயலாகும்.
நபியே! மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஓர் தொல்லை, எனவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! அல்லாஹ் திருந்திக் கொள்ளுவோரை விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்” எனக் கூறுவீராக என்று கூறுகிறான்.
(அல்குர்ஆன் 2:222)
பெண்கள் பருவமடைந்த பிறகு சராசரியாக அவர்களுக்கு 40 வயது முதல் 50 வயது வரை மாதவிடாய் வந்து பின்பு முற்றிலுமாக இது நின்றுவிடுகிறது. இது முழுவதுமாக நின்றுபோகும் நிலையை ஆங்கிலத்தில் மெனோபாஸ் என்கிறார்கள். இந்த காலகட்டம்தான் பெண்களுக்கு சோதனையான காலகட்டமாக உள்ளது. மெனோபாஸ் என்கிற நிலையை உணர பெண்களுக்கு கிட்டத்தட்ட ஒரு வருட காலம் கூட ஆகும். ஏனெனில் சில பெண்களுக்கு 2 மாதங்கள், 3 மாதங்கள், ஏன் 5, 10 மாதங்கள் கூட நின்று விட்டு பின்பு மாதவிடாய் வருவதுண்டு. இறுதியாக சில மாதங்கள் தொல்லை கொடுத்துவிட்டு முழுமையாக நின்றுவிடும்.
இந்த காலகட்டங்களில் பெண்கள் உடல் அளவில், மனதளவில் பல பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். உடல் அளவில் மாற்றங்கள் வருகிறது. அடிக்கட வியர்த்துப் போகுதல், படபடப்பு, கோபம், எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, ஏதோ தீராத நோய் வந்துவிட்டது போலவும், இறைவன் நம்மை சோதிக்கிறான் என்பது போலவும் ஒரு சிந்தனை வருகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், “மாதவிடாய் என்பது ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும்” (புகாரி 5548)
இப்பொழுது பல பெண்மணிகளுக்கு மெனோபாஸ் காலத்திற்குப் பிறகு கர்ப்பப்பை எடுக்க வேண்டிய சூந்நிலை ஏற்பட்டு விடுகிறது. பெரும்பாலும் நிரந்தர கருப்பைத் தடை ஆப்ரேஷன் செய்த பெண்களுக்கு ஒரு முறை வயிற்றை கீறிவிட்டால் நிச்சயமாக பல காரணகாரியங்களுக்காக நாட்பட்ட பல தொல்லைகள், கட்டிகள் தோன்றிவிடுகிறது. இது கர்ப்பப்பை கேன்சராகவும், மார்பக புற்றுநோயாகவும் மாறவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதனால் உடனடியாக கர்ப்பப்பையை எடுத்து விடுகிறார்கள். நிரந்தர கருத்தடை செய்ய வேண்டாம் என இஸ்லாம் இதனால்தானோ நமக்கு தடைவிதித்து இருக்கிறது (இறைவன் அறிந்தவன்). அப்படி கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் மேலே சொன்ன அத்தனை பிரச்சினைகளும் பல மடங்காகிவிடும்.
மாதவிடாய் நின்ற பிறகு வூடினைஸிங் ஹார்மோனும், புரோஜெஸ்டிரான் சுரப்பது குறைந்துவிடுவதால் இரத்த ஓட்டம் குறைந்துவிடுகிறது. திசுக்கள் அனைத்தும் நீர் வற்றி அவற்றின் பலத்தை இழந்துவிடுவதால், மலக்குடல், சிறு நீர்ப்பை பிடிமானம் குறைந்து உரிய இடங்களை விட்டும் கீழே இருக்கும். இதுவே பெண்களுக்கு அசௌகரியமாக இருக்கும்பொழுது, எலும்பின் தன்மையும் முற்றிலுமாக மாறிவிடுகிறது.
மூட்டுக்கு மூட்டு வலி ஏற்படுகிறது. சிறியதாக அடிபட்டாலும்கூட எலும்பு முறிந்துவிடும் அபாயம் ஏற்படும். இவையெல்லாம் உடல் வேதனைகள் என்றால், மனதளவில் இந்த பெண்கள் படும்பாடு மிகவும் வேதனைக்குரியது. நாம் தனிமைபடுத்தப்பட்டுவிட்டோமோ, நம்மை உதாசீனப்படுத்துகிறார்களோ என்று கவலை அடைவார்கள்.
ஒன்றைமட்டும் நாம் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்; 40, 45 வயது என்பது முதுமையான காலம் அல்ல. அது நடுத்தர வயது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். திசுக்களில் நீர் வற்றிவிடுவதால் பிறப்பு உறுப்பு அதன் நெகிழ்ச்சி தன்மையிலிருந்து வறட்சி தன்மைக்கு மாறிவிடுகிறது. இந்த நிலையில் தாம்பத்தியம் வலியுடன் கூடிய மிகுந்த சிரமத்தை உள்ளாக்கிவிடும்.
கணவனை திருப்திப்படுத்த இயலாத பெண்கள் மன தேவனை அடைந்து கணவன்மார்களையே சந்தேகம் கொள்ளுவார்கள். கணவருக்கோ மனைவியின் மீது கடுப்பு ஒரு பக்கம். பெண்கள் தான் பெற்ற பிள்ளைகள் மீது கோபத்தையும், இயலாமையையும் காண்பிக்க, பிள்ளைகளும் இந்த காலகட்டத்தில்தான் பெற்ற தாயை உதாசீனப்படுத்துகிறார்கள்.
கணவன்மார்களும், பிள்ளைகளும் இந்த நேரத்தில்தான் அவர்களுக்கு மிக ஆதரவாக நிச்சயம் இருக்க வேண்டும். இவர்களை மனநோய் தாக்காமல் இருக்க குடும்பத்தார்கள் ஆதரவாகவும், அன்னியோன்யமாகவும் பழக வேண்டும். அவர்களை உரிய மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவதுடன், உடற்பயிற்சியுடன் கூடிய உணவு முறைகளை சீரிய முறையில் நடைமுறைப்படுத்தி உடல்நலம் பெற வேண்டும்.
இந்த தருணத்தில் மார்க்கத்தின் பக்கம் நம் கவனத்தை திருப்புவது மிகுந்த நன்மை பயக்கும். இஸ்லாம் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வை நம்முன் வைக்கிறது.
“நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றொருவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையை தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாதையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள் புரிவான். அல்லாஹ் மிகைத்தவன். ஞான மிக்கவன்”
(அல்குர்ஆன் 9:17)
என்று எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் கூறுகிறான். தொழுகையை பேணுதலாக தொழுவதும், முடிந்த அளவு தர்மம் செய்வதும், திக்ருகளில் கவனம் செலுத்துவதிலும் சகோதரிகளே நீங்கள் முனைப்பு காட்டினால் இவையாவும் மனதளவில் நம்மை மறுமை வாழ்விற்கு தயார் செய்துவிடும்.
மார்க்கத்தில் ஈடுபடுவதோடு, சமூகப் பணிகளில் ஈடுபடுவதும் நம்மை சொர்க்கம் கொண்டு சேர்க்கும் ஒரு காரியம் என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
சகோதரர்களே! உங்கள் மனைவியை சமூக பணி ஆற்ற அனுமதி தருவதோடு உங்களின் ஒத்துழைப்பையும் கொடுங்கள். மன சஞ்சலம் உள்ள எந்த ஒரு பெண்மணியும் ஆதரவும், அன்பும் தரும் தன் கணவனின் தோளில் சாயும் பாக்கியம் பெற்றால், நெகிழ்ந்துதான் போவார். இதற்காகத்தான் நமது இறைவன் நீங்கள் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் என்கிறான்.
இந்த உலக வாழ்விற்காக நாம் அடையும் உடல் வேதனையைவிட மன வேதனையைவிட மறுமை வாழ்விற்காக நாம் நல்ல அமல்கள் செய்ய வேண்டும். சேகரிக்க வேண்டிய நன்மைகள், ஆற்ற வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது. நமக்காக எல்லாம் வல்ல இறைவன் சித்தப்படுத்தி வைத்துள்ள சொர்க்கத்தை அடைய உடல் நலத்தையும், மனபலத்தையும் நிச்சயம் நமக்கு அளிப்பான். மார்க்கத்தின் வழியில் மறுமைக்காவும், குடும்பத்திற்காகவும், சமுதாய நலனுக்காவும் வாழ நமதிறைவன் அருள்புரிவானாக!
மெனோபாஸ் பற்றி ஒரு வார இதழிலில் வந்திருந்தது. பெண்களுக்கு மட்டுமல்லஆண்களுக்கும் மெனோபாஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண் தன்னுடையநிலையிலிருந்து தடுமாறும் கால கட்டம் இது. கோபம், சோகம் என பலமனமாற்றங்களுக்கு ஆட்பட்டு தினரும் போதுகணவனோ, மகனோ அவளின் நிலையைஅறிந்து செயல்படுதல் முக்கியம்.
மெனோபாஸ் –
45 வயதிற்கு மேல் பெண்ணின் சினைப் பையின் செயல்பாடு குறைந்து மாதவிலக்குமுறையற்றதாகி இறுதியில் நின்றுவிடும் நிலைக்கு மெனோபாஸ் என்று பெயர்.
பொதுவாக 40 வயதிற்கு மேல் 50 வயதுக்குள் ஏற்படும் இது, தற்போது 30 வயதிற்கும் மேல் உள்ள பெண்களுக்கே ஏற்படுகிறது.
அறிகுறி –
1. உடல் முழுவதும் வெப்பம் பரவுவது போல இருக்கும். (ஹாட்ஃபாளஷ்).
2. திடீரென வியத்துக் கொட்டும். பனிக்காலமாக இருந்தாலும் வியர்க்கும்.
3. படபடப்பு, சோகம், எரிச்சல், அசதி, அழுகை என மனநிலை மாற்க்கொண்டே இருக்கும்.
4. ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால் தாம்பத்திய உறவில் சிரமம் ஏற்படும்.
செய்ய வேண்டியது –
1.ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எடுத்துக் கொள்வது அவசியம்.
2.கால்சியம் சத்து குறைவதால் எழும்பு மெலியும் அபாயம் உள்ளது.
3.சரியான உணவுப்பழக்கம் இருந்தாலே மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் பல பிரட்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்.
4.கொழுப்பு நீக்கப்பட்ட பாலால் ஆனா தயிரை தினந்தோறும் சேர்க்க வேண்டும்
5.சாப்பாட்டில் எள் நிறைய சேர்க்க வேண்டும்.
6.பச்சை காய்கற்கள், பழங்கள் சேர்ப்பது நலம்.
7.கைக்குத்தல் அரிசியும், கோதுமை மாவால் செய்யப்பட்ட உணவுகளும் பல குறைபாடுகளை தீர்க்கும்.
8.கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்த்து 45 நிமிடங்கள்மாலைவேளையில் நடந்தால் 90 சதவீத மெனோபாஸ் காலத்தில் வரும் நோய்களைதவிர்க்கலாம்.
9.கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
கால்சியம் மாத்திரை –
சமீபத்தில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒரு கால்சியம் மாத்திரை நிறுவனம்விளம்பரம் செய்து வருகிறது. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்காக அதைஉட்கொள்ளுமாறு கூறுகிறது. குழந்தைகளின் வளர்ச்சியில் ஆர்வமுள்ள பெற்றோர்கள்அதை வாங்கி குழந்தைக்கு கொடுத்தால், குழந்தையின் எலும்பு வளர்கிறதோஇல்லையோ சிறுநீரக்த்தில் கற்கள் வளர்ந்து விடும்.
சராசரியான குழந்தைக்கு தினம் பாலில் இருக்கும் கால்சியம் அளவே போதுமானதுஎன மருத்துவர்கள் கூறுகிறார்கள். நமது உடலில் இருக்கும் சத்துகள்குறைந்தால் அதற்காக மாத்திரை, மருந்துகளை உட்கொள்வதில் நியாயம் இருக்கிறது.நாமாக எதையும் முடிவு செய்து கொண்டு மருந்துகளை எடுத்துக் கொள்வதால்தேவையில்லாத விபரீதங்களே தோன்றுகின்றன.
காய்சலுக்கு பாரசிடமால் எடுத்துக் கொள்ளும் வழக்கம் நம்மில் பலருக்கும்இருக்கும். ஒரு வார இதழில் அதன் விளைவுகளை படித்த்திலிருந்து நான்பாரசிடமால் பக்கம் போவதே இல்லை. இப்போது சிக்கன் குன்யாவைப் போல பரவலாக ஒருகாய்ச்சல் வருகிறது. டெங்கு காய்ச்சலின் சில அறிகுறிகள் மட்டும்தென்படுகின்றன. அது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை குறைத்து விடுகிறது.வெள்ளை அணுக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்தி என்பது உங்களுக்குதெரிந்திருக்கும். அந்த காய்ச்சல் கொசுவால் பரப்பப்படும் வைரஸால்ஏற்படுகிறது என்று மருத்துவர் சொன்னார்.