அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 24 டிசம்பர், 2010

வெள்ளமும் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்




சமீபத்தில் விடிய விடிய கொட்டிய பெரும் மழையாலும் புயல் காரணத்தாலும் தமிழகம் பெரும் இழப்புக்கு உள்ளாகியுள்ளது. உயிர் சேதம் உட்பட உடமை சேதம் என பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
பலகுளங்கள், ஏரிகள் நிரம்பி உடைப்பு ஏற்பட்டு பல கிரமங்கள் நீரில் முழ்கியுள்ளன. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பல பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டதுடன் பல உயிர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தளவுக்கு பேரழிப்புக்கு  ஏற்பட்டதற்கு காரணம் நாமே! நமது அரசே! மழை பொழிந்த அளவு ஏதோ அதிகம் என்று கூறுவது சரியல்ல! சரியான அளவுவில்தான் மழை பொழிந்துள்ளது.
ஏரிகள்,குளங்கள், கால்வாய்கள் தூர் வாரப்படாததால்தான் தண்ணீர் வெளியே சென்றது. ஒவ்வொரு வருடமும் குளங்களும் ஏரிகளும் கால்வாய்களும் தூர் வாரி ஆழப்படுத்திருக்கவேண்டும். ஆனால் அதை தமிழக அரசு ஒழுங்காக செய்யாததால் குளம்,ஏரிகளின் ஆழம் குறைந்து குறைந்தளவு நீரையே அவை உட்கொள்ள முடிந்தது. எனவே மீதியை வெளியே அனுப்பி ஊர்களை வெள்ளக்காடாக்கியுள்ளது. இது அரசின் தவறா? மழையின் தவறா?
தமிழகத்தில் சுமார் 37000 ஏரிகள்/குளங்கள் இருந்ததாகவும் தற்போது 17000 ஏரிகள் மட்டுமே உள்ளதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. இந்த தகவலின் அடிப்படையில் 20000 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய்விட்டது. இந்த இருபதாயிரம் ஏரிகள்/குளங்கள் இருந்திருந்தால் தண்ணீர் வெளியே வந்திருக்குமா?
இந்த இருபதாயிரம் ஏரிகள்/குளங்கள் காணாமல் எங்கே போயின? ஏரிகளும் குளங்களும் ஆகிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டுப்பட்டுள்ளன. இதற்கு அனுமதி அளித்தளித்தது அரசு அதிகாரிகள் இல்லையா? இந்த அனுமதிதான் இன்று தமிழகத்தை வெள்ளக்காடமாற்றியுள்ளது. குளங்களிலும் ஏரிகளிலும் வீடுகளை கட்டிவிட்டு, தண்ணீர் வீட்டுக்குள் வந்தவுடன் குறை சொல்வதும் எந்தவிதத்திலும் நியாயம் இல்லை.
ஆறுகள் ஓரங்கள் அனைத்திலும் ஆக்கிரமிப்புகள் நிறைந்ததாலும் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் சாலைகளில் தண்ணீர் பெருக்கடுத்து ஓடி சாலைகளை இல்லாமல் ஆக்கியுள்ளது. இவை அனைத்திற்கும் ஆக்கிரமிப்புகளை களையெடுக்காத அரசுதான் முக்கிய காரணம். இதனால் பலகோடி ரூபாய் இழப்புடன் மக்களும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மழையின் காரணத்தினால் பல பாலங்கள் அடித்துச் சொல்வதற்கு பிரதான காரணமாக இருந்தது மழை மட்டுமல்ல! தரமற்ற பாலங்கள்தான்! சில வருடங்களுக்கு முன்னர் கட்ட பாலங்கள் கூட உடைந்துள்ளது. பாலங்கள் கட்டுவதில் நடக்கும் ஊழல்கள். அரசியல் தலையீடுகள் மக்களின் உயிர்களை பதம் பார்த்துள்ளது.
மேலும் பல தரைபாலங்கள் தரமற்றதாக இருந்ததாலும் சுற்று கம்பிகள் இல்லாததாலும் பல பேருந்துகள் வெள்ளத்தில் இழத்துச் செல்லப்பட்டு பலர் காணாமல் போய் உள்ளன,
இது போன்று பெரும் வெள்ளம் வந்துள்ள இந்த சூழ்நிலையில்...
குளங்கள்/ ஏரிகள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்த வேண்டும்
ஏரிகள் / ஆறுகளின் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றபடவேண்டும்.
குளங்கள்/ஏரிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகள் அகற்றப்பட்டு மீண்டும் அவைகள் குளங்களாக / ஏரிகளாக மாற்றபட வேண்டும்.
குளங்கள்/ஏரிகளில் வீடுகள் கட்ட அனுமதியளித்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலங்கள் தரமானதாக கட்டப்படவேண்டும். தரைப்பாலங்கள் நீக்கப்பட்டு தண்ணீர் வரும்போதும் வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் பாலங்கள் கட்டபடவேண்டும்.
இந்த யோசனைகளை தற்போது கடைபிடித்தால் பெரும் பொருள், உயிர் சேதங்களை வருங்காலத்தில் தவிர்க்கலாம்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites