அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 7 ஜூன், 2010

ஜின்களும் ஷைத்தான்களும் பாகம் 1


இறைவன் பெயரால்....
ஜின்களும் ஷைத்தான்களும்
பொருள் அட்டவணை
ஜின்களைப் பற்றிய விபரங்கள்
1.         முன்னுரை
2.         ஜின் என்ற வார்ததையின் பொருள்
3.         ஜின்கள் இருப்பது உண்மை
4.         மனிதர்களுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட படைப்பு
5.         நெருப்பால் படைக்கப்பட்டவர்கள்
6.         பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள்
7.         ஜின்களும் பேய்களும் ஒன்றா?
8.         ஜின்களின் வகைகள்
9.         பாம்பு வடிவில் ஜின்கள்
10.       மதீனாவிற்கு மட்டும் உரிய சட்டம்
11.       உருமாற்றம் செய்யப்பட்ட ஜின்கள்
12.       பாம்புகளை கொல்ல வேண்டும்
13.       பாம்புகள் பலிவாங்குமா?
14.       ஜின்களில் ஆண்களும் பெண்களும் உண்டு
15.       ஜின்களின் இனப்பெருக்கம்
16.       ஜின்களுக்கிடையே அன்பு
17.       ஜின்களின் உணவு
18.       ஜின்களின் இருப்பிடம்
19.       ஜின்களை காண முடியாது
20.       விலங்குகளால் பார்க்க முடியும்
21.       நபியவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்பு
22.       நபி (ஸல்) அவர்கள் ஜின்களை பார்த்தார்களா?
23.       ஜின்களின் ஆற்றல்
24.       ஜின்களின் விண்ணுலகப் பயனம்
25.       ஒட்டுக்கேட்ட ஜின்கள்
26.       ஜின்களும் குறிகாரர்களும்
27.       ஜின்களை வசப்படுத்த முடியுமா?
28.       சுமைலமான் நபிக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்பு
29.       முஹம்மது (ஸல்) அவர்களால் கூட வசப்படுத்த முடியாது
30.       அல் ஜின்னு சூராவை ஓதினால் வசப்படுத்த முடியுமா?
31.       ஜின்களுக்கு மறைவான ஞானம் கிடையாது
32.       இஸ்லாத்தை ஜின்களும் கடைபிடிக்க வேண்டும்
33.       ஜின்களுக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்
34.       முஹம்மத் நபியை பின்பற்றுவது ஜின்களின் மீது கடமையாகும்
35.       ஜின்கள் குர்ஆனை செவியுற்றன
36.       ஜின்களுக்கும் வணக்க வழிபாடுகள் உண்டு
37.       மனிதர்களைப் போலவே ஜின்களுக்கும் கட்டளைகள் உள்ளன
38.       நல்ல ஜின்களும் கெட்ட ஜின்களும்
39.       ஜின்களில் இறைமறுப்பாளர்கள் உண்டு
40.       இறைத்தூதர்களுக்கு எதிரிகள்
41.       ஜின்களுக்கும் விசாரணை உண்டு
42.       கெட்ட ஜின்களுக்கு நரகம் உண்டு
43.       நல்ல ஜின்களுக்கு சொர்க்கம் உண்டு
44.       ஜின்கள் மனிதர்களுக்கு நன்மை செய்யுமா?
45.       ஜின்கள் சுலைமான் நபிக்கு உதவியாக இருந்தன
46.       ஜின்களிடம் உதவி தேடலாமா?
47.       மனிதர்களுக்கு ஜின்களால் ஏற்படும் தீமை
48.       ஜின்கள் உடலில் புகுவார்களா?
49.       ஜின்களுக்கு அஞ்சுவது அறியாமையாகும்
ஷைத்தான்களைப் பற்றிய விபரங்கள்
1.         ஜின் இனத்தைச் சார்ந்தவன்
2.         ஷைத்தானின் உருவ அமைப்பு
3.         ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டவன்
4.         ஷைத்தானின் உணவு
5.         ஷைத்தான் அருந்தும் பானம்
6.         ஷைத்தானின் இருப்பிடம்
7.         இறைக் கட்டளையை மறுத்தான்
8.         பெருமையின் காரணத்தால் வழிகெட்டான்
9.         வானவர்களின் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்
10.       அவகாசம் அளிக்கப்பட்டான்
11.       ஷைத்தானின் சபதம்
12.       முதன் முதலில் ஷைத்தான் வலையில் விழுந்தவர்கள்
13.       மனிதர்களின் விரோதி
14.       நபிமார்களுக்கு விரோதி
15.       கெட்ட தோழன்
16.       ஷைத்தானின் நண்பர்கள்
17.       ஒவ்வொருவருடனும் இருக்கிறான்
18.       உடலில் இரண்டரக் கலந்துள்ளான்
19.       ஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்
20.       அனைவரிடமிருந்தும் ஷைத்தானை விரட்டுவார்களா?
21.       ஷைத்தானால் ஏற்படும் தீங்கு
22.       வேறெதுவும் செய்ய முடியாது?
23.       ஷைத்தானுடன் தொடர்பு படுத்திக் கூறும் வழக்கம்
24.       ஷைத்தான் பைத்தியத்தை ஏற்படுத்துவானா?
25.       ஷைத்தான் நோயை ஏற்படுத்துவானா?
26.       தீங்கை ஏற்படுத்துவது இறைவனின் அதிகாரம்
27.       ஜின்களும் ஷைத்தான்களும் ஒன்றா?
28.       கெட்ட ஜின்களும் ஷைத்தான்களும் ஒன்றா?
29.       ஷைத்தான் உருமாறுவானா?
30.       மனிதனாக உருமாறுவானா?
31.       மனித ஷைத்தான்கள்.
32.       நாய் வடிவில் வருவானா?
33.       பாம்பு வடிவில் வருவானா?
34.       பூனை வடிவில் வருவானா?
ஷைத்தானின் சூழ்ச்சிகள்
1.         தீயவற்றை அலங்கரித்துக்காட்டுவான்
2.         தீய காரியங்களை செய்யுமாறு ஏவுவான்
3.         தீய எண்ணங்களைத் தோற்றுவிப்பான்
4.         இறைமறுப்பாளர்களாக்க முயற்சிப்பான்
5.         இறைநினைவை மறக்கடிக்க முயலுவான்
6.         உறுதியாக இருந்தால் அஞ்சுவான்
7.         தன்னை பின்பற்றியவர்களை ஏமாற்றுவான்
8.         இறுதியில் நரகம் செல்வான்
காத்துக்கொள்ளும் வழிமுறைகள்
1.         சிறந்த பாதுகாவலன்
2.         இறைவனிடம் கையேந்துங்கள்
3.         குர்ஆனை ஓதும் போது....
4.         கழிவறைக்குள் நுழையும் போது...
5.         உடலுறவு கொள்ளும் போது...
6.         காலையிலும் மாலையிலும்
7.         ஃபஜர் தொழுத பிறகு....
8.         உறங்கச் செல்லும் முன்....
9.         கெட்ட கனவுகள் ஏற்படும் போது....
10.       ஓரிடத்தில் தங்கும் போது...
11.       பள்ளிக்குள் நுழையும் போது
12.       பள்ளியிலிருந்து வெளியேறும் போது....
13.       தொழுகையில் குழப்பம் ஏற்பட்டால்....
14.       கோபம் ஏற்பட்டால்....
15.       கழுதையின் சப்தத்தை கேட்டால்..
16.       குழந்தைக்காகப் பாதுகாப்புத் தேட வேண்டும்
17.       தகடு தாயத்துகளைத் தொங்கவிடுவது இணைவைப்பாகும்
18.       மார்க்கம் காட்டித்தராத முறையில் ஓதிப்பார்க்கக் கூடாது
19.       சூரத்துல் பாத்திஹாவை வைத்து ஓதிப் பார்க்கலாம்.
20.       112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை ஓதி ஊதலாம்
21.       நபியவர்கள் கற்றுக்கொடுத்த பிரார்த்தனைகளை வைத்து...
22.       குழந்தைகளை வெளியில் விடக்கூடாத நேரம்
23.       இறைவனை அதிகம் நினைக்க வேண்டும்
24.       இறைத்தூதர் கற்றுத்தந்தவாறு நினைக்க வேண்டும்
25.       நற்குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்
26.       ஃபஜர் தொழுக வேண்டும்
27.       குர்ஆன் ஓத வேண்டும்
28.       சஜ்தாவை அதிகப்படுத்த வேண்டும்
29.       தொழும் போது வேறு காரியங்களில் ஈடுபடக்கூடாது
30.       தொழும் போது யாரையும் குறுக்கே செல்லவிடக் கூடாது
31.       ஸஃப்பை நெருக்கமாக்கிக்கொள்ள வேண்டும்
முன்னுரை
            இன்றைய உலகில் இஸ்லாமும் இன்னபிற மதங்களும் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இஸ்லாத்தைத் தவிர்த்து எந்த ஒரு மதத்தின் கொள்கையும் கோட்பாடுகளும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்கக்கூடியதாக இல்லை.
            மனிதர்களால் சுயமாக கண்டுபிடிக்க இயலாத விஷயங்களில் சுய சிந்தனைகளையும் கற்பனைகளையும் ஒருவர் புகுத்தினால் இம்மதங்களை கடைபிடிப்பவர்கள் யாரும் இதை எதிர்ப்பதில்லை. குறிப்பாக இக்கற்பனைகள் தங்களது மதத்தின் மீது பக்தியையும் பற்றையும் ஏற்படுத்துவதற்கு உதவினால் கண்மூடிக்கொண்டு ஆதரவளிக்க இவர்கள் முன்வருகிறார்கள்.
            ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரை அதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் குறிப்பிட்ட எல்லைக்குள் வறையறுக்கப்பட்டுவிட்டது. மனிதர்களின் கற்பனைகளும் சுய சிந்தனைகளும் இதில் நுழைந்து விடாமல் இருக்க வலுமையான தடுப்பை திருக்குர்ஆன் ஏற்படுத்தியுள்ளது.
            இஸ்லாமிய சட்டதிட்டங்களாக இருந்தாலும் கொள்கை கோட்பாடுகளாக இருந்தாலும் இவற்றை வகுத்துக் கூறும் அதிகாரத்தை இறைவன் தன்வசம் மட்டுமே வைத்துள்ளான். இந்த அதிகாரத்தை கையில் எடுக்க யாருக்கும் எள்ளளவு கூட அனுமதியில்லை.
            கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.
அல்குர்ஆன் (39 : 3)
            இந்த அடிப்பைடையை முஸ்லிம்களில் பலர் புரிந்துகொள்ளாத காரணத்தால் இஸ்லாத்தில் சொல்லப்படாத இஸ்லாத்திற்கு மாற்றமான பல விஷயங்கள் மாற்றார்களிடமிருந்து இவர்களுக்கு தொற்றிக்கொண்டுவிட்டது. உதாரணமாக ஜின்கள் மற்றும் ஷைத்தான்கள் விஷயத்தில் பல விதமான தவறான நம்பிக்கைகள் நம் மக்கள் மத்தியில் பரவியுள்ளது.
            ஜின்களும் ஷைத்தான்களும் மனிதக் கண்களுக்குப் புலப்படாத மறைமுகமான படைப்பாகும். இவர்களைப் பற்றி நம்முடைய சுய அறிவைக் கொண்டு ஆராய்ந்து கூற இயலாது. அப்படிக்கூறினால் நிச்சயமாக அது வழிகேட்டில் தான் கொண்டு போய்விடும்.
            மனித அறிவிற்குப் புலப்படாத விஷயங்களை அறிந்துகொள்வதாக இருந்தால் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மூலமே அறிந்துகொள்ள முடியும். இவ்விரண்டையும் தவிர்த்து வேறு எதன் மூலமும் யார் மூலமும் இது தொடர்பான விஷயங்களை அறிந்துகொள்ள இயலாது.
            ஜின்களையும் ஷைத்தான்களையும் பற்றி குர்ஆனும் ஹதீஸ்களும் தெளிவாக விளக்குகிறது. இந்த விளக்கங்களை அறிந்து கொண்டால் தவறான நம்பிக்கைகளில் நம் சமூகம் நிச்சயம் விழாது. உலக மக்களின் எதிரியான ஷைத்தானைப் பற்றி விபரமாக அறிந்து அவனது சதி வலையில் விழாமல் நம்மை நாம் காத்துக்கொண்டால் இறைவனுடைய கோபம் நம்மீது ஏற்படாது.
            மக்கள் இவைகளை அறிந்து நல்வழியில் செல்வதற்காக குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் அடிப்படையாகக் கொண்டு ஜின்களையும் ஷைத்தான்களையும் பற்றி விவரிக்கும் இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் தவறுகள் ஏதும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறோம்.
இப்படிக்கு          
அப்பாஸ் அலீ
ஜின் என்ற வார்ததையின் பொருள்
            அல்ஜின்னு என்ற அரபு வார்த்தை குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஜின்கள் என்பது மனிதர்களைப் போன்று பகுத்தறிவு வழங்கப்பட்டு இறைக்கோட்பாடுகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்ட உயிரினமாகும்.
            மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது போல் சில வேற்றுமைகளும் உள்ளது. மனிதர்களை நம் கண்களால் காண முடியும். ஆனால் ஜின்களை மனிதக் கண்களால் காண முடியாது. மாறாக ஜின்களால் மனிதர்களை காணமுடியும்.
            ஜன்ன என்ற வினைச் சொல்லிலிருந்து ஜின் என்ற வார்த்தை பிரிந்து வந்துள்ளது. மறைத்தல் மறைதல் என்பது இதன் நேரடிப் பொருளாகும். திருமறைக் குர்ஆனில் ஜன்ன என்ற வார்த்தை மூடுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இரவு அவரை மூடிக் கொண்ட போது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இதுவே என் இறைவன்'' எனக் கூறினார். அது மறைந்த போது "மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்'' என்றார்.
அல்குர்ஆன் (6 : 76)
எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து தன்னை மறைத்துக் கொள்வதற்கு கேடயம் உதவுவதால் கேடயத்திற்கு ஜுன்னத் என்று சொல்லப்படுகிறது. தாயின் வயிற்றில் உள்ளக் குழந்தை மறைவாக இருப்பதால் அதற்கு ஜனீன் என்று கூறப்படுகிறது.
பாம்புகள் மனிதக் கண்களை விட்டு விரைவில் மறைந்துவிடுவதால் பாம்புகளுக்கு ஜான் என்று கூறப்படுகிறது. ஜின்கள் மனிதக்கண்களுக்கு புலப்படாமல் மறைந்து இருப்பதால் இதற்கு ஜின் என்று கூறப்படுகிறது.
நூல் : லிஸானுல் அரப் பாகம் : 13 பக்கம் : 92
ஜின்கள் இருப்பது உண்மை
ஜின் என்ற ஒரு படைப்பு உலகத்தில் இருப்பதாக திருக்குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவாக கூறுகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் நம்பிக்கைக்கொள்ள வேண்டிய மறைவான விஷயங்களிலும் இதுவும் ஒன்றாகும்.
வானவர்கள் சொர்க்கம் நரகம் இவற்றை நாம் யாரும் கண்களால் பார்த்துவிட்டு நம்பவில்லை. மாறாக குர்ஆனும் ஹதீஸ்களும் இவற்றை நம்புமாறு கூறுவதால் நம்புகிறோம். இது போன்று ஜின்களை நம் கண்களால் காணாவிட்டாலும் மறைவான நம்பிக்கை என்ற அடிப்படையில் ஜின்கள் இருப்பதாக நம்புபவரே உண்மையான இறைநம்பிக்கையாளராக இருக்க முடியும்.
இதுவரை மனிதனுடைய அறிவுக்குப் புலப்படாமல் உள்ள பல விஷயங்களில் இதுவும் ஒன்று என்று கருதுவதே ஈமானிற்கு உகந்தது. சில வழிகெட்ட கூட்டங்கள் ஜின்கள் என்று ஒரு படைப்பே இல்லை என்று கூறி மக்களை வழிகெடுத்துக்கொண்டிருக்கிறது. ஜின்கள் தொடர்பாக இந்நூலில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு ஆதாரமும் இவர்களின் தவறான நம்பிக்கையை தகர்க்கக்கூடியதாக இருக்கிறது.
மனிதர்களுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட படைப்பு
மனித குலம் அனைத்திற்கும் தந்தையும் முதல் மனிதருமான ஆதம் (அலை) அவர்களை படைப்பதற்கு முன்பே ஜின்களை அல்லாஹ் படைத்துவிட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு மனிதனைப் படைத்தோம். கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.
அல்குர்ஆன்(15 : 27)
நெருப்பால் படைக்கப்பட்டவர்கள்
மனிதர்கள் மண்ணிலிருந்து படைக்கப்பட்டிருப்பது போல் ஜின்கள் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டதால் அவர்களின் உடலில் நெருப்பு பற்றிக்கொண்டிருக்கும் என்று விளங்கக்கூடாது.
மனிதன் மண்ணால் படைக்கப்பட்டாலும் தற்போது மனிதர்கள் மண் வடிவத்தில் இல்லை. மனிதனின் தோற்றமும் தன்மைகளும் மண்ணுடைய தோற்றத்திற்கும் தன்மைகளுக்கும் முற்றிலும் வேறுபட்டிருக்கிறது.  இது போன்றே நெருப்பிற்கும் ஜின்களுக்கும் மத்தியில் தோற்றத்திலும் தன்மையிலும் வித்தியாசம் இருக்கலாம்.
கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.
அல்குர்ஆன் (15 : 27)
தீப்பிழம்பிலிருந்து ஜின்னைப் படைத்தான்.
அல்குர்ஆன் (55 : 15)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். "ஜின்'கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப்பட்டார்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலிலி)
நூல் : முஸ்லிம் (5722)
பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள்
ஜின்கள் என்பவர்கள் ஆடுமாடுகளைப் போன்று பகுத்தறிவற்ற உயிரினமில்லை. மாறாக மனிதர்களைப் போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள். மனிதர்களைப் போலவே சொர்க்கம் நரகத்தை அடையக்கூடியவர்கள். சிந்தித்து நல்வழியை தேர்வு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டவர்கள்.
ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.
அல்குர்ஆன் (7 : 179)
ஜின்களும் பேய்களும் ஒன்றா?
பேய்களுக்கும் கெட்ட ஆவிகளுக்கும் ஜின்கள் என்று சொல்லப்படுவதாக சிலர் தவறான கருத்தை கூறி வருகிறார்கள். இக்கருத்து இஸ்லாத்திற்கு முற்றிலும் புறம்பானதாகும்.
            ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருக்கும் இறந்து போனவர்களின் ஆவிகள் தான் பேய்கள் என்று பேய்நம்பிக்கை உள்ளவர்கள் கருதுகிறார்கள். இந்த நம்பிக்கையை குர்ஆனும் ஹதீஸ்களும் பொய்யென நிராகரிக்கிறது.
            இறந்தவர் நல்லவராக இருந்தாலும் தீயவராக இருந்தாலும் அவரின் உயிர் அல்லாஹ்வின் பிடியில் இருக்கிறது. அவனது கடுமையான பிடியிலிருந்து ஆவிகள் தப்பித்து வரவே முடியாது என்று திருக்குர்ஆன் கூறும் போது ஆவிகள் பூமியில் சுற்றித்திரிகிறது என நம்புவது குர்ஆனிற்கு எதிரானதும் மூடநம்பிக்கையுமாகும். எனவே பேய்கள் இருப்பதாக நம்பக்கூடாது.
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் (39 : 42)
பேய் நம்பிக்கை பொய்யானது என்பதை விரிவாக விளக்கும் வகையில் பேய் பிசாசு என்ற தலைப்பில் தனி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரம் அறிய அதை வாங்கி படித்துக்கொள்ளுங்கள்.
பேய்கள் என்று எதுவும் பூமியில் இல்லை. பேய் நம்பிக்கை என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக நம்புவதாகும். ஆனால் ஜின்களை நம்புவது பேய்களை நம்புவது போன்றதல்ல.
ஜின்கள் என்று ஒரு கூட்டம் தற்போதும் பூமியில் வாழ்ந்து வருவதாக குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகிறது. ஜின்களை மறுத்தால் குர்ஆனையும் ஹதீஸ்களை மறுத்ததாகிவிடும். எனவே ஒவ்வொருவரும் ஜின்கள் இருப்பதாக அவசியம் நம்பியாக வேண்டும்.
பேய் நம்பிக்கைக்கும் ஜின் நம்பிக்கைக்கும் உள்ள இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் இரண்டும் ஒன்று என்று சாதாரண அறிவு படைத்தவர் கூட கூறமாட்டார்.
ஜின்களின் வகைகள்
ஜின்களின் உடல் உறுப்புக்கள் மற்றும் தோற்றம் குறித்து விரிவான தகவல் ஹதீஸ்களில் கிடைக்கப்பெறவில்லை. காற்றில் பறந்து செல்பவர்கள் பூமியில் தங்கி வாழ்பவர்கள் நாய் மற்றும் பாம்பு வடிவில் திரிபவர்கள் இவ்வாறு மூன்று வகையினர் இருப்பதாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
            அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஜின்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு வகையினருக்கு இறக்கைகள் உண்டு. இவர்கள் காற்றில் பறந்து செல்வார்கள். நாய்களும் பாம்புகளும் இன்னொரு வகையினராகும். இன்னொரு வகையினர் (ஆங்காங்கே) தங்கிக்கொண்டும் (வேறு இடங்களுக்கு) பயனித்துக்கொண்டும் இருப்பார்கள்.
அறிவிப்பவர் : அபூ சஃலபா (ரலி)
நூல் : முஷ்கிலுல் ஆஸார் (2473)
பாம்வு வடிவிலும் நாய் வடிவிலும் சில ஜின்கள் இருக்கிறார்கள் என்று மேலுள்ள ஹதீஸ் கூறுகிறது. இன்றைக்கு உள்ள எல்லா நாய்களும் பாம்புகளும் ஜின்கள் தான் என்று புரிந்து விடக்கூடாது. இவ்வாறு புரிவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
பாம்புகளிலும் நாய்களிலும் ஜின்களாக இருப்பவையும் உண்டு. ஜின்களாக இல்லாதவையும் உண்டு என்று கூறுவதே ஏற்புடையதாகும். பாம்புகளில் இவ்வாறு இரு வகை இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.
பாம்பு வடிவில் ஜின்கள்
நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்த போது  அபூ லுபாபா (ர-) அவர்கள் என்னைக் கூப்பிட்டு, "அதைக் கொல்லாதீர்கள்'' என்று சொன்னார்கள். நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு  வீடுகüல் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்'' என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர-)
நூல் : புகாரி (3298)
வீட்டில் வசிக்கும் பாம்புகளை மட்டுமே நபி (ஸல்) அவர்கள் ஜின்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதிலிருந்து வீட்டிற்கு வெளியே சுற்றித்திரியும் பாம்புகள் ஜின்கள் இல்லை என்பதும் அவற்றை கொல்ல வேண்டும் என்பதும் தெளிவாகிறது.
வீடுகளில் தென்படுகின்ற பாம்புகள் அனைத்தும் ஜின்கள் தான் என்று விளங்கவிடக்கூடாது. பாம்புகளை வீட்டில் காணும் போது அவை வெளியேறுவதற்காக மூன்று நாட்கள் பொறுத்திருக்க வேண்டும். வெளியேறாவிட்டால் அவற்றை கொல்ல வேண்டும் என்று ஹதீஸில் உள்ளது.
ஹிஷாம் பின் ஸுஹ்ரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலிலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அப்போது அவர்கள் தொழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். ஆகவே, அவர்கள் தொழுகையை முடிக்கும்வரை அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அப்போது வீட்டின் மூலையிலிலிருந்த பேரீச்சமர காய்ந்த குச்சிகளுக்கு இடையிருந்து ஏதோ அசையும் சப்தத்தை நான் கேட்டேன். உடனே நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒரு பாம்பு இருந்தது. அதைக் கொல்வதற்காக நான் துள்ளிக் குதித்து எழுந்தேன்.
உடனே அபூசயீத் (ரலிலி) அவர்கள் அமருமாறு எனக்குச் சைகை செய்தார்கள். ஆகவே, நான் அமர்ந்துகொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபின் அவ்வீட்டிலிலிருந்த ஓர் அறையை எனக்குச் சுட்டிக்காட்டி, "இந்த அறையை நீர் காண்கிறீரா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்' என்றேன். அப்போது அபூசயீத் (ரலிலி) அவர்கள் கூறினார்கள்:
இந்த அறையில் புதிதாகத் திருமணமான எங்கள் இளைஞர் ஒருவர் இருந்தார். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அகழ்ப்போருக்குப் புறப்பட்டுச் சென்றபோது, அந்த இளைஞர் நண்பகல் நேரங்களில் தம் வீட்டாரிடம் திரும்பிச் செல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருந்தார்.
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். (அவர் திரும்பிச் செல்லப்போனபோது) அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது ஆயுதத்தை உம்முடனேயே வைத்துக்கொள். ஏனெனில், பனூ குறைழா யூதர்களை உம்முடைய விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்'' என்று சொன்னார்கள். அவ்வாறே அந்த மனிதர் (தம்முடன்) ஆயுதத்தை எடுத்துக்கொண்டார்.
பிறகு அவர் திரும்பி வந்தபோது அவரது (புது) மனைவி வீட்டு வாசலில் இரு நிலைக் கால்களுக்கிடையே நின்றுகொண்டிருந்தாள். உடனே அவர் அவள்மீது எறிவதற்காக ஈட்டியை நோக்கித் தமது கையைக் கொண்டு சென்றார். உடனே அவருடைய மனைவிக்கு ரோஷம் ஏற்பட்டு, "ஈட்டி எறிவதை நிறுத்துங்கள். (முதலிலில்) வீட்டுக்குள் நுழைந்து, நான் வெளியே வந்து நின்றதற்கு என்ன காரணம் என்பதைப் பாருங்கள்'' என்று கூறினாள். அவ்வாறே அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்த போது, அங்கு மிகப் பெரிய பாம்பு ஒன்று படுக்கை விரிப்பின் மீது சுருண்டு கிடந்தது.
உடனே அவர் அதன் அருகில் ஈட்டியைக் கொண்டுசென்று அதன் உடலுக்குள் ஈட்டியைச் செருகினார். பிறகு அறையிலிலிருந்து வெளியே வந்து வீட்டி(ன் வளாகத்தி)ல் அந்த ஈட்டியை நட்டு வைத்தார். அந்த ஈட்டியில் கிடந்து பாம்பு துடித்தது. பிறகு அவ்விருவரில் யார் முதலிலில் இறந்தார்கள். அந்த பாம்பா? அல்லது அந்த இளைஞரா என்பது தெரியவில்லை. (பாம்பும் இளைஞரும் இருவருமே இறந்துவிட்டனர்.)
உடனே நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தகவல் தெரிவித்தோம்; "அவரை (மீண்டும்) உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் நண்பருக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்'' என்று சொன்னார்கள்.
பிறகு "மதீனாவில் ஜின்கள் சில இஸ்லாத்தைத் தழுவியுள்ளன. அவற்றில் எதையேனும் நீங்கள் (பாம்பு வடிவத்தில்) கண்டால், அதற்கு நீங்கள் (வெளியேறுமாறு) மூன்று நாட்கள் அறிவிப்புச் செய்யுங்கள். அதற்குப் பின்னரும் அது உங்களுக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான்தான்'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : முஸ்லிம் (4502)
மூன்று நாட்களுக்குள் வெளியேறிவிடுகின்ற பாம்புகளில் ஜின்களும் இருக்கலாம். ஜின்களாக இல்லாதவையும் இருக்கலாம். அறிவிப்புச் செய்து மூன்று நாட்கள் கடந்த பிறகும் வீட்டில் பாம்புகள் தென்பட்டால் நிச்சயமாக அவை ஜின்களாக இருக்க முடியாது. அவை மனிதனிற்கு கேடு விளைவிக்கும் சாதாரண பாம்பு என்பதால் அதைக் கொல்லுமாறு நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
நாய் மற்றும் பாம்புகளின் தோற்றத்தை மட்டுமே நம்மால் காணமுடியும். ஜின்களின் உண்மையான தோற்றத்தை காண இயலாது. ஒரு குறிப்பிட்ட நாயையோ அல்லது பாம்பையோ ஜின் என்று நம்மால் முடிவு செய்யவும் இயலாது.
நாய் மற்றும் பாம்பு வடிவில் உள்ள ஜின்களால் சாதாரண நாய்களாலும் பாம்புகளாலும் என்ன செய்ய முடியுமோ அதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது. பொதுவாக ஜின்களுக்கு வழங்கப்பட்டுள்ள அளப்பறிய ஆற்றல்கள் இந்த வகை ஜின்களுக்கு வழங்கப்படவில்லை.
மதீனாவிற்கு மட்டும் உரிய சட்டம்
பாம்புகளைக் கண்டால் எடுத்தஎடுப்பில் கொன்றுவிடாமல் வெளியேறுமாறு மூன்று நாட்கள் வரை அறிவிப்புச் செய்ய வேண்டும் என்ற இந்த சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு மட்டும் பிரத்யேகமானதாக கூறியுள்ளார்கள். 
மதீனாவில் ஜின்கள் சில இஸ்லாத்தைத் தழுவியுள்ளன என்று நபியவர்கள் கூறியதிலிருந்து இச்சட்டம் மதீனாவிற்கு மட்டும் உரியது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மதீனாவில் இஸ்லாத்தைத் தழுவிய ஜின்கள் சில உள்ளன. உங்களில் ஒருவர், அவற்றில் எதையேனும் இந்தக் குடியிருப்புகளில் (பாம்பின் உருவில்) கண்டால் மூன்று நாட்கள் அவற்றுக்கு அவர் அறிவிப்புச் செய்யட்டும். அதற்குப் பின்னரும் அது அவருக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடட்டும்! ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : முஸ்லிம் (4504)
உருமாற்றம் செய்யப்பட்ட ஜின்கள்
            சில ஜின்கள் பாம்புகளாக உருமாற்றம் செய்யப்பட்டன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இஸ்ரவேலர்களில் (சிலர்) பன்றிகளாகவும் குரங்குகளாகவும் உருமாற்றம் செய்யப்பட்டதைப் போல் (சில) ஜின்கள் பாம்புகளாக உருமாற்றப்பட்டுள்ளன.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அஹ்மத் (3085) தப்பரானீ (4364)
உருமாற்றப்பட்ட உயிரினங்களுக்கு சந்ததிகளை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. இந்த வகை உயிரினங்களுக்கு வழிதோன்றல்கள் இல்லாததால் அவை ஒரு குறிப்பிட்ட காலத்துடன் அழிந்து போயிருக்கும். எனவே தற்காலத்தில் பாம்பு வடிவில் உருமாற்றப்பட்ட ஜின்கள் இருப்பதற்கு சாத்தியமில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ் ஊருமாற்றிய எந்தச் சமுதாயத்தாருக்கும் சந்ததிகளையோ வழித்தோன்றல்களையோ அவன் ஏற்படுத்தியதில்லை.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : முஸ்லிம் (5176)
பாம்புகளை கொல்ல வேண்டும்
            பாம்புகள் மனித உயிரை பறிக்கின்ற விஷப்பிராணி என்பதால் அவற்றை கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே பாம்புகளைக் கண்டால் கொல்லாமல் விட்டுவிடக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, "பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட ("துத் துஃப்யத்தைன்' என்னும்) பாம்பையும் குட்டையான- அல்லது- சிதைந்த வால் கொண்ட ("அப்தர்' எனும்) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையை அவித்து விடும்; கருவைக் கலைத்து விடும்'' என்று  சொல்ல நான் கேட்டேன்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (3297)
நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள) ஒரு குகையில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்களுக்கு, "வல் முர்சலாத்தி'' (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!) எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்கொண்டிருந்தார்கள். நான் அதை அவர்கüன் வாயி-ருந்து புத்தம்  புதிதாகச் செவியேற்றுக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பாம்பு (புற்றிலிருந்து) எங்களை நோக்கித் துள்ü வந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "அதைக் கொல்லுங்கள்!'' என்றார்கள். அதை நோக்கி போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது (தனது புற்றுக்குள் ஓடிப்) போய் (நுழைந்து)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் அதன் தீங்கி-ருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கி-ருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர-)
நூல் : புகாரி (4934)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்!  அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை பாம்பு காகம், பருந்து, எலிலி, வெறிநாய் ஆகியனவாகும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : நஸயீ (2780)
பாம்புகள் பலிவாங்குமா?
பாம்புகளை கொன்றால் அவை இறந்த பிறகு மீண்டும் உயிர் பெற்று தன்னைக் கொன்றவரை பலிவாங்கும் என்ற தவறான நம்பிக்கை சில மக்களிடம் உள்ளது. அடிபட்ட பாம்பு தப்பிவிட்டால் அடித்தவரை அது பாலிவாங்காமல் விடாது என்று கருதி பாம்பைக் கண்டால் பயந்து நடுங்குபவர்களும் உண்டு.
இது போன்ற தவறான நம்பிக்கையின் காரணமாக பாம்புகளை கொல்லாமல் விடுவது பாவம் என்கின்ற அளவிற்கு நபி (ஸல்) கண்டித்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பாம்புகள் பலிவாங்கிவிடும் என்று பயந்து யார் அவைகளை கொல்லாமல் விட்டுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. பாம்புகளுடன் நாம் சண்டையிடத்தொடங்கியது முதல் என்றுமே அவைகளுடன் நாம் இணக்கமானதில்லை.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அபூதாவுத் (4570)
ஜின்களில் ஆண்களும் பெண்களும் உண்டு
ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண் பெண் என்ற இரு இனம் இருப்பது போல் ஜின்களிலும் ஆண் பெண் இனங்கள் உண்டு. மனிதர்களில் ஆண் இனம் இருப்பது போல் ஜின்களிலும் ஆண் இனம் உள்ளது என்று திருமறைக் குர்ஆன் கூறுகிறது.
மனிதர்களில் உள்ள ஆண்களில் சிலர் ஜின்களில் உள்ள சில ஆண்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தனர். எனவே இவர்களுக்கு கர்வத்தை அவர்கள் அதிகமாக்கி விட்டனர்.
அல்குர்ஆன் (72 : 6)
ஷைத்தான்கள் ஜின் இனத்தைச் சார்ந்தவர்களாவர். ஷைத்தான்களில் ஆண் பெண் இனம் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஜின்களில் இவ்விரு இனம் இருப்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, "இறைவா! (அருவருக்கத்தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (142)
ஜின்களின் இனப்பெருக்கம்
ஜின்களில் ஆண் பெண் ஜோடிகள் இருப்பதால் அவர்களுக்கிடையே இணைபெருக்கம் நடைபெறும் என்பதை அறியலாம். ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தானிற்கு வழிதோன்றல்கள் இருப்பதாக அல்லாஹ் கூறுவதிலிருந்தும் இதை அறியாம்.
என்னையன்றி ஷைத்தானையும், அவனது சந்ததிகளையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்கிறீர்களா? அவர்கள் உங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் பகரமாக்கியது மிகவும் கெட்டது.
அல்குர்ஆன் (18 : 50)
இணைப்பெருக்கத்திற்குத் தேவையான காம உணர்வை மனிதர்களுக்கு ஏற்படுத்தி இருப்பது போல் ஜின்களுக்கும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.
அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும் ஜின்னும் தீண்டியதில்லை.
அல்குர்ஆன் (55 : 56)
தனது துணையை தீண்டும் பண்பு மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் உண்டு என்ற கருத்து மேற்கண்ட வசனத்தில் உள்ளடங்கியுள்ளது.
மனிதன் விரும்புகின்ற விஷயங்களில் இல்லற இன்பம் முக்கியமானது. இதை மனிதன் மட்டுமல்லாமல் ஜின்களும் பெரும் பாக்கியமாக நினைக்கிறார்கள் என்பதால் மனித ஜின் கூட்டத்தினரை அழைத்து இந்த பாக்கியம் சொர்க்கத்திலும் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அங்கேயும் சிறந்த அழகிகள் இருப்பார்கள். உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட ஹூர் எனும் கன்னியராவர். உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
இவர்களுக்கு முன் அவர்களை எந்த மனிதனும் ஜின்னும் தீண்டியதில்லை. உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
பச்சை நிறத்து இரத்தினக் கம்பளத்தின் மீதும், அழகிய சாய்மானத்தின் மீதும் சாய்ந்து கொண்டிருப்பார்கள்.
அல்குர்ஆன் (55 : 70)
ஜின்களுக்கிடையே அன்பு
நேசிப்பது இரக்கப்படுவது போன்ற குணங்கள் ஜின்களுக்கும் உண்டு.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகிய வற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் அவை ஒன்றன்மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி)
நூல் : முஸ்லிம் (5312)
ஜின்களின் உணவு
மனிதர்கள் உண்டுவிட்டு எரியும் எலும்புகளும் கால்நடைகளின் சாணங்களும் கரிக்கட்டைகளும் ஜின்களின் உணவாகும். சாப்பிடுவதற்கு இவற்றில் ஒன்றுமில்லையே என்று நமக்குத் தோன்றினாலும் ஜின்களுக்கு அதில் அல்லாஹ் நிறைவான உணவை வைத்துள்ளான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னிடம் "நஸீபீன்' என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்கüன் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், "அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்'' என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்.''என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)
நூல் : புகாரி (3860)
ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட) உணவு குறித்துக் கேள்வி கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் பெயர் சொல்லிலி அறுக்கப்பட்ட ஒவ்வொரு பிராணியின் எலும்பும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அது உங்கள் கரங்களில்  இறைச்சியைவிட நிறைவானதாக இருக்கும். ஒவ்வொரு கெட்டிச் சாணமும் உங்களுடைய கால்நடைகளுக்குத் தீவணமாகும்'' என்று கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), "எனவே, நீங்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின்பு எலும்பு, கெட்டிச் சாணம் ஆகிய) அவ்விரண்டின் மூலம் துப்புரவு (இஸ்தின்ஜா) செய்யாதீர்கள்; அவ்விரண்டும் உங்களுடைய சகோதரர்க(ளான ஜின்க)ளின் உணவாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : முஸ்லிம் (767)
ஜின்கள் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து முஹம்மதே எழும்பு கெட்டிச் சாணம் கறிக்கட்டை ஆகியவற்றால் துப்புரவு செய்வதை விட்டும் உங்கள் சமுதாயத்தினரை தடுங்கள். ஏனென்றால் இவற்றில் தான் அல்லாஹ் எங்களுக்கு உணவை ஏற்படுத்தியிருக்கிறான் என்று கூறின. ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதனை தடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
அபூதாவுத் (35)

மறுமையில் நஷ்டவாளி யார் part - 4

 
 (9) பெருமையடிக்கும் ஏழை

பொதுவாக தற்பெருமை கொள்வதற்கு காரணமாக அமைவது செல்வாக்குத் தான். அந்த செல்வாக்கு இல்லாத ஏழை தற்பெருமை கொள்கின்றான் என்றால் அவன் வரட்டு கௌரவம் கொள்கின்றான் என்றே சொல்லப்படும். ஆக சந்தர்ப்ப சூழ்நிலையைக் கூட காரணம் காட்டமுடியாக இவன் இப்பாவத்தில் ஈடுபடுவதற்கு காரணம் அல்லாஹ்வுடைய விஷயத்தில் அவனுடைய அலட்சியப் போக்குத்தான். எனவே இவன் மீதும் அல்லாஹ் கோபம் கொள்கிறான்.

மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்களில் ஓருவன்) விபச்சாரம் செய்யும் கிழவன். (மற்றொருவன்) பொய் கூறும் அரசன். (மற்றொருவன்) பெருமையடிக்கும் ஏழை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)

நூல் : (முஸ்லிம் : 172)

பெறுமை கொள்வதற்குரிய தண்டனைகளை கணுக்காலுக்கு கீழே ஆடையை தொங்விடுபவன் என்ற தலைப்பிற்குள் விரிவாகப் பார்த்துவிட்டோம். ஓரு முஃமின் சொர்க்கத்தில் நுழைவதற்கு பெருமை மாபெரும் தடைக்கல்லாக நிற்கிறது.

யார் பெறுமை மற்றும் மோசடி மற்றும் கடன் ஆகியவற்றை விட்டு நீங்கியவராக மரணிக்கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : சவ்பான் (ரலி)

நூல் : (திர்மிதி : 1497)

(10) பெற்றோர்களை விட்டு ஓதுங்கியவன்

மனிதநேயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இக்காலகட்டத்தில் முதியோர் இல்லங்கள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. மிருகங்களிடத்தில் காட்டும் அன்பையும் பாசத்தையும் தன்னைப் பெற்றெடுத்த பெற்றோரிடத்தில் யாரும் காட்டுவதில்லை. உரிமை பரிக்கப்படும் போது ஓங்கி எழும் குரல்கள் பெற்றோர்களின் உரிமை பரிக்கப்படும் போது ஓய்ந்துவிடுகின்றன.

                தன்னை எவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் வளர்த்திருப்பார்கள் என்று பிள்ளைகள் நினைத்துப்பார்ப்பதில்லை. மனிதன் தனக்கு திருமணம் ஆகாத வரைக்கும் பெற்றோரை கவனிக்கின்றான். அவனுக்கு ஓரு துணை வந்துவிட்டால் பெற்றோர்களை மறந்துவிடுகின்றான். மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்றவன் தாய் தந்தையை அனாதையாக தவிக்க விட்டுவிடுகிறான். இந்த மாபெரும் பாவச்செயலில் ஈடுபடுவோரை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். அவர்களிடத்தில் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான்.

                அல்லாஹ்விற்கு சில அடியார்கள் உண்டு. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான் என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார் என்று கேட்கப்பட்டது. (அதற்கு) நபி (ஸல்) அவர்கள் (ஓருவன்) தனது பெற்றோரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன். (மற்றொருவன்) தனது பிள்ளையை விட்டு விலகியவன். (மற்றொருவன்) ஓரு கூட்டம் அவனுக்கு உதவி செய்தது. அவன் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி மறந்து அவர்களை விட்டும் விலகியவன் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் :முஆத் பின் அனஸ் (ரலி)

நூல் : (அஹ்மத் : 15083)

(11) தன் பிள்ளையை விட்டு விலகியவன்

சிலர் பெற்றெடுப்பது மட்டும் தான் கடமை என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளை ஓழுக்கமாக பண்புடன் வளர்க்கத் தவறிவிடுகிறார்ள். அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை கூட நிறைவேற்றாமல் அநாதையாக விட்டுவிடுகிறார்கள். இதனால் அவர்கள் சமுதாயத்தில் தீயவர்களாக வளர்கிறார்கள். பெற்றோரின் பாசம் இல்லாத காரணத்தினால் முரடர்களாக மாறுகிறார்கள். இது போன்ற காரணங்களால் அல்லாஹ் தன்  பிள்ளைக்கு செய்ய வேண்டிய  கடமைகனள நிறைவேற்றாமல் விலகியவனுக்கு இந்த தண்டனையைத் தருகின்றான்.

அல்லாஹ்விற்கு சில அடியார்கள் உண்டு. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான் என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார் என்று கேட்கப்பட்டது. (அதற்கு) நபி (ஸல்) அவர்கள் (ஓருவன்) தனது பெற்றோரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன். (மற்றொருவன்) தனது பிள்ளையை விட்டு விலகியவன். (மற்றொருவன்) ஓரு கூட்டம் அவனுக்கு உதவி செய்தது. அவன் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி மறந்து அவர்களை விட்டும் விலகியவன் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : முஆத் பின் அனஸ் (ரலி)

நூல் : (அஹ்மத் : 15083)

                மனிதன் இறந்ததற்குப் பின்னாலும் அவனுக்கு நன்மையை ஈட்டித்தரக்கூடியதாக  அவனால் நல்ல முறையில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆகும். இவனது பிள்ளைகள் இவனுக்காக பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் இறந்துவிட்ட இவனுக்கு நன்மை கிடைத்துக்கொண்டே இருக்கும்.

                மனிதன் இறந்துவிட்டால் மூன்றைத் தவிர அவனுடைய நல்ல செயல்பாடுக்ள் முடிவுபெற்றுவிடுகின்றன். (ஓன்று) நிலையான சொர்க்கம் (மற்றொன்று) பிரயோஜனமிக்க கல்வி (மற்றொன்று) அவனுக்காக பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)

நூல் : (முஸ்லிம் : 3084)





(12) நன்றி மறப்பவன்

                ஓருவன் தன்னைப் போன்ற ஓருவனுக்கு செய்யும் தீமைகளில் நன்றி மறப்பதும் ஓன்றாகும்.இக்குற்றத்தை செய்வோரிடமும் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்.

                அல்லாஹ்விற்கு சில அடியார்கள் உண்டு. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான் என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார் என்று கேட்கப்பட்டது. (அதற்கு) நபி (ஸல்) அவர்கள் (ஓருவன்) தனது பெற்றோரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன். (மற்றொருவன்) தனது பிள்ளையை விட்டு விலகியவன். (மற்றொருவன்) ஓரு கூட்டம் அவனுக்கு உதவி செய்தது. அவன் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி மறந்து அவர்களை விட்டும் விலகியவன் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : முஆத் பின் அனஸ் (ரலி)

நூல் : (அஹ்மத் : 15083)

பிறர் செய்த உதவியை எண்ணிப் பார்க்காமல் நன்றிகெட்டு நடப்பவர் அல்லாஹ்வுக்கு எவ்வுளவுதான் நன்றி செலுத்தினாலும் உதவிசெய்தவருக்கு நன்றி செலுத்தும் வரை அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவராக ஆகமுடியாது. இதையே பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.

                மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவனாக ஆகமாட்டான்.

அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)

நூல் : (திர்மிதி : 1877)

                தனக்கு உதவியவருக்கு நன்றி செலுத்தும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகாக விளக்கியுள்ளார்கள்.

                (உங்களில்) ஓருவருக்கு நன்மை செய்யப்பட்டு அவர் அந்நன்மை செய்தவருக்கு جَزَاكَ اللَّهُ خَيْرًا  (அல்லாஹ் உங்களுக்கு நன்மையை கூலியாக வழங்குவானாக) என்று கூறினால் அவர் அதிகமாக நன்றி செலுத்தியவராகிவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல் : (திர்மிதி : 1958)

                அதாவது நீங்கள் எனக்கு செய்த உதவிக்கு பிரதி உபகாரம் என்னால் செய்ய முடியாது. இதற்கான கூலியை என்னால் வழங்க முடியாது. அல்லாஹ்வே இதற்கு உங்களுக்கு கூலி தருவான் என்பது இந்த ஹதீஸின் பொருளாகும்.

                நமக்கு உதவி செய்தவருக்கு பதிலாக நாம் நன்றி செலுத்தும் முகமாக நாம் அவருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

                உங்களுக்கு யாரேனும் நன்மை செய்தால் அவருக்கு பிரதி உபகாரமாக எதையாவது கொடுங்கள். பிரதி உதவி செய்வதற்கு உங்களிடத்தில் எதுவும் இல்லையென்றால் நீங்கள் அவருக்கு பரிகாரம் செய்துவிட்டதாக எண்ணும் வரை அவருக்காக துஆ செய்யங்கள் என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் இப்னு உமர்

நூல் : (அஹ்மத் : 5110)

நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்று அதற்கு (பதிலாக எதையாவது கொடுத்து) ஈடுசெய்து வந்தார்கள்.



அறிவிப்பாளர் :ஆயிஷா (ரலி) அவர்கள்

நூல் : (புகாரி : 2585)

ஞாயிறு, 6 ஜூன், 2010

2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?

2002 என்.டி.7 (2002 N.T.7) என்ற விண்கல் ஒன்று விநாடிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது 2019வது ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி பூமியைத் தாக்கும் என்று விஞ்ஞானிகள் நாள் குறித்தனர். ‘இந்த விண்கல்லின் அகலம் 3 கிலோமீட்டர். இது பூமியின் மீது மோதினால் 77 லட்சம் அணுகுண்டுகள் வெடித்தது போன்ற பேரழிவு ஏற்படும், பூமியில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்துவிடும், கடல்பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வற்றிவிடும், தொடர்ந்து 16 மணிநேரம் வானம் இருட்டாக இருக்கும், 12 கோடி பேர் இறந்து போவார்கள், ஓசோன் படலத்தில் பெரிய ஓட்டை விழுந்து பகலில் அதிக வெப்பமும், இரவில் அதிக குளிரும் இருக்கும்’ என்று ஆல்ஸ்டர் அப்ஸர்வேஷன் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஆனால் பின்னர் வெளியான ஆராய்ச்சி முடிவுகள் இந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் என்றும் அப்படியே பூமியின் பாதையில் வந்தாலும் அதைத் தாக்கி அழிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளன. விண்கற்கள் பூமியின் பாதையில் வருவதும், பின்பு அவை விலகிச் செல்வதும் விண்வெளி வரலாற்றில் அவ்வவப்போது நடைபெறும் நிகழ்வுகளே. எனவே பயம் கொள்ளத் தேவையில்லை

உரோமம் நரைப்பது ஏன்?

“நரைத்தமுடி அறிவின் அடையாளம்” என்பதெல்லாம் பொய் என்கிறது ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு. கறுத்தமுடி நரைத்துப் போவது ஏன் என்பதற்கும் இப்போது விடை காணப்பட்டுள்ளது.

நம்முடைய உரோம செல்களில் இயற்கையாகவே சிறிதளவு ஹைட்ரஜன் பெராக்சைடு என்னும் வேதிப்பொருள் சுரக்கிறது. வயது அதிகரிக்கும்போது இவ்வாறு சுரக்கப்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் அளவும் அதிகரிக்கிறது. உரோமத்திற்குள்ளேயே ஏற்படும் இந்த மாற்றங்கள் முடியை சாம்பல் நிறத்திற்கு மாற்றி அதன் பிறகு வெள்ளையாக்கிவிடுகிறது என்கிறார்கள் இந்த ஐரோப்பிய விஞ்ஞானிகள்.

உரோமத்திற்கு இயற்கையாகவே நிறமூட்டுவது மெலனின் என்னும் வேதிப்பொருளாகும். உரோமம், கண்கள், தோல் இவற்றின் நிறத்தை தீர்மானிப்பது இந்த மெலனின் தான். மெலனின் சுரப்பதை ஹைட்ரஜன் பெராக்சைடு தடைசெய்துவிடுவதுதான் பிரச்சினையின் மூலவேர்.

மனிதர்களின் உரோமக்கால்களின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. உரோமக்கால்களில் சுரக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடை தண்ணீராகவும், ஹைட்ரஜன் வாயுவாகவும் சிதைவடையச் செய்யும் பணியை MSR A and B என்னும் என்சைம்கள் செய்கின்றன. MSR A and B என்சைம்கள் சுரப்பது குறைவடையும்போது ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைவடைவதும் குறைந்துபோகிறது. ஹைட்ரஜன் பெராக்சைடு அதிகரிப்பதால் tyrosinase என்னும் என்சைம் உற்பத்தியாவதும் நின்று போய்விடுகிறது. மயிர்க்கால்களில் மெலனின் சுரப்பதற்கு இந்த tyrosinase எனப்படும் என்சைம்தான் காரணம்.

இதயம்" சில ஆச்சரியமான உண்மைகள்

மனிதன் உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் ஒன்று இதயம்.

இதயமானது தொடர்ச்சியாக 12 மணி நேரத்தில் பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டு 6 டன் எடையுள்ள பொருளை தரையில இருந்து 2 அடி உயரத்துக்கு தூக்க முடியும்.

இதயமானது ஒவ்வொரு முறை சுருங்கும்போதும் உடலில் உள்ள மொத்தம் சுமார் பத்தாயிரம் மைல் நீளம் உள்ள ரத்தக் குழாய்களில்  ரத்தத்தை அனுப்புகிறது. இந்த ரத்தக் குழாய்களின் மொத்த நீளமானது நம் நாட்டில் உள்ள ரயில்வே இரும்புப் பாதையன் மொத்த நீளத்தை விட மூன்று மடங்கு அதிகம்.

மருத்துவர்களால் புரிந்துகொள்ள முடியாத சில புதிரான ஆற்றல்களை இதயம் பெற்றுள்ளது. இதயத்தைப் பிணைத்திருக்கும் பலவகையான  நரம்பு அமைப்புகளை முழுமையாகத் துண்டித்துவிட்டால்கூட, இதயம் எந்தவிதமான பாதிப்புக்கும் ஆளாகாமல், தானாகவே இயங்கும் ஆற்றல்  பெற்றது.

ஒவ்வொரு நாளும் இதயமானது ஒரு லட்சம் முறை விரிந்து சுருங்குகிறது. இந்தக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் 70  ஆண்டுகள் உயிர் வாழும் ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயமானது 25 ஆயிரம் கோடி முறை சுருங்கி விரிகிறது.

ஒரு நாளில் இதயமாவது 1800 காலன் (7200 லிட்டர்) அளவு ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது. இந்த அளவில் கணக்கிட்டால் இதயமானது ஒரு மனிதனின் வாழ்நாளில் சுமார் 4.6 கோடி காலன அளவு ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கு அனுப்புகிறது.

இதயத்தின் ஆற்றலானது (Power) ஒரு குதிரையின் ஆற்றலில் (Horse Power) 240&ல் ஒரு பங்கு.

இதயமானது ஒவ்வொரு முறை சுருங்கும்போதும் சுமார் 11 பிண்ட் (PINT) அளவுள்ள ரத்தத்தை ரத்தக் குழாய்களின் மூலமாக உடலின் பல  பாகங்களுக்கு அனுப்புகிறது.

இதயமானது ஓர் ஆண்டில் வெளியேற்றும் ரத்தத்தின் அளவானது 6.5 லட்சம் காலன்கள். இந்த அளவு ரத்தத்தைக் கொண்டு 900 காலன் கொள்ளளவு கொண்ட 72 லாரிகளை நிரப்பலாம்.

ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயமானது வெளிப்படுத்தும் ஆற்றலை ஒன்றாகத் திரட்டினால் அந்த ஆற்றலால் ஒரு டன் எடையுள்ள பொருளைத் தரையில் இருந்து சுமார் 150 மைல் உயரத்துக்குத் தூக்க முடியும்.

thanks : http://www.dinakaran.com/ 

நுரையீரல்களில் என்ன நடக்கிறது?

நுரையீரல் என்பது உயிரினங்கள் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் ஒரு முக்கிய உறுப்பாகும். மூச்சுக் காற்றை இழுத்து விடுதலுக்கு மூசுதல் என்று பெயர். வாயுப்பறிமாற்றம் இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதும், வேறு சில வேதிப்பொருட்களை செயலிழக்க செய்வதும் இதன் பணியாகும்.நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதற்கும் கார்பன்-டை-ஆக்சைடு வளிமத்தை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.

மருத்துவத்தில் பயன்படும் நுரையீரல் தொடர்பான இலத்தீன் அடிப்படைச் சொல் பல்மோ- (pulmo-) என்னும் முன்னொட்டு கொண்டிருக்கும். இது இலத்தீன் மொழிச்சொல்லாகிய பல்மொனாரியசு (pulmonarius = "நுரையீரல் தொடர்பான") என்னும் பொருளடியான சொல்லில் இருந்து பெற்றது. இன்னுமொரு பொதுவான மருத்துவக் கலைச்சொல் கிரேக்கமொழிச் சொல்லில் இருந்து பெற்ற நியுமோ- (pneumo-) என்னும் முன்னொட்டு கொண்டிருக்கும். இச்சொல் நுரையீரலைக் குறிக்கும் ப்நியுமோன் ((πνεύμων) என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து பெற்றது.


மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, காற்றுக் குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. காற்றுக்குழாய் மார்புப்பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes)இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் மூச்சுக் கிளைக் குழாய்கள் (பிரான்கியல் குழாய்கள்) பல நுண் கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்றறைகள் ஆகியஅல்வியோல் எனப்படும் காற்றுப்பைகளில் (நுண்வளிப்பைகளில்) முடிவுறும். அல்வியோலை எனப்படும் இவ் நுண்காற்றுப்பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டவை. இதில் பல நுண்ணிய இரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமனி மூலமாக வந்த கார்பன்-டை-ஆக்சைடு நிறைந்த இரத்தத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றி, புதிய ஆக்சிசனை ஏற்றுக்கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது. இந்த நுண்வளிப்பைகளில்தான் வளிமப் பரிமாற்றம் நிகழ்கின்றது. நுண்காற்றறைகள் (ஆல்வியோலை) சுருங்கி விரிதலையும் சில நோய்களால் நுரையீரல் பாதிக்கப்படும் போது எப்படி சுருங்கி விரியும்.

பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக்குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற, நாம் அறியாமலே அவற்றை விழுங்கிவிடுகிறோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கினுள்ளே உள்ள மயிர் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் முதலானவற்றால் வெளியேறிவிடும்

புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறை வந்தது எப்படி?

ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில் இருந்து 200 கிமீ தொலைவில் ‘லைலா’ மையம் கொண்டு இருந்தபோது, அதன் போக்கை கணிப்பது சிரமமாக இருந்தது. அப்போது அது மேற்கு வங்கத்தை தாக்கும் பாயமும் இருந்தது. மசூலிப்பட்டினம் அருகே புயல் இருந்தபோது, மேற்கு வங்கத்திலும் அதன் பாதிப்பு காணப்பட்டது. அதன் கடலோர மாவட்டங்களான வடக்கு 24 பர்கானா, தெற்கு பர்கானா, கிழக்கு மிட்னாப்பூர், ஹவுரா, ஹூக்ளி மாவட்டங்களில் கனமழை கொட்டியது. பலத்த காற்று வீசியது.
கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி உத்தரவிட்டது. பாதுகாப்பு படைகளை உஷார்நிலையில் வைத்தது. மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்தது. கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டன. ‘லைலா’வால் ஒரிசா கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அடுத்த புயல் பெயர் ‘பண்டு’ வடக்கு இந்தியப் பெருங்கடலில் அடுத்து எப்போது புயல் ஏற்படும் என்பது தெரியாது. ஆனால், அப்படி ஒரு புயல் உருவானால் அதற்கு வைக்கப்பட உள்ள பெயர் இப்போதே தயாராக இருக்கிறது. அதன் பெயர் ‘பண்டு’. புயலுக்கு பெயர் வைக்கும் சுழற்சியில், பாகிஸ்தானுக்கு அடுத்தப்படியாக இலங்கைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நாடு பரிந்துரை செய்துள்ள பெயர்தான் ‘பண்டு.’
கர்நாடகாவிலும் தாண்டவமாடியது

‘லைலா’வின் பாய்ச்சல் கர்நாடகா வரை சென்றது. அதன் ஆட்டத்தால் கர்நாடக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. காற்று விளாசியது. இதன் மூலம், 6 பேரை பலி வாங்கியது. சித்ரதுர்கா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பேர் கருகி இறந்தனர். மற்றொரு இடத்தில் தென்னை மரம் விழுந்து ஒருவர் பலியானார். உடுப்பி மாவட்டத்தில் குண்டப்பூரில் மின்னல் தாக்கி மற்றொருவர் இறந்தார். பெல்லாரி மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலியானார். ஆந்திராவில் கரை கடந்த ‘லைலா’ இன்று மாலை கர்நாடகா நிலப் பகுதிக்குள் நுழையலாம் என்று கருதப்படுகிறது.கடந்த 1970க்கு முன்பு வரை புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை கிடையாது. இந்தியாவில் வானிலை ஆய்வு மையங்கள் 1ஏ, 1பி என்று ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி புயலுக்கு பெயர் வைத்து வந்தன. சாதாரண மக்கள், ‘ஏதோ புயல் வருகிறது; போகிறது’ என்று இருப்பார்கள். புயல்களுக்கு பெயர் வைத்து அழைக்கப்பட்ட பிறகுதான் பாமர மக்களும் அதை எளிதாக நினைவில் வைத்துக் கொள்வதுடன், அந்த புயல் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் நிலையும் உருவானது.

1970ல் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டின்போது, பசிபிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி அந்த பகுதியை சேர்ந்த நாடுகளை உலக வானிலை அமைப்பு முதல் முறையாக கேட்டுக் கொண்டது. அதேபோல், வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி, 2000ல் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு & ஆசிய, பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய சபை பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் மாநாட்டில் இந்த பகுதியில் அமைந்துள்ள நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன. அதன்படி, வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகளும் சேர்ந்து 64 பெயர்களை கொண்ட பட்டியலை தயாரித்தன. வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்த பட்டியலில் இருந்து ஒவ்வொரு பெயராக வைக்கப்பட்டு வருகின்றன. ஒருமுறை ஒரு நாடு தேர்வு செய்த பெயர் வைக்கப்பட்டால், அடுத்த முறை வேறு நாடு தேர்வு செய்த பெயரில் புயல் அழைக்கப்படுகிறது. இதுபோல், 8 நாடுகளின் பெயர்களும் சுழற்சி முறையில் வைக்கப்படுகின்றன. அதன்படி, நேற்று கரை கடந்த புயலுக்கு பாகிஸ்தானின் ‘லைலா’ பெயர் வைக்கப்பட்டது. இதற்கு முன்பாக, ஓமன் பரிந்துரை செய்த பெயரான ‘வார்டு’ வைக்கப்பட்டது. புயல் உருவாகி கரை கடந்ததும், பட்டியலில் இருந்து அந்த பெயர் நீக்கப்படுகிறது. பிறகு, அந்த நாட்டின் சார்பில் புதிய பெயர் பரிந்துரை செய்யப்படுகிறது.

கடைசியாக, 8 நாடுகளின் சார்பில் புயல்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களின் விவரம் வருமாறு: நர்கீஸ் (பாகிஸ்தான்), ரஷ்மி (இலங்கை), காய்&முக் (தாய்லாந்து), நிஷா (வங்கதேசம்), பிஜ்லி (இந்தியா), அய்லா (மாலத்தீவு), பியான் (மியான்மர்), வார்டு (ஓமன்).

சனி, 5 ஜூன், 2010

மூளையே முதல் மந்திரி…

மனித உடலின் தலைமை செயலகம் மூளை.

உனக்கு மூளை இருக்கா ? என்று அறிவு இல்லாத செயல்களைச் செய்பவர்களைபார்த்து கேட்கின்றோம். மூளை செயலிழந்தது, மூளை இறப்பு அதனால் மற்றஉறுப்புகள் தானம் செய்யப்பட்டது என அண்மை காலங்களில் பத்திரிக்கைகளில்பார்க்கின்றோம். எனவே மூளை என்ற உறுப்பு, மற்ற உடல் உறுப்புகளின் செயல்இயங்கியல் நிகழ்ச்சிகளிலும், மனம் தொடர்பான அறிவு சார்பான இயக்கங்களிலும்முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உணர முடியும்.
மேல்நாட்டு மருத்துவர்கள் மூளையின் செயல்பாடுகளை பொறுத்து இரண்டு வகையாக பிரித்துள்ளனர்.
1. உடல் இயக்கம் சார்ந்த மூளை (Anatomical brain)
2. மன இயக்கம் சார்ந்த மூளை (Functional brain)
இது தவிர மூளையானது அதன் அமைப்பை பொறுத்து பல பகுதிகளாகபிரிக்கப்பட்டுள்ளது. இது மனிதனின் மிக முக்கிய உறுப்பாக இருப்பதால்மிகவும் பத்திரமாக எளிதில் உடையாத கபால ஓட்டினுள் வைக்கப்பட்டுள்ளது.
இதன் பகுதிகள்
பெருமூளை, சிறுமூளை, பான்ஸ், முகுளம் என பிரிக்கப்படுகிறது.
ஒரு கணிப்பொறி எவ்வாறு பல்லாயிரக்கணக்கான செய்திகளை சேகரித்துபாதுகாக்கின்றதோ, அதுபோல் மூளையும் நாம் பார்த்தது, கேட்டது, உணர்ந்தது,சுவைத்தது, நுகர்ந்தது என ஐந்து முக்கிய உணர்வு உறுப்புகளின் வாயிலாககிடைக்கும் தகவல்களை தனது செல்களில் பதியவைத்துக் கொள்கிறது. தேவையானநேரத்தில் தேவையான இடத்தில் தேவையான செய்திகளை வெளிக்காட்ட உதவுவது மூளை.
மூளையானது பலகோடிக்கணக்கான (சுமார் 800 கோடி) சிறப்புச் செல்களால் தன்னைஉருவமைக்கிறது. அதன் பெயர் நியூரான். இந்த நியூரான்கள்தான் மூளையின்கட்டளைகளை உடல் செல்களுக்கு கடத்துகிறது. மூளையை சிந்திக்க செய்கிறது.உடலில் ஏற்படும் உணர்வுகளை மூளைக்கு செலுத்துகிறது.
பொதுவாக மூளையானது சராசரியாக வளர்ந்த ஆண்களுக்கு 1400 கிராம் எடை உள்ளது.பெண்களுக்கு அதைவிட சற்று குறைவுதான் (1200 கிராம்) ஆனால் மூளையின்எடைக்கும் அறிவுத் திறனுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை. மூளையில் உள்ளமடிப்புகள் (கைரி மற்றும் சல்கஸ்) அமைப்பை பொறுத்தே ஒரு உயிரின்அறிவுத்திறன் தீர்மானிக்கப் படுகிறது.
பிரதம மந்திரியான மூளை தன்னுடைய வேலைகளைச் செய்ய தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள பன்னிரெண்டு ஜோடி முக்கிய மந்திரிகளையும் (கிரேனியல்நரம்புகள் எனப்படும் மூளை நரம்புகள்) 31 ஜோடி ராஜாங்க மந்திரிகளையும்(மூளைத் தண்டுவடத்தில் இருந்து கிளம்பும் தண்டுவட நரம்புகள்)நியமித்துள்ளது.
உடலின் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல் கல்லீரல், மண்ணீரல், கணையம்,சிறுநீரகம் மற்றும் இரைப்பை ஆகியவற்றை வேகஸ் (ஙச்ஞ்தண்) எனப்படும்பத்தாவது மூளை நரம்பின் மூலமாக நேரடியாக கட்டுப்படுத்துகிறது.
இது தவிர நம்முடைய உணர்வுகளை தூண்டுகின்ற வெளிப்படுத்துகின்ற செயல்களானஒலி, ஒளி, மணம், சுவை முதலியவற்றின் உறுப்புகளான காது, கண், மூக்கு,நாக்கு ஆகியவற்றையும் நேரடியாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
யாகாவாராயினும் நாகாக்க என்பது வள்ளுவர் வாக்கு. பேச்சு என்பது ஒருவரின்நடத்தை, வளர்ப்பு படிப்பு மற்றும் எண்ணங்களை வெளிப் படுத்துகிறது. எனவேவார்த்தையின் வடிவங்களை வேகங்களை, ஏற்ற இறக்கங்களை ஹைபோ கிளாசல்,கிளாளோபெரின்சியல் என்ற முக்கிய அமைச்சர்கள் மூலமாக நேரடிக்கடடுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது மூளை.
நமக்கு பிடித்தவற்றைப் பார்க்கும்போது, கேட்கும்போது, சுவைக்கும்போதுமுகத்தில் மகிழ்ச்சி தோன்றுகிறது. பிடிக்காதவற்றை கேட்கும்போது முகம்சுருங்குகிறது. பாம்பு, இருட்டு போன்றவற்றை பார்க்கும்போது பயம்முகத்தில் தெரிகிறது. நமது உணர்வுகளை வெளிக்காட்டும் கண்ணாடி முகம்.முகத்தில் ஏற்படும் அஷ்ட லட்சணம் என்று சொல்லப்படும் எட்டுவிதமானபாவனைகளையும் தேவையான சமயத்தில் காட்ட உதவுவது 8வது முக்கிய மந்திரியானமுக நரம்பு (பேசியல் நர்வ்)
இந்த பன்னிரெண்டு ஜோடி முக்கிய மந்திரி நரம்புகளும் முக்கிய இலாகாபொறுப்புகளுடன் மூளையின் நேரடித் தொடர்பில் இருக்க, குடிமக்களாகிய கை,கால், உடல் இயக்கங்களை கட்டுப்படுத்த 31 ஜோடி மூளைத்தண்டு வட நரம்புகளானஇணை அமைச்சர்களை நியமித்துள்ளது. அவர்கள் நாம் நடக்க, நிற்க, ஓட, கைகால்களை அசைக்கக் கூடிய வேலைகளை செய்கிறார்கள்.
இவை அனைத்தும் நியூரான் மூலமாக தங்கள் வேலைகளைச் செய்துகொண்டு இருக்க,சத்தமில்லாமல் மற்றொரு முக்கிய பணியைச் செய்கிறார் நமது பிரதம மந்திரி.
அது தன்னுடைய வேதியல் சுரப்பிகள் மூலமாக மனம் என்ற கண்ணுக்குத் தெரியாதஆனால் நம்மை முழுவதும் ஆளக்கூடிய மாய மந்திரவாதியை தன் கட்டுப்பாட்டில்வைத்திருப்பதுதான் .
வாழ்க்கையில் அனைவரும் வெற்றி தோல்விகளை சந்திப்பது வழக்கமான ஒன்று.ஆனால் தினசரி செய்தித்தாள்களில் பார்க்கும்போது தேர்வில் தோல்வி காதல்தோல்வி, வியாபாரத்தில் தோல்வி அதனால் தற்கொலை செய்து கொண்டனர் எனபார்க்கிறோம்.
தோல்வி அடைந்தவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதுதான் முடிவா?
அல்லது தோல்வி அடைந்த அனைவருமே தற்கொலை செய்து கொள்கிறார்களா?
இல்லை. பிறகு ஏன் ஓரு சிலர்மட்டும் இந்த முடிவை தேடிக்கொள்கிறார்கள்?
இதற்கு பதில் மனதிடம் இல்லாதது. அந்த மனதிற்கு திடத்தை தருவது மூளையில்சுரக்கக்கூடிய டோபமைன், செரடோனின் மற்றும் அசிடைல் கொலின் போன்றவேதிப்பொருட்களே.
மூளையின் இயக்கச் செயல்களை இந்த வேதிப்பொருட்கள் கட்டுப்படுத்துகின்றது.இதில் குறைபாடு ஏற்படும்போதே மனச்சோர்வு முதல் மனச்சிதைவு வரையிலான மனநோய்கள் ஏற்படுகின்றது. எண்ணச் சிதறல்கள், ஆளுமைக் கோளாறுகள், நடைமுறைகோளாறுகள் முதலியவையும் இதனாலேயே ஏற்படுகிறது.
நமது உடலின் அனைத்து இயக்கங்களையும் மற்றும் மனதின் முழுத் திறனையும்கட்டுப்பாட்டில் வைத்து, ஒரு மனிதனை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டுசெல்லும் மூளை மனிதனின் தலைமைச் செயலகம் மட்டுமல்ல.. அவனின் ஆணிவேரும்கூட…

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites