அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 29 டிசம்பர், 2010

KDM என்றால் என்ன?

சுத்தமான தங்கத்தில் எந்த நகையும் செய்ய முடியாது. இந்த தங்கத்தை நகையாக செய்ய தங்கத்துடன் வெள்ளி மற்றும் செம்பை சேர்ப்பார்கள். இதற்கு வழக்கத்தில் பொடி என்பார்கள். இவ்வாறு தங்கத்துடன் சேர்க்கப்படும் பொடி தங்கத்தின் தரத்தை குறைத்துவிடும். எனவேதான் நாம் கடைக்கு சென்று வாங்கிய நகை திருப்பிக் கொடுக்கும் போது பொடி சோதாரம் கழிவு என்று மொத்தம் எடையில் 10 அல்லது 15 சதவிகிதம் கழித்துவிட்டு இருக்கும் தரத்திற்கு அன்றைய மார்க்கெட் விலையிலிருந்து கிராமுக்கு 25 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை குறைத்து எடுக்கிறார்கள்.
இதனால்தான் சில ஆபாரணங்களில் 22/20 என்று குறிப்பிட்டிருப்பார்கள் இதன் பொருள் : நாங்கள் தரும் தங்கம் 22 கேரட் தரத்தில் செய்ததாகும். ஆனால் நீங்கள் எங்களிடம் தரும் போது 20 கேரட் தரத்தில்தான் எடுத்துக் கொள்வோம் என்பது பொருள்.
ஆகவே தான் சமீப காலமாக ஒரு புதிய முறையை கண்டுபிடித்து காட்மியம் (Cadmium)  எனப்படும் ஒரு வகையான ரசாயணத்தை வைத்து ஒட்டவைக்கின்றார்கள். இந்த பொருளை உருக்கினால் KDM எனப்படும் அந்த ரசாயணம் ஆவியாகிவிடும். எனவே ஏற்கனவே எத்தனை சதவிகதம் தங்கம் வைத்து பொருளை செய்திருக்கின்றார்களோ அதனுடைய தரம் குறையாமல் பாதுகாக்கப்படுகின்றது. எனவே திருப்பி நகையை கொடுக்கும் போது எந்த கழிவும் இல்லாமல் KDM நகை கொடுக்கலாம். இதுதான் KDM என்பதற்கான விளக்கம்.
ஆனால் சிலர் KDM என்பதும் 916 என்பதும் ஒன்று என்று எண்ணி ஏமாறுகின்றனர். KDM என்பது தரத்தை தக்கவைத்துக் கொள்ளுமே தவிர தரமாகாது. KDM த்தை எத்தனை கேரட் தங்கத்திலும் வைக்கலாம். KDM என்பதையும் 916 என்பதை சரியாக நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
hall mark  (ஹால் மார்க்) என்றால் என்ன?
சமீப காலமாக ஹால் மார்க் என்ற வாசகம் நகைகடைகளின் விளம்பரங்களில் காணப்படுகிறது. ஹால் மார்க் என்றால் என்ன?
ஹால் மார்க் என்பது இந்திய அரசின் bureau of standards (BIS) ஆல் 22 கேரட்டுக்கான தரச்சான்றிதழே ஹால் மார்க் ஆகும். இதுவே தங்க நகையின் ISI தரமாகும். மற்ற நகைளை விட ஹால்மார்க்கிற்கு என்ன விஷேம்? என்றால் தரத்திற்கு உத்திரவாதம். இந்திய அரசால் மூன்றாவது நபர் உத்திரவாதம் அளிக்கப்படுகிறது. மேலும் தரம் உறுதி செய்யப்படுதால் உலக்கத்தின் எந்த பகுதியிலும் மறு விற்பனை செய்யமுடியும்.
  916 KDM என்பது கடைக்காரர்களால் தரப்படுகின்ற உத்திரவாதம். ஹால்மார்க் (HM) என்பது (BIS)   எனப்படும் இந்திய அரசால் 22 கேரட் தங்கத்தால் ஆனாது என்பதற்குரிய சான்றிதழ் ஆகும்.
தரமான தங்கத்தை எவ்வாறு தெரிந்து கொள்வது?
தங்கத்தின் தரத்தை தெரிந்து கொள்ள அனுபவம் முக்கியம் தேவை. உடனடியாக அதை சாதரண மக்கள் தெரிந்து கொள்ள முடியாது. நாட்கள் ஆக ஆக அதன் நிறத்தை வைத்து கண்டுபிடிக்கலாம். சில நாட்களில் அதன் நிறம் கருப்பாக அல்லது பச்சை நிறமாக மாறினால் தரம் குறைவு என்று முடிவுக்கு வரலாம். மிகத்துள்ளிமாக தரத்தை அறிய வேண்டுமானால் அதற்கென பரிசோதனை கூடங்கள் உள்ளன. அதில் நமது தங்கத்தின் சிறிய அளவு கொடுத்தால் தரத்தை சரியாக நிர்ணயம் செய்து எழுத்துப்பூர்வமாக தருவார்கள். பெரிய நகரங்களில் இது போன்ற பரிசோதனை கூடங்கள் உள்ளன.
    

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites