அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 15 ஏப்ரல், 2010

திருக்குர்ஆனும் கடல்களும்


April 15 in விஞ்ஞானம் by yousuffaizy 3 COMMENTS
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
திருக்குர்ஆன் இறைவனிடம் இருந்துதான் இறக்கப்பட்டது என்பதற்கு வேறு எங்கும் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. திருக்குர்ஆனே நிறைய சான்றுகளை தருகிறது.
சிலர் 1400 வருடங்களுக்கு முன்னர் இறக்கப்பட்ட வேதத்தில் எப்படி இந்தக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளை விஞ்ஞான உண்மைகளைப்பற்றி சொல்லப்பட்டிருக்கும். என்ற கேள்விகளை தொடுக்கிறார்கள்.
குர்ஆன் அப்படி சொல்லாவிட்டாலும் மற்ற மதத்தினர் தங்களுடைய வேதம் உண்மைதான் என்பதை நிருபிப்பதற்கு எப்படி தங்களுடைய தேங்களை திரித்து விளக்கம் அளிக்கிறார்களோ அது போன்று நீங்கள் விளக்கம் அளிக்கலாம் என்றும் வாதங்களை எடுத்து வைக்கிறார்கள்.
இஸ்லாமியர்களாகிய நாங்கள் எல்லா வேதங்களும் இறைவினடம் வந்தது என்று சொல்லவில்லை. எல்லா வேதங்களும் இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் நம்பவில்லை. சில வேதங்கள் இறைவினடமிருந்து அருளப்பட்டன. ஆனால் அவைகள் பிற்காலத்தில் மனிதக்கரங்களால் மாசுபடுத்தப்பட்டுவிட்டன என்றும் சில வேதங்கள் இறைவனிடமிருந்து வந்ததற்கு எந்த சான்று இல்லை என்று சொல்­ அதை நாங்கள் நம்புவதும் இல்லை.
ஆனால் குர்ஆனைப் பொருத்த வரையில் நாங்கள் இது இறைவனிடமிருந்துதான் இறக்கப்பட்டது என்று உறுதியாக நம்புகிறோம்.
நம்புவதோடு மட்டுமில்லாமல் அதற்கான சான்றுகளையும் எடுத்துவைக்கின்றோம். நீங்கள் சொல்வதைப் போன்று நாங்கள்ங குர்ஆனில் வளைக்கவுமில்லை. திரிக்கவுமில்லை. குôஆன் நேரிடையாக யாரும் விளக்கம் கொடுக்கத் தேவையில்லாத அளவுக்கு தெளிவாக இருக்கிறது. அதனால் வளைப்பதற்கும் திரிப்பதற்கும் இடமே இல்லை.
திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டதுதான் என்பதற்கு திருக்குர்ஆன் சொல்லக்கூடிய கடல் விஞ்ஞானமும் ஒன்று. கடல்களைப்பற்றி பல விஞ்ஞான உண்மைகளை சொல்­யிருக்கிறது அவைகளையும் இந்த தொடரின் இறுதியில் சொல்லயிருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ்.
கடல்களுக்கு மத்தியில் திரைகள்.
http://kadayanalluraqsha.com/home/websites/kadayanalluraqsha.com/wp-content/uploads/2010/04/image003-300x147.jpg


இதோ திருக்குôஆன் சொல்கிறது பாருங்கள்.
இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.
அல் குர்ஆன் 55 : 19,20.
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிட மாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும்248 அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.
திருக்குர்ஆன் 27 : 61.
அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.
திருக்குர்ஆன் 25 : 53
ஏதோ ஓரிரு வசனங்களில் கூறப்பட்டு அது திரிக்கப்படவில்லை. தெள்ளத்தெளிவாக இந்த வசனங்கள் இருககின்றன.
இந்த திருக்குர்ஆன் வசனத்தின் பொருள் பிரஞ்சு நாட்டு விஞ்ஞானி ஜேக்கூஸ் என்பவரால் நிருபிக்கப்பட்டது.
இந்த வசனத்திற்கு தற்கால சிறந்த அறிஞர் பீ.ஜைனுல் ஆபீதீன் அவர்கள் தன்னுடைய திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் விரிவிரை அளித்துள்ளார். அந்த விளக்கம் வருமாறு.
இவ்வசனங்களில் (27:61, 35:12, 55:19,20) இரண்டு கடல்களுக்கு இடையே கண்களுக்குத் தெரியாத தடுப்பு உள்ளது என்றும் இதனால் அவை ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்து விடாது என்றும் கூறப்படுகின்றன.
இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பு உள்ளதை இன்றைய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். பல விதமான ஆய்வுகளுக்குப் பின் அவர்கள் கண்டு பிடித்த இந்த உண்மையை திருக்குஆன் அன்றே சொல்­ இருக்கிறது.
மத்தியத் தரைக் கடலும், கருங்கடலும் நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டிருந்தன. 12,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு பிரளயத்தின் போது இரண்டும் இணைந்தன. இரண்டு கடல்களும் சந்திக்கும் இடத்தில் இரண்டும் சமமான அடர்த்தியில் இல்லாததால் அடர்த்தி மிகுந்த கட­ன் நீர் கீழேயும், அடர்த்தி குறைந்த கட­ன் நீர் மேலேயும் சென்று 200 அடி அளவுக்கு ஒன்றின் மேல் ஒன்றாக நிற்கிறது. 12,000 ஆண்டுகள் ஆன பின்பும் அவை ஒன்றாகக் கலந்து விடவில்லை.
அட்லாண்டிக் கடலும், இந்தியப் பெருங்கடலும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தாலும் திடத்திலும், நிறத்திலும் வேறுபட்டு நிற்கின்றன. ஒன்றுடன் ஒன்று கலந்து விடவில்லை.
அது போல் மத்தியத் தரைக் கடலும், அட்லாண்டிக் கடலும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு உள்ளன. மத்தியத் தரைக்கடல் அடர்த்தியுடன் வெதுவெதுப்பாக உள்ளதால் அட்லாண்டிக் கடலுடன் சேருமிடத்தில் அதன் மீது ஆயிரம் அடிகளுக்கு மேல் அழுத்திக் கொண்டு சுமார் 100 மைல்கள் வரை ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பரவி நிற்கின்றது. ஒன்றுடன் ஒன்று கலந்து விடவில்லை.
திருக்குர்ஆன் 25:53 வசனத்தில், நல்ல தண்ணீர் கடலுடன் கலப்பதைப் பற்றிக் குறிப்பிடும் போது, ”இரண்டுக்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும்ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றது.
இரண்டு கடல்கள் சந்திக்கும் போது ஒரு திரை இருப்பதாகக் கூறிய குர்ஆன், கடலுடன் நல்ல தண்ணீர் கலக்கும் போது இரண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.
இதிலும் மிகப் பெரிய அறிவியல் உண்மை அடங்கியுள்ளது.
கடலுடன் நல்ல தண்ணீரைக் கொண்ட ஆறு சேரும் போது அடர்த்தி வித்தியாசத்தின் காரணமாக மேலே நாம் காட்டியுள்ள ஒரு தடையுடன், உப்புத் தண்ணீரும் நல்ல தண்ணீரும் சிறிதளவு சேர்ந்த கலவை ஒன்று உருவாகி அது மற்றொரு தடையாக நிற்கின்றது.
இது எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படித் தெரியும்?
எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.
If you enjoyed this post, make sure you subscribe to my Rss Feed

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites