அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 7 ஜூன், 2010

மறுமையில் நஷ்டவாளி யார் part - 4

 
 (9) பெருமையடிக்கும் ஏழை

பொதுவாக தற்பெருமை கொள்வதற்கு காரணமாக அமைவது செல்வாக்குத் தான். அந்த செல்வாக்கு இல்லாத ஏழை தற்பெருமை கொள்கின்றான் என்றால் அவன் வரட்டு கௌரவம் கொள்கின்றான் என்றே சொல்லப்படும். ஆக சந்தர்ப்ப சூழ்நிலையைக் கூட காரணம் காட்டமுடியாக இவன் இப்பாவத்தில் ஈடுபடுவதற்கு காரணம் அல்லாஹ்வுடைய விஷயத்தில் அவனுடைய அலட்சியப் போக்குத்தான். எனவே இவன் மீதும் அல்லாஹ் கோபம் கொள்கிறான்.

மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்களில் ஓருவன்) விபச்சாரம் செய்யும் கிழவன். (மற்றொருவன்) பொய் கூறும் அரசன். (மற்றொருவன்) பெருமையடிக்கும் ஏழை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)

நூல் : (முஸ்லிம் : 172)

பெறுமை கொள்வதற்குரிய தண்டனைகளை கணுக்காலுக்கு கீழே ஆடையை தொங்விடுபவன் என்ற தலைப்பிற்குள் விரிவாகப் பார்த்துவிட்டோம். ஓரு முஃமின் சொர்க்கத்தில் நுழைவதற்கு பெருமை மாபெரும் தடைக்கல்லாக நிற்கிறது.

யார் பெறுமை மற்றும் மோசடி மற்றும் கடன் ஆகியவற்றை விட்டு நீங்கியவராக மரணிக்கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : சவ்பான் (ரலி)

நூல் : (திர்மிதி : 1497)

(10) பெற்றோர்களை விட்டு ஓதுங்கியவன்

மனிதநேயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இக்காலகட்டத்தில் முதியோர் இல்லங்கள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. மிருகங்களிடத்தில் காட்டும் அன்பையும் பாசத்தையும் தன்னைப் பெற்றெடுத்த பெற்றோரிடத்தில் யாரும் காட்டுவதில்லை. உரிமை பரிக்கப்படும் போது ஓங்கி எழும் குரல்கள் பெற்றோர்களின் உரிமை பரிக்கப்படும் போது ஓய்ந்துவிடுகின்றன.

                தன்னை எவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் வளர்த்திருப்பார்கள் என்று பிள்ளைகள் நினைத்துப்பார்ப்பதில்லை. மனிதன் தனக்கு திருமணம் ஆகாத வரைக்கும் பெற்றோரை கவனிக்கின்றான். அவனுக்கு ஓரு துணை வந்துவிட்டால் பெற்றோர்களை மறந்துவிடுகின்றான். மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்றவன் தாய் தந்தையை அனாதையாக தவிக்க விட்டுவிடுகிறான். இந்த மாபெரும் பாவச்செயலில் ஈடுபடுவோரை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். அவர்களிடத்தில் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான்.

                அல்லாஹ்விற்கு சில அடியார்கள் உண்டு. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான் என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார் என்று கேட்கப்பட்டது. (அதற்கு) நபி (ஸல்) அவர்கள் (ஓருவன்) தனது பெற்றோரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன். (மற்றொருவன்) தனது பிள்ளையை விட்டு விலகியவன். (மற்றொருவன்) ஓரு கூட்டம் அவனுக்கு உதவி செய்தது. அவன் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி மறந்து அவர்களை விட்டும் விலகியவன் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் :முஆத் பின் அனஸ் (ரலி)

நூல் : (அஹ்மத் : 15083)

(11) தன் பிள்ளையை விட்டு விலகியவன்

சிலர் பெற்றெடுப்பது மட்டும் தான் கடமை என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளை ஓழுக்கமாக பண்புடன் வளர்க்கத் தவறிவிடுகிறார்ள். அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை கூட நிறைவேற்றாமல் அநாதையாக விட்டுவிடுகிறார்கள். இதனால் அவர்கள் சமுதாயத்தில் தீயவர்களாக வளர்கிறார்கள். பெற்றோரின் பாசம் இல்லாத காரணத்தினால் முரடர்களாக மாறுகிறார்கள். இது போன்ற காரணங்களால் அல்லாஹ் தன்  பிள்ளைக்கு செய்ய வேண்டிய  கடமைகனள நிறைவேற்றாமல் விலகியவனுக்கு இந்த தண்டனையைத் தருகின்றான்.

அல்லாஹ்விற்கு சில அடியார்கள் உண்டு. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான் என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார் என்று கேட்கப்பட்டது. (அதற்கு) நபி (ஸல்) அவர்கள் (ஓருவன்) தனது பெற்றோரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன். (மற்றொருவன்) தனது பிள்ளையை விட்டு விலகியவன். (மற்றொருவன்) ஓரு கூட்டம் அவனுக்கு உதவி செய்தது. அவன் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி மறந்து அவர்களை விட்டும் விலகியவன் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : முஆத் பின் அனஸ் (ரலி)

நூல் : (அஹ்மத் : 15083)

                மனிதன் இறந்ததற்குப் பின்னாலும் அவனுக்கு நன்மையை ஈட்டித்தரக்கூடியதாக  அவனால் நல்ல முறையில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆகும். இவனது பிள்ளைகள் இவனுக்காக பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் இறந்துவிட்ட இவனுக்கு நன்மை கிடைத்துக்கொண்டே இருக்கும்.

                மனிதன் இறந்துவிட்டால் மூன்றைத் தவிர அவனுடைய நல்ல செயல்பாடுக்ள் முடிவுபெற்றுவிடுகின்றன். (ஓன்று) நிலையான சொர்க்கம் (மற்றொன்று) பிரயோஜனமிக்க கல்வி (மற்றொன்று) அவனுக்காக பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)

நூல் : (முஸ்லிம் : 3084)





(12) நன்றி மறப்பவன்

                ஓருவன் தன்னைப் போன்ற ஓருவனுக்கு செய்யும் தீமைகளில் நன்றி மறப்பதும் ஓன்றாகும்.இக்குற்றத்தை செய்வோரிடமும் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்.

                அல்லாஹ்விற்கு சில அடியார்கள் உண்டு. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான் என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார் என்று கேட்கப்பட்டது. (அதற்கு) நபி (ஸல்) அவர்கள் (ஓருவன்) தனது பெற்றோரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன். (மற்றொருவன்) தனது பிள்ளையை விட்டு விலகியவன். (மற்றொருவன்) ஓரு கூட்டம் அவனுக்கு உதவி செய்தது. அவன் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி மறந்து அவர்களை விட்டும் விலகியவன் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : முஆத் பின் அனஸ் (ரலி)

நூல் : (அஹ்மத் : 15083)

பிறர் செய்த உதவியை எண்ணிப் பார்க்காமல் நன்றிகெட்டு நடப்பவர் அல்லாஹ்வுக்கு எவ்வுளவுதான் நன்றி செலுத்தினாலும் உதவிசெய்தவருக்கு நன்றி செலுத்தும் வரை அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவராக ஆகமுடியாது. இதையே பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.

                மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவனாக ஆகமாட்டான்.

அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)

நூல் : (திர்மிதி : 1877)

                தனக்கு உதவியவருக்கு நன்றி செலுத்தும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகாக விளக்கியுள்ளார்கள்.

                (உங்களில்) ஓருவருக்கு நன்மை செய்யப்பட்டு அவர் அந்நன்மை செய்தவருக்கு جَزَاكَ اللَّهُ خَيْرًا  (அல்லாஹ் உங்களுக்கு நன்மையை கூலியாக வழங்குவானாக) என்று கூறினால் அவர் அதிகமாக நன்றி செலுத்தியவராகிவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல் : (திர்மிதி : 1958)

                அதாவது நீங்கள் எனக்கு செய்த உதவிக்கு பிரதி உபகாரம் என்னால் செய்ய முடியாது. இதற்கான கூலியை என்னால் வழங்க முடியாது. அல்லாஹ்வே இதற்கு உங்களுக்கு கூலி தருவான் என்பது இந்த ஹதீஸின் பொருளாகும்.

                நமக்கு உதவி செய்தவருக்கு பதிலாக நாம் நன்றி செலுத்தும் முகமாக நாம் அவருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

                உங்களுக்கு யாரேனும் நன்மை செய்தால் அவருக்கு பிரதி உபகாரமாக எதையாவது கொடுங்கள். பிரதி உதவி செய்வதற்கு உங்களிடத்தில் எதுவும் இல்லையென்றால் நீங்கள் அவருக்கு பரிகாரம் செய்துவிட்டதாக எண்ணும் வரை அவருக்காக துஆ செய்யங்கள் என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் இப்னு உமர்

நூல் : (அஹ்மத் : 5110)

நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்று அதற்கு (பதிலாக எதையாவது கொடுத்து) ஈடுசெய்து வந்தார்கள்.



அறிவிப்பாளர் :ஆயிஷா (ரலி) அவர்கள்

நூல் : (புகாரி : 2585)

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites