அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 11 நவம்பர், 2010

ஆபாச ஆடை


ஆபாசத்தை வெளிப்படுத்தும் ஆடைகளுக்கு இத்தாலி நகரில் தடை வருகிறது
உடல் அங்கங்களை வெளிப்படுத்தி ஆபாசத்தை உருவாக்கும் ஆடைகளுக்கு தடை விதிக்க இத்தாலியின் கடலோர நகரம் திட்டமிட்டுள்ளது.
பொது சமூகத்தின் கண்ணியத்தை நிலை நிறுத்தவும், சமூக பாதுகாப்பிற்கும் இத்தகைய சட்டங்கள் உதவும் என காஸ்டெல்லாமர் டிஸ்டாபியா நகர மேயர் லூகி போபியோ தெரிவிக்கிறார்.
நகரத்தின் அந்தஸ்தை நிலைநாட்டவும், குடிமக்களுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பு மனோபாவத்தை உருவாக்கவும் இத்தகைய சட்டங்கள் தேவை எனவும் அவர் தெரிவிக்கிறார்.
சட்டத்தை மீறுபவர்களுக்கு 35 டாலரிலிருந்து 696 டாலர் வரை அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி நீளம் குறைந்த இறுக்கமான ஜீன்ஸ்கள் அணிய தடை விதிக்கப்படும். கடற்கரையில் குளிப்பது, கால்பந்து விளையாடுவது ஆகியவற்றையும் தடைச் செய்ய திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை வருகிற திங்கள்கிழமை கூடும் மாவட்ட கமிட்டி விவாதிக்கும்.
நகர மேயரின் தீர்மானத்திற்கு சமூக சேவகர்களும், மதத் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது சரியான நடவடிக்கை என மதப் புரோகிதர் டான் போலோ சிகர் தெரிவித்துள்ளார்.
செய்தி : தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆண்களுக்கு உயிரணுக்கள் குறையுமா?


லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு உயிரணுக்கள்  குறையும் அபாயம்?
லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு உயிரணுக்கள்  எண்ணிக்கை குறைந்து குழந்தையின்மை ஏற்படும் அபாயம் உள்ளதாக குழந்தைப் பெரும் சிறப்பு நிபுணரும் பெங்களூரு உதவி கருத்தரிப்பு மையத்தின் இயக்குனருமான டாக்டர்.காமினி ராவ் தெரிவித்துள்ளார்.
18 முதல் 25 வயதுடைய ஆண்களில் 5 பேரில் ஒருவர் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லேப்டாப் உபயோகிப்பதால் அதில் இருந்து வரும் வெப்பக் கதிர் ஆண்களை தாக்கி அவர்களின் உயிரணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி குழந்தையின்மையை ஏற்படுத்துவதாகவும், லேப்டாப்பின் மேல் பாகம் தயாரிக்க பயன்படும் மூலப் பொருளில் உயிரணுக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேதிப் பொருட்கள் கலந்து உள்ளதாகவும் ராவ் தெரிவித்துள்ளார்.



மேலும் அதிகமாக காப்பி அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் அதில் உள்ள நச்சுப் பொருளால் உயிரணுக்கள் குறையும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நகர்ப் புறத்தில் இருக்கும் ஆண்களை விட கிராமப் புறத்தில் இருக்கும் ஆண்கள் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப் படாமல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்த ராவ் மாறி வரும் வாழ்க்கை முறைகளுக்கேற்ப நாமும் சில மாற்றங்களை கையாண்டால் இது போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார் அவர்.

இதன்படி முறையான உடற்பயிற்சி. சூடான நீரை பயன்படுத்தாமை, புகை மற்றும் காபி அருந்தும் பழக்கத்தை கை விடுதல், இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்தல் போன்ற பழக்கங்களை கடைப் பிடித்து வருவதன் மூலம் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

உலக அறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்


உலக அறிஞர்கள் பார்வையில்
நபிகள் நாயகம்
முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத பிற மதங்களைச் சேர்ந்த அல்லது மதக்கோட்பாடுகளில் ஈடுபாடு காட்டாத அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வெளியிட்ட சில கருத்துக்கள் இவை:
ஜவஹர்லால் நேரு
முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.
எஸ். எச். லீடர்
துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், முஹம்மது ஒரு சரித்திர நாயகர் என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.
வாஷிங்டன் இர்விங்
இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரேனும் மறுக்க முடியும்?
டாக்டர் ஜான்சன்
நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முழுக்க முழுக்க ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது. நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது. இஸ்லாம் அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது.
பெர்னாட்ஷா
முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.
நெப்போலியன்
திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.
ஜி.ஜி. கெல்லட்
இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.
வில்லியம் மூர்
சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது.
காந்திஜி
மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்ட போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன் எப்பொழுதையும் விட அதிகமாக உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர்பண்பு. எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக் காத்த தன்மை தம் தோழர்கள் மீது கொண்டிருந்த அழியாத அன்பு அவரது அஞ்சாமை இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தான் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலகச்சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தான் காரணமே தவிர வாள்பலம் அல்ல.
 (Young India, Quoted in The light, Lahore, for 16th Sep 1824. Mahatma Gandhi)
தாமஸ் கார்லைல்
நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.
டால்ஸ்டாய்
நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல.
கிப்பன்
அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே.
கலைஞர் கருணாநிதி
செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம்.
கவியரசி சரோஜினி நாயுடு
எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த மனிதர், ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூறினார். எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு குடிஅரசு எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரே விளக்கினார்.
எழுத்தாளர் பா. ராகவன்
ஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டு வாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார். துளி அகங்காரம் கிடையாது. பெருமையோ, வானவர் வந்து "இறைத்தூதர்" என்று அறிவித்துப்போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முகம்மது தம்மை இறுதிவரை கருதினார்.

மைக்கேல் ஹெச். ஹார்ட்   100 என்ற நூலில்..
மைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில், முதலில் 1000 பேரை தெரிவு செய்தார் பின்பு அதிலிருந்து 100 நபர்களை மட்டும் தேர்வு செய்தார்.இப்படி ஆய்வு செய்து முதலிடத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்.பின்பு இவ்வாறு கூறுகிறார்
இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தெடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் கொள்கை ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.
இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் பேன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவேரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தேன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.
 ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு(அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பெறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான். ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல், அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பெறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பெறுப்பினை மேற்கெண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் பேதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன. அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தெகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும், பேதனைகளும், கெள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது பேன்ற விரிவான பேதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் பேன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டுபண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே செல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் பேன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று செல்லலாம்.
இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் பேலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.    -
(The Hundred) தமிழில் அந்த நூறு பேர்.

எம்.பி. வரவும் செலவும்



நூற்றி பத்து கோடிக்கும் மேற்பட்டவர்களை சுமந்திருக்கும் இந்தியநாட்டை ஆளத் துடிப்பவர்கள் ஏராளம். எல்லாரும் இந்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, ஏழை எளிய மக்களை வாழவைக்க நாங்கள் நாடாளப் போகிறோம் என்று சொல்லி தங்கள் வாழ்க்கை வளப்படுத்தியவர்கள் தாம்அதிகம்.
தற்போது நடந்து முடிந்திருக்கும் 15ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் வியைôடி பணத்தை எல்லாரும் பார்த்திருப்பார்கள். ஒரு எம்.பி. தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு எவ்வளவு செலவழிக்கிறார் என்று நீங்கள் கணப்போட்டு பார்த்தால் இவ்வளவு பணத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலா செய்வார்கள்? என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் புதுவையையும் சேர்த்து மொத்தம் நாற்பது மக்களவைத் தொகுதிகள் உள்ளனர். இந்த தொகுதியில் வெற்றி பெறுவதற்கு கடும் சிரமங்களை மேற்கொண்டு அடி,தடி,பணம் என்று எல்லா வகையான முயற்சிகளையும் செய்தனர்.
தமிழ்நாட்டில் ஒரு மக்களைவைத் தொகுதி சுமார் ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் 1300 க்கும் மிகாத வாக்குச்சாவடிகளையும் கொண்டதாகும். இத்தணை தொகுதிகளிலும் எவ்வளவு செலவு செய்கிறார்கள் தெரியுமா?
தன்னை வேட்பாளராக கட்சி அறிவித்தவுடனே அந்த மகிழ்ச்சியை கொண்டாட பலாயிரம் ரூபாய் செலவழிக்கின்றனர். அடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய ஐந்து நபர்கள்தான் அவருடன் செல்ல வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. இந்த விதியை யாரும் மதிப்பதில்லை. படை பட்டாளத்துடன் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய செலவு மட்டும் குறைந்தது ஒரு லட்சம் செலவழிக்கப்படுகிறது.
வெற்றிபெறுவதற்கு செயல்வீரர்கள் கூட்டங்கள் நடத்த வேண்டும். ஒரு மக்களைத் தொகுதிக்கு மட்டும் சுமார் 12 ஒன்றியங்கள் வரை வரும். ஒரு ஒன்றியத்திற்கு செயல்வீரர்கள் கூட்டம் கூட்ட சுமார் ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை செலவாகுமாம். அனைத்து ஒன்றியத்திலும் செயல்வீரர்கள் கூட்டம் கூட்ட சுமார் 24 லட்சம் செலாவகும். அதாவது கால் கோடி செலவாகிறது.
பின்னர் ஊர் ஊராக கூட்டம் போட அதற்கு கணிசமான பணத்தை வாரி இறைக்க வேண்டும். இரண்டாம் நிலைத் தலைவர்கள் பேசினால் கூட ஒரு கூட்டத்திற்கு சுமார் 30 ஆயிரம் வரை தேவைப்படும். பெரிய தலைவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். முப்பதாயிரம் என்பது முப்பது லட்சம் வரை செலவாகும்.
மக்களை திரட்டுவது, சாப்பாடு செலவு, வாகனச் செலவு, டாஸ்மாக் செலவு என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆக ஒரு தொண்டனுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும்.
அடுத்த ஆறு சட்டமன்ற தொகுதியில் தொகுதிக்கு ஒன்று  அலுவலகம் திறக்க வேண்டும். ஒரு அலுவலகத்திற்கு மட்டும் தேர்தல் நடக்கும் வரை அதை பராமரிக்க, அங்கு இருப்பவர்களுக்கு செலவு செய்ய சுமார் ஐம்பதாயிரம் செலவாகும். ஆறு தொகுதிக்கும் கணக்கிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.
இத்துடன் தன்னைப்பற்றி விளம்பரம் செய்ய சுவொட்டிகள், துண்டு பிரசுரங்களுக்கு என்று பல லட்சத்தை இழக்க வேண்டும். இதை தொகுதி முழுவதற்கும் கொண்டு செல்ல குறைந்த பட்சம் ஐம்தாயிரம் வரையாவது செலவாகும்.
இத்துடன் டி.வி.யில் விளம்பரம் செய்தால் அதற்கும் இலட்சத்தை வைக்கவேண்டும். அத்தோடு ஆறு சட்டமன்ற தொகுதிகயிலும் வாகன விளம்பரம் செய்ய குறைந்த பட்சம் ஒரு தொகுதிக்கு இரண்டு வாகனம் என்று பார்த்தாலும் 12 வாகனங்களுக்கு பத்து பதினைந்து நாட்கள் விளம்பரம் செய்ய இரண்டு லட்சம் வரை செலவாகும்.
இப்படி மக்களைத் தேர்தலுக்கு ஒரு வேட்பாளர் குறைந்த பட்ச செலவு ஐந்து கோடியிலிருந்து பத்து கோடி ரூபாய் வரை ஆகும்.
இதுவல்லாமல் இன்றைய கால சூழ்நிலைக்கு ஏற்ப பணத்தை வாரி இறைத்து ஓட்டு வாங்க வேண்டுமானால் சுமார் பதினைந்து கோடி செலவழிக்க வேண்டும். செலவழித்துக் கொண்டுதான் இப்போதும் இருக்கிறார்கள்.
இத்தனை கோடிகளை செலவழித்து மக்களுக்கு தொண்டாற்ற இவர்கள் என்ன உலகபற்ற உண்மையான ஆன்மீகவாதிகளா? ஒன்றுக்கு பத்து கிடைக்கும் என்ற பேராசையில்தான் இத்தனை கோடிகளை வாரிஇறைக்கிறார்கள் என்பது பாரம மக்களுக்குத் தெரிவதில்லை. உண்மையில் ஒரு வேட்பாளர் மக்களைத் தேர்தலில் போட்டி போடுகிறார் என்றார் அவர் கோடிஸ்வரராக இருக்க வேண்டும். அல்லது கோடிகளை எங்கிருந்தாவது புரட்டுபவராக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இத்தனை செலவு செய்யும் வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டால் வரவு எவ்வளவு தெரியுமா?
அதிகாரப்பூர்வமாக அரசு செலவு செய்வது மட்டும் மொத்தம் எம்.பிகளுக்கு சுமார் 855 கோடிகள். எப்படி?
தொகுதிக்கான மாதச் செலவு : 10 ஆயிரம்
அலுவலச் செலவு : 14 ஆயிரம்
பயணச் சலுகை : கி.மீட்டருக்கு எட்டு ரூபாய்
படி : 500 ரூபாய் (நாடளுமன்றம் இயங்கும் போது)
இது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ரயிலில் ஏ.சி. முதல் வகுப்பில் பயணம் இலவசம்.
மேலும் விமானத்தில் வருடத்திற்கு 40 தடவை (பிஸ்னஸ் கிளாஸ்)வர்த்தப் பிரிவில் பயணம் இலவசம். உடன் மனைவி அல்லது உதவியாளரை அழைத்துச் செல்லலாம்.
மக்களவை உறுப்பினர் தங்கு விடுதி இலவசம்
50000  யூனிட் வரை மாதம் மின் கட்டணம் இலவசம்
170000  கால்கள் வரை தொலைபேசி கட்டணம் இல்லை
இப்படி ஏராளமான சலுகைகள் அதிகாரப்பூர்வமாக கிடைக்கிறது.
இதுவல்லாமல் வேற வழிகளில் கிடைக்கும் பணம்தான் அதிகம். ஒரு சாதரண எம்.பி. ஐந்து வருடத்தில் மட்டும் சுமார் 25 கோடிவரை சம்பாதித்துவிடுவார் என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்த கோடிகளுக்குத்தான் வெட்கம், மானம் என்று எல்லாவற்றை விற்றுவிற்று தேர்தல் களத்தில் இறங்கிறார்கள். சமுதாயத்திற்கு போராடும் அமைப்புகள் என்ற சொல்பவர்கள் கூட கொள்ûகை குழிதோண்டி புûத்துவிட்டு ஏன் தேர்தல் களத்தில் குதிக்கிறார்கள் தெரியுமா? இந்த கோடிகளுக்குத்தான்.
அதனால்தான் சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். ஒரு சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர், என்னை நீங்கள் எம்.பி.ஆக தேர்வு செய்தால் இந்தியர்கள் முறைகேடாக சுவிஸ் வங்கியில் சேர்த்து வைத்துள்ள பணத்தை எடுத்து இந்தியாவின் கடனை அடைத்து ஏழைகளுக்கு வழங்குவேன் என்று பேசுகிறார். இதை  சுயேட்சையாக போட்டியிடும் இவர் மக்களைவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் முடியுமா? தனிநபர் செய்யும் காரியமா? இது? எதைப் பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்றெல்லாம் யோசிக்காமல் ஓட்டுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.
இதைப் போன்று இலங்கையில் தனிஈழத்தை கொண்டு வருவேன்.முல்லை பெரியாறு பிரச்சனையை தீர்த்து வைப்பேன்,விலைவாசியை குறைப்பேன், ஏழைக்கு ஒரு வீடு வழங்குவேன் என்றெல்லாம் அள்ளிவீசும் வேட்பாளர், அவர்கள் வெற்றிப்பெற்றாலும் இதை செய்ய முடியுமா? என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நான்கு,ஐந்து தொகுதிகளில் போட்டியிடுபவர்கள்  அந்த நான்கு தொகுதிகளிலும் வெற்றிபெற்றாலும் இடஒதுக்கீடை கொண்டு வந்துவிடமுடியுமா? விலைவாசியை குறைத்துவிட முடியுமா? முஸ்லிம்களின் துயரத்தை துடைத்துவிட முடியுமா? ஒரு சட்டத்தை கொண்டு வர மக்களவையில் பாதிக்குமேல் உள்ளவர்களின் ஆதரவு வேண்டாமா? சட்டத்திருத்தம் கொண்டுவர மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டாமா? இதையெல்லாம் சிந்திக்காமல் ஒரு அரசு செய்ய முடியும் காரியத்தை ஒரு நபர்,இரண்டுநபர்கள் நாங்கள் செய்து முடிப்போம் என்று வாக்கு கேட்பது மக்களை முட்டாளாக்கும் வேலை இல்லையா? பதவிக்காக எதையும் பேசுவதா?
கோடிகளுக்காக சாமியார்களிடம் ஆசிவாங்குபவர்கள் இஸ்லாமியர்களுக்காக பாடுபடுவார்களா? அல்லது கோடிகளுக்காக கொள்கைவிற்பார்களா? தேர்தலில் போட்டியிடும் யாரையும் நாம் சிறந்தவர்கள் என்று சொல்லமுடியாது. அவர்களின் தேர்தல் கோஷங்கள், கொள்கை நிலைபாடுகள், வாக்குறுதிகள் அனைத்தையும் பார்த்தால் பணமும் பதவி சுகமும்தான் இவர்களை இவ்வாறு ஆட்டிப்படைக்கிறது என்பதை விளங்கலாம்.

திங்கள், 8 நவம்பர், 2010

செல்பேசியால் மூளை புற்றுநோய்?



இப்னு நூர் முஹம்மது, குழுமூர்
நீங்கள் செல்பேசியை அதிகம் பயன்படுத்துபவரா? அதாவது ஒவ்வொரு நாளும் வணிக ரீதியாகவோ, கல்வித் தொடர்பாகவோ மற்றவர்களுடன் நீண்ட நேரம் செல்பேசியில் பேசக் கூடியவரா? அப்படியென்றால் செல்பேசியால் ஏற்படும் பாதிப்புத் தொடர்பாக செய்யப்பட்டுள்ள ஆய்வுகளையும் அதன் முடிவுகளையும் நீங்கள் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் செல்பேசியில் நீண்ட நேரம் பேசினால் நமது காதைச் சுற்றி வெப்பம் தாக்குவதையும், அதனால் ஒரு விறுவிறுப்பு ஏற்படுவதையும் நிச்சயம் உணர்ந்திருப்போம். செல்பேசி வெப்பமடைந்திருப்பதையும் கவனித்திருப்போம். ஆனால், இவை யாவும் நமக்கு உடல் ரீதியான ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையே என்பதை உலகம் உணர்ந்த அளவிற்கு இந்தியாவில் நாம் பெரிதாக உணரவில்லை.
உலக நாடுகளில் இதுபற்றிய உணர்தல் அதிகரித்துள்ளது. செல்பேசியில் இருந்து வெளிப்படும் நுண்ணிய ஒலி அலைகளால் உருவாகும் ஒருவித கதிர் வீச்சு நமது உடலில், குறிப்பாக நமது மூளையில் செயல்பட்டுவரும் உயிரணுக்களை பாதிக்கின்றன, டிஆக்சிரிபோ நியூக்ளிக் ஆசிட் (டிஎன்ஏ) என்றழைக்கப்படும் நமது மரபிண குணங்களை வார்த்தெடுக்கும் அணுக்களை அவை சம நிலை பிறழச் செய்கின்றன. இதன் விளைவாக புற்றுநோயை உருவாக்கும் கட்டிகளும், மற்ற நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களையும் உண்டாக்குகின்றனஎன்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
உலக சுகாதார அமைப்பும் இண்டர்ஃபோன் என்ற அமைப்பின் மூலம் 13 ஐரோப்பிய நாடுகளில் செல்பேசியை அதிகம் பயன்படுத்திவருவோர் 5,000 பேரிடம் ஒரு பெரும் ஆய்வை நடத்தி முடித்துள்ளது. அதன் அறிக்கையும் வெளிவந்துள்ளது. ஆயினும், செல்பேசியால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆலோசனையளிக்கக் கூடிய ஒரு தெளிவான வழிகாட்டல் அறிக்கையை அது வெளியிடவில்லை. ஆயினும், இண்டர்ஃபோன் ஆய்வும் பாதிப்பை உறுதி செய்துள்ளது.
செல்பேசியை அதிகம் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளை ஒன்றுபடுத்தி ஆய்வு செய்த கலிபோர்னியா பல்கலையின் பேராசிரியர் ஜோயல் மாஸ்கோவிட்ஸ், “10 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு மிக அதிகமாக செல்பேசியை பயன்படுத்துபவர்களுக்கு மூளைப் புற்று நோய் தாக்கும் வாய்ப்பு 30 விழுக்காடு அதிகம் உள்ளது என்று கூறியுள்ளார்.
பிட்ஸ்பர்க் பல்கலையில் நடத்தப்பட்ட ஆய்வும் இந்தப் பாதிப்பை உறுதி செய்துள்ளது. ஆனால், இங்கிலாந்தின் தேச புற்றுநோய்க் கழகம், செல்பேசியைப் பயன்படுத்துவதால் அப்படிப்பட்ட ஆபத்து ஏதும் இல்லைஎன்று கூறியுள்ளது. ஆயினும் செல்பேசியால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் ஆலோசனைகளில் ஐரோப்பிய நாடுகள் இறங்கியுள்ளன.
உதாரணத்திற்கு, செல்பேசி பயன்படுத்துவதால் மூளைக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க ஒரு சட்டத்தையே பிரான்ஸ் நாட்டின் இரு அவைகளும் சமீபத்தில் நிறைவேற்றியுள்ளன. தொலைத் தொடர்பு ஒலிக்கற்றைகள் மூளையைப் பாதிக்காவண்ணம், புதிதாக செல்பேசியை வாங்குவோர் அனைவருக்கும் காதில் வைத்துப் பேசக்கூடிய ஏர்ஃபோன்களை சேர்த்தே விற்குமாறு தயாரிப்பாளர்களை அந்நாடு அறிவுறுத்தியுள்ளது (இதன் விளைவாகவே இப்போதெல்லாம் நாம் செல்பேசி வாங்கினால் அதன் கூடவே இலவசமாக ஒரு ஏர்ஃபோன்கள் அளிக்கப்படுகிறது. அது வளர்ந்த நாடுகளில் கட்டாயம். இங்கு ஒரு கூடுதல் வசதியாக அளிப்பதுபோல் கொடுக்கிறார்கள்.
அதுமட்டமல்ல, செல்பேசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் இப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை (குடி குடியைக் கெடுக்கும், குடிப் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் என்பது போன்ற) வாசகங்களுடன் விற்குமாறும், செல்பேசியை பயன்படுத்தும் போது எந்த அளவிற்கு நீங்கள் ஒலிக்கற்றை கதிர் வீச்சிற்கு ஆளாகின்றனர் என்ற அளவை (ள்ல்ங்ஸ்ரீண்ச்ண்ஸ்ரீ ஹக்ஷள்ர்ழ்ல்ற்ண்ர்ய் ழ்ஹற்ங்-நஆத) குறிப்பிடும்படியும் பிரான்ஸ் அறிவுறுத்தியுள்ளது.
"செல்பேசிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து தற்போது எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இல்லை என்கிற ஒரு அடிப்படையே அது பாதுகாப்பானது என்பதற்கான அத்தாட்சியல்லஎன்று பிரான்ஸ் அறிவியலாளர் பேராசிரியர் டேனியல் ஊபர்ஹௌசன் கூறியுள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் சுற்றுச்சூழல் நல அறக்கட்டளை எனும் அமைப்பை நடத்திவரும் அறிவியலாளரான முனைவர் தேவ்ரா டேவிஸ் டிஸ்கனக்ட்எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். “   செல்பேசியில் வெளியாகும் கதிர்வீச்சு தொடர்பான உண்மைகள், அவைகளை மறைக்க செல்பேசி தயாரிப்பாளர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி?” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்தப் புத்தகம் மேற்கத்திய உலகில் ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் புத்தகத்தில் செல்பேசியால் ஏற்படும் பாதிப்புத் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பற்றிய முழு விவரங்களையும் அளித்துள்ளார் தேவ்ரா டேவிஸ்.
சுற்றுச் சூழல் மற்றும் தனி மனித நடத்தைகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோய்கள் குறித்து ஆய்வு செய்துவரும் பேராசிரியர் முனைவர் பிரான்ஸ் அட்கோஃபர், செல்பேசியில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு நமது மரபுத் தன்மையை பாதிக்கிறது என்றும், மூன்றாம் தலைமுறை செல்பேசிகள் (3ஏ), இரண்டாம் தலைமுறை செல்பேசிகளை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றும் கூறியுள்ளார்.
செல்பேசியால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அதன் தயாரிப்பாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள பாதிப்பைக் காட்டிலும் இரு மடங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது சுதந்திரமான ஆய்வுகளில் இருந்து தெரியவருகிறது.
ஒரு நாளைக்கு 2 முதல் 4 மணி நேரம் செல்பேசியைப் பயன்படுத்துபவரின் உயிரணுவை விட, செல்பேசியைப் பயன்படுத்தாதவரின் உயிரணு பலமாக உள்ளது.
சாதாரணமாக தண்ணீர் தொட்டிகளில் விழுந்த எலி, மிகச் சுலபமாக நீந்தி வெளியே வந்து விடுகிறது. ஆனால் செல்பேசியின் கதிர் வீச்சிற்கு ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக்கப்பட்ட எலியானது, தண்ணீர் தொட்டிக்குள்ளேயே சுற்றி சுற்றி நீந்தி வருகிறது. இதற்குக் காரணம் அதன் மரபணுவில் ஏற்பட்ட பாதிப்பு அதன் இயல்பான திறனை மழுங்கடித்துவிட்டதே.
தங்கள் நாட்டில் சிறுவர்கள் செல்பேசியை பயன்படுத்த பிரான்ஸ் நாடு தடை விதித்துள்ளது. இரஷ்யா, இங்கிலாந்து, கனடா, பெல்ஜியம், இஸ்ரேல், ஃபின்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் சிறுவர்கள் செல்பேசியை பயன்படுத்த வேண்டாம் என்றும், அதனை பெற்றோர்கள் கவனித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்.
இஸ்ரேல் நாட்டின் பல் மருத்துவர்கள் சங்கம் நடத்திய ஆய்வில், கன்னத்தில் ஏற்படும் மிக அரிதான புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வந்தவர்களில் ஐந்தில் ஒருவர் மிக அதிகமாக செல்பேசியை பயன்படுத்தி வருபவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
செல்பேசியை அதிகம் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எந்த அறிவியலாளர் ஆய்வு மேற்கொண்டாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் நிதியுதவியை தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நிறுத்தியுள்ளன செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள். அதுமட்டுமின்றி, அப்படிப்பட்ட ஆய்வில் ஈடுபட்ட பல அறிவியலாளர்கள் ஆய்வு அமைப்பில் இருந்தே தூக்கி எறியப்பட்டுள்ளனர் என்பதையும் தேவ்ரா தனது புத்தகத்தில் ஆதாரத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
இவையணைத்தையும் குறிப்பிட்ட தேவ்ரா டேவிஸ், செல்பேசிகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறவில்லை!
இன்றைய நவீன யுகத்தில் செல்பேசியின்றி வாழ்வில்லை என்ற நிலையில் உள்ள நாம் அதனை காது வைத்து பேச வேண்டாம் என்றும், காதில் பொறுத்திக்கொண்டு பேசக் கூடிய ஒலி வாங்கிகளைப் (ஏர்ஃபோன்கள்) பயன்படுத்தியே பேசுமாறும் கூறியுள்ளார்.
செல்பேசிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து உலக நாடுகள் உரிய எச்சரிக்கைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும், அது தொடர்பான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே செல்பேசியை பயன்படுத்துவோர் கீழ்கண்ட பாதுகாப்பான வழிகளை கையாள வேண்டும்.
1.         செல்பேசியை ஏர்ஃபோன்களுடன் மட்டுமே பயன்படுத்துங்கள்.
2.         அதனை பேண்ட் பாக்கட்டிலோ, சட்டை பாக்கெட்டிலோ தொடர்ந்து நீண்ட நேரம் வைத்திருக்காதீர்கள் (பயண நேரத்தில் மட்டும் அவ்வாறு வைத்திருப்பது தவிர்க்க இயலாதது.
3.         அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும்போது அதனை மேசையின் மீது வைத்திருங்கள்.
4.         இயன்ற அளவிற்கு செல்பேசியில் பேசுவைத் தவிர்த்து, குறுஞ்செய்திகளாக தகவல்களை பரிமாறிக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.
புற்று நோயை வருவதைத் தடுக்க, அது உருவாகும் சூழல் அமையாமல் தடுப்போம் என்று கூறுகிறார் தேவ்ரா டேவிஸ்.

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites