அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

தோல்விகளை துரத்த


யாருடைய வாழ்க்கையும் ஒரே சீராக நடை பெறுவதி ல்லை. ஒரு நடைபாதைபோல, மேடு பள்ளங்கள், வளைவு நெளிவுகள் வரவே செய்யும். வெற்றி தோல்விகள் என்பவை மனித வாழ்வில் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவையே. ஒரு அடியாக வெற்றியோ அல்லது வாழ்க்கை முழுவதும் தோல்வியோ நேர்வதில்லை.
தோல்விகள் என்பவை தற்காலிக மானவையா
வாழ்க்கையின் முடிந்த குறிக்கோள் வெற்றி பெறுவது தான்  (Success is the Law of life) எத்தனை தோல்விகள் வந்தாலும் இறுதி முடிவு வெற்றிதான் என்பதில் அசைக்க முடியாத தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.
தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?
தோல்வி வந்ததும் சோர்ந்துவிடாமல், துன்பத்தில் ஆழ்ந்துவிடாமல், சமநிலையை இழக்காமல் இருப்பதுதான் முதல் கடமையாகும். பின்னர் குறிப்பிட்ட இந்தத் தோல்வி ஏன் வந்தது? எதனால் வந்தது? என்று ஆராய்ந்து காரணம் கண்டறிந்து செயல்பட வேண்டும்.
1. நாம் எடுத்துக்கொண்ட செயலில் போதிய அறிவு அல்லது அனுவம் இல்லாமை.
2. ஒரே நாளில் ஒரே முறையில் செய்து முடித்துவிட வேண்டும். ஏராளமாக சேர்த்துவிட வேண்டும் என்ற பேராசை, பதட்டம்
3. கால இடைவெளி விட்டு செய்ய வேண்டிய பல செயல் களை, அவசர அவசரமாகச் செய்வதால் ஏற்படும் விளைவு.
4. போதிய முதலீடு இல்லாமல் அகலக் கால் வைப்பது பின்னர் பாதியில் செயல்கள் நின்று போவதால் ஏற்படும் சிக்கல்கள்.
5. நமது பழக்க வழக்கங்களும், சமூகத்தில் நாம் நடந்து கொள்கின்ற விதமும் இதமாக இல்லாமை.
6. எதற்கெடுத்தாலும் கோபப்படுவது, எடுத்தெறிந்து பேசுவது, உண்மையாக நடந்துகொள்ளாமை போன்ற சில தனி மனிதக் குறைபாடுகள்.
7. நாம் எடுத்துக்கொண்ட செயலில் இலாபத்தை மட்டுமே பெரிதாக எதிர்பார்த்து. அதற்கேற்றாற் போல் உண்மையாக உழைக் காமை.
8. வெற்று வார்த்தைகளால் வீரம்பேசி நம்மைச் சுற்றி உள்ளவர்களின் எதிர்ப்புக்களை வளர்த்துக் கொண்டது. நம்மைச் சுற்றி உள்ளவர்களின் எதிர் ப்புக்களை வளர்த்துக் கொண்டது.
9. நம்முடைய திறமையும், நாம் எடுத்துக் கொண்ட செயலும் இணைந்து போகாமை.
10. ஒன்றைத் தொடங்கும்போது சிறப்புக் காரணங்கள் தோல்வி ஏற்பட அடிப்படையானவை என்று கருதலாம்.
இவை போன்ற பொது, சிறப்புக் காரணங்கள் தோல்வி ஏற்பட அடிப்படையானவை என்று கருதலாம்.
நமது பங்கு என்ன?
எந்தத் தோல்வியாக இருந்தாலும் முதலில் நம்மை முன்னிறுத்தி, இதற்கு நாம் எந்தெந்த வகையில் காரணமாய் இருக்கிறோம் என்று கண்டறிய வேண்டு. மிகவும் நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால்.
பெரும்பான்மையான தோல்விகளுக்கு அவரவர்களே அடிப்படைக் காரணமாக இருப்பது நன்கு தெரியவரும். அதைக் கண்டுணர்ந்து எப்படிச் செய்திருந்தால் சரியாக நடந்திருக்கும், வெற்றியாக முடிந்திருக்கும் என்று எண்ணி மீண்டும் செயல்பட வேண்டு.
காரணத்திற்குப் பின்னர் இனி எப்படிச் செய்ய வேண்டும் என்ற செயல் திட்டமே  (Action Plan)  முதன்மையாக இருக்க வேண்டுமே ஒழிய, தோல்வி வந்துவிட்டதே என்று அதையே எண்ணிக் கொண்டிருப்பதில் பயனே இல்லை.
தோல்வி வந்ததும் உடனே தொழிலை மாற்றுவது என்பது சாதனையாளர்கள் செயல் அல்ல. நின்று நிதானித்து அடுத்த முறை எச்சரிக்கையாக நம் சக்திக்கு ஏற்ற அளவில் தெளிவான நோக்கோட்டில் (Definite Aim) செயல்பட வேண்டுமே ஒழிய, தொழிலை மாற்றிக்கொண்டே இருந்தால் எதிலும் அனுபவம் இல்லாமல் பல்வேறு தோல்விகளைச் சுமக்க வேண்டிவரும். வாழ்க்கையே தோல்வியாக முடிந்துவிடும்.
தோல்வியே வெற்றிக்காகத்தான்
தோல்வி கண்டவர்கள் முன்னிலும் மேலாக, கடின உழைப்பை மேற்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் கூர்ந்து பார்த்தால் அறிந்துகொள்ளலாம்.
தோல்வி பலருக்கு வீரத்தையும் வேகத்தையும் தரும் நிகழ்ச்சியாக அமைந்து விடுவது என்பதுதான் சரியான உண்மை. முன்னேறத் துடிப்பவர்கள் தோல்வியா நேர்ந்து விட்டது? விட்டேனா பார் வெற்றி பெற்றே தீருவேன் என்று சவால்விட்டு (Challange)  மும்மடங்கு வேகத்தோடு செயல்படத் தொடங்குகின்றார்கள். 24 மணி நேரமும் அதே நோக்கில் செயல்படுகிறார்கள்.
தூக்கத்தில் கூட அவர்களது ஆழ்மனம் தங்கள் செயலைப் பற்றியே சிந்திக்கின்றது- அதனால், அடுத்தடுத்து அவர்களுக்கு வெற்றிகள் குவிகின்றன.
உண்மையைச் சொல்லப்போனால், இன்றைய சாதனையாளர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் எல்லாம், பெரிய தோல்விக்குப் பிறகே, புதிய வேகம் கொண்டு அரிய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள். அதனால் உங்களுக்குத் தோல்வி நேர்ந்துவிட்டதா? இந்தத் தோல்வி தற்காலிகமானது கவலைப்படாதீர்கள்.
முதலில் உங்கள் பேச்சைக் குறையுங்கள். வேண்டாத விவாதங்களில் இறங்கி உங்கள் ஆற்றலை சிதற அடிக்காதீர்கள், அமைதியாக செயலில் இறங்குங்கள். நீங்கள் வெற்றியை நெருங்கிக்கொண்டு இருக்கிaர்கள் என்று பொருள் விழுவதே எழுவதற்குத்தான். உங்கள் முதுகை நீங்கள் தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள்.
தோல்விகள் தற்காலிகமானவையே
ஒன்று நடக்கவில்லையாயின் உடனே சோர்ந்துவிடக் கூடாது. அடிப்படை நியாயத்திலிருந்து ஒதுங்கிவிடக் கூடாது. உலகமே அநியாயத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது என்று எண்ணிவிடக் கூடாது. உங்கள் தோல்விகள் எல்லாம் தற்காலிகமானவை தாம் என்பதை அறிந்துகொண்டு உரிய காலத்தில் தோல்வியை முறியடிக்க வேண்டும். அது உங்களால் முடிவும்.
எறும்பைப் பாருங்கள்
ஓர் எறும்பைப் பாருங்கள், அதற்கு என்ன பெரிய எதிர்காலம் இருந்துவிட முடியும்? இருந்தாலும் அது சும்மா இருக்கிறாதா? நீங்கள் அதன் வழியைத் தடைப்படுத்தினால் அது அடுத்த வழியை அமைத்துக்கொள்கிறது. புதிய வழியில் தன் பயணத்தைத் தொடர்கின்றது. தோல்வியே இல்லாத பயணம் நமக்கு மட்டுமென்ன வழியா இல்லை? ஆயிரம் வழிகள், எறும்பைப் பாருங்கள்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites