அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

ஞாயிறு, 6 ஜூன், 2010

நுரையீரல்களில் என்ன நடக்கிறது?

நுரையீரல் என்பது உயிரினங்கள் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் ஒரு முக்கிய உறுப்பாகும். மூச்சுக் காற்றை இழுத்து விடுதலுக்கு மூசுதல் என்று பெயர். வாயுப்பறிமாற்றம் இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதும், வேறு சில வேதிப்பொருட்களை செயலிழக்க செய்வதும் இதன் பணியாகும்.நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதற்கும் கார்பன்-டை-ஆக்சைடு வளிமத்தை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.

மருத்துவத்தில் பயன்படும் நுரையீரல் தொடர்பான இலத்தீன் அடிப்படைச் சொல் பல்மோ- (pulmo-) என்னும் முன்னொட்டு கொண்டிருக்கும். இது இலத்தீன் மொழிச்சொல்லாகிய பல்மொனாரியசு (pulmonarius = "நுரையீரல் தொடர்பான") என்னும் பொருளடியான சொல்லில் இருந்து பெற்றது. இன்னுமொரு பொதுவான மருத்துவக் கலைச்சொல் கிரேக்கமொழிச் சொல்லில் இருந்து பெற்ற நியுமோ- (pneumo-) என்னும் முன்னொட்டு கொண்டிருக்கும். இச்சொல் நுரையீரலைக் குறிக்கும் ப்நியுமோன் ((πνεύμων) என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து பெற்றது.


மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, காற்றுக் குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. காற்றுக்குழாய் மார்புப்பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes)இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் மூச்சுக் கிளைக் குழாய்கள் (பிரான்கியல் குழாய்கள்) பல நுண் கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்றறைகள் ஆகியஅல்வியோல் எனப்படும் காற்றுப்பைகளில் (நுண்வளிப்பைகளில்) முடிவுறும். அல்வியோலை எனப்படும் இவ் நுண்காற்றுப்பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டவை. இதில் பல நுண்ணிய இரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமனி மூலமாக வந்த கார்பன்-டை-ஆக்சைடு நிறைந்த இரத்தத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றி, புதிய ஆக்சிசனை ஏற்றுக்கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது. இந்த நுண்வளிப்பைகளில்தான் வளிமப் பரிமாற்றம் நிகழ்கின்றது. நுண்காற்றறைகள் (ஆல்வியோலை) சுருங்கி விரிதலையும் சில நோய்களால் நுரையீரல் பாதிக்கப்படும் போது எப்படி சுருங்கி விரியும்.

பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக்குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற, நாம் அறியாமலே அவற்றை விழுங்கிவிடுகிறோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கினுள்ளே உள்ள மயிர் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் முதலானவற்றால் வெளியேறிவிடும்

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites