அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 27 மே, 2010

இவர்களை தெரியுமா? பாகம் 2


அஸ்ஸைதிய்யா: الزيدية
அலி ஹுஸைன் ஸைனுல் ஆப்தீன் ஸெய்த். இதில் ஸெய்த் அவர்களை பின்பற்றுபவர்களே ஸெய்திக்கள் என அழைக்கப்படுகின்றனர். ஸெய்த் அவர்கள் ஹிஜ்ரி 80 ல் பிறந்தார். ஹிஜ்ரி 122 ல் கொல்லப்பட்டார். இவரிடம் மிதவாத சிந்தனைப் போக்குக் காணப்பட்டது. அதனால் மக்களால் நேசிக்கப்பட்டார். அறிவு ஆற்றல் ஆளுமை நற்பண்புகள் என்பனவுடையவராகத் திகழ்ந்தார்.
இமாம் ஹஸனுல் பஸரியின் மாணவனான இவர் முஃதஸிலா இயக்க ஸ்தாபக முன்னோடியான வாஸில் பின் அதா அபூ ஹனீபா போன்றோரிடமும் கற்றுள்ளார். இதனால் இக்குழுவினர் அடிப்படை விடயங்களில் முஃதஸிலாக் கொள்கையுடையோராகவும் கிளை விடயங்களில் ஹனபிய்யாக்களாகவும் கருதப்படுகின்றனர்.
ஸெய்த் அவர்கள் உமைய்யா ஆட்சியை எதிர்த்து மேற்கொண்ட போரில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை கர்பலாவில் ஹுஸைன் (ரழி) அவர்களது கொலை ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்ற மிகப் பெரும் அனுதாப உணர்வலைகளை ஏற்படுத்தி இக்கொள்கையை வளர்ச்சியுரச் செய்தது.
உட்பிரிவுகள்:
ஸெய்திய்யாக் குழு உருப்பினரான அபூ ஸஹ்ரா என்பவர் இக்குழுவை கொள்கை அடிப்படையில் இரண்டாக வகுத்து நோக்குகின்றார்.
மூத்தோர்கள்: இமாமத் தகுதி அடிப்படையில் வரலாம். எனவே அபூபக்கர் (ரழி) உமர் (ரழி) உஸ்மான் (ரழி) ஆகியோரின் ஆட்சியை அங்கீகரிக்கின்றனர். இவர்கள் தற்போது எமன் நாட்டில் கருத்து முரண்பாடுகளினால் பிளவுபட்டு ஸுலைமானிய்யா ஜாரூதிய்யா ஸாலிஹிய்யா போன்ற முப்பிரிவுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
(
அல்மிலல் வந்நிஹல் பாகம் 1இ பக்கம் 155)
பிந்தியோர்கள்: இவர்கள் முன்னைய மூன்று நல்லாட்சி நடாத்திய கலீபாக்களையும் அவர்களது ஆட்சியை ஆதரிப்போரையும் காபிர்கள் என்கின்றனர்.
கொள்கைகள்
  • இமாம்கள் பாவம் மன்னிக்கப்பட்டவர்கள்.
  • பாவம் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாகத் தங்கிவிடுவர்.
  • அல்லாஹ்வின் அறிவு: ஒவ்வொரு விடயமும் அது நடக்கும் போதுதான் அவனுக்குத் தெரியும். அதற்கு முன் தெரியாது. நிகழ்வுகள் அவனது அறிவில் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. இது ஷீஆப் பிரிவில் மிகவும் வழிகெட்ட ராபிழாக்களினதும் கைஸானியாக்களினதும் கருத்திலிருந்து பிறப்பெடுத்ததாகும்.
(ஸெய்தின் கொள்கை இதற்கு மாற்றமானதாகும்.)
  • மஹ்தி: இவரின் வருகை பற்றி ஸெய்த் அவர்கள் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஷீஆக்களிடையே மஹ்தி பற்றி பல வகையான நம்பிக்கைகள் உள்ளன.
  • கைஸானிய்யாக்கள்: முஹம்மத் இப்னு அல்ஹனபிய்யா எனவும்
  • இமாமிய்யாக்கள்: முஹம்மத் இப்னு அல் ஹஸன் அல் அஸ்கரி எனவும் ஏனைய பிரிவினர் இன்னும் பல மஹ்தீக்கள் வருவார்கள் என நம்புகின்றனர்.
ஷீஆக்கள்
அல் கைஸானிய்யா:
முஆவியா (ரழி) அவர்களின் மகன் யசீதின் ஆட்சிக் காலத்தில் ஹுஸைன் (ரழி) அவர்கள் ஈராக்கிலுள்ள கர்பலா எனுமிடத்தில் கொலை செய்யப்பட்டார்கள். இதற்கு பலி தீர்க்க வேண்டும் என ஒரு குழு உருவானது. இவர்கள் முக்தார் இப்னு அபீ உபைத் என்பவனின் தலைமையில்தவ்வாபீன்என்ற பெயரில் இயங்கத் தொடங்கினர். இவன் ஒரு மிகப் பெரிய பொய்யன் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
கர்பலாவில் ஹுஸைன் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டபோது ஆத்திரமடைந்த இப்பிரிவினர் அவர்களுக்கு உதவி செய்யத் தவறியதனால் அவரை இழந்தோம். எனவே நாம் பாவிகள் என்று கருதி தவ்பாசெய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன் இயங்க ஆரம்பித்தனர். உமையாக்களின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து பல தளபதிகளைக் கொலை செய்தனர்.
இவர்கள் தனாஸுக்என்ற மறுபிறப்புக் கொள்கையைக் கொண்டுள்ளனர். இவ்வாறு வழி கெட்ட கொள்கைகள் பல. தீன் என்பது ஒரு மனிதனுக்குக் கட்டுப்படல்என்றும் அம்மனிதர் அலிதான் என்றும் பிரசாரம் செய்தான் முக்தார். இவனது புனைப் பெயர் கைஸானிய்யாஎன்று அழைக்கப்படுகிறது. ஷீஆக்களின் அனைத்து வழிகெட்ட கொள்கைகளும் இப்பிரிவினரிடமும் காணப்பட்டன.
அர்ராபிழாக்கள்
இவர்கள் முன்னைய மூன்று ஆட்சியாளர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆட்சி அலி (ரழி) அவர்களுக்கும் அவரது பரம்பரைக்கும் மட்டுமே உரித்தானது. ஏனைய அனைவரது ஆட்சி முறையும் தவறானது என்று கருதுகின்றனர்.
ராபிழாக்கள் ஷீஆக்களின் ஒரு பிரிவினர். இவர்களுக்குள் பல உட்பிரிவுகள் காணப்படுகின்றன.
முஹம்மதிய்யா.
அல் இஸ்னா அஷரிய்யா ஃ இமாமிய்யா.

முஹம்மதிய்யா:
அலி ஹுஸைன் அப்துல்லாஹ் முஹம்மத். இவர்கள் தங்களது இமாமாகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹ்தியாகவும் முஹம்மத் என்பவரைக் கருதுகின்றனர்.
முஹம்மத் என்பவர் ஹி 93ல் பிறந்தார். ராபிழாக்கள் இவரை அந்நப்ஸ் அஸ்ஸகிய்யாபரிசுத்த ஆத்மா என்ற புனை நாமமிட்டும் அழைத்தனர். இவர் ஹிஜ்ரி 145ம் ஆண்டுகளில் அப்பாஸிய ஆட்சியாளர் அபூ ஜஃபர் அல் மன்சூர் என்பவருக்கு எதிராக மதீனா எல்லைப் புறங்களில் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தபோது அபூ ஜஃபர் அல் மன்சூர் ஒரு படையை அனுப்பினார். சண்டை உக்கிரமாக நடைப்பெற்றது. எனினும் தளபதியின் தந்திரோபாயத்தால் முஹம்மத் களத்தில் கொலை செய்யப்பட்டார். தளபதி அவரது தலையைத் துண்டித்து அபூ ஜஃபர் அல் மன்சூருக்கு அனுப்பிவைத்தார்.
அல் இஸ்னா அஷரிய்யா ஷ இமாமிய்யா:
இவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னர் ஆட்சி உரிமை அலி (ரழி) அவர்களுக்கே வந்திருக்க வேண்டும் என்ற சிந்தனையுடையவர்கள். முன்னைய ஆட்சியாளர்களைத் துரோகிகளாகக் கருதுகின்றனர். அரசாட்சி இமாம் என்ற நிறுவனமுறைமையிலேயே இயங்க வேண்டும் என்பதோடு வரம்பு மீறிய பல வழிகெட்ட கொள்கைகளுடன் உள்ளனர். இக்குழுவினர் ஈரான் ஈராக் பாகிஸ்தான் இந்தியா போன்ற நாடுகளில் கனிசமாக வாழ்கின்றனர்.
அஹ்லுல்பைத்திலிருந்தே 12 இமாம்களும் தெரிவு செய்யப்படுவர் என நம்புகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் தனக்குப் பின்னால் வரும் இமாமைவஸிய்யத்மூலம் நியமித்து பதவியில் அமர்த்துவர் எனக் கூறுகின்றனர்.
இந்த இமாமத் பதவிக்கு வரும் 12 பேரும் மஃஸும்பாவங்கள் செய்யாதவர்கள். எனவே அவர்களை ஏற்பது ஈமானின் ஓர் அங்கம்; மறுப்பவர்கள் காபிர்கள் என்றும் வாதாடுகின்றனர். இவ்வாறு இவர்கள் நம்பும் இமாம்களில் முதன்மையானவர் அலி (ரழி) அவர்களும் இறுதியானவர் முஹம்மத் இப்னு ஹஸன் அல் அஸ்கரீ அவர்களும் உள்ளனர்.
இமாம்களில் இறுதியான முஹம்மத் என்பவர் ஸாமர்ராவில் தனது தந்தையின் வீட்டில் திடிரென்று மறைந்துவிட்டதாகவும் அவர் மீண்டும் உலகுக்கு பூமியில் குழப்ப நிலைகள் அதிகரிக்கும் காலப்பிரிவில் நீதியை நிலைநாட்ட திரும்பி வருவார் என்றும் நம்புகின்றனர். இவரின் வருகையினால் மனிதர்கள் அனைவரும் பயன் பெறுவர் என்றும் கூறுகின்றனர். எதிர்பார்க்கப்படும் மஹ்தி (அலை) இவர்தான் எனவும் கருதுகின்றனர். ஷீஆக்களிடையே உள்ள பல பிரிவுகளிடையே மஹ்தி பற்றி மாறுபட்ட கருத்துக்களும் சிந்தனைகளும் உள்ளன.
இமாமிய்யா சிந்தனையுடையோர் நம்பும் 12 இமாம்களின் பெயர்கள் பின்வருமாறு:
ஹஸன்
ஹுஸைன்
ஸெய்னுல் ஆப்தீன்
முஹம்மத் இப்னு அலீ இப்னு ஹுஸைன் அல் பாகிர்
ஜஃபர்அஸ்ஸாதிக்மூஸாஇப்னுஜஃபர்அல்காழிம்அலீஇப்னுமூஸாஅர்ரிழாமுஹம்மத்அல்ஜவாத்அலீஇப்னுமுஹம்மத்அல்ஹாதிஹஸன்அல்அஸ்கரிமுஹம்மத்இப்னுஅல்ஹஸன்இமாமிய்யா சிந்தனைப் பிரிவினர் அல் ஜஃபரிய்யாஎன்ற பெயர்கொண்டும் அழைக்கப்படுகின்றனர். இவர்களது சிந்தனைகளும் கருத்துக்களும் கொள்கைகளும் யூத இனத்திற்கு ஒத்ததாக அமைந்துள்ளது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites