அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 30 டிசம்பர், 2010

தெரிந்து கொள்ளுங்கள் 1


இமாம் நஸயீ
 ஹதீஸ்களை தொகுத்து மார்க்கத்திற்கு பெரும் தொண்டாற்றிய அறிஞர்களில் இமாம் நஸயீ ஒருவராவார்.
இயற்பெயர்      : அஹ்மத்
குறிப்புப் பெயர் : அபூ அப்திர் ரஹ்மான்
தந்தை பெயர்   : ýஐப்
பிறப்பு                  : ஹிஜ்ரீ 215 ஆம் ஆண்டில் நஸா என்ற ஊரில் பிறந்தார்கள். இவர் பிறந்த ஊரான நஸா என்பதுடன் இணைத்து நஸாயீ (நஸா என்ற ஊரைச் சார்ந்தவர்) என்று மக்களால் அழைக்கப்பட்டார்கள்.
கல்வி              : ஹிஜ்ரி 230ஆம் ஆண்டு தமது பதினைந்தாவது வயதை அடைந்த போதே குதைபா பின் சயீத் அவர்களிடம் பயிலுவதற்காக பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். அவரிடம் 14 மாதங்கள் தங்கினார்கள். இவர் எழுதிய அல்அஹாதீஸுல் லிஆஃப் (பலகீனமான ஹதீஸ்கள்) என்ற புத்தகம் ஹதீஸ்துறையில் இவர் பெற்றிருந்த பாண்டித்துவத்தைக் காட்டுகிறது. இதுமட்டுமின்றி மார்க்கச்சட்ட வல்லுனராகவும் திகழ்ந்துள்ளார்கள். இவர் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களை விட இமாம் நஸயீ அவர்களே  மார்க்கச்சட்டத்தை அதிகம் அறிந்தவராக இருந்தார் என  இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார். எகிப்து நாட்டிலும் ஹிமஸ் நாட்டிலும் மார்க்கத் தீர்ப்புவழங்கும் பொறுப்பை அவர்க
கல்விக்காக பயணித்த ஊர்கள்           : குராஸான், ஈராக், ஜஸீரா, ஷாம், ஹிஜாஸ், எகிப்து
மாணவர்கள்                                    : இப்னு ஹிப்பான், உகைலீ, இப்னு அதீ, அத்தவ்லாபீ, அத்தஹாவீ, அபூஅவானா, அத்தப்ரானி, இப்னு சின்னீ போன்ற பெரும் பெரும் அறிஞர்கள் இமாம் நஸயீ அவர்களிடம் மாணவர்களாக பயின்றுள்ளார்கள். இவர்களன்றி இன்னும் பலரும் உள்ளனர்.
ஆசிரியர்கள்                        : குதைபா, இஸ்ஹாக் பின் ராஹவைஹி, அஹ்மத் பின் மனீஃ, அலீ பின் ஹஜர், அபூதாவூத், திர்மிதி, அபூஹாதம், அபூசுர்ஆ, முஹம்மத் பின் யஹ்யா, முஹம்மத் பின் பஷ்ஷார் ஆகியோர். இவர்களில் பெரும்பாலோர் இமாம் புகாரீ மற்றும் முஸ்லிமின் ஆசிரியர்கள்.
படைப்புகள்                          : அஸ்ஸனனுஸ் சுஹ்ரா, அஸ்ஸ‏‏‏னனுல் குப்ரா, அல்குனா, அமலுல் யவ்மி வல்லய்லா, அத்தஃப்சீர், அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன், தஸ்மியது ஃபுகஹாயில் அம்ஸார், (மாக்கச் சட்ட அறிஞர்களின் பெயர்கள்) இஷ்ரதுன்னிஸா ஆகியவை. இவைத்தவிர முஸ்னத் அலீ பின் அபீதாலிப், முஸ்னது ஹதீஸி மாலிக், அஸ்மாஉர்ருவாத் வத்தம்யீஸு பைய்னஹம், அல்இஹ்வா, அல்இஹ்ராப், முஸ்னத் மன்சூர் பின் சாதான், அல்ஜர்ஹ் வத்தஃதீல் ஆகியவற்றையும் தொகுத்துள்ளார். எனினும் இவைகள் கிடைக்கபெறாதவைகளாகும்.
மரணம் : இமாம் நஸயீ பாலஸ்தீனத்தில் இறந்தார் என சில அறிஞர்கள் கூறுகின்றனர். தாரகுத்னீ போன்ற சில அறிஞர்கள் மக்காவில் இறந்ததாக கூறுகின்றனர். ஹிஜ்ரீ 303வது வருடம்  ஸஃபர் மாதம் 13ஆம் நாள் திங்கட்கிழமை மரணித்தார்கள்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites