அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 28 மே, 2010

திருக்குர்ஆன் வினாடி வினா - பாகம் 3

1.   கேள்வி : குர்ஆனில் பெயர் கூறப்பட்ட நபித் தோழர் யார் ?
பதில் : ஸைத் (ரலி) (அல்குர்ஆன் 33 : 37)
2.   கேள்வி : நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தை பெயர் என்ன?
பதில் : ஆஸர் (அல்குர்ஆன் 6 : 74)
3.   கேள்வி :நபி நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் இருந்த சிலைகளின் பெயர் என்ன?
பதில் : வத்து, ஸுவாவு, யகூஸ், யவூக், நஸ்ர் (அல்குர்ஆன் 71 : 23)
4.   கேள்வி : நபி யூனுஸ் அவர்கள் அனுப்பப்பட்ட மக்களின் தொகை எவ்வளவு?
பதில் : ஒரு இலட்சம் அல்லது அதற்கு மேல் (அல்குர்ஆன் 37 : 147)
5.  கேள்வி : மக்காவின் முந்தைய பெயர் என்ன?
பதில் : பக்கா (அல்குர்ஆன் 3 : 96)
6.   கேள்வி : ஸிஹ்ர் கலையை மக்களுக்கு கற்றுக் கொடுத்தவர்கள் யார்?
பதில் : ஹாரூத் மாரூத் (அல்குர்ஆன் 2 : 102)
7.   கேள்வி : தாவூத் நபிக்கு வழங்கப்பட்ட வேதத்தின் பெயர் என்ன?
பதில் : ஸபூர் (அல்குர்ஆன் 4 : 163)
8.   கேள்வி : மறுமை நாள் ஏற்படும் போது எத்தனை சூர் ஊதப்படும் ? எதற்காக ?
பதில் : இரண்டு சூர் ஊதப்படும், முதல் சூர் உலகம் அழிக்கபடுவதற்கும் இரண்டாம் சூர் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதற்கும்.(அல்குர்ஆன் 69:13-16, 36 :51)
9.   கேள்வி : இப்லீஸ் எந்த இனத்தை சார்ந்தவன்?
பதில் : ஜின் (அல்குர்ஆன் 18 : 50)
10.   கேள்வி :மூஸா நபியின் கூட்டத்தினருக்கு வானிலிருந்து வந்த உணவின் பெயர் என்ன ?
பதில் : மன்னு, ஸல்வா (அல்குர்ஆன் 2 : 57)

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites