அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

இமாம் இப்னுமாஜா

நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளைத் தொகுத்து இம்மார்க்கத்திற்குத் தொண்டாற்றிய இமாம்களில் இப்னுமாஜா ஒருவராவார்.
இயற்பெயர்        : முஹம்மத் பின் யஸீத்
குறிப்புப் பெயர்    : அபூ அப்தில்லாஹ்
தந்தை பெயர்    : யஸீத். மாஜா என்பது இவரது பட்டப்பெயர்.
பிரபலமான பெயர்    : இப்னு மாஜா
கோத்திரம்        : ரபயீ கோத்திரத்தைச் சார்ந்தவர்.
பிறப்பு        : ஹிஜ்ரீ 209 ஆம் ஆண்டு.
வளர்ந்த இடம்    : கஸ்வீன் என்ற ஊர்
கல்வி : இப்னு மாஜா அவர்கள் கஸ்வீன் என்ற தன்னுடைய ஊரில் ஏறத்தாழ 20ஆவது வயதில் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். இவர்கள் தொகுத்த இப்னுமாஜா என்ற ஹதீஸ் புத்தகம் ஹதீஸ் கலையில் இவர்கள் பெற்றிருந்த பாண்டித்துவத்தை எடுத்துரைக்கிறது. அறிவிப்பாளர்களின் வரலாறுகள் தொடர்பாக இவர் எழுதிய அத்தாரீஹ் என்ற நூலும் இவரது அந்தஸ்தை உயர்த்துகிறது. மேலும் இவர் குர்ஆனிற்கு விளக்கம் அளிப்பதிலும் மார்க்கச் சட்டங்களிலும் தலை சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார் என இமாம்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
கல்விக்காகப் பயணித்த ஊர்கள் : குராசான், ஈராக், ஹிஜாஸ்,  மிஸ்ர், ஷாம் மற்றும் பல ஊர்கள்.
இவரது ஆசிரியர்கள் : அப்துல்லாஹ் பின் அபீஷைபா, அலீ பின் முஹம்மத், முஸ்அப் பின் அப்தில்லாஹ், உஸ்மான் பின் அபீஷைபா மற்றும் பலர்.
இவரது மாணவர்கள் : அலீ பின் இப்ராஹீம் அல்கத்தான், சுலைமான் பின் யஸீத், முஹம்மது பின் ஈஸா மற்றும் அபூபக்கர் ஹாமித்.
படைப்புகள் : இப்னு மாஜா அவர்களால் தொகுக்கப்பட்ட சுனனு இப்னு மாஜா என்ற புத்தகத்துடன் அத்தஃப்ஸீர், அத்தாரீஹ் என்ற புத்தகங்களையும் தொகுத்துள்ளார். இவற்றில் சுனனு இப்னு மாஜா மட்டும் நமக்கு கிடைத்துள்ளது. மற்றவை அழிந்து விட்டன.
இறப்பு : ஹிஜ்ரீ 273 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் திங்கட்கிழமை அன்று மரணித்து புதன் கிழமை அடக்கம் செய்யப்பட்டார்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites