அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 11 நவம்பர், 2010

எம்.பி. வரவும் செலவும்



நூற்றி பத்து கோடிக்கும் மேற்பட்டவர்களை சுமந்திருக்கும் இந்தியநாட்டை ஆளத் துடிப்பவர்கள் ஏராளம். எல்லாரும் இந்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, ஏழை எளிய மக்களை வாழவைக்க நாங்கள் நாடாளப் போகிறோம் என்று சொல்லி தங்கள் வாழ்க்கை வளப்படுத்தியவர்கள் தாம்அதிகம்.
தற்போது நடந்து முடிந்திருக்கும் 15ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் வியைôடி பணத்தை எல்லாரும் பார்த்திருப்பார்கள். ஒரு எம்.பி. தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு எவ்வளவு செலவழிக்கிறார் என்று நீங்கள் கணப்போட்டு பார்த்தால் இவ்வளவு பணத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலா செய்வார்கள்? என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் புதுவையையும் சேர்த்து மொத்தம் நாற்பது மக்களவைத் தொகுதிகள் உள்ளனர். இந்த தொகுதியில் வெற்றி பெறுவதற்கு கடும் சிரமங்களை மேற்கொண்டு அடி,தடி,பணம் என்று எல்லா வகையான முயற்சிகளையும் செய்தனர்.
தமிழ்நாட்டில் ஒரு மக்களைவைத் தொகுதி சுமார் ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் 1300 க்கும் மிகாத வாக்குச்சாவடிகளையும் கொண்டதாகும். இத்தணை தொகுதிகளிலும் எவ்வளவு செலவு செய்கிறார்கள் தெரியுமா?
தன்னை வேட்பாளராக கட்சி அறிவித்தவுடனே அந்த மகிழ்ச்சியை கொண்டாட பலாயிரம் ரூபாய் செலவழிக்கின்றனர். அடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய ஐந்து நபர்கள்தான் அவருடன் செல்ல வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. இந்த விதியை யாரும் மதிப்பதில்லை. படை பட்டாளத்துடன் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய செலவு மட்டும் குறைந்தது ஒரு லட்சம் செலவழிக்கப்படுகிறது.
வெற்றிபெறுவதற்கு செயல்வீரர்கள் கூட்டங்கள் நடத்த வேண்டும். ஒரு மக்களைத் தொகுதிக்கு மட்டும் சுமார் 12 ஒன்றியங்கள் வரை வரும். ஒரு ஒன்றியத்திற்கு செயல்வீரர்கள் கூட்டம் கூட்ட சுமார் ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை செலவாகுமாம். அனைத்து ஒன்றியத்திலும் செயல்வீரர்கள் கூட்டம் கூட்ட சுமார் 24 லட்சம் செலாவகும். அதாவது கால் கோடி செலவாகிறது.
பின்னர் ஊர் ஊராக கூட்டம் போட அதற்கு கணிசமான பணத்தை வாரி இறைக்க வேண்டும். இரண்டாம் நிலைத் தலைவர்கள் பேசினால் கூட ஒரு கூட்டத்திற்கு சுமார் 30 ஆயிரம் வரை தேவைப்படும். பெரிய தலைவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். முப்பதாயிரம் என்பது முப்பது லட்சம் வரை செலவாகும்.
மக்களை திரட்டுவது, சாப்பாடு செலவு, வாகனச் செலவு, டாஸ்மாக் செலவு என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆக ஒரு தொண்டனுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும்.
அடுத்த ஆறு சட்டமன்ற தொகுதியில் தொகுதிக்கு ஒன்று  அலுவலகம் திறக்க வேண்டும். ஒரு அலுவலகத்திற்கு மட்டும் தேர்தல் நடக்கும் வரை அதை பராமரிக்க, அங்கு இருப்பவர்களுக்கு செலவு செய்ய சுமார் ஐம்பதாயிரம் செலவாகும். ஆறு தொகுதிக்கும் கணக்கிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.
இத்துடன் தன்னைப்பற்றி விளம்பரம் செய்ய சுவொட்டிகள், துண்டு பிரசுரங்களுக்கு என்று பல லட்சத்தை இழக்க வேண்டும். இதை தொகுதி முழுவதற்கும் கொண்டு செல்ல குறைந்த பட்சம் ஐம்தாயிரம் வரையாவது செலவாகும்.
இத்துடன் டி.வி.யில் விளம்பரம் செய்தால் அதற்கும் இலட்சத்தை வைக்கவேண்டும். அத்தோடு ஆறு சட்டமன்ற தொகுதிகயிலும் வாகன விளம்பரம் செய்ய குறைந்த பட்சம் ஒரு தொகுதிக்கு இரண்டு வாகனம் என்று பார்த்தாலும் 12 வாகனங்களுக்கு பத்து பதினைந்து நாட்கள் விளம்பரம் செய்ய இரண்டு லட்சம் வரை செலவாகும்.
இப்படி மக்களைத் தேர்தலுக்கு ஒரு வேட்பாளர் குறைந்த பட்ச செலவு ஐந்து கோடியிலிருந்து பத்து கோடி ரூபாய் வரை ஆகும்.
இதுவல்லாமல் இன்றைய கால சூழ்நிலைக்கு ஏற்ப பணத்தை வாரி இறைத்து ஓட்டு வாங்க வேண்டுமானால் சுமார் பதினைந்து கோடி செலவழிக்க வேண்டும். செலவழித்துக் கொண்டுதான் இப்போதும் இருக்கிறார்கள்.
இத்தனை கோடிகளை செலவழித்து மக்களுக்கு தொண்டாற்ற இவர்கள் என்ன உலகபற்ற உண்மையான ஆன்மீகவாதிகளா? ஒன்றுக்கு பத்து கிடைக்கும் என்ற பேராசையில்தான் இத்தனை கோடிகளை வாரிஇறைக்கிறார்கள் என்பது பாரம மக்களுக்குத் தெரிவதில்லை. உண்மையில் ஒரு வேட்பாளர் மக்களைத் தேர்தலில் போட்டி போடுகிறார் என்றார் அவர் கோடிஸ்வரராக இருக்க வேண்டும். அல்லது கோடிகளை எங்கிருந்தாவது புரட்டுபவராக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இத்தனை செலவு செய்யும் வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டால் வரவு எவ்வளவு தெரியுமா?
அதிகாரப்பூர்வமாக அரசு செலவு செய்வது மட்டும் மொத்தம் எம்.பிகளுக்கு சுமார் 855 கோடிகள். எப்படி?
தொகுதிக்கான மாதச் செலவு : 10 ஆயிரம்
அலுவலச் செலவு : 14 ஆயிரம்
பயணச் சலுகை : கி.மீட்டருக்கு எட்டு ரூபாய்
படி : 500 ரூபாய் (நாடளுமன்றம் இயங்கும் போது)
இது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ரயிலில் ஏ.சி. முதல் வகுப்பில் பயணம் இலவசம்.
மேலும் விமானத்தில் வருடத்திற்கு 40 தடவை (பிஸ்னஸ் கிளாஸ்)வர்த்தப் பிரிவில் பயணம் இலவசம். உடன் மனைவி அல்லது உதவியாளரை அழைத்துச் செல்லலாம்.
மக்களவை உறுப்பினர் தங்கு விடுதி இலவசம்
50000  யூனிட் வரை மாதம் மின் கட்டணம் இலவசம்
170000  கால்கள் வரை தொலைபேசி கட்டணம் இல்லை
இப்படி ஏராளமான சலுகைகள் அதிகாரப்பூர்வமாக கிடைக்கிறது.
இதுவல்லாமல் வேற வழிகளில் கிடைக்கும் பணம்தான் அதிகம். ஒரு சாதரண எம்.பி. ஐந்து வருடத்தில் மட்டும் சுமார் 25 கோடிவரை சம்பாதித்துவிடுவார் என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்த கோடிகளுக்குத்தான் வெட்கம், மானம் என்று எல்லாவற்றை விற்றுவிற்று தேர்தல் களத்தில் இறங்கிறார்கள். சமுதாயத்திற்கு போராடும் அமைப்புகள் என்ற சொல்பவர்கள் கூட கொள்ûகை குழிதோண்டி புûத்துவிட்டு ஏன் தேர்தல் களத்தில் குதிக்கிறார்கள் தெரியுமா? இந்த கோடிகளுக்குத்தான்.
அதனால்தான் சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். ஒரு சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர், என்னை நீங்கள் எம்.பி.ஆக தேர்வு செய்தால் இந்தியர்கள் முறைகேடாக சுவிஸ் வங்கியில் சேர்த்து வைத்துள்ள பணத்தை எடுத்து இந்தியாவின் கடனை அடைத்து ஏழைகளுக்கு வழங்குவேன் என்று பேசுகிறார். இதை  சுயேட்சையாக போட்டியிடும் இவர் மக்களைவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் முடியுமா? தனிநபர் செய்யும் காரியமா? இது? எதைப் பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்றெல்லாம் யோசிக்காமல் ஓட்டுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.
இதைப் போன்று இலங்கையில் தனிஈழத்தை கொண்டு வருவேன்.முல்லை பெரியாறு பிரச்சனையை தீர்த்து வைப்பேன்,விலைவாசியை குறைப்பேன், ஏழைக்கு ஒரு வீடு வழங்குவேன் என்றெல்லாம் அள்ளிவீசும் வேட்பாளர், அவர்கள் வெற்றிப்பெற்றாலும் இதை செய்ய முடியுமா? என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நான்கு,ஐந்து தொகுதிகளில் போட்டியிடுபவர்கள்  அந்த நான்கு தொகுதிகளிலும் வெற்றிபெற்றாலும் இடஒதுக்கீடை கொண்டு வந்துவிடமுடியுமா? விலைவாசியை குறைத்துவிட முடியுமா? முஸ்லிம்களின் துயரத்தை துடைத்துவிட முடியுமா? ஒரு சட்டத்தை கொண்டு வர மக்களவையில் பாதிக்குமேல் உள்ளவர்களின் ஆதரவு வேண்டாமா? சட்டத்திருத்தம் கொண்டுவர மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டாமா? இதையெல்லாம் சிந்திக்காமல் ஒரு அரசு செய்ய முடியும் காரியத்தை ஒரு நபர்,இரண்டுநபர்கள் நாங்கள் செய்து முடிப்போம் என்று வாக்கு கேட்பது மக்களை முட்டாளாக்கும் வேலை இல்லையா? பதவிக்காக எதையும் பேசுவதா?
கோடிகளுக்காக சாமியார்களிடம் ஆசிவாங்குபவர்கள் இஸ்லாமியர்களுக்காக பாடுபடுவார்களா? அல்லது கோடிகளுக்காக கொள்கைவிற்பார்களா? தேர்தலில் போட்டியிடும் யாரையும் நாம் சிறந்தவர்கள் என்று சொல்லமுடியாது. அவர்களின் தேர்தல் கோஷங்கள், கொள்கை நிலைபாடுகள், வாக்குறுதிகள் அனைத்தையும் பார்த்தால் பணமும் பதவி சுகமும்தான் இவர்களை இவ்வாறு ஆட்டிப்படைக்கிறது என்பதை விளங்கலாம்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites