அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 11 நவம்பர், 2010

ஆண்களுக்கு உயிரணுக்கள் குறையுமா?


லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு உயிரணுக்கள்  குறையும் அபாயம்?
லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு உயிரணுக்கள்  எண்ணிக்கை குறைந்து குழந்தையின்மை ஏற்படும் அபாயம் உள்ளதாக குழந்தைப் பெரும் சிறப்பு நிபுணரும் பெங்களூரு உதவி கருத்தரிப்பு மையத்தின் இயக்குனருமான டாக்டர்.காமினி ராவ் தெரிவித்துள்ளார்.
18 முதல் 25 வயதுடைய ஆண்களில் 5 பேரில் ஒருவர் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லேப்டாப் உபயோகிப்பதால் அதில் இருந்து வரும் வெப்பக் கதிர் ஆண்களை தாக்கி அவர்களின் உயிரணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி குழந்தையின்மையை ஏற்படுத்துவதாகவும், லேப்டாப்பின் மேல் பாகம் தயாரிக்க பயன்படும் மூலப் பொருளில் உயிரணுக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேதிப் பொருட்கள் கலந்து உள்ளதாகவும் ராவ் தெரிவித்துள்ளார்.



மேலும் அதிகமாக காப்பி அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் அதில் உள்ள நச்சுப் பொருளால் உயிரணுக்கள் குறையும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நகர்ப் புறத்தில் இருக்கும் ஆண்களை விட கிராமப் புறத்தில் இருக்கும் ஆண்கள் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப் படாமல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்த ராவ் மாறி வரும் வாழ்க்கை முறைகளுக்கேற்ப நாமும் சில மாற்றங்களை கையாண்டால் இது போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார் அவர்.

இதன்படி முறையான உடற்பயிற்சி. சூடான நீரை பயன்படுத்தாமை, புகை மற்றும் காபி அருந்தும் பழக்கத்தை கை விடுதல், இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்தல் போன்ற பழக்கங்களை கடைப் பிடித்து வருவதன் மூலம் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites