அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 2 பிப்ரவரி, 2011

மிதக்கும் பனி மலை


பலரும் டைட்டானிக் என்னும் ஆங்கிலப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார்கள். டைட்டானிக் என்பது ஒரு கப்பலின் பெயர். சுமார் 2000 பேரை ஏற்றிக் கொண்டு இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்த அக்கப்பல் மீது மிதக்கும் பனி மலை மோதியதால் அக்கப்பல் மூழ்கி விட்டது. 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இரவு அக்கப்பலுக்கு இக்கதி ஏற்பட்டது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது அந்த சினிமாப் படம்.
அக்கால கட்டத்தில் டைட்டானிக் மிகப் பெரிய சொகுசுக் கப்பலாகக் கருதப்பட்டது. அது மூழ்கவே மூழ்காத கப்பல் என அப்போது பெருமையாகப் பேசப்பட்டது. ஆகவே ஆபத்து ஏற்பட்டால் தப்புவதற்கான உயிர் காக்கும் படகுகள் அவ்வளவாகத் தேவையில்லை என்று கருதி 20 படகுகளே அக்கப்பலில் எடுத்துச் செல்லப்பட்டன.
போதுமான எண்ணிக்கையில் உயிர் காப்புப் படகுகள் எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் உயிர் சேதம் அதிகமாக இருந்திராது. அக்கப்பல் மூழ்கியதில் 1523 பேர் உயிரிழந்தனர். 705 பேர் உயிர் தப்பினர்.
மிதக்கும் பனி மலை (ஒஸ்ரீங் க்ஷங்ழ்ஞ்) என்பது மிதக்கும் பனிக்கட்டியாகும். பொதுவில் அவை பல கிலோ மீட்டர் நீள அகலம் கொண்டவை. மிதக்கும் பனி மலைகள் வடிவில் பிரம்மாண்டமானவை. எனினும் கடலில் மிதக்கும் ஒரு பனிமலையின் உண்மை வடிவம் கண்ணில் தென்படாது.
ஏனெனில் ஒரு பனிமலையின் எட்டில் ஒரு பங்கு தான் வெளியே தெரியும். பனி மலையின் பெரும் பகுதி நீருக்குள் இருக்கும். பனிக்கட்டி நீரில் மிதப்பதில் பெரிய வியப்பு ஏதும் இல்லை. ஐஸ் கட்டி நீரில் மிதப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
மிதக்கும் பனி மலைகள் உலகின் கடல்களில் எல்லா இடங்களிலும் தென்படுவது கிடையாது. வடதுருவத்துக்குத் தெற்கே அதாவது அட்லாண்டிக் கடலின் வட பகுதியில் மிதக்கும் பனி மலைகள் சர்வ சாதாரணமாகக் காணலாம்.
அதே போல் தென் துருவத்துக்கு வடக்கே அதாவது இந்துமாக்கடலின் தென்கோடியிலும் காண முடியும். எனினும் வட அட்லாண்டிக் கடலில் தான் பனி மலை ஆபத்து அதிகம். அக்கடல் பகுதி தான் அமெரிக்கா, ஐரோப்பா இடையே கப்பல் போக்குவரத்து மிகுந்ததாகும்.
வட துருவப் பகுதியிலும் தென் துருவப் பகுதியிலும் பனி மழை பெய்வதன் விளைவாகப் பனிக்கட்டி சேர்ந்து கொண்டே போகிறது. காலப்போக்கில் பனிப்பாறைகளின் விளிம்புகளில் பெரிய பெரிய பனிப்பாளங்கள் உடைந்து கடலில் விழும். பிறகு இவை கடலில் மிதக்க ஆரம்பிக்கும்.
கடலில் உள்ள நீரோட்டம் காரணமாகவும் காற்று வீசுவதாலும் அவை மிதந்த படி நகர ஆரம்பிக்கும். உதாரணமாக கிரீன்லாந்தின் கரையோரத்தில் இவ்விதம் கடலில் விழும் இடங்களில் கடும் குளிர் நிலவும் என்பதால் இவை உருகுவதில்லை.
அட்லாண்டிக் கடலில் இவை தெற்கு நோக்கி நகரும் போது குளிர் குறைந்த கடல் பகுதிகளுக்கு வர ஆரம்பிக்கின்றன. ஒரு கட்டத்தில் இவற்றின் மீது படுகின்ற வெயில் காரணமாக உருக ஆரம்பிக்கும். இறுதியில் பனி மலை முற்றிலுமாக உருகி அழிந்து விடுவது உண்டு.
மிதக்கும் பனி மலைகளால் கப்பலுக்கு ஆபத்து. பனிமலை கப்பலில் மோதினாலும் சரி. பனிமலை மீது கப்பல் மோதினாலும் சரி. உடைவது கப்பலேயாகும்.
இப்போதெல்லாம் எல்லாக் கப்பல்களிலும் ராடர் கருவிகள் உண்டு. ஆகவே பனிமலை தொலைவில் இருக்கும் போதே ராடர் கருவியின் திரையில் பனிமலை தெரிந்து விடும். ஆகவே கப்பல்கள் உஷாராகி பத்திரமாக வேறு திசையில் செல்ல ஆரம்பிக்கும்.
இது தவிர அட்லாண்டிக் கடலில் பனிமலைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்துத் தகவல் தெரிவிக்க பல்வேறு வகையான ஏற்பாடுகள் உள்ளன. எங்கெங்கு பனிமலைகள் மிதக்கின்றன என்பதைக் கண்டறிய விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நன்றி: தினமணி நாளிதழ்

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites