1. கேள்வி : குர்ஆனில் பெயர் கூறப்பட்ட நபித் தோழர் யார் ?
பதில் : ஸைத் (ரலி) (அல்குர்ஆன் 33 : 37)
2. கேள்வி : நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தை பெயர் என்ன?
பதில் : ஆஸர் (அல்குர்ஆன் 6 : 74)
3. கேள்வி :நபி நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் இருந்த சிலைகளின் பெயர் என்ன?
பதில் : வத்து, ஸுவாவு, யகூஸ், யவூக், நஸ்ர் (அல்குர்ஆன் 71 : 23)
4. கேள்வி : நபி யூனுஸ் அவர்கள் அனுப்பப்பட்ட மக்களின் தொகை எவ்வளவு?
பதில் : ஒரு இலட்சம் அல்லது அதற்கு மேல் (அல்குர்ஆன் 37 : 147)
5. கேள்வி : மக்காவின் முந்தைய பெயர் என்ன?
பதில் : பக்கா (அல்குர்ஆன் 3 : 96)
6. கேள்வி : ஸிஹ்ர் கலையை மக்களுக்கு கற்றுக் கொடுத்தவர்கள் யார்?
பதில் : ஹாரூத் மாரூத் (அல்குர்ஆன் 2 : 102)
7. கேள்வி : தாவூத் நபிக்கு வழங்கப்பட்ட வேதத்தின் பெயர் என்ன?
பதில் : ஸபூர் (அல்குர்ஆன் 4 : 163)
8. கேள்வி : மறுமை நாள் ஏற்படும் போது எத்தனை சூர் ஊதப்படும் ? எதற்காக ?
பதில் : இரண்டு சூர் ஊதப்படும், முதல் சூர் உலகம் அழிக்கபடுவதற்கும் இரண்டாம் சூர் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதற்கும்.(அல்குர்ஆன் 69:13-16, 36 :51)
9. கேள்வி : இப்லீஸ் எந்த இனத்தை சார்ந்தவன்?
பதில் : ஜின் (அல்குர்ஆன் 18 : 50)
10. கேள்வி :மூஸா நபியின் கூட்டத்தினருக்கு வானிலிருந்து வந்த உணவின் பெயர் என்ன ?
பதில் : மன்னு, ஸல்வா (அல்குர்ஆன் 2 : 57)
அலி → ஹுஸைன் → ஸைனுல் ஆப்தீன் → ஸெய்த்.இதில் ஸெய்த் அவர்களை பின்பற்றுபவர்களே ஸெய்திக்கள் எனஅழைக்கப்படுகின்றனர். ஸெய்த் அவர்கள் ஹிஜ்ரி 80 ல் பிறந்தார். ஹிஜ்ரி 122 ல் கொல்லப்பட்டார். இவரிடம் மிதவாத சிந்தனைப் போக்குக் காணப்பட்டது. அதனால்மக்களால் நேசிக்கப்பட்டார். அறிவு ஆற்றல் ஆளுமை நற்பண்புகள்என்பனவுடையவராகத் திகழ்ந்தார்.
இமாம் ஹஸனுல் பஸரியின் மாணவனான இவர் முஃதஸிலா இயக்க ஸ்தாபக முன்னோடியானவாஸில் பின் அதா அபூ ஹனீபா போன்றோரிடமும் கற்றுள்ளார். இதனால் இக்குழுவினர்அடிப்படை விடயங்களில் முஃதஸிலாக் கொள்கையுடையோராகவும் கிளை விடயங்களில்ஹனபிய்யாக்களாகவும் கருதப்படுகின்றனர்.
ஸெய்த் அவர்கள் உமைய்யா ஆட்சியை எதிர்த்து மேற்கொண்ட போரில் கொலைசெய்யப்பட்டார். இக்கொலை கர்பலாவில் ஹுஸைன் (ரழி) அவர்களது கொலைஏற்படுத்திய தாக்கத்தைப் போன்ற மிகப் பெரும் அனுதாப உணர்வலைகளை ஏற்படுத்திஇக்கொள்கையை வளர்ச்சியுரச் செய்தது.
உட்பிரிவுகள்:
ஸெய்திய்யாக் குழு உருப்பினரான அபூ ஸஹ்ரா என்பவர் இக்குழுவை கொள்கைஅடிப்படையில் இரண்டாக வகுத்து நோக்குகின்றார்.
மூத்தோர்கள்:இமாமத் தகுதி அடிப்படையில் வரலாம். எனவேஅபூபக்கர் (ரழி) உமர் (ரழி) உஸ்மான் (ரழி) ஆகியோரின் ஆட்சியைஅங்கீகரிக்கின்றனர். இவர்கள் தற்போது எமன் நாட்டில் கருத்துமுரண்பாடுகளினால் பிளவுபட்டு ஸுலைமானிய்யா ஜாரூதிய்யா ஸாலிஹிய்யா போன்றமுப்பிரிவுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
(அல்மிலல் வந்நிஹல் பாகம் 1இ பக்கம் 155)
பிந்தியோர்கள்:இவர்கள் முன்னைய மூன்று நல்லாட்சிநடாத்திய கலீபாக்களையும் அவர்களது ஆட்சியை ஆதரிப்போரையும் ‘காபிர்’கள்என்கின்றனர்.
அல்லாஹ்வின் அறிவு:ஒவ்வொரு விடயமும் அது நடக்கும் போதுதான் அவனுக்குத் தெரியும். அதற்கு முன்தெரியாது. நிகழ்வுகள் அவனது அறிவில் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. இதுஷீஆப் பிரிவில் மிகவும் வழிகெட்ட ராபிழாக்களினதும் கைஸானியாக்களினதும்கருத்திலிருந்து பிறப்பெடுத்ததாகும்.
(ஸெய்தின் கொள்கை இதற்கு மாற்றமானதாகும்.)
மஹ்தி: இவரின் வருகை பற்றி ஸெய்த் அவர்கள் கருத்துத் தெரிவிக்கவில்லை.ஷீஆக்களிடையே மஹ்தி பற்றி பல வகையான நம்பிக்கைகள் உள்ளன.
கைஸானிய்யாக்கள்: → முஹம்மத் இப்னு அல்ஹனபிய்யா எனவும்
இமாமிய்யாக்கள்: → முஹம்மத் இப்னு அல்ஹஸன் அல் அஸ்கரி எனவும் ஏனைய பிரிவினர் இன்னும் பல மஹ்தீக்கள் வருவார்கள்என நம்புகின்றனர்.
ஷீஆக்கள்
அல் கைஸானிய்யா:
முஆவியா (ரழி) அவர்களின் மகன் யசீதின்ஆட்சிக் காலத்தில் ஹுஸைன் (ரழி) அவர்கள் ஈராக்கிலுள்ள கர்பலா எனுமிடத்தில்கொலை செய்யப்பட்டார்கள். இதற்கு பலி தீர்க்க வேண்டும் என ஒரு குழுஉருவானது. இவர்கள் முக்தார் இப்னு அபீ உபைத் என்பவனின் தலைமையில் ‘தவ்வாபீன்’ என்ற பெயரில் இயங்கத் தொடங்கினர். இவன் ஒரு மிகப் பெரியபொய்யன் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
கர்பலாவில் ஹுஸைன் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டபோது ஆத்திரமடைந்தஇப்பிரிவினர் அவர்களுக்கு உதவி செய்யத் தவறியதனால் அவரை இழந்தோம். எனவேநாம் பாவிகள் என்று கருதி ‘தவ்பா’ செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன் இயங்கஆரம்பித்தனர். உமையாக்களின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து பலதளபதிகளைக் கொலை செய்தனர்.
இவர்கள் ‘தனாஸுக்’ என்ற மறுபிறப்புக் கொள்கையைக் கொண்டுள்ளனர். இவ்வாறுவழி கெட்ட கொள்கைகள் பல. ‘தீன் என்பது ஒரு மனிதனுக்குக் கட்டுப்படல்’ என்றும் அம்மனிதர் அலிதான் என்றும் பிரசாரம் செய்தான் முக்தார். இவனதுபுனைப் பெயர் ‘கைஸானிய்யா’ என்று அழைக்கப்படுகிறது. ஷீஆக்களின் அனைத்துவழிகெட்ட கொள்கைகளும் இப்பிரிவினரிடமும் காணப்பட்டன.
அர்ராபிழாக்கள்
இவர்கள் முன்னைய மூன்று ஆட்சியாளர்களையும்ஏற்றுக்கொள்வதில்லை. ஆட்சி அலி (ரழி) அவர்களுக்கும் அவரது பரம்பரைக்கும்மட்டுமே உரித்தானது. ஏனைய அனைவரது ஆட்சி முறையும் தவறானது என்றுகருதுகின்றனர்.
ராபிழாக்கள் ஷீஆக்களின் ஒரு பிரிவினர். இவர்களுக்குள் பல உட்பிரிவுகள்காணப்படுகின்றன.
முஹம்மதிய்யா. அல் – இஸ்னா அஷரிய்யா ஃ இமாமிய்யா.
முஹம்மதிய்யா: அலி → ஹுஸைன் → அப்துல்லாஹ் → முஹம்மத். இவர்கள் தங்களது இமாமாகவும்எதிர்பார்க்கப்பட்ட மஹ்தியாகவும் முஹம்மத் என்பவரைக் கருதுகின்றனர்.
முஹம்மத் என்பவர் ஹி 93ல் பிறந்தார். ராபிழாக்கள் இவரை ‘அந்நப்ஸ்அஸ்ஸகிய்யா’ பரிசுத்த ஆத்மா என்ற புனை நாமமிட்டும் அழைத்தனர். இவர் ஹிஜ்ரி 145ம் ஆண்டுகளில் அப்பாஸிய ஆட்சியாளர் அபூ ஜஃபர் அல் மன்சூர் என்பவருக்குஎதிராக மதீனா எல்லைப் புறங்களில் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தபோது அபூ ஜஃபர்அல் மன்சூர் ஒரு படையை அனுப்பினார். சண்டை உக்கிரமாக நடைப்பெற்றது. எனினும்தளபதியின் தந்திரோபாயத்தால் முஹம்மத் களத்தில் கொலை செய்யப்பட்டார். தளபதிஅவரது தலையைத் துண்டித்து அபூ ஜஃபர் அல் மன்சூருக்கு அனுப்பிவைத்தார்.
அல் – இஸ்னா அஷரிய்யா ஷ இமாமிய்யா: இவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னர் ஆட்சி உரிமை அலி (ரழி)அவர்களுக்கே வந்திருக்க வேண்டும் என்ற சிந்தனையுடையவர்கள். முன்னையஆட்சியாளர்களைத் துரோகிகளாகக் கருதுகின்றனர். அரசாட்சி இமாம் என்றநிறுவனமுறைமையிலேயே இயங்க வேண்டும் என்பதோடு வரம்பு மீறிய பல வழிகெட்டகொள்கைகளுடன் உள்ளனர். இக்குழுவினர் ஈரான் ஈராக் பாகிஸ்தான் இந்தியா போன்றநாடுகளில் கனிசமாக வாழ்கின்றனர்.
‘அஹ்லுல்பைத்’ திலிருந்தே 12 இமாம்களும் தெரிவு செய்யப்படுவர் எனநம்புகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் தனக்குப் பின்னால் வரும் இமாமை ‘வஸிய்யத்’ மூலம் நியமித்து பதவியில் அமர்த்துவர் எனக் கூறுகின்றனர்.
இந்த இமாமத் பதவிக்கு வரும் 12 பேரும் ‘மஃஸும்’ பாவங்கள் செய்யாதவர்கள்.எனவே அவர்களை ஏற்பது ஈமானின் ஓர் அங்கம்; மறுப்பவர்கள் ‘காபிர்’கள்என்றும் வாதாடுகின்றனர். இவ்வாறு இவர்கள் நம்பும் இமாம்களில் முதன்மையானவர்அலி (ரழி) அவர்களும் இறுதியானவர் முஹம்மத் இப்னு ஹஸன் அல் அஸ்கரீஅவர்களும் உள்ளனர்.
இமாம்களில் இறுதியான முஹம்மத் என்பவர் ஸாமர்ராவில் தனது தந்தையின்வீட்டில் திடிரென்று மறைந்துவிட்டதாகவும் அவர் மீண்டும் உலகுக்கு – பூமியில் குழப்ப நிலைகள் அதிகரிக்கும் காலப்பிரிவில் நீதியை நிலைநாட்ட – திரும்பி வருவார் என்றும் நம்புகின்றனர். இவரின் வருகையினால் மனிதர்கள்அனைவரும் பயன் பெறுவர் என்றும் கூறுகின்றனர். எதிர்பார்க்கப்படும் மஹ்தி (அலை) இவர்தான் எனவும் கருதுகின்றனர். ஷீஆக்களிடையே உள்ள பல பிரிவுகளிடையேமஹ்தி பற்றி மாறுபட்ட கருத்துக்களும் சிந்தனைகளும் உள்ளன.
இமாமிய்யா சிந்தனையுடையோர் நம்பும் 12 இமாம்களின் பெயர்கள் பின்வருமாறு:
ஹஸன் ஹுஸைன் ஸெய்னுல் ஆப்தீன் முஹம்மத் இப்னு அலீ இப்னு ஹுஸைன் அல் பாகிர் ஜஃபர்அஸ்ஸாதிக்மூஸாஇப்னுஜஃபர்அல்காழிம்அலீஇப்னுமூஸாஅர்ரிழாமுஹம்மத்அல்ஜவாத்அலீஇப்னுமுஹம்மத்அல்ஹாதிஹஸன்அல்அஸ்கரிமுஹம்மத்இப்னுஅல்ஹஸன்இமாமிய்யா சிந்தனைப் பிரிவினர் ‘அல் ஜஃபரிய்யா’ என்ற பெயர்கொண்டும்அழைக்கப்படுகின்றனர். இவர்களது சிந்தனைகளும் கருத்துக்களும் கொள்கைகளும்யூத இனத்திற்கு ஒத்ததாக அமைந்துள்ளது.
பள்ளிகளில் மாணவர்சேர்க்கை நடந்து கொண்டு இருக்கிறது. அரசு நிர்ணயித்த கட்டணங்களை 90 சதவீதம்பள்ளிகள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. இந்த அரசால் என்ன செய்துவிடமுடியும் என்கிற துணிச்சல்! அசைக்க முடியாத நம்பிக்கை!! அரசு எனும்வெள்ளையானையை அடிபணிய வைக்கும் அங்குசம் தன்னிடம் இருப்பதாகச் சொல்லித்திரியும் ஆணவம்!!! இவைதான் இந்தத் தனியார் பள்ளிகளை அரசுக்கு அடங்காதவையாகநிமிர்ந்து நிற்கச் செய்துள்ளன.
இந்தப் பள்ளிகளின் முறைகேட்டுக்குத்துணை போவதாக உள்ளது பள்ளிக் கல்வித் துறையின் நடவடிக்கை. ஒவ்வொருபள்ளிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விவரங்களை அந்தந்தப் பள்ளியின்வாசலில் அறிக்கையாக எழுதி வைக்கும்படி செய்யும் ஆற்றல் இவர்களுக்கு இல்லை.இந்தக் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று சொன்னதைச்செய்யவும் தெம்பில்லை.
பெரும்பாலான பள்ளிகள் அரசின் கல்விக்கட்டணத்தைப் பற்றியே கண்டுகொள்ளாமல், சென்ற ஆண்டின் கட்டணத்தைவிடக்கூடுதலாக 20 சதவீதம் வசூலிக்கின்றன என்று செய்திகள் வந்த பிறகும்கூட, பள்ளிக் கல்வித்துறை மெத்தனமாக இருக்குமேயானால், தனியார் கல்விநிறுவனங்களுக்கு இவர்கள் உடந்தை என்று சொல்வதா அல்லது இவர்களுக்குஅவர்களைக் கட்டுப்படுத்த திராணியில்லை என்று சொல்வதா?
ஓய்வுபெற்றநீதிபதி கோவிந்தராஜன் குழுவிடம் பல பள்ளிகள் முறையீடு செய்துள்ளதால், இந்தக் கட்டணத்தில் மாற்றம் வரலாம் என்று கருதி, இணையதளத்தில் இன்னும்விவரங்களை வெளியிடவில்லை என்று கல்வித் துறையே கூறும் என்றால், அதைவிடமோசமான, தனியார் பள்ளிகளுக்கு ஆதரவான பதில் வேறு ஏதும் இருக்க முடியாது.
தமிழ்நாட்டில்பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில், மே 20-ம்தேதி வரை, 1200 பள்ளிகள் மட்டுமே கல்விக் கட்டணத்துக்காக மேல் முறையீடுசெய்துள்ளன. முதல்வர் அறிக்கைப்படி 2000 பள்ளிகள் என்றே வைத்துக்கொண்டாலும், மீதமுள்ள 8000 பள்ளிகளின் கல்விக் கட்டணத்தைப் பகிரங்கமாகவெளியிடவும், இணையதளத்தில் வெளியிடவும் அரசுக்கு என்ன தயக்கம்? அரசுநிர்ணயித்த கல்விக் கட்டணத்தை வங்கிகள் மூலம் செலுத்தவும், பள்ளிகளில்தனிப்பட்ட முறையில் வசூலிக்கக்கூடாது என்றும் சொல்லவும் பள்ளிக் கல்வித்துறைக்கு ஏன் தைரியம் இல்லை?
பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி, அவர்கள்வசூலிக்கும் கட்டணம், ஆசிரியர் சம்பளம், மாணவர் எண்ணிக்கை ஆகியவை குறித்து, இந்தப் பள்ளிகள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே கல்விக் கட்டணம்நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகள் நியாயமானவை என்றால்-கல்விச்சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவை என்றால், கணக்கை முறையாக, வெள்ளையாகவே காட்டியிருக்க வேண்டாமா?
தமிழக அரசுக்கு எதிராகத்தனியார் பள்ளிகள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றமே தள்ளுபடி செய்தபின்னரும்கூட, சங்கத்தின் கூட்டத்தைக் கூட்டி அரசின் ஆணைக்குக் கட்டுப்படமாட்டோம் என்று சொல்லும் துணிச்சலை தனிநபர் சுதந்திரம் என்று எடுத்துக்கொள்வதா, நீதிமன்ற அவமதிப்பு என்று எடுத்துக் கொள்வதா அல்லது அரசைக் கேலிசெய்வோரின் எக்காளம் என்று எடுத்துக் கொள்வதா? புரியவில்லை.
"பிளஸ் 2 தேர்வில் உங்கள் பிள்ளைகளை அதிக மதிப்பெண் பெறச்செய்வோம்' என்றுமார்தட்டும் சில நூறு தனியார் பள்ளிகளின் அடாவடித்தனத்தால்தான் இன்றுதமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளும் அதே பாணியைப் பின்பற்றிநடக்கின்றன. அரசு முதலில் அடக்க வேண்டியது இத்தகைய சில நூறு தனியார் கல்விநிறுவனங்களைத்தான். இத்தகைய அடாவடி கல்வி நிறுவனங்கள், மேல்முறையீடுசெய்ததுடன் தற்போது புதிய கட்டண உத்திகளையும் தொடங்கிவிட்டன. கோவிந்தராஜன்குழு அளித்த இரண்டு ஓட்டைக்குள் தலையை நுழைத்துக்கொண்டு பூத முகத்தைக்காட்டுகின்றன.
அதாவது, பள்ளிப் பேருந்து மற்றும் விடுதிக் கட்டணங்களைஅவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று கோவிந்தராஜன் குழுஅறிவித்திருந்தது. அதைப் பயன்படுத்திக்கொண்டு, இந்தக் கல்வி அதிபர்கள் (அதுதான் தொழில்- கல்வியாகிவிட்டதே!) எல்லா குழந்தைகளையும் விடுதியில்சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். "விடுதியில் சேர்த்தால்பள்ளியில் சேர்த்துக் கொள்வோம், இல்லையானால் இடமில்லை' என்று அடாவடிசெய்கிறார்கள்.
"பக்கத்துத் தெருவில் வீடு இருந்தாலும் பரவாயில்லை.விடுதியில் தங்குவதும் தங்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம். ஆனால்விடுதிக் கட்டணத்தைச் செலுத்தி விடுங்கள்'. ஆண்டுக்கு ரூ. 50,000-ல்தொடங்கி, குளிர்சாதன அறை என்றால் ரூ.1 லட்சம் வரை கட்டணம். வெகுஅருகில்வீடு இருந்தாலும், பள்ளிப் பேருந்து கட்டாயம் என்கிறார்கள். திட்டம்போட்டுத் திருடுகிற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கிறது; ஆனால் சட்டம்போட்டுத் தடுக்க முடிந்தும், அரசு வேடிக்கை பார்க்கிறது.
லஞ்சப்பேர்வழி குறித்து மேடைகளில் ஒரு கதை சொல்வார் முதல்வர் கருணாநிதி. எந்தஇடத்தில் பணியமர்த்தினாலும் லஞ்சம் வாங்கும் ஊழியனைக் கொண்டுபோய் கடல்அலைகளை எண்ணும் பணிக்கு அமர்த்தினார் அரசர். அவனோ, கடலுக்குள்மீனவர்கள்சென்றால் அலைகளின் எண்ணிக்கை பாதிக்கும் என்று தடுத்தான். வேறு வழி? மீனவர்கள் லஞ்சம் கொடுத்து கடலுக்குச் செல்ல வேண்டியதாயிற்று என்பது கதை.
இப்போதுஇதே கதையை முதல்வர் திருத்திச் சொல்லலாம்; "அந்த ஊழியனை அரசர் சிறையில்அடைக்காமல், குறைந்த தண்டனையாக பணிநீக்கம் செய்தார். அவன் கல்விஅதிபராகமாறினான்'.
ஒரு நூறு கல்விஅதிபர்கள் மீது நடவடிக்கைஎடுத்தாலும்போதும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தனியார் பள்ளி நிர்வாகங்களும்ஒரே நாளில் ஒழுங்குக்கு வந்துவிடும். இதைச் செய்யும் துணிச்சல் அரசுக்குஉண்டெனில், அனைவருக்கும் தரமான கல்வி உண்டு. பெற்றோரின் வாழ்த்தும்அரசுக்கு உண்டு.