அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 22 டிசம்பர், 2010

தானம் செய்த கண் சொர்க்கம் செல்லுமா?



கண்தானம் செய்யலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் கண்தானம் செய்த பின் ஒருவர் நல்லவராகவோ அல்லது கெட்டவராகவோ இருக்கலாம். அப்படி கொடுத்தவர், அல்லது வாங்கியவர் நல்லவராக இருந்தால் அந்தக் கண் சொர்க்கத்திற்கு அல்லது நரகத்திற்கு போகுமா?
பதில் : இவ்வுலகில் உறுப்புகளை தானம் செய்வதற்கும் மறுமையில் எழுப்பப்படுவதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.
இவ்வுலகில் நல்லவராக வாழ்நத ஒருவர் விபத்தில் கைகளை இழந்து விட்டால் அல்லது கண்களை இழந்து விட்டால் அவர் மறுமையிலும் கைகளை இழந்தவராக அல்லது கண்களை இழந்தவராக எழுப்பப்படுவார் என்பது கிடையாது.
மறுமையில் கெட்டவர்கள் குருடாக எழுப்பப்படுவார்கள் என திருக்குர்ஆன் கூறுகிறது.
وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى (124) قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا (125) قَالَ كَذَلِكَ أَتَتْكَ آَيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى (126
எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். "என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?'' என்று அவன் கேட்பான். "'அப்படித் தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்'' என்று (இறைவன்) கூறுவான்.
 (அல் குர்ஆன் 20 : 124, 125,  126)
கண்பார்வையுடன் இவ்வுலகில் வாழ்ந்தவன் இறைவனின் போதனையை மறுத்தால் குருடனாக எழுப்பப்படுவான் என இவ்வசனம் கூறுகிறது. குருடனாக எழுப்பப்படுவதற்குக் காரணம் அவன் நல்லவனாக வாழவில்லை என்பது தானே தவிர இவ்வுலகில் கண்ணை இழந்திருந்தான் என்பது அல்ல.
கண் இருந்தவனை குருடனாக எழுப்பிட அவனது நடத்தைதான் காரணம். அது போல் கண்ணற்றவன் இவ்வுலகில் நல்லவனாக வாழ்ந்தால் அவன் குருடனாக எழுப்பப்பட மாட்டான். அவனும் மற்ற நல்ல முஸ்லிம்களைப் போன்று இறைவனைக் காண்பான்.
மறுமையில் எழுப்பப்படும் தோற்றத்திற்கும் இவ்வுலகத் தோற்றத்திற்கும் எவ்விதத் தொடர்பு மில்லை என்பதைப் பல ஹதீஸ்கள் மற்றும் குர்ஆன் வசனங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ آل عمران/106
அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கறுத்திருக்கும்.
 (அல் குர்ஆன் 3 : 106)
அமெரிக்கர்களின் முகம் வெண்மையாகவும் ஆப்பிரிக்கர்களின் முகம் கருப்பாகவும் இருக்கும் என்று இதற்கு அர்த்தமில்லை.
மாறாக நல்லடியாராக வாழ்ந்த ஆப்பிரிக்கர் வெண்மையான முகத்துடன் வருவார். கெட்டவராக வாழ்ந்த வெள்ளையர் கருப்பானவராக வருவார்.
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ  البقرة : 275
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள் (அல்குர்ஆன் 2 : 275)
இவ்வுலகில் ஒருவன் உண்மையான பைத்தியமாக வாழ்ந்தாலும் அவனும் மறுமையில் பைத்தியமாகத் தான் எழுப்பப்படுவான் என்பது கிடையாது.
1475 عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَزَالُ الرَّجُلُ يَسْأَلُ النَّاسَ حَتَّى يَأْتِيَ يَوْمَ الْقِيَامَةِ لَيْسَ فِي وَجْهِهِ مُزْعَةُ لَحْمٍ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி (1475)
1060 عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا كَانَ عِنْدَ الرَّجُلِ امْرَأَتَانِ فَلَمْ يَعْدِلْ بَيْنَهُمَا جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَشِقُّهُ سَاقِطٌ     رواه الترمدي
ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருந்து அவ்விருவருக்கும் மத்தியில் நீதமாக நடக்கவில்லையென்றால் மறுமையில் அவனுடைய ஒரு (தோள்) புஜம் சாய்ந்தவனாக வருவான். 
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதி (1060)
இவ்வுலகில் தோள் புஜம் சரிந்த ஒருவர் தன்னுடைய மனைவி மார்களிடம் நீதமாக நடந்து கொண்டால் அவர் மறுமையில் சரியான தோற்றத்தில் தான் வருவார்.
580 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى عَنْ عَمِّهِ قَالَ كُنْتُ عِنْدَ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ فَجَاءَهُ الْمُؤَذِّنُ يَدْعُوهُ إِلَى الصَّلَاةِ فَقَالَ مُعَاوِيَةُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا يَوْمَ الْقِيَامَةِ   رواه مسلم
ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நான் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர் (முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், "மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் (631)
இவ்வுலகில் பாங்கு சொல்பவருக்கு கழுத்து குட்டையாக இருந்தாலும் அவர் மறுமையில் அழகிய தோற்றத்தில் கழுத்து நீண்டவராக வருவார்.
363 عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ رَأَى أَبَا هُرَيْرَةَ يَتَوَضَّأُ فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ حَتَّى كَادَ يَبْلُغُ الْمَنْكِبَيْنِ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ حَتَّى رَفَعَ إِلَى السَّاقَيْنِ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنْ أَثَرِ الْوُضُوءِ فَمَنْ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ  رواه مسلم
நுஐம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் கழுவிக் கொண்டே தோள்பட்டைவரை சென்றார்கள். பிறகு கால்களைக் கழுவிக் கொண்டே கணைக்கால் வரை சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமை நாளில் என் சமுதாயத்தார் அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் வருவார்கள். ஆகவே, உங்களில் எவருக்கு (உளூவில் தம் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது ஒளியை நீட்டிக்கொள்ள முடியுமோ அவர் அதைச் செய்து கொள்ளட்டும்'' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.  
நூல் : முஸ்லிம் 415
இவ்வுலகில் உளூச் செய்யும் போது எவ்வித ஒளியும் உடலுறுப்புகளில் ஏற்படுவதில்லை. ஆனால் மறுமையில் ஒளி ஏற்படுகிறது.
3327 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ عُمَارَةَ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَوَّلَ زُمْرَةٍ يَدْخُلُونَ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ عَلَى أَشَدِّ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ إِضَاءَةً لَا يَبُولُونَ وَلَا يَتَغَوَّطُونَ وَلَا يَتْفِلُونَ وَلَا يَمْتَخِطُونَ أَمْشَاطُهُمْ الذَّهَبُ وَرَشْحُهُمْ الْمِسْكُ وَمَجَامِرُهُمْ الْأَلُوَّةُ الْأَنْجُوجُ عُودُ الطِّيبِ وَأَزْوَاجُهُمْ الْحُورُ الْعِينُ عَلَى خَلْقِ رَجُلٍ وَاحِدٍ عَلَى صُورَةِ أَبِيهِمْ آدَمَ سِتُّونَ ذِرَاعًا فِي السَّمَاءِ  رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:
சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளி வீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள்; எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவர்களுடைய சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களுடைய வியர்வை கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகை போடும்) தூப கலசங்கள் அகிலால் எரிக்கப் படும். அகில் என்பது நறுமணக் குச்சியாகும். அவர்களுடைய மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  
நூல் : புகாரி (3327)
மறுமையில் பவுர்ணமி சந்திரனைப் போன்று, பிரகாசமான நட்சத்திரம் போன்று அறுபது முழ உயரத்தில் சொர்க்கவாசிகள் இருப்பார்கள்.
இவ்வுலகில் தற்கோலத்தில்  எட்டு, பத்து அடி உயரமுள்ளவனாக மனிதன் இருப்பதே மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஆனால் மறுமையில் 60 முழ உயரமுள்ளவனாக இருப்பான்.
இவ்வுலகத் தோற்றத்திற்கும் மறுமையில் எழுப்பப்படுவதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
கண்தானம் செய்த ஒருவர் நல்லவராக வாழ்ந்தால் அவர் மறுமையில் கண்களுடன் தான் எழுப்பப்படுவார்.
நம்முடைய உடல் அடக்கம் செய்யப்பட்டு மண்ணோடு மண்ணாக மக்கிப் போன பிறகு உயிர்கொடுத்து எழுப்பும் இறைவனுக்கு இது இயலாத ஒன்றல்ல.
கண்தானம் செய்த ஒருவர் கெட்டவனாக வாழ்ந்தால் அவர் மறுமையில் குருடனாகத் தான் எழுப்பப்படுவார். அல்லது அவனுடைய கண்களோடு தான் நரகத்திற்குச் செல்வான்.

செவ்வாய், 21 டிசம்பர், 2010

தங்கத்தை எவ்வாறு பராமரிப்பது ?



தங்கத்தை அடிக்கடி துணியால் துடைத்துக் கொள்ளலாம், பாலிஷ் செய்து கொள்ளலாம். பாலிஷ‎ýக்கு கொடுக்கும் போதும் வாங்கும் போதும் எடையை சரிபார்த்துக் கொள்ளவேண்டும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பாலிஸýக்கு கொடுத்து ஏமாந்து விடவேண்டாம்.
தங்கத்தில் (ஙங்ழ்ஸ்ரீன்ழ்ஹ்) பாதரசம் படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு பட்டுவிட்டால் தங்கம் கெட்டுவிடும். பாதரசம் பட்ட நகையை தனியாக எடுத்து பாலிஷ் செய்யும் கடையில் கொடுத்து நெருப்பில்காட்டி அதை சரிசெய்யது கொள்ளலாம்.
தங்கத்தில் கல் பதித்த நகைகள்
தங்கத்தின் கல் பதிப்பதால் அதன் விலை திரும்ப கொடுக்கும் போது மாற்றம் ஏற்படும். காரணம், நாம் நகை வாங்கும் பொழுது கல்லுடன் சேர்த்தே எடைபோட்டு தங்கத்தின் விலைக்கு கொடுக்கவேண்டும். அதாவது தங்கம் 10 கிராமும் கல் 2 கிராமும் இருந்தால் 12 கிராம் தங்கத்தின் விலையை நாம் கொடுக்கவேண்டும். ஆனால் பின்னர் திரும்ப கொடுக்கும் போது கல்லிற்கு உண்டான எடையை கழித்துவிட்டு தங்கம் எவ்வளவு எடை உள்ளதோ அதற்குதான் விலை கிடைக்கும். இது விலை உயர்ந்த கல்லாக இருந்தாலும் சரியே! வைரக்கல்லாக இருந்தால் தவிர!
வெளிநாடு, உள்ளநாடு தங்கத்தில் தரம் வித்தியாசம் உள்ளதா?
இல்லை, காரணம் வெளிநாட்டில் விற்கும் தங்கத்திலன் தரத்தை இந்தியாவிலும் கொடுக்கிறார்கள். வெளிநாடுகளிலும் (ஒரு சில நாடுகளில்) 18 கேரட், 22 கேரட், 24 கேரட் இந்த மூன்று வகையான தரம் உள்ளது. ஆகவே நாம் எந்த தரத்தை விரும்பி வாங்குகிறோமோ அதே தரமும் நமது நாட்டில் கிடைக்கிறது.
வெளிநாட்டில் எதை வாங்கினாலும் அது உயர்ந்த தரமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது தவறாகும். தங்கத்தைப் பெருத்தவரை மூன்றுவகையான தரமும் எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது. ஆகவே வெளிநாடு உள்நாடு தரத்தில் மாற்றம் கிடையாது.
ûக்கடைகளில் எவ்வாறு ஏமாற்றுகிறார்கள்?
நகை கடைகளை பொருத்தமட்டில் ஒரு நம்பிக்கைதான்! சில கடைகளில் வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால் பெரும்பாலான கடைகளில் ஏமாற்றுவதில்லை. இருப்பினும் நாம் விழிப்புடன் இருப்பது நல்லது.
வாங்கும் போதும் விற்கும் போதும் எடையை சரிபார்த்து வாங்குவது நல்லது, ஏனெனில் ஒரு கிராம் குறைந்தாலும் இன்றைய நிலவரப்படி ஏரத்தாள 700 ரூபாய் போய்விடும். எனவே எடை விசயத்தில் விழிப்புடன் இருக்கவேண்டும்.
அவர்கள் போடும் கணக்குகள் சரியாக இருக்கிறதா? என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பழைய நகையை கொடுக்கும் போது எவ்வளவு ரூபாய்க்கு எடுக்கிறார்கள்? நமக்கும் தரும் நகையின் விலை எவ்வளவு? என்பதை சரி பார்த்து வாங்க வேண்டும். நகைகள் வாங்கும் போது கேடிஎம் நகைகளை வாங்குவது சிறந்தது.
தங்கத்தில் எத்தனை வகை உள்ளது?
தங்கத்தில் இரண்டு வகை உள்ளது. ஒன்று தற்போது மக்கள் பயன்படுத்தும் தங்கம். மற்றொன்று வெள்ளை தங்கம் (ல்ப்ஹற்ண்ய்ன்ம்). இது தங்கத்தை விட விலை அதிகம். இது மக்கள் மத்தியில் உபயோகம் குறைவு. தற்போது பெரிய நகரங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் தங்கச் சுரங்கம் உள்ளதா?
இந்தியாவில் கர்நடகா மாநிலத்தில் கோலார் என்ற ஊரில் தங்கச் சுரங்கம் உள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் எங்கும் தங்க உற்பத்தி இல்லை.
அதிகமான தங்கம் எங்கு கிடைக்கிறது?
தென்ஆப்ரிக்கா நாட்டில் கிடைக்கிறது.
தங்கத்தின் விலையை நிர்ணயிருப்பவர்கள் யார்?
தங்கத்தின் விலை  உலக அளவில் லன்டனிலும் இந்தியாவில் மும்பையிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
தகவல் : எஸ்.எஸ்.யூ. அப்துல் குத்தூஸ், காரைக்கால்

திங்கள், 20 டிசம்பர், 2010

மாணவனை கற்பழித்த 10 பெண்களைக் கொண்ட



பெண்களைக் கடத்திச் சென்று கற்பழிப்பதுதான் பெரும்பாலும் நடைபெறும் சம்பவமாகும். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு அருகே உள்ள ஆப்பிரிக்க நாடான பபுவா நியு கினியாவில் உள்ள மென்டி நகரில் 17 வயதான ஒரு பள்ளி மாணவனை 10 பெண்களைக் கொண்ட கும்பல் பெண்கள் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். அந்தப் பெண்கள், தாங்கள் வைத்திருந்த சமையலறை கத்தியால், மாணவனை தாக்கினர். அவர்களில் 4 பெண்கள், அம்மாணவனை வலுக்கட்டாயமாக கற்பழித்தனர். தற்போது, அவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இது குறித்து அந்த நாட்டின் தெற்கு பிராந்திய போலீஸ் கமாண்டர் டெட்டி டெய் கூறியதாவது: கடந்த வெள்ளிக்கிழமை மென்டியில் ஒரு பள்ளி மாணவனை பெண்கள் கும்பல் ஒன்று கத்தியால் தாக்கி கடத்திச் சென்றது. ஆனால் இரவில் தனியாக போக வேண்டாம் என்று பெண்களை நானே எச்சரித்திருக்கிறேன். இனி ஆண்களையும் எச்சரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும், 4 பெண்கள் அவனுடன் பலவந்தமாக உடல் உறவு கொண்டுள்ளனர். மேலும் 6 பெண்கள், அவனை பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அவனுக்கு எய்ட்ஸ் தாக்கி விடுமோ என்று அஞ்சுகிறோம்

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

சூரி​ய மீன்


மன்னார் வளைகுடா கடல் பகுதிக்குள் எத்தனையோ விதவிதமானதும் விசித்திரமானதுமான அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் எண்ணிவிட முடியாத வகையில் நிரம்பிக் காணப்படுகின்றன. அதிசய உயிரினங்கள் நிரம்பிக் கிடக்கிற இக்கடல் பகுதியில் வசிக்கும் மற்ற மீன் வகைகளிலிருந்து வித்தியாசமான உடலமைப்புடைய சூரிய மீனின் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..""கடலுக்கடியில் வாழும் இந்த மீனினம் கடலின் மேற்பரப்பிற்கு வந்து அடிக்கடி சூரியக்குளியல் போட்டு விட்டு மீண்டும் கடலுக்கு அடியில் சென்றுவிடும் குணமுடையதாக இருப்பதால் இவ்வினத்துக்கு சூரிய மீன்கள் என்று பெயர். மோலா என்பது இதன் விலங்கியல் பெயர்.லத்தீன் மொழியில் மோலா என்றால் மைல்கல் என்று பெயர்.சாலையோரங்களில் உள்ள மைல்கல் மாதிரி இம்மீனின் மேற்புறம் வட்டமாகவும் அடியில் தட்டையாகவும் உடலமைப்புடையது. சராசரியாக 1000 கிலோ வரை எடையுள்ள இம்மீன்களின் தலை மட்டும் மற்ற மீன்களைப் போல இருந்தாலும் பக்கவாட்டில் தட்டையாகவும் வாலானது சப்பட்டையாகவும் இருக்கும். உடலின் அகலத்தைவிட இதன் வால்துடுப்பு நீளமானதாகவும் செவுள் துடுப்பு ஒரு விசிறி வடிவத்திலும் இருக்கிறது. இதன் எலும்புகள் மிகவும் லேசான திசுக்களாக இருப்பதால் விரைவாக வளர்ந்து அதிவேக வளர்ச்சியும் அடைகின்றன. இதன் முதுகுத் துடுப்பு மட்டுமே சுமார் 9 அடி வரை நீளமுடையதாக இருக்கிறது. வால்துடுப்புகள் இரண்டும் பெரியதாகவும் நீளமானதாகவும் இருந்தாலும் உண்மையில் இம்மீனுக்கு வால் இல்லை. வால் துடுப்பில் ஏற்படும் ஒரு உந்துதல்தான் ஒரு படகு போல இம்மீன் நகர்ந்து செல்லவும் நீந்தவும் உதவுகிறது. இச்செயல் மற்ற மீன்களின் நீந்தும் ஸ்டைலிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.இம்மீனின் மேல்புறம் அடர்த்தியாகவும் அடிப்புறம் வெளிறிய நிறத்திலும் இருப்பதால் இதன் நிறமே இவற்றை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கிறது. சுறா, திமிங்கிலம் மற்றும் கடல் சிங்கம் போன்றவை இதன் எதிரிகளாக உள்ளன. இம்மீனின் செவுள்கள் மீன்பிடி வலைகளில் மாட்டிக் கொண்டும் உயிரிழக்கின்றன. மேலைநாடுகளில் இவற்றைக் கொன்று சுவையான உணவாக ஆக்கி விடுவதால் இவ்வினம் அழிந்து விடக்கூடாது என கொரியா,ஜப்பான், தைவான் போன்ற நாடுகள் இவற்றைப் பிடிக்கத் தடை விதித்துள்ளன.கடலில் வசிக்கும் ஜெல்லி மீன்கள் இவற்றின் விருப்ப உணவாக இருப்பதால் ஒரே நேரத்தில் அதிகமான ஜெல்லி மீன்களை சுவாகா செய்து விடும். இம்மீனின் மேற்புறத்தில் 40 விதமான ஒட்டுண்ணிகள் தோலில் ஒட்டிக் கொண்டு உயிர் வாழ்கின்றன. கடலில் நீந்திக் கொண்டே பவளப் பாறைகள் உள்ள பகுதிகளுக்குள் சென்று தன் உடலில் ஒட்டியுள்ள ஒட்டுண்ணிகளை அங்கு வசிக்கும் ராஸ் என்ற மீன்களிடம் காட்டிக் கொடுத்து அவை அவற்றைப்பிடித்து தின்ன உதவுகின்றன. கடலின் மேற்புறத்தில் வந்து மிதக்கும் போதும் கடல்பறவைகள் அந்த ஒட்டுண்ணிகளைக் கொத்தித் தின்னவும் உதவுகின்றன. எப்போதும் தனித்து வாழவே விரும்பும் சூரிய மீன்கள் தனது உடலில் ஒட்டிக் கொள்ளும் ஒட்டுண்ணிகளை நீக்குவதற்காக மட்டுமே கூட்டம், கூட்டமாக பவளப்பாறைகள் உள்ள பகுதிகளுக்குள் வந்து விடுகின்றன.பெண் மீன் ஒரே நேரத்தில் 300 மில்லியன் முட்டைகள் வரை இடும். அதே நேரத்தில் ஆண் மீன் தனது விந்தணுக்களை வெளியேற்ற, இரண்டும் ஒன்றாக சேர்ந்து கருவுறுதல் நடந்து குஞ்சுகளாக மாறுகின்றன. குஞ்சுகளாக இருக்கும்போது இதன் வால்துடுப்பு பெரிதாகவும் உடல் உருண்டையாகவும் பலூன் போல இருந்து பெரிய மீனாக வந்தவுடன் வால்துடுப்பு மறைந்து உடம்பு தட்டையாகிவிடுகிறது. ஜப்பான், ஸ்பெயின், போர்ச்சுக்கல் போன்ற பல நாடுகளில் உள்ள கடல் மீன் கண்காட்சியகங்களில் மிகச்சிறந்த பொழுது போக்கு மீனாகவும் இருக்கிறது. கடலுக்குள் நீந்தி ஆராய்ச்சி செய்யும் ஸ்கூபா டைவர்களிடம் அன்போடும் பாசத்தோடும் பழகக் கூடியது. இவற்றோடு விளையாடுவதற்காகவே சிலர் கடலுக்கடியில் செல்வதும் உண்டு'' என்றார்

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites